Saturday, 15 July 2017

கண்டி நுவரெலியா பாதையில் இருந்து -பெரட்டாசி செல்லும்பி 15 கி.மீ பாதை

பா.திருஞானம் - 0777375053 பெரட்டாசி பாதையை அமைக்க புற்களால் காபட் முறைமை மக்கள் பெரும் அவதி அரச பஸ் சேவை 10 வருடங்களாக இடை நிறுத்தம் நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட கண்டி நுவரெலியா பிரதான பாதையில் இருந்து பெரட்டாசி தோட்டத்திற்கு செல்லும் பிரதான 15 கி.மீ பாதை சுமார் 15
வருடங்களுக்கு மேல் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை இதனால் இந்த பிரதேசத்தில் வாழும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இப்பிரதேசத்தில் பெரட்டாசிஇ கரகஸ்தலாவஇ எல்பொட போன்ற கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த ரஸ்புருக் தோட்டம்¸ பெரட்டாசி தோட்டம்¸ பூச்சிகொட தோட்டம்¸ பெரட்டாசி தொழிற்சலை பிரிவு தோட்டம்¸ மேரியல் தோட்டம்¸ அயரி தோட்டம்¸இ எல்பொட வடக்கு தோட்டம்¸இ மேமொழி தோட்டம்¸ காச்சாமலை தோட்டம்¸ கட்டகித்துல தோட்டம்இ வெதமுள்ள கெமினிதன் தோட்டம்¸ கந்தலா தோட்டம் போன்ற
காணப்படுகின்றனர். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இந்த பாதையில் அரச போக்குவரத்து சேவை இருந்தது அதுவும் பாதை அவலம் காரணமாக இடை நிறுத்தபட்டுள்ளது. இப்பிரதேசத்தில் காணப்படும் 8 பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள்; பஸ் உரிய நேரத்திற்கு செல்லாததினால் காலை 9.00 மணிக்கே பாடசாலை செல்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி நிலையும் பாதித்து வருகின்றது.

இலங்கை தேயிலை 1857 முதல் 2017 வரை ... ஆவணப்படம்

தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கு பொருந்தும். அந்தளவுக்கு மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ள, அன்றாட வாழ்க்கையில் பங்களிப்பு செலுத்தி வருகின்ற தேயிலை இலங்கையில் அறிமுகமாகி 2017ஆம் ஆண்டுடன் 150 வருடங்கள் பூர்தியடைந்துள்ளன.
Teaகமிலியா சைனேசிஸ் Camillia Sinensis Camillia Sinensis என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட தேயிலை 1867ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் தேயிலையை உலகில் பயன்படுத்த ஆரம்பித்து பல ஆயிரம் வருடங்களாகின்றன. புத்தப் பெருமான் பிறப்பதற்கு 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தேயிலை கண்டறியப்பட்டதாக வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
வரலாற்றுக் குறிப்புக்களின் படி தேயிலையை சீன பேரரசனான சென்நுன் முதன்முதலில் கண்டுபிடித்துள்ளான். சீனாவில் திக்விஜயம் மேற்கொண்டிருந்த சென்நுன், களைப்பின் காரணமாக ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து வெந்நீர் பருகிக்கொண்டிருந்த வே

ளையில் மரமொன்றில் இருந்த காற்றில் அசைந்தாடி பறந்து வந்த மலரொன்று அவ்வெந்நீர் கோப்பையில் விழுந்ததாகவும் அதன் பின்னர் வெந்நீரில் ஏற்பட்ட சுவை மாற்றத்திற்கு பேரசன் அடிமையாகி அதனை சீனாவில் பிரபலமடையச் செய்தான் என்றும் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வடகிழக்கு வாழ் மலையக மக்கள் கிளிநொச்சி ஸ்ரீதரனுக்கு எதிராக சம்பந்தனிடம் மனு!

thenee.com : பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரனின்&பிரதேசவாத  கொடூர சொற் பிரயோகங்களை வன்மையாக கண்டிக்கின்றோம் எதிர்கட்சி தலைவரிடம் வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் மகஜர்</ பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரனின் கொடூர பிரதேசவாத சொற் பிரயோகங்களை வன்மையாக கண்டிப்பதோடு அவா் நாட்டில் வாழுகின்ற மலையக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனா்.இன்று கிளிநொச்சிக்கு விஜயம்  செய்த  சம்மந்தனிடம் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் வைத்து இம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்இ வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் அமைப்பின் இணைப்பாளருமான எம்பி. நடராஜ் கையொப்பம் இட்டு இந்த மகஜர் வழங்கப்பட்டுள்ளது. குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கிளிநொச்சி மாவட்டத்தில்  மலையக வம்சாவழி மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனா். கடந்த தேர்தல்களில் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன் இந்த மக்களின் அதிகளவாக வாக்குகளையும் பெற்றவா். எனவே இந்த நிலையில் அவா்  மலையக சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சொற் பிரயோகங்களை மேற்கொண்டிருப்பது நாடு முழுவது வாழும் மலையக மற்றும் இந்திய வம்சாவழி மக்களின் மனங்களை சிதறடித்துள்ளது.

