Murugan Sivalingam :சுதந்திர இலங்கையின் 69 வருட நாடாளுமன்ற நிகழ்வுகளில் மலையக மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகள் பலவற்றை எமது பிரதிநிதிகள் இன்று வரை முன் வைக்கவில்லை!
உள்நாட்டு அரசியல் வாதிகளுக்கு மலையக மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகள் இன்றுவரை தெரியாது!
பெருந்தோட்டப் பிரதேசங்களை கிராமமயப் படுத்த மறுக்கும் இன்றுவரையிலான உள்ளுராட்சி சட்டங்களை இந்தப் பதிவில் காட்டியுள்ளேன்.
(இத்தகவல் கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் இணையத் தளத்தில் காட்டப்பட்டுள்ளது.) எமது தேசிய உரிமைகளில் அக்கறையுள்ளவர்கள் இக்குறிப்பை தங்கள் தகவலுக்காகப் பதிவு செய்து கொள்வது அவசியமாகும்
Saturday, 5 August 2017
சுயமாக சிந்திப்பது பாவமா? ஏதாவது ஒரு தலைவனை அல்லது சாமியாரை நம்பி கண்ணை மூடுங்கள் சொர்க்கம் நிச்சயம் ?
சாமியார்கள் வழிகாட்டிகள் மகரிஷிகள் குருமகராஜிகள் பகவான்கள் பகவதிகள்
அம்மாசாமியாரினிகள் எல்லாரும் எப்படியாவது மக்களை காப்பாற்றியே தீருவது
என்று விடாப்பிடியாக முயற்சி செய்கிறார்கள். தாராளாமாக முயற்சி செய்யட்டும்
.
உலகில் நடக்கும் கொலை கொள்ளைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவது என்ன நடைபெறக்கூடிய காரியமா?
சில கிரிமினல்கள் அகப்படுவார்கள் சிலர் அகப்படமாட்டார்கள். ஆனாலும் இயற்கையின் விஞ்ஞான விதி ஒன்று உண்டு அதில் எவரும் தப்ப முடியாது. ஊரையெல்லாம் ஏமாற்றுபவன் சொந்த வீட்டிலேயே ஏமாந்த கதையெல்லாம் உண்டு இந்த மாதிரி பித்தலாட்ட சாமிகளிடம் மக்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். இது உண்மையில் ஆராயப்பட வேண்டிய விடயமாகும். மிகவும் அறிவாளிகளாக படித்தவர்களாக ஏன் படு சுயநலவாதிகளாக இருப்பவர்கள்கூட இந்த மாதிரி முடிச்சவிழ்கி சாமியார் குருமார்களிடம் சிக்குப்பட்டு விடுகிறார்கள்.
சுய சிந்தனை இல்லாமல் இருப்பது மிகவும் உயர்ந்த விடயமாக நமது மனதில் பதியப்பட்டு உள்ளது . சமயங்களும் கலாசாரம் என்று நாம் கூறிகொண்டிருக்கும் வாழ்க்கை முறையும் இந்த தவறை கால காலமாக செய்துவருகின்றன. சுயமாக சிந்திக்க தெரிந்தால் அவர்களை அடக்கி ஆளமுடியாதே?
குருமார்கள் நிலைத்து நிற்பதே மக்களின் அறியாமையினால்தான். மக்கள் உண்மையை அறியாதவாறு சாமிகளும் ஆசாமிகளும் பல விதமான ஒழுக்க விதிகள் கோட்பாடுகள் எல்லாவற்றையும் பாமர மக்களின் தலையில் திணித்து வைத்துள்ளன.

அக்கரைப்பற்று மாஜிஸ்திரேட் நீதவான் பீட்டர் போல் ஒரு மலைக்கொழுந்தின் மைந்தன்!
Malayaga Kuruvi :
கொழுந்து பறித்த தாயின் வயிற்றில் உருவான முதலாவது நீதவான்
தகவல் பகிர்வு - ஷான் சதீஸ்
''கொழுந்து பறித்த தாயின் வயிற்றில் உருவான முதலாவது நீதவான் நானே"என அக்கரைப்பற்று மாஜிஸ்திரேட் நீதவான் பீட்டர் போல் பெருமிதம்!
எந்நிலை சென்றாலும் தன்னிலை மறவாத தன்னிகரில்லாத மண்ணின் மைந்தனை வாழ்த்துவோம்
அவுஸ்ரேலியாலில் இருந்து 13 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
அவுஸ்ரேலியாவிலிருந்து 13 இலங்கையர்கள் விசேட விமானமூலம் நாடுகடத்தப்பட்டனர். இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர். குறித்த 13 பேரும் நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கடந்த 2012ம் ஆண்டு இலங்கையில் நீர்கொழும்பு , சிலாபம் போன்ற கடல் பகுதிகளில் இருந்தும் மற்றும் விமானமூலம் இந்தியாவிற்குச் சென்று அங்கிருந்தும் படகுமூலம் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்றுள்ளனர்.
