Tuesday, 24 October 2017

கெக்கிராவ பட்டினி மாணவி ! இப்போதும் அந்தக்குடும்பத்துக்கு உணவில்லை

Esther Nathaniel : வறுமையும் வாழ்வும். கெக்கிராவ மாடாட்டுகம பகுதியில் உள்ள சிங்கள பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி கற்ற மாணவி திடீரென்று வாந்தி எடுத்துள்ளார் காரணம் தொடர்ந்து மூன்று நாள் உணவு உண்ணவில்லை ஒரு நாள் ஒரு தடவை உணவு உட்கொண்டுள்ளார். அதனால் பசி மயக்கத்தால் வாந்தி எடுத்துள்ளார். பின்னர் அதிபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவி தொடர்ந்து மூன்று நாள் வாந்தி எடுத்துள்ளார் இதனை அவதானித்த அதிபர் மாணவி கர்ப்பமாக இருப்பதாக எண்ணி வைத்திய பரிசோதனைகள் இன்றி அவரை பாடசாலையை விட்டு உடனடியாக விலக்கயுள்ளார் விடுகை பத்திரத்தையும் வழங்கி.பின்னர் பெற்றோர்கள் அவரை வைத்தியசாலையில் சேர்த்து பரிசோதித்தப்பின்பு அவர் கர்ப்பம் இல்லையென்றும் தொடர்ச்சியான பட்டினியும் உணவு இன்மையும் காரணமாகவே வாந்தி எடுத்துள்ளதாக வைத்திய அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளது.அதிபரின் முட்டாள்த்தனமான பிழையான அவதானத்தால் மாணவிக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டதாகவும் பாடசாலைக்கும் சமூகத்துக்கும் முகம்கொடுக்க இயலாமல் வெட்கப்பட்டு பிள்ளை தற்கொலைக்கு முயற்சித்துள்ளமையும் மிகவும் வேதனைக்குரியதே இப்போது அவர் தம்புள்ள வைத்தியசாலையில் மேலதிக
சிகிச்சை பெறுகிறார் இப்போதும் அந்தக்குடும்பத்துக்கு உணவில்லை
என்பதும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...