ஆபாச பாலியல் வன்முறை தொடர்பான படங்களை வெளியிடும் தொழிற்சாலை புங்குடுதீவு....

protest vidyamurderwww.thenee.com   : பைஸர் ஷகிட்: 2015ல் நடைபெற்ற வித்தியா சிவலோகநாதனின் கோரமான பாலியல் வன்முறை மற்றும் கொலை பற்றி இப்போது அரிதாகத்தான் பேசப்படுகிறது, குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும் என்று பிரச்சாரம் செய்து கடுமையாக உழைத்த ஆர்வலர்கள் மத்தியில் கூட இந்த நிலைதான், குறைந்தபட்சம் சம்பவம் நடைபெற்ற வடபகுதிக்கு வெளியே கூட விவாதிக்கப்படுவதில்லை. எனினும் யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது, பாலியல் வன்முறை  மற்றும் கொலை தொடர்பான விபரங்கள் ஏற்கனவே போதுமானளவு இல்லை என்பதால் விசாரணைகள் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகம் குழப்பமான பல தகவல்களைக் கண்டுபிடித்துள்ளது. அதன் முழுக் காட்சியையும் விளக்குகிறேன். உங்கள் மனைவி, அல்லது மகள், அல்லது தாய் அல்லது சகோதரி அல்லது உங்களுக்கு நெருங்கிய உறவினரோ அல்லது நண்பரோ ஆன பெண் ஒருவர் கடத்தப்பட்டு, வன்புணர்வு மற்றும் குரூரமான முறையில் கொலை செய்யப் பட்டிருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். இப்படியான ஒரு சூழ்நிலையை நீங்கள் எப்படிக் கையாள்வீர்கள்? இந்த செய்தியே உங்களைப் பயமுறுத்தும் அல்லது உங்கள் மீதி வாழ்நாள் முழுவதும் அது உங்களை முடக்கிவிடும். எப்போதும் அவதூறாகச் சித்திரவதை செய்யப்படுவது பற்றி ஆர்வக்கோளாறான வதந்தி பரப்புவோர்களைப்பற்றி விளக்க வேண்டியது அவசியம்.

கொழும்பு - பதுளை ரயில்சேவை தடையின்றி முன்னெடுப்பு

thinakaran.lk:  ஹற்றன் - கொட்டகலைக்கு இடைப்பட்ட,60 அடி பாலத்தில் திருத்த வேலைகள் இடம்பெற்று வருவதால், மாற்று ஏற்பாடுகள் மூலம் கொழும்பு - பதுளை ரயில் சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே செயற்பாட்டு அதிகாரி விஜய சமரசிங்க தினகரனுக்குத் தெரிவித்தார். இதற்கமைய கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையான அனைத்து ரயில் சேவைகளும் வழமைப்போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் சேதமடைந்திருக்கும் 60 அடி பாலம் மக்கள் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்றது என்பதனால் அக்குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் விசேட இலவச பஸ் இணைப்புச் சேவை ஏற்பாடு செயப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இதன்படி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகள் ரயில் ஹற்றன் ரயில் நிலையத்தை அடைந்ததும் அங்கு பயணிகள் இறக்கிவிடப்படுவர்.

மனோ கணேசன் : நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை 10 உயர்த்தப்பட வேண்டும்

வீரகேசரி Vijithaa   :  நாடு முழுக்க உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும். இந்த தேர்தல் நடைபெறும் முன்னர் நுவரெலியா மாவட்டத்தில் இன்று இருக்கின்ற ஐந்து பிரதேச சபைகளின் எண்ணிக்கை பத்தாக உயர்த்தப்பட வேண்டும் என்ற எமது உறுதியான நிலைப்பாட்டை எமது அரசு தலைமைக்கு தெரிவித்து விட்டோம்  என ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள குடிபெயர்வுகளின் அடிப்படையில் பல்வேறு மாகாணங்களில் இருந்து புதிய பல பிரதேச சபைகளை அமைத்திட கோரிக்கைகள் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளன. அவை அனைத்தையும் உடனடியாக செய்திட நடைமுறை சிக்கல்கள் தடையாக உள்ளன. எனினும் நாட்டின் சில இடங்களில் பத்தாயிரம் பேருக்கு ஒரு பிரதேசபை மற்றும் செயலகம் அமைந்திருக்கும்போது நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள் இலட்சக்கணக்காண சனத்தொகை கொண்டவையாக ஆண்டாண்டு காலமாக அமைந்திருக்கின்றன. ஆகவே இம்மாவட்டம் முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்தப்பட வேண்டியதாகும் என்ற எமது சுட்டிகாட்டலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்.

தமிழ்-முஸ்லிம் உறவு மேம்படுத்தப்பட்ட வேண்டும்.. அரசியல்வாதிகளின் பொறிகளில் மக்கள் சிக்கிவிடக்கூடாது

Arun Hemachandra: தமிழ் இனம் வாழ வேண்டுமென்றால், தமிழ் மொழி வாழ
வேண்டும். தமிழ் மொழியினை இன்று இரு தரப்பினர் இலங்கையில் வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் தமிழர்களும், முஸ்லிம்களும். குறிப்பாக கம்பஹா, களுத்துறை, கண்டி, குருணாகல் ஆகிய மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை தமிழரை விட அதிகமானது. அங்கு தமிழ் மொழி மூலமான கல்வி மிகுந்த கஷ்டத்தின் மத்தியிலும் ஊக்குவிக்கப் படுகிறது. ஒரே கல்வித் திட்டமும் செயலில் உள்ளது. ஆகவே தமிழ் மொழியின் அழிவையும், அழிப்பையும் தவிர்த்து அதனை வளர்க்க வேண்டுமெனில், தமிழ்-முஸ்லிம் உறவு மேம்படுத்தப்பட்ட வேண்டும். ஒரு சில அரசியல்வாதிகள் விடும் பிழைகளை நாம் ஓட்டு மொத்த இனங்களின் மேலும் போட்டுவிட முடியாது. முற்போக்கு, இனவாதத்திற்கெதிரான நடுநிலை சக்திகள் அனைத்து இனங்களினுள்ளும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதுவே தீர்விற்கு வித்திடும். மாறாக ஒரு இனவாதம் இன்னொரு இனவாத்தைத் தோற்கடிக்காது. இது காட்டுத் தீ போன்றது. ஒரு காட்டுத் தீ, இன்னுமொரு காட்டுத் தீயினை நிறுத்தாது...