இவர்களை அவுஸ்ரேலியா பொலிசார் தடுப்பு முகாமில் தடுத்துவைத்துள்ள நிலையில் விசேட விமான மூலம் இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதா பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. தினக்குரல்
நுவரெலியா கடும் பனிமூட்டம் .. வாகனங்கள் முன் விளக்குகளை ஒளிரவிட்டு கொண்டு செலுத்த வேண்டுகோள்
மு.இராச்சந்திரன், ஆ.ரமேஸ்
நுவரெலியா பிரதேசத்தில் பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய மழையால் அப்பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான மார்க்கங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால், சாரதிகள் வாகனங்களின் முன் விளக்குகளை ஒளிரவிட்டு, வாகனங்களைச் செலுத்துமாறு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், பிரதான வீதிகளில் வழுக்கல் தன்மையும் ஏற்பட்டுள்ளது.
இப்பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்பட்டு, விபத்துகளைத் தவிர்த்துக்கொள்ளும்படி, நுவரெலியா பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ் மிர்ரர்
கிளிநொச்சியில், யாழ் - கொழும்பு தனியார் பேருந்து கல்வித்திணை - களம் கண்டது
கிளிநொச்சியில், யாழ் - கொழும்பு அதி சொகுசு தனியார் பயணிகள் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி வலயக் கல்வித் திணைக்கள அலுவலகத்தினுள் உட்புகுந்து விபத்துக்குள்ளாகி கிடப்பதைப் படத்தில் காணலாம். (படம்: கிளிநொச்சி குறூப் நிருபர் தமிழ்ச் செல்வன்)
'ஆவா' குழு; தமிழர்களா? சிங்களவர்களா?
thinakkural.lk
வடக்கில் ஆவா குழு இன்னும் செயற்படுகின்றதா என்பது தொடர்பாக உறுதியாக கூற முடியாதுள்ளதாகவும் ஆனால் அங்கு அண்மையில் நடைபெற்ற பொலிஸார் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முன்னாள் ஆவா குழு உறுப்பினர்கள் எனவும் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது வடக்கில் பொலிஸார் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகவியலாளர்களினால் பொலிஸ் பேச்சாளரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவரின் பதில்களும் வருமாறு;
கேள்வி: யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தொடர்பாக பார்க்கும் போது பொலிஸாருக்கு சவால்கள் காணப்படுகின்றது போன்றுதானே உள்ளது?
பதில்: துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கோப்பாய் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களின் இருவரை கைது செய்துள்ளோம். நல்லூரை சேர்ந்த திவராசா மதுசன் , விஜேரட்னம் ஜீவராஜ் ஆகியோரே இவர்கள். இந்த இருவரும் ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர்களாவர். அத்துடன் கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைது செய்யப்படவுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்.
ந.ஜெயகாந்தன்

Malayaga Kuruvi வணக்கம், பணிகின்றேன்....!!!! எமது பெண்சமூகம் இன்னும் எழுச்சிப்பெறவேண்டும்.
வணக்கம், பணிகின்றேன்....!!!!
ஊடகவியலாளர் Sanath Sudar எழுதிய கட்டுரை உங்களுக்காக
(இறுதிக்கட்டம்வரை வாசிக்கவும்)
ஒரு வழிப்போக்கனின் இழிச்செயலுக்கு- கருத்துக்கு எதிராக ஒட்டுமொத்த மலையகமும் கிளர்ந்தெழுந்து, எரிமலைகள் கொதிக்குழப்புகளை கக்குவதுபோல் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தி, கண்டனக் கணைகளைத் ஆவேசமாகத் தொடுத்திருந்தது.
மலையக மண்ணுக்கும், அங்குவாழும் பெண்ணுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் தொடுக்கப்பட்டிருந்த சொற்கணைகளுக்கு எதிரான இந்த எழுச்சி- ஒற்றுமை- அதிரடி நடவடிக்கை என்பன இருகரம்கூப்பி வரவேற்கப்படக்கூடியவை.
எனினும், அந்த வழிப்போக்கனை வைத்து சிலர் வாக்குவேட்டைக்கான பாய்ச்சலுக்கு ஆயத்தமானதும், மேலும் சிலர் தமக்கான மவுசை அதிகரித்துக்கொள்வதற்காக மிகவும் கீழ்த்தரமான முறையில் பிரதேச வாதம் பேசியதும் படுகேவலமான செயலாகும். (அசிங்கத்தையும் தமக்கான ஆபரணமாக மாற்றிக்கொள்ள முற்பட்டவர்களுக்கே இது பொருந்தும்)
சிவத்துக்கான பதிலடி என்ற போர்வையில் சில மலையக நண்பர்கள் முகநூலில் விடியோக்களை பதவிட்டிருந்தனர். அது அவர்களுக்குரிய உரிமை.
