veerakesari : வடக்கிலும், கிழக்கிலும் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும் தெரியாது" என கருணாம்மான் என்றழைக்கப்படும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மத்தியகுழு கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்
விநாயகமூர்த்தி முரளீதரன் தொடர்ந்து தெரிவிக்கையில்,
"இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்காக எமது கட்சி குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும், அது போன்று எமது மக்களின் விடுதலைக்காகவும் ஆணித்தரமாக செயற்படும் என்பதுடன், 20 ஆவது திருத்த சட்டம் தற்ப்பொழுது பாராளுமனறத்தில் அமுலாக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்துள்ளது ஆனால் எமது கட்சி இதை முற்று முழுதாக எதிர்க்கின்றது.