Friday, 14 July 2017

மலையகத் தலித்துகள், சில புரிதல்கள் - என்.சரவணன்

Saravanan Komathi Nadarasa :இந்தக் கட்டுரை 2000 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த "தமிழினி 2000" மாநாட்டில் நான் ஆற்றிய உரை.
ஸ்ரீதரன் எம்.பி வடக்கத்தையான் என மலையக மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய பேச்சைப் போலவே சில வருடங்களுக்கு முன்னர் தந்தை செல்வா நினைவு தினத்தின் போது ராஜதுரையை "சக்கிலியன்" என்று திட்டியதும் நிகழ்ந்தது. இவற்றுக்கு போதிய அளவு மக்கள் எதிர்வினையாற்ற வேண்டும்.
இந்த நேரத்தில் எனது முன்னைய கட்டுரையை பகிரத் தோன்றிற்று....
namathumalayagam.com இன்றைய முதலாளித்துவ சமூக உருவாக்கத்தின் நவவடிவங்கள் (உலகக் கிராமங்கள் அல்லது Information Highway போன்ற சொற்றடர்களைப் பயன்படுத்தலாம்) எத்தனைதான் அரசியல், பொருளியல், பண்பாட்டு ரீதியான மாற்றங்களைக் ஏற்படுத்திக் கொண்டுவருகின்ற போதும் உலகின் இனக்குழுமங்களுக்கு இடையிலான உறவுகள், நெருக்கங்கள் (அல்லது நலன்கள்) என்பன மேலும் துருவமயமாகிக்கொண்டுபோகும் நிலைமையும், அதிகாரத்துவம், அசமத்துவம் என்பன மேலும் இறுகும் நிலைமையும் அதிகரித்து வரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்று தமிழினி 2000 குறித்து கூடியிருக்கின்றோம். இலங்கை மலையகத் தமிழர்களின் உள்ளடக்காத ஒரு ஒரு தமிழ் இனியை நாம் கற்பனை செய்ய முடியாது என்பதை நாம் ஒப்புக்கொள்வோம்.. அந்தளவுக்கு நாம் இந்த நிகழ்வுப் போக்கில் தாக்கம் செலுத்தும் வீரியமிக்க சக்தியாக வளர்ந்து விட்டோம். மலையகத் தமிழர்களில் அடக்கப்படும் சாதிய சமூகத்தின் எண்ணிக்கை ரீதியாக அதிகளவில் கொண்டிருக்கின்ற அதேநேரம் அவர் தம்மை ஒரு தேசமாக, மலையகத் தமிழ்த் தேசமாக தம்மை உருவாக்கிக் கொண்டுமுள்ளார்கள்.
வல்லாதிக்க சக்திகள் இந்த யுகத்தை தகவல் தொழில்நுட்ப யுகமாக பிரகடனப்படுத்துகின்றன. இதன் அடிப்படை நோக்கமே உலகை தனது நலனுக்காக, ஆதிக்க சித்தாந்தமயப்படுத்துவதுதான். புதிய உலக ஒழுங்குக்கு ஏனைய குறைவிருத்தி தேசங்களையும் தகவமைக்குமாறு நிர்ப்பந்திக்கின்றன. ஆதிக்க சித்தாந்த கருத்தேற்றம் செய்து உலகை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கின்றன. இதற்காக, அவை திட்டமிட்டே பல்வேறு திட்டங்களை நிகழ்ச்சிநிரல்களையும் பன்முக தளங்களில் மிகவும் நுட்பத்துடன் செயற்பட்டு வருவதை, அதன் விளைவுகளை நாம் உணர்ந்துள்ளோம் என்றால் அது மிகையில்லை.

அமைச்சர் திகாம்பரத்தின் சேவைகளை விமர்சனம் செய்வது உள்நோக்கம் உடையதா?

Malayaga Kuruvi'ஆறுமுகன் ராமநாதன் அமைச்சராக 10 ஆண்டுகள் இருந்தார். அந்த 10 ஆண்டுகளில் 9 ஆண்டுகள் அவர் இலங்கையில் இருக்கவில்லை. உள்ளூரில் இருந்த காலத்தில் யாராவது பணம் செலவு செய்து கொழும்பில் கட்டிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டித் திறந்து வைப்பதிலும் விருந்துகளிலும் லிபர்டி சதுக்க இரவு விடுதிகளிலும் செலவாக்கினார். எவ்வாராயினும்  பேசிப் பயனில்லை.
தமிழ் முற்போக்கு கூட்டணியினர் சிற்சில வேலைகளை சிறப்பாக (நுவரெலிய-மஸ்கெலிய தேர்தல் தொகுதிக்கு) செய்து வருகின்றார்கள். மகிழ்ச்சி. கண்டி மாவட்டம் கௌரவ வேலு குமார் பாராளுமன்ற உறுப்பினர் வேலைகள் செய்வதாக செய்திகள் படித்து மக்கள் மகிழ்கிறார்கள்.மாத்தளைப் பிரதேசம் நிறைய தேயிலை மற்றும் றப்பர் தோட்டங்கள் நிறைந்த பகுதி. ஆனால் எங்களை யாருக்குமே இன்னும் தெரியவில்லை என்பது கவலையாகவும் கேவலமாகவும் இருக்கிறது.
அட்டன் நகர அபிவிருத்தியில் அமைச்சர் திகாம்பரத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர் : மாகாண உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்அங்கீகாரத்தையும் பலத்தையும் கொண்டு அட்டன் நகரை அபிவிருத்தி செய்யும் அமைச்சர் திகாம்பரத்தின் நடவடிக்கை குறித்து அட்டன் நகர மக்களும் அட்டன் நகருக்கு வந்து செல்கின்றவர்களும் வெளிப்படுத்தும் ஆர்வமானது மகிழ்ச்சிக்குரியதாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினரமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். 