கருத்துச் சுதந்திரத்தில் தலையிட நான் விரும்பவில்லை. எனினும், ஒரு சிலர் பயன்படுத்திய வார்த்தைப்பிரயோகமானது படுமோசமாக இருந்தது. நாகரீகமற்ற சமூகம் என முன்வைக்கப்படும் விமர்சனத்துக்கு அது வலுசேர்த்ததே ஒழிய அந்த நபருக்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

Friday, 4 August 2017
150 வருடங்களில் வீழ்ச்சிப்போக்கை நோக்கிச் செல்லும் தேயிலை - மல்லியப்புசந்தி திலகர்
namathumalayagam.com: இலங்கையில் தேயிலை உற்பத்தி முதல் ஏற்றுமதி வரையான செயன் முறையில் பங்கேற்கும் நிறுவனங்கள் பற்றிய சுருக்கமான பார்வையினூடாக தேயிலைத் தொழில் துறையானது எவ்வாறு நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை ஓரளவுக்கு அறிந்துக்கொள்ளக்கூடியதாக அமைந்தது. இலங்கையில் 150 வருடகால தேயிலை உற்பத்திக் கைத்தொழிலின் பின்னணியிலேயே ரயில் போக்குவரத்து, வங்கித்துறை, பங்குசந்தை வரையான பல்வேறு பொருளாதார அம்சங்கள் வலுப்பறெத் தொடங்கின எனும் விடயத்தை கடந்த அத்தியாங்களில் பார்த்தோம். தொழிற்படை அடிப்படையில் அதிகளவான சனத்தொகையை ஒரே துறையில் கொண்டிருந்த துறையாகவும் தேயிலையே காணப்பட்டது. இந்த நூற்றியைம்பது கால வரலாற்றில் தேயிலைத் தொழில் வளர்ச்சியடைந்து வந்துள்ளது என்பதற்கு அப்பால் வீழ்ச்சியை நோக்கிச் செல்கின்றது என்பதுதான் இன்றைய போக்காகக் காணப்படுகின்றது.
அதேநேரம் இதே பெருந்தோட்டத் துறைக்குள் கடந்த பத்தாண்டுகளில் புதிதாக ஒரு தொழில் துறையாக உள்நுழைந்ததே முள்ளுத்தேங்காய் (Palm Oil) கைத்தொழில். முள்ளுத் தேங்காய்த் தலையங்கத்துடன் தொடராக வெளிவரும் இந்த கட்டுரைகளில் முள்ளுத்தேங்காய் தவிர்ந்த பெருந்தோட்டத் துறையில் பயிரிடப்படும் ஏனைய விடயங்கள் உரையாடப்பட்டு வந்ததே எவ்வாறு பெருந்தோட்டத்துறையில் ஏற்பட்டுவந்த, ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அது சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரத்திலும் எதிர்காலத்திலும் தாக்கத்தை செலுத்தப்போகின்றது என்பதற்கான ஒரு முன்னோட்டமாகத்தான்.
மலேசியாவில் உலகத் தமிழ் இணைய மாநாடு,,, 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை
உலகத் தமிழ் இணைய மாநாடு, ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடக்கவிருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் உலகத் தமிழ் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உலகத் தமிழ் இணையப் பேரவை இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில், உலகம் முழுவதிலும் இருந்து தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
மாநாட்டில் கலந்துகொண்டு தங்களது ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்பிக்க இருக்கும் ஆராய்ச்சி மாணவர்கள், தங்களது பெயரை ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் பதிவுசெய்வது அவசியம். இந்த மாநாட்டில், தமிழ் இலக்கிய, இலக்கண முன்னேற்றம்குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
மேலும், கற்றல் கற்பித்தல் பணிகளில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்தும் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன. தமிழை எளிமைப்படுத்தும் வகையில், சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி உள்ளிட்ட எழுத்துப் பகுப்பாய்வுகுறித்தும் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் தமிழ்த்துறை மாணவர்கள் கலந்துகொள்ளலாம். தினக்குரல்
பத்தடிக்கு எட்டடி காம்பிராவில் ..... 200 ஆண்டுகளாக ஒரு பிக்பொக்ஸ் ஹிரோக்கள் ஹீரோயினிகள் .எஸ்தர் நத்தானியல்
தூங்கும்முன் இப்பதிவை எழுத நினைக்கிறேன் முன்ன விட இப்போது அதிகம் சிந்தனை வருகிறது வயது போக போக ஞானம் வருவதுப் போல!!!
பிக் பொக்ஸ் லன்ச் பொக்ஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதேயில்லை ஆனால் அதன் கருத்து விவாதம் களத்தில் நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது.
அண்ணன் கமல் அவர்களே ஒரே வீட்டில் ஒரே அறையில் நடப்பதை நீங்கள் கேமராவை வைத்து ரெடி கட் என்று கத்தி நடிக்க வைக்கிறீர்கள் .
பெண்களுக்கும் ஆண்களுக்கும் மேக்கப்போட்டு காட்டுகிறீர்கள்.
இங்கே இருநூறாண்டுகள் இருளுக்குள் உழலும் மக்கள் கூட்டத்தில் எழுந்து வந்தவள் நான் சொல்கிறேன் ,இங்கே ஒரு கூட்டம் பிக்பொக்ஸ் ஹிரோக்கள் ஹீரோயினிகள் இருக்கிறார்கள் .