நேசகுமார் விமல்ராஜ் கொலை வழக்கில் எதுவித முன்னேற்றமும் இல்லை ... காணி அபகரிப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்த..

malayaka kuruvi :மட்டக்களப்பில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் காணி
அபகரிப்புகளுக்கு எதிராக துணிந்து செயற்பட்ட மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் சகோதரர் நேசகுமார் விமல்ராஜ் அவர்கள் அவரது வீட்டில் வைத்து முஸ்லீம்களால் 22/02/2017 சுடப்பட்டு இன்றுடன் 6 மாதங்கள் கடந்த நிலையில் விசாரணையில் எவ்வித முன்னேற்றங்களும் இல்லாத நிலை காணப்படுகிறது. இது எதனை உணர்த்தி நிற்கிறது? முஸ்லீம்கள் தமிழர்களை அதிகார பலங்களினாலும் அடக்குமுறைகளாலும் தங்களுக்கு எதிரான தமிழ் அதிகாரிகளையும் கட்டுப்படுத்திவைக்க நினைக்கின்றனர். விசாரணைகளை இடையூறு செய்கின்றனர். குறிப்பாக ஏறாவூர் புண்ணைக்குடா வீதி, தளவாய், சவுக்கடி போன்ற பிதேசங்களில் இடம்பெற்ற அத்துமீறிய குடியேற்றங்கள் , பனைவளங்களின் அழிப்பு, அரசகாணிகளை அபகரித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக துணிந்து விரைவாக நடவடிக்கை எடுத்தனால் சுடப்பட்டார்.

கேகாலை மாவட்டத்தில் டெங்கு பரவும் இடங்கள் .... ஹிங்குலோயா ,கிருங்கதென்யா,மகாவத்தை ,மாவான ,ரன்கோத்தல்ல

MAWNEWS · JULY 14, 2017 கேகாலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் பிரதேசமாக மாவனல்லை அடையாலாபடுத்தப்பட்டுள்ளது. இதிலும் விசேடமாக மாவனல்லை நகரமும் சில புறநகர்பகுதிகளும் டெங்கு அவதான இடங்களாக இணங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க மாவனல்லை நகரம் உட்பட ஹிங்குலோயா, கிருங்கதெனிய, மஹவத்த, மாவான, ரங்கோத்திவல ஆகிய 5 கிராம சேவகர் பிரிவுகளில் அதிகம் டெங்கு காய்ச்சல் பரவும் இடங்களாகும். இந்நிலையில் அரசாங்கமும் அரச அதிகாரிகளும் சுகாதார உத்தியோகத்தர்களும் தீவிரமாக செயற்பட்டாலும் இவ்விடங்களில் பொதுமக்களின் ஒத்துழைப்பு பூரணமாக அனைவராலும் கிடைப்பதில்லை என பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை மீறி பொதுமக்களின் நலன்களை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வோர் மீது நடவடிக்கை மேற்கொள்வதுடன் தவறான முறையில் நகரிலும் சுற்றுப் புறப்பகுதிகளிலும் குப்பைகளையும் கழிவுப்பொருட்களையும் கொட்டுவோரை அவதானிப்பதற்காக CCTV கெமராக்களை பயன்படுத்துவதாகவும் இதற்கு மாவனல்லை நகர வர்த்தக சமூகம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் கேகாலை மாவட்ட செயலாளர் சந்திரசிரி பண்டார தெரிவித்தார்.

BBC நெடுந்தீவு குதிரைகள் பற்றிய கள ஆய்வுக்குழு ..


யாழ்ப்பாணத்திற்கு வடக்கே அமைந்துள்ள தீவுகளில் ஒன்றாகிய நெடுந்தீவு திவில் குதிரைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குழுவொன்றை நியமித்துள்ளார். நெடுந்தீவில் நிலவுகின்ற மோசமான வறட்சி காரணமாக, அங்குள்ள குதிரைகள் உயிரிழக்க நேர்ந்துள்ளதையடுத்தே, வடமாகாண சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வரட்சியால் இதுவரை ஆறு குதிரைகள் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வண்டுள்ளன. குடிப்பதற்கு நீர் இல்லாமலும், மேய்ச்சலுக்கென போதிய புல் இல்லாமலும் ஆறு குதிரைகள் வரையில் மடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் வழமை போல இதிலும் காசு அடிக்க மாட்டார்கள் என்பது கேள்வி குறிதான். வரலாறு அப்படி 

பொருத்து வீடுகளுக்கு எதிராக சுமந்திரன் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல்

தினக்குரல் வடகிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொருத்து வீடுகள் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்று கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று வியாழக்கிழமை உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.< >போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தை வடக்கு, கிழக்கில் உருவாக்குமாறு அரசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் தமிழ்த் தலைவர்களும் கோரிவரும் நிலையில், அந்தப் பகுதிகளில் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார்.< இந்தப் பொருத்து வீடுகள் வட, கிழக்கு மாகாணங்களின் காலநிலைக்கு பொருத்தமற்றவையென தமிழ்த் தரப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டி வருகின்றபோதும் பொருத்துவீடுகளை அமைப்பதில் மீள் குடியேற்ற அமைச்சர் விடாப்பிடியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Thursday, 13 July 2017

பிள்ளையாருக்கு முள்வேலி ... தாழ்த்தப்பட்ட சாதியினர் வெளியே ... முள்ளிவாய்க்கால் அல்ல இது தச்சன் தோப்பு பிள்ளயார் கோவில்


Skathka  : kathiravan.com  தங்கமில்லாமல் நாமில்லை என்று தமிழர்கள் இலங்கையிலும், புலம்பெயர்நாடுகளிலும் வரிசையாக நகைக்கடைகளை திறக்கிறார்கள். புத்தகக்கடைகள், பதிப்பகங்கள் எத்தனை இருக்கின்றது என்று மண்டை கழண்ட கேள்விகள் கேட்கக் கூடாது. இமயமலையின் பனிச்சிறுத்தைகள் போல மிக அரிதாகவே புத்தகங்கள் தமிழ்ச்சூழலில் காணப்படும். சந்தனம் மிஞ்சினால் எங்கேயோ தடவுவது போல் பணம் மிஞ்சிப் போனதால் வடமராட்சியில் ஒரு, பிள்ளையாருக்கு தங்கமுலாம் பூசி ஒரு தேர் செய்திருக்கிறார்கள். இயற்கையான மரத்திற்கு தங்கமுலாம் பூசி அலங்கோலப்படுத்தியதைப் போல இந்தக் கோவில் நிர்வாகசபையினரின் மனங்களில் சாதிவெறி இறுகப் பூசி மனிதத்தை கேவலப்படுத்துகிறது. அறுபதாம் ஆண்டுகளில் கம்யுனிஸ்ட்டுக் கட்சியினரும், சிறுபான்மை தமிழர் மகாசபையினரும் சாதிக் கொடுமைகளிற்கு எதிராகப் போராடினார்கள். தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களை கோவில்களில் சமமாக நடத்து என்ற முழக்கம் விண்ணதிர எழுந்தது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கோவில்கள் போராட்டத்தின் விளைவாக தங்களது சாதிவெறியை மறைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களிற்கு வாசல் திறந்தன.

ஆனால் தச்சன்தோப்பு பிள்ளையாரின் சாதிவெறிக் கதவுகள் தாழ் திறக்கவில்லை. தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களை உள்ளே விடவில்லை என்று தானே போராட்டம் நடத்துகிறீர்கள், நாங்கள் ஒருவரையுமே உள்ளே விடப்போவதில்லை என்று கோவிலை மூடினார்கள். முள்வேலி போட்டார்கள். பிள்ளையாரை முள்வேலிக்குள் சிறை வைத்தார்கள். நிர்வாகசபைக்காரர்கள் மட்டும் கோவிலிற்கு உள்ளே சென்று பிள்ளையாரை வெளியே கொண்டு வருவார்கள். நிர்வாகசபைக்காரர்கள் இரு மரபும் துய்ய வந்தவர்கள் என்பதை எழுதித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. பிள்ளையாரின் புனிதத்தையும், சைவ வேளாளர்களின் மானத்தையும் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களிடம் இருந்து காப்பாற்றி விட்டார்களாம்.

இரண்டு விதமாக நடாத்தப்படும் ஒரே நிர்வாகத்தின் பாடசாலைகள் .. மாகாணசபை உறுப்பினர் ராஜாராம்!

ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்ற பாடசாலை எப்படி இரண்டு விதமாக
மாகாண உறுப்பினர் ராஜா ராமின் சந்தேகம்!
நடாத்தப்படுகிறது!
- பா.திருஞானம்
தற்பொழுது இலங்கையின் நல்லாட்சியில் அனைத்து தரப்பினரும் சமனாக மதிக்கப்படுகின்றார்கள் என்று அரசாங்கமும் அமைச்சர்களும் கூறினாலும் அதற்கு எதிர்மாறாக மத்திய மாகாண முதலமைச்சரும் மத்திய மாகாண கல்வி அமைச்சும் செயல்படுகின்றதோ என்ற சந்தேகம் எனக்கு எழுகின்றது என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஹட்டன் கெப்ரியல் பெண்கள் பாடசாலையின் தமிழ் பிரிவிற்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்ட பின்பே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த பாடசாலையின் பெரும்பான்மையினர் கல்வி கற்கின்ற பகுதி மிகவும் அழகாகவும் அனைத்து வசதிகளுடனும் இயங்குகின்றது. ஆனால் இதன் தமிழ் பகுதி மிகவும் மோசமாகவும் மாட்டுக் குடிலை போலவும் இருக்கின்றது. இங்கிருக்கின்ற வகுப்பறைகளில் இருந்து கல்வி கற்கின்ற மாணவிகளுக்கு நிச்சயமாக பாராட்டு தெரிவிக்க வேண்டும். வகுப்பறைகளில் துர்நாற்றம் வீசுகின்றது.
ஏலி, பாம்பு, நாய் எச்சங்கள் வகுப்பறைகளில் இருக்கின்றது. தற்பொழுது நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகின்றது. இங்கிருக்கின்ற மாணவிகளுக்கு மிக விரைவில் பரவுகின்ற அபாயமான ஒரு நிலை இருக்கின்றது. இங்கு கல்வி பயில்கின்ற மாணவிகள் தமிழர்கள் என்பதால் இவ்வாறு பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்களோ என்று என்னத் தோன்றுகிறது.