பத்தடி எட்டடி காம்பிராவில் எவ்வித அடிப்படை வசதீயின்றி ஒரே அறையில் உண்டு, குடித்து ,உறங்கி, புணர்ந்து, பிள்ளைப்பெற்று மருமகன் மாமா மாமி கூட்டத்தோடு வாழ்ந்து விடீயும் முன் எழுந்து தேயிலையை தேடி மலையேறும் கூட்டம் உண்டு .
கங்காணிக்கு புன்னகைத்து கணக்குப்பிள்ளைக்கு தலை வணங்கி சாதிப்பார்த்து தள்ளி வைப்பவனால் அவனோட எதுக்குப்பா வம்பு என்று மாற்று பாதை தேடி நடக்கும் இம்மக்களே உண்மையான ஊமையான பிக்பொக்ஸ் நாயகர்கள் .
இவர்களுக்கு எத்தனை பொக்சில் அரசு நன்றி சொல்லி அனுப்பி வைக்கிறது?? மட்டுமா உங்கள் தேசத்தில் தாராவியில் காமாத்தி புரத்தில் சேரியில் நிறைய பிக்பொக்ஸ் குடும்பங்கள் உண்மையாய் அல்லாடுகிறார்கள் முடிந்தால் அவர்களின் வாழ்வியலைத்தேடி மக்களின் ஆதரவூடன் விருது வழங்குங்கள் வெறுமனே இந்த முலாம் பூசிய நிகழ்ச்சிக்கு நாங்கள் பலிக்கடாக்கள் அல்லவே அல்ல பீத்த பொக்ஸ்!!

Thursday, 3 August 2017
அமைச்சர் திகாம்பரத்தை சண்டைக்கு இழுக்கும் சக்தி tv நியூஸ்- நகுலேஷ் கணபதி
மலையகத்தை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்லும் அமைச்சர் திகாம்பரம் அவர்களை சக்தி தொலைக்காட்சியின் நியூஸ் பெஸ்ட் தொடர்ந்து தாக்கி வருகிறது இதற்கு நாம் அஞ்சவில்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவர் நகுலேஷ் கணபதி கூறுகிறார்.
கடந்த இரண்டு தினங்கள் மட்டுமல்ல பல நாட்களாக சக்தி தொலைக்காட்சியின் நியூஸ் பெஸ்ட் எமது அமைச்சரை தாக்கியே ஒரு தலைபட்சமாகவும் நடு நிலை மறந்தும் செய்தி வெளியிடுகின்றது.
ஹட்டனில் நடைப்பெற்ற விழாவில் மைக்கை எடுத்தது மன உளைச்சல் காரணமே ஏனெனில் சக்தி செய்தியானது நாம் செய்யும் நற்பணிகளை மறைத்து செய்திகளை திரிபுபடுத்தி எதிராக சொல்கின்றது.
தனிமனிதனை குறிவைத்து தாக்குவதன் காரணம் என்ன..? மலையக மக்களின் அபிவிருத்தியை சக்தி செய்தி விரும்பவில்லையா..? என நகுலேஷ் கணபதி கூறுகிறார்.
இ.தொ.கா.வின் 78 ஆண்டு பூர்த்தி விழா! - இ.தொ.கா. ஊடகப் பிரிவு
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் 78வது ஆண்டு நிறைவூ விழா நேற்று (25.07.2017) சௌமிய பவனில் நடைபெற்றது. இதன்போது, 78ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இ.தொ.கா தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், மத்திய மாகாண கல்வி அமைச்சரும், இ.தொ.கா உப தலைவருமான மருதபாண்டி இராமேஸ்வரன், நிர்வாக உபதலைவர் சட்டத்தரணி கா.மாரிமுத்து, உப தலைவர் பொ.சிவராஜா ஆகியோரையும் இதன்போது கலந்துகொண்டனர். கப்பியாவத்தை செல்வ விநாயக ஆலய குருக்கள் சண்முகரட்ணசர்மா ஜெயராம் தலைமையில் சௌமிய பவனில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.
வடக்கு – கிழக்கு புலம்பெயர் தமிழர்களுக்கு மலையக தமிழனிடமிருந்து ஒரு பகிரங்க மடல்!
மலையக குருவி :புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் வடக்கு - கிழக்கு சகோதர தமிழினமே!
கடந்த இரண்டு நாட்களாக ஜெர்மனியில் இருந்து ''சிவா'' என்ற ஒருவன் மலையக தமிழ் மக்கள் தொடர்பாக மிக இழிவான, கீழ்த்தரமான கருத்துக்களை வெளியிட்டு வருவதை முகநூல் ஊடாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இது மலையகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, மலையக இளைஞர்கள் மத்தியில் பெருத்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மன நோய்பிடித்த பித்தனின் கூற்று என்று உலக தமிழினம் இதை ஒதுக்கி, உதாசீனப்படுத்திவிட முடியாது. இவனின் கூற்று, சக்திமிக்க சமூக வலைத்தளங்களில் உலவுகின்றன.
இந்த 'சிவா' என்றவனுக்கு ஆயிரக் கணக்கான மலையக இளைஞர்கள் தகுந்த பதிலடி கொடுத்துவருகிறார்கள். ஆனால் இவனுக்கு சரியான பதிலடி எந்த சமூகத்திலிருந்து வரவேண்டுமோ அங்கிருந்து வரவில்லை என்பதுதான் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையக மாணவருக்கு கிடைக்கும் பல்கலைக்கழக கோட்டாவை பங்குபோட்டு அதில் அதியுயர் பதவிகளை அடைந்தவர்கள் இவனுக்கு பதிலளிக்கவில்லையே?
வடக்கு கிழக்கு தமிழர்கள் ஏன் வாய்திறக்க கூடாது? வடக்கு வாழ் மலையக உறவுக்காராகளே ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்? வடக்கில் ஆமிக்காரர் அடித்து விரட்டியபோது தமிழ் உயர்வோடு அடைக்கலம் கொடுத்தவர்கள் மலையக தமிழர்கள். அந்த குழந்தைகளை எந்தவித ஆவணமும் இல்லாமல் பள்ளிகளில் சேர்த்துக்கொண்டவர்கள் மலையக அதிபர்கள். அடைக்கலம் கொடுத்தவன் ஆண்டவனுக்கு சமன் என்பது இந்த ''சிவா'' என்பவனுக்கு தெரியவில்லை. பயன்பெற்றவர்கள் அவனுக்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் இவனை அடக்கியிருக்க வேண்டாமா?

50 ஆயிரம் வீடுகளுக்கு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.. சோ.ஸ்ரீதரன் மாகாண சபை உறுப்பினர்
50 ஆயிரம் வீடுகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
- மாகாண உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் கூறுகின்றார்.
எந்த ஒரு அபிவிருத்திப் பணியையும் மேற்கொள்ள ஓர் இலக்கு நிரனயிக்கப்பட வேண்டும். அப்போதுதான் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும். அந்த வகையில், பெருந்தோட்ட மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற இலக்கை அமைச்சர் திகாம்பரம் நிர்ணயித்து செயற்பட்டு வருகின்றார். அது வெற்றி பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரத்தின் ஏற்பாட்டின் பேரில் அட்டன் டிக்கோயா தோட்டத்தில் 32 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் செப்பனிடப்பட்டுள்ள “கொங்கிரீட்” பாதையை மக்கள் பாவனைக்கு கையளித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங். பொன்னையா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், நுவரெலியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஆர். இராசமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில்,
எமது தொழிலாளர் தேசிய சங்கத்துக்கும் டிக்கோயா தோட்டத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகின்றது. இங்குள்ள மக்கள் தொழிற்சங்க விசுவாசம் மிக்கவர்கள். அதற்கு எடுத்துக் காட்டாக எமது சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் அமரர் வீ. கே. வெள்ளையனின் பூதவுடல் இந்தத் தோட்டத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டு நினைவு ஸ்தூபியும் எழுப்பப்பட்டுள்ளது. எனவே, இங்குள்ள மக்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளைச் செய்து கொடுக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும்.
டென்மார்க் எம்.பியுடன் இராஜாங்கக் கல்வி அமைச்சர் பேச்சுவார்த்தை!
மலையக குருவி : பெருந்தோட்டப் பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக டென்மார்க் எம்.பியுடன் இராஜாங்கக் கல்வி அமைச்சர் பேச்சுவார்த்தை!
பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாகவும், தொழிற்பயிற்சி நிலையங்களை மலையக பகுதிகளில் அமைப்பது தொடர்பாகவும், எமது நாட்டின் ஜி.எஸ்.பி.வரிச் சலுகை தொடர்பாக டென்மார்க் அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றதாக கல்வி இராஜாங்க அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் நேற்று (03.08.2017) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் கல்வி இராஜாங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க வருகை தந்துள்ள டென்மார் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் டிரோல்ஸ் ரவின்ஸ் கலந்து கொண்டார்.