மத்திய மாகாண விவசாய திணைக்களத்தின் சீகிரிய தேசிய உணவு விற்பனை நிலையம்

தேசிய உணவு நுகர்வின் ஊடாக அரோக்கியமான சமூகத்தினை
உருவாக்குவதன் பொருட்டு" மத்திய மாகாண விவசாய அமைச்சின் 35 லட்சம் ரூபா நிதி ஒதிக்கீட்டின் கீழ் "மத்திய மாகாண விவசாய திணைக்களத்தின் சீகிரிய தேசிய உணவு விற்பனை நிலையம்" நிர்மாணிக்கப்பட்டு மத்திய மாகாண விவசாய,சிறிய நீர்பாசன , விலங்கு உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, கமநல அபிவிருத்தி,நன்னீர் மீன் பிடி, தமிழ் கல்வி, இந்து கலாசாரம், மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அழைப்பின் பேரில் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார அவர்களின் பங்குபற்றுதளுடன் மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயஙக்க அவர்களினால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் முதலைச்சின் செயலாளர், விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர்கள், திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் , அமைச்சின் உத்தியோகத்தர்கள் , என பலர் கலந்து கொண்டனர்.................. Marudhaphandy Rameshwaran

மலையக ரயில் சேவை சீர் செய்ய துரித நடவடிக்கை

Malayaga Kuruvi‎ to மலையக குருவி(க.கிஷாந்தன்) கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 110வது கட்டைப்பகுதியில் 13.07.2017 அன்று அதிகாலை 2.30 மணியளவில் இரவு நேர தபால் புகையிரதம் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தினால் கொட்டகலை 60 அடி புரதான பாலம் பலத்த சேதங்களுக்குள்ளானதுடன், சுமார் 1 கிலோ மீற்றர் தூரம் வரை ரயில் பாதை தண்டவாளங்களும் சேதத்திற்குள்ளாகின. இதன்போது புகையிரத பெட்டிகள் நான்கு பலத்த சேதத்திற்குள்ளாகின. இந்த பாதையினையும் ரயில் சேவையினையும் துரித கதியில் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொழும்பிலிருந்து 12.07.2017 அன்று இரவு 8.15 மணியளவில் புறப்பட்டு பதுளை நோக்கி சென்றுக் கொண்டிருந்த புகையிரதமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. புகையிரத பெட்டியின் பாகங்கள் இரும்புடன் மோதி வீதியின் இரு புறங்களிலும் வீசி எறியப்பட்டுள்ளன. இவ்விபத்து காரணமாக கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வரும் புகையிரதங்கள் அட்டன் வரையும் பதுளையிலிருந்து வரும் புகையிரதங்கள் கொட்டகலை வரையும் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதில் வரும் பயணிகளை இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்கள் மூலம் பயணிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. எது எவ்வாறான போதிலும் புகையிரத சேவையை முழமையாக வழமைக்கு கொண்டு வர சில நாட்கள் எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது<

மகள் மீது அசிட் வீசிய தாய் ...காதலனோடு வீட்டில் பார்த்ததால் ....

வீரகேசரி Priyatharshan :  காதலனை வீட்டுக்கு அழைத்து காதலில் ஈடுபட்டவேளையில் வீட்டிற்குள் நுழைந்த தாயாரால் அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று தெடிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தாய் இறப்பர் பால் எடுக்கசென்ற வேளை, மகளொருவர் தனது காதலனை வீட்டுக்கு அழைத்துள்ளார். தாயார் இறப்பர் பால் எடுத்து வீட்டுக்கு திரும்பிய வேளை வீட்டில் காதலனுடன் தனது மகள் இருந்தததைக் கண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய் தனது கையில் வைத்திருந்த கத்தியால் மகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், தனது காதலியை கத்தியால் தாக்குவதை பொறுக்கமுடியாத காதலன் தாயிடமிருந்த கத்தியைப் பறித்து அவர் மீது பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து தாயார் குறித்த காதலனை வீட்டின் அறைக்குள் அடைத்து வைத்து யன்னல் ஊடாக அசிட் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