அவருடன் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சமூக ஜனநாயக கட்சியின் நிர்வாக செயற்பாட்டாளருமான தர்மகுலசிங்கம், கனடா நாட்டை சேர்ந்த கனடா பெரிய சிவன் ஆலயத்தின் தர்மகர்த்தாவும், உலக சைவத் திருச்சபையின் சைவத் தலைவருமான கலாநிதி அடியார் விபுலாநந்தா கல்வி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செய்லாளர் எம்.துரைசாமி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
Wednesday, 2 August 2017
உத்தர பிரதேசம்.. இந்து பரிவாரங்களின் வெறியாட்டம்
கணபதி காமராஜ்: க:ட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1100 ஐ தாண்டவில்லை
MalayagaKuruvi: மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வீடு கட்டி கிராமங்களை உருவாக்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைச்சின் மூலம் கடந்த இரண்டரை வருட காலப்பகுதியில் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1100 ஐ தாண்டவில்லை என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். டிக்கோயா இன்வெறி தோட்டத்தில் இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் அங்கத்தவர்களின் சந்திப்பில் கலந்து கொண்டு மலையக வீடமைப்பு தொடர்பாக கணபதி கனகராஜ் கருத்து தெரிவித்தார். மலையகத்தில் புதிய கிராமங்களை அமைப்பதற்காக அமைச்சு ஒன்று இயங்கிவருகிறது. ஆனால் அந்த அமைச்சு இதுவரை எத்தனை கிராமங்களை உருவாக்கியுள்ளது என்பது எவருக்கும் தெரியாது. கிராமம் என்பது முழு தோட்ட லயன்களுக்கும் பதிலாக சகல வசதிகளையும் கொண்ட குடியிருப்பு தொகுதியை உருவாக்குவதே தவிர இருபது வீடுகளை கட்டி அதற்கு பெயர் சூட்டி கிராமம் என்று அழைப்பதல்ல. வீடுகள் கட்டுவதாக விளம்பரம் செய்யும் வேகத்தை இந்த அமைச்சு நடைமுறையில் வீடுகள் கட்டுவதில் காட்டவில்லை. ஐந்து வருடங்களில் ஐம்பதாயிரம் வீடுகளை கட்டப்போவதாக சொன்னவர்கள் கடந்த இரண்டரை வருடங்களில் கையளித்த வீடுகள் எத்தனை என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.< இவர்கள் இதுவரை 1100 வீடுகளுக்கும் குறைவான வீடுகளையே கையளித்துள்ளார்கள். இதை எவராவது மறுப்பார்களேயானால் வீடுகளை பெற்றுக்கொண்டவர்களின் பெயர் முகவரியைப் பகிரங்கமாக வெளியிட தயாரா?< தொழிற்சங்கத்தின் அங்கத்தவர்களை அதிகரித்துக் கொள்வதற்காக ஜனவரி, ஜூன் மாதங்களில் அடிக்கல் நாட்டப்பட்டு பல தோட்டங்களில் அது அப்படியே கைவிடப்பட்டுள்ளன.
குளவிக்கொட்டு இலக்காகிய 38 பேர் வைத்தியசாலையில் அனுமதி... பொகவந்தலாவை கொ்க்கஸ்வோல்ட்
Priyatharshan பொகவந்தலாவை கொ்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 38 போ் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை பிரேதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாா் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ கொ்க்கஸ்வோல்ட் இல 02 தமிழ் வித்தியாலயத்தில் பணிபுரியும் ஆசிரியா் ஒருவரும் உள்ளடங்குவதாக வைத்தியசாலையின் பேச்சாளா் தெரிவித்தார்.
கடக்க இயலாத நதிகள் நாங்கள்.. மலையக மக்களின் உழைப்பால்தான் இலங்கை ....
Esther Nathanie:
அண்மையில் ஒரு ஈழத்தமிழர் ஒருவர் மலையக மக்களை வெகு கேவலமாக திட்டி பேசியிருந்தார் அதை பார்த்து நான் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளானேன் என்னையும் மீறி அழுதிட்டேன்
மலையக பெண்களையும் வாழ்க்கையையும் அவர் மிக கேவலமாக கதைத்தார் இன்று இந்தியாவில் பார்த்தீர்கள் என்றால் ஒரு காதலர்களை நிர்வாணமாக அழைத்து சென்றார்கள் காரணம் அவர்களின் சாதி வெறி அதே வெறியை இந்த ஈழத்தமிழர் காட்டியுள்ளார். அவர் வெள்ளாளராம் விவசாயியாம் நாங்க பரையன் பறச்சியாம் இந்த சாதி வெறியின் உச்சமே . மலையக மக்களின் துன்பமே அவர்களுக்கான அடிப்படைவசதிதான்< இன்றுவரை அவர்களின் துன்பம் குறையவேயில்லை. நாங்கள் என்றாவாது நீ யாழ்ப்பாணம் நீ மட்டக்களப்பான் என்று பிரித்ததேயில்லை சிங்களவர்கள்தான் இனவாதத்தால் கொல்கிறார்கள் என்றால் நீங்க எங்களை தீண்டத்தகாதவர்களாவே பார்க்கிறீர்கள். மலையக மக்களின உழைப்பால்தான் இந்த இலங்கை தள்ளாடாமல் நிற்கிறது. இன்று இப்படி சாதிவெறி பிடித்தவன் என்றால் முன்னர் எங்களை எவ்வாறு நசுக்கி இருப்பீர்கள் இந்தளவுக்கு எங்களை கேவலமாக புறக்கணிக்க நாங்கள் செய்த துரோகம்தான் என்ன தமிழா? தமிழர் என்பதாலா??

கருத்தியல் ரீதியில் தோட்டக்காட்டான் வடக்கத்தீயான் என்ற வார்த்தை இன்றும் நடைமுறையில் இருக்க இப்படிப்பட்டவர்களேக் காரணம்
1983 ம் ஆண்டு கறுப்பு ஜீலையில் கழுத்தில் டயர் மாலை போட்டு எரீக்கப்பட்ட எந்தவொரு மலையக தமிழனுக்கு தெரியாது யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பிரச்சினை அவர்கள் வயிற்றுக்காக வேலை தேடி வந்தவர்கள் எரித்தவர்கள் பார்க்கவில்லை இவன் மலையகம் ஈழத்தவன் என்று தமிழன் என்பதற்காகத்தானே கொன்றார்கள்!!
Monday, 31 July 2017
100 கெட்டவர்களை திட்டுவதை விட 10 நல்லவர்களின் மனம் கோணாது அமைதிகாப்பது
malaiyaka kuruvi :100 கெட்டவர்களை திட்டுவதை விட 10 நல்லவர்களின் மனம் கோணாது அமைதிகாப்பது சிறப்பானதாக நான் நினைக்கிறேன்.
- ஊடகவியலாளர் விக்கி விக்னேஷ் (முகநூலிலிருந்து)
#மலையக #தமிழர்களை ஏளனித்து #காணொளி பரப்பிய அந்த நபர் இவ்வாறான பல #இகழ்வாதக்குணத்தோரின் ஒரு பிரதிபலிப்பு.
அந்த நபரை திட்டி அவர்போல நடந்துக் கொள்வதும், அந்தக் காணொளியை மேலும் மேலும் பகிர்ந்து அவரை புகழடைய நாமே காரணமாவதும் மடைமை என்பது என் தனிப்பட்ட எண்ணம்.
மலையகத்தோரை இகழ்வாக கருதும் #வடக்கு மக்களின் மனநிலை முழுமையாக மாறிவிட்டது என்றும் சொல்வதற்கில்லை.
ஆனாலும் சிலர் பிரதேச #பிரிவினைகளைத் துறந்தவர்களாக இருக்கிறார்கள் என்து மனநிம்மதி.
கடந்த மாதம் ஒரு நிகழ்வொன்றில் இருக்கும் போது #யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த #நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார்.
அவர் மிகுந்த #தமிழ்தேசியக் கொள்கைவாதியும், #யாழ்ப்பாணமமதை பெருகியவருமாகவே என்னால் அறியப்பட்டிருந்தார்.
கடும் பிரதேசவாத குணமுடைய அவர் என்னோடு பழக ஆரம்பித்தகாலம் முதல் தன்னை மாற்றிக் கொள்வதாக சொல்லி வந்திருந்தார்.
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பிரிவு ஆரம்பம்,முதலாவது சத்திரசிகிச்சை வெற்றி..!
மலையக குருவி
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பிரிவு ஆரம்பம்,முதலாவது சத்திரசிகிச்சை வெற்றி..!!
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தில் சத்திரசிக்கிசை பிரிவு 31.07.2017 ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
மும்மத வழிபடுகளின் பின்னர் கர்ப்பிணி தாயொருவருக்கு மகப்பேற்று சத்திரசிக்கிச்சை மேற்கொள்ளப்பட்டது
பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த பத்மாவதி என்ற கர்ப்பிணி தாயொருவருக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது சத்திரசிக்கிச்சையினால் பெண் குழந்தை பிரசவித்துள்ளதாகவும் சத்திரசிக்கிச்சையானது வெற்றியளித்துள்ளதாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி திலின விஜேதுங்க தெரிவித்தார்
இந்திய அரசாங்கத்தின் 500 கோடி ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடமானது
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க. மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆகியோரினால் கடந்த மே மாதம் 12 ம் திகதி மக்கள் பாவணைக்கு திறந்து வைக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து புதிய கட்டிடத்தில் வெளிநோயாளர் பிரிவு மாத்திர இயங்கி வந்த நிலையில் சத்திர சிக்கிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி குடில் கைத்தொழில் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
செய்திகள் விசேட செய்திகள்
கிளிநொச்சி குடில் கைத்தொழில் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
கரிகாலன் - July 31, 2017
கிளிநொச்சி அறிவியல் புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடில் கைத்தொழில் நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. குறித்த கைத்தொழில் நிலையத்தினை தேசிய சகவாழ்வு கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் மற்றும் இந்திய துணைத்தூதுவா் நடராஜன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர். குறித்த நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கல்வியியலாளர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். malaikam
போதைப்பொருள் விற்பவர்கள் .... பின்னணியில் இருப்பவர்கள் பிடிபடுவதே இல்லை?
Rathnasingam Annesly :இது வழமையான செய்தியும் கைதும் தான்....!!!!!
.
.......65 கிலோ ஆனால் ஒருவர் தான் கைதுசெய்யப்பட்டார்....
.
...................விடயம் முடிந்துவிட்டது......
.
...வடக்கில் 400 கிலோ கஞ்சா 2 கைது விடயம் முடிந்துவிட்டது....
.
...............கொழும்பில் 10 கோடி பெறுமதியான போதை பொருள் கண்டுபிடிப்பு ......2 பேர் கைது....
.
....விடயம் முடிந்துவிட்டது......
.
.
....இவ்வளவு தொகையான போதை பொருளுக்கு 1 வர்அல்லது 2 வர் மட்டுமா ?????
.
.
....வியாபாரம் தொடர்கிறது காரணம் இதை நடத்துபவர்கள் யாரும் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை......
.
.
...இதுகும் ஒருவகை அபிவிருத்தியோ????...
.
.....பழைய ,,புதிய அரசில் யார் அதிகம் களவெடுத்தார்கள் என்பதை கணக்கு பார்ப்பதில் நகர்கிறது இலங்கை அரசியல்....
.
.
...அதை எழுதி பெயர் வாங்கும் பத்திரிகைகளும்....