உலகளாவிய அளவில் உள்ள தமிழ்க்கணினி தொடர்பான தரப்படுத்துதல்

Subashini Thf  உத்தமம் பார்வைக்காக ************************************** உத்தமத்தின் தலைமைப்பொறுப்பு செல்வமுரளி Selva Murali, தவரூபன் Thangarajah Thavaruban என்ற இரண்டு இளைஞர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தியை வாசித்தேன். உத்தமம் என்பது இருபது ஆண்டுகால தமிழ்க்கணினி தொடர்பான ஒரு சர்வ தேவ அமைப்பு என்பதாலும் அதன் ஆரம்பகாலம் தொட்டு 2009 வரை அதன் செயலவைக்குழுவிலும், கருத்தரங்க ஏற்பாட்டுக்கு குழுவிலும் என் பங்கினையும் ஆற்றியிருப்பதாலும், நான் இந்த அமைப்பிலிருந்து வெளிவந்து விட்டாலும், உத்தமத்தின் செயல்பாடுகளை அவ்வப்போது கவனித்து வருகின்றேன். உலகளாவிய அளவில் உள்ள தமிழ்க்கணினி தொடர்பான தரப்படுத்துதல் மற்றும் பிற அதர துறைகளில், தொடங்கப்பட்ட காலத்தை விட இன்று உத்தமம் ஆற்ற வேண்டிய பணிக்கான தேவை அதிகரித்துள்ளது என்றே கருதுகிறேன். இது வர்த்தகம், தொழில் நுட்பம், பதிப்புத்துறை, மென்பொருளுருவாக்கம் போன்ற துறைகளின் விரிவாக்கத்தின் அடிப்படையில் எழும் தேவை. இன்றைய நிலையில் கணினி பயன்பாடு தமிழ் மக்களிடையே பெருவாரியாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமானால் தமிழ் மொழியில் பல்வேறு துறைகளுக்கானக் கணினி சார்ந்த வரையறைகள் உருவாக்கப்படுதல் என்பது கட்டாயத் தேவை.

Wednesday, 12 July 2017

அங்கத்துவ பணம் வாங்கும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரு மனதாக துரோகம் இழைக்கின்றனவா?

Sinnapalaniandy Sachidanandam தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக பெருந்தோட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தொழிலாளர்களின் நாட்சம்பளம் மற்றும் உரிமைகள் பற்றி முடிவு செய்ய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் 18 சிறு தொழிற் சங்களின் பிரதிநிதிகள் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப் பட வேண்டியதில்லை எனவும் தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய நிலுவைச் சம்பளம் எதுவும் தேவையில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவு செய்துள்ளார்கள். இதுவரை எந்த ஒரு தொழிற் சங்கமும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அறிவிப்புக்கு எதிராக எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை. எனவே பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட அனைத்து தொழிற் சங்கங்களும் ஏற்கனவே ஒன்று கூடி பேசி எடுத்த முடிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது தெளிவாகிறது. அதாவது தோட்டத் தொழிலாளர்களிடம் மாதா மாதம் அங்கத்துவப் பணம் (சந்தா) வாங்கி வாழும் அனைத்து தொழிற் சங்கங்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒருமனதாக துரோகம் செய்துள்ளார்கள். இப்படியான தொழிற் சங்கங்களுக்குத் தொடர்ந்தும் மக்கள் அங்கத்துவப் பணம் கொடுப்பார்களேயாயின் குற்றவாளிகள் தொழிற் சங்கங்கள் அல்ல, அங்கத்துவப் பணம் கொடுக்கும் தொழிலாளர்களே என்பது எனது எண்ணம்.

லண்டன் இசை நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் அதிகம் ... வெறுத்து ஓடிய ஹிந்தி ரசிகர்கள் ... செம்மொழியான தமிழ் மொழியாம்!

ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை திணிக்கும்போது அந்த மாநில மக்கள் மனம் எவ்வளவு நோகும் என்பது இனி மெல்ல மெல்ல புரியும். கன்னடம் தெலுங்கு மலையாளம் தமிழ் ஓடிஸா பஞ்சாப் வங்காளம் ராஜஸ்தானி மாராட்டியம் எல்லாம் சும்மா இல்ல. அவை எல்லாம் உயிரோட்டமுள்ள வரலாறுகள் கொண்ட மொழிகளாகும் . இவ்வளவு நாளும் அவர்கள் தூங்கி விட்டாரகள் என்று தப்பு கணக்கு போட்டு இடறி விட்டார்கள் . இனி எல்லா மொழிகளும் இந்தியாவின் ஆட்சி மொழிகள்தான்.

BBC :மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஓதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம்

இலங்கையில் மாகாண சபை தேர்தல்களில் பெண்களுக்கு 30 சதவீத இட
ஓதுக்கீடு வழங்கும் வகையில் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.1988ம் ஆண்டு மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள இந்த சட்டத் திருத்தத்தை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா முன்வைத்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி (ஹெசட்) அறிவித்தலும் வெளியாகியுள்ளது.
வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறும் மொத்த வேட்பாளர்களில் குறைந்தது 30 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இல்லையேல் வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும் என அந்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள மொத்த வாக்காளர்களில் 51 -52 சதவீதம் பெண்களாக இருக்கின்ற போதிலும் அரசியலில் ஈடுபாடு மற்றும் தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக அவர்களில் பலரும் ஆர்வம் கொள்வதில்லை.

மனோ கணேசன் : நான் உண்மையை உரக்க பேசுவதில், எவருக்கும் அதிருப்தி ஏற்படுமானால் அதுபற்றி நான் அலட்டிக்கொள்வதில்லை.


நிர்வாக ஜனாதிபதி முறைமை குறைந்த அதிகாரங்களுடன் தொடர வேண்டும்.
அதுவே 'சிறுபான்மை' மக்களின் வாக்குகளுக்கு குறைந்தபட்ச பெறுமதியை தரும். அதேவேளை 'சிங்களவர்'ஒருவர் ஜனாதிபதியாக இருக்கும் போது, 'ஈழத்தமிழர், முஸ்லிம், மலையகத்தமிழர்' ஒருவர் உபஜனாதிபதியாக, மாறி மாறி வரிசைப்படி பதவி வகிக்க வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளை சார்ந்த 19 எம்பிக்கள் (பாராளுமன்றத்தில் நான்காவது பெரிய அணி) சார்பாக அரசியலமைப்புக்கு முன் வைக்கப்பட்டுள்ள பல யோசனைகளில், இவை இரண்டு யோசனைகள்.