.
...இதை யார் கவனிப்பார்??
மலையக மக்களை மிக கடுமையாக அவமதித்தவருக்கு எதிரான நடவடிக்கை..
இன்று காலை கௌரவ அமைச்சர் திரு.ராதாகிஷ்ணன் என்னுடன் தொலைபேசியில் பேசினார்....
.
....அவர் மிகவும் சிறந்த முறையில் இந்த நபரை கைதுசெய்யும் நடவடிக்கையில் இறக்கியிருக்கிறார்...
.
..தயவு செய்து அவருடன் இணைந்து ,கட்சி அரசியலை தள்ளிவைத்துவிட்டு இணைந்துகொள்ளவும்....
.
.......நீங்கள் செய்யவேண்டியது ...????
.
....Online petition ஒன்றை உருவாக்கி அதில் அணைத்து மக்களும் கையெழுத்திட்டு German Embassy Colombo க்கு அனுப்பவும்....
.
........அந்த Online petition இல் அணைத்து அரசியல் தலைவர்களும் கையெழுத்து இடவேண்டும்....
.
....இதை நீங்கள் செய்தால் நான் Germany இல் இருந்து எமது உள்நாட்டு அமைச்சர் உடனும் ,வெளிநாட்டு அமைச்சர் உடனும் தொடர்புகொண்டு இந்த அயோக்கியனை கைது செய்ய முடியும்....
.
...தயவு செய்து ஒற்றுமையாக செய்யவும்....
.
.
...மலையக மக்களுக்கு எதிரான மற்றும் இனவாதம்,பிரதேசவாதம் .சாதிவாதம் போன்றவைகளை பேசும் முகநூல் கோமாளிகளை அடக்கமுடியும் என்பதை சாதித்து காட்டவேண்டும்....
.
..தொடர்புகளுக்கு ...ratnasinghamannesley@yahoo.de
Sunday, 30 July 2017
அனுஷா சந்திரசேகர : சகமனிதனை மதிக்க தெரியாதவனை துச்சமாக புறக்கணியுங்கள்
Malayaga Kuruvi : மலையகத்தை பற்றி இழிவாக பேசி ஒற்றுமையை குழப்பிய நபரை கண்டிக்கிறார் அனுஷா சந்திரசேகரன்.
இது அவர் விடுத்துள்ள முக நூல் பதிவில்
இன அழிப்பின் அடையாள மாதமான இந்த ஜூலை மாதம் 1983 ம் ஆண்டுகளில் தமிழர்களின் செங்குருதி தெளித்து கருப்பு ஜூலை என வரலாறுகளில் பொறிக்கப்பட்டது. 34 ஆண்டுகளின் பின்பும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.
ஆயினும் கௌரவத்திற்குரிய கனம் நீதிபதி இளஞ்செழியன் அவர்களை பாதுகாக்க பெரும்பான்மை இனத்தை சேர்ந்த காவற்துறை அலுவலர் குண்டை அவர் உடம்பில் வாங்கியதும் , அதற்கு நன்றியாக நீதிபதி அலுவலரின் குடும்பத்தின் கால்களில் விழுந்தமையும் எம் இனங்களுக்கிடையேயான ஒற்றுமையை வலுவூட்டியது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் எங்கோ ஒரு நாட்டில் உள்ளவன் வீர ரத்தம் பாயும் உழைப்பாளர்களான எம் மலையகத்தவர்களை பற்றி இழிவாக பேசி ஒற்றுமையாய் சகோதர சகோதரிகளாய் தமிழர்களாய் வாழும் எம் ஐக்கியத்தை குலைக்க முற்படுவது கண்டிக்க வேண்டியதொன்றாகும்.
அமைச்சர் மனோ கணேசன்: இவர் ஒரு மனநோயாளி! உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!
பொறுத்திருங்கள்!!! அமைச்சர் மனோ கணேசன்
மலையக சமூகத்தை மிகக் கீழ்த்தரமாக பேசி முகநூலில் பதிவிட்டுள்ள கச்சா சிவம் என்ற நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் பதிவிட்டுள்ளார்.
கச்சா சிவம் என்ற நபர் பதிவிட்டுள்ள காணொளி குறித்து நண்பர் ஒருவர் முகநூலில் எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அமைச்சரின் முகநூல் பதிவு பின்வருமாறு :
//இவர் ஒரு தனிமனித மனநோயாளி. இவர் எந்த ஒரு சமூகத்தையும், இனத்தையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. இவரது கருத்து பொது வெளியில் வெளியாகியுள்ளதுதான் இங்கு பிரச்சினை. இது தவறான முன்னுதாரணத்தை தந்துவிடலாம். அது இன்னும் பலசில மனநோயாளிகளை உருவாக்கிவிடலாம். இவர் மீது முகநூல் சார்ந்த மற்றும் இவர் வாழும் நாடு சார்ந்த சட்ட நடவடிக்கை எடுக்கலாம். அத்தகைய உரிய நடவடிக்கை இவர் மீது எடுக்கப்படும். பொறுத்திருங்கள்.//
Subscribe to:
Posts (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...