Mano Ganesan இங்கே தொடர்ச்சியாக, "உங்கள் யோசனைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வகிபாகம் இல்லையா? ஏன் இங்கே கூட்டமைப்பை காணோம்?" என்று கேள்வி எழுப்புகின்றவர்கள், அக்கேள்விகளை கூட்டமைப்பிடம்தான் கேட்க வேண்டும்.

சேரி behaviour ... கள்ளம் கபடமில்லாத அன்புக்கு இப்படி ஒரு அவமதிப்பா?

Shalin Maria Lawrenc :சேரி behaviour சேரி நடத்தை .இப்படி ஒரு பெண் இன்னொரு பெண்ணை திட்டிவிட்டார்கள் என்று சொல்லி காலையில் இருந்து எல்லோருக்கும் அப்படி ஒரு கோவம் .
அப்படி பார்த்தால் சேரி என்பது அசிங்கம் என்று உங்களில் ஒவ்வொருவரும் நினைத்து கொண்டிருக்கிறீர்களா ?
அவர் சேரி நடத்தை என்று சொன்னபோது நன்றி சொல்லி இருக்கவேண்டும் .சரி ... நீங்கள் சொல்லாத நன்றியை நான் சொல்லுகிறேன் .
-------------------------------------------------------------------------------------------------
வந்தாரை வாழவைக்கும் சேரி நடத்தை -நன்றி
அடைக்கலம் தேடி வந்தாரை எந்த ஜாதி என்று கேட்காமல் சேர்த்துக்கொள்ளும் சேரி நடத்தை -நன்றி
தீட்டு என்று உள்ளே வந்த எவரையும் ஒதுக்காதது சேரி நடத்தை -நன்றி
ரத்தபந்தம் ,சொந்தபந்தம் வித்தியாசம் பாராமல் பசித்தவயிறுக்கு தன் கால் வயிற்று கஞ்சியை பகிர்ந்து கொடுக்கும் சேரி நடத்தை -நன்றி .
தெருவில் கிடைக்கும் நாய்க்கு முதலில் சோறு வைத்துவிட்டு மிஞ்சியதை உண்ணும் ரிக்க்ஷாகாரரின் சேரி நடத்தை -நன்றி
நீ கொடுக்கும் காசுக்காக இல்லாமல் ,உன் மேல் வைத்திருக்கும் மரியாதைக்காக "அய்யா ,அம்மா " என்று அழைக்கும் உன் பணிப்பெண்ணின் சேரி நடத்தை -நன்றி
பக்கத்து தெருவில் சாவு விழுந்தால் தன் வீட்டில் சோறு பொங்காமல் சொந்த இழப்பை போல் அழுது தீர்க்கும் சேரி நடத்தை - நன்றி
கிறிஸ்துமஸிற்கு எல்லா வீட்டிலும் நட்சத்திரம் கட்டி ,தீபாவளிக்கு எல்லா வீட்டிலும் பட்டாசு உடைக்கும் சேரி நடத்தை -நன்றி
உங்கள் பிரசாதங்கள் சுவையாய் இருக்க காலை நான்கு மணிக்கே எழுந்து மார்க்கெட்டில் வியர்வை வழிய காய் கறி மூட்டை சுமந்து ,மீன்பாடி வண்டி மிதித்து உன் கோயில் வாசல் சேர்க்கும் சேரி நடத்தை -நன்றி .
உன் பசித்த குழந்தைகளுக்கு தன் டீ காசில் பஜ்ஜி வாங்கிக்கொடுத்து பத்திரமாய் விடு சேர்க்கும் ஆட்டோக்காரரின் சேரி நடத்தை -நன்றி

சாதி வெறியர்களால் சாய்த்து வீழ்த்தப்பட்ட காதல் ... இளவரசன் .. மறக்க முடியுமா?


Chandra Mohan ஜூலை 4 - இளவரசன் நினைவு நாள்
# நினைவுகள் அழிவதில்லை #
மாதொரு பாகன் புகழ் திருச்செங்கோட்டில் மலர்ந்தும் மலராத கோகுல்ராஜ் - பிரியதர்சினி காதல் கதையை, கொங்கு சாதி வெறி யுவராஜ் கும்பல், கோகுல்ராஜை கோரமாக கொலை செய்தது மூலம் முடிவுக்கு கொண்டு வந்து விட்டது ; கொலை வழக்காக மாற்றுவதற்கான தொடர் முயற்சிகளின் வெற்றிக்கு பிறகு உடல் அடக்கமும் நடந்து முடிந்துவிட்டது. சாதி வெறியர்களின் கவுரவுக் கொலைகள் என்று தணியும் என்று மனதை பிடித்தாட்டிக் கொண்டிருக்கும் பொழுது, வாழப்பாடி அருகே சோமம்பட்டி தலித் குடியிருப்பு தாக்கப்பட்டதற்கு பின்னணியான சரவணன்-வன்னியப்பிரியா காதல் திருமணத்தின் மீதான சாதி வெறிசக்திகளின் வன்மம்.....கும்பல் வன்முறைத் தாக்குதலுக்கு முடிவு கட்டியே தீர வேண்டும் என்ற கோபத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.இந்த நினைவுகளெல்லாம் மனதை வாட்டிக் கொண்டு இருக்கும்போது...
இளவரசன் இரண்டாவது ஆண்டு நினைவு நாள் வந்து சேர்ந்து மன உளைச்சலை அதிகப்படுத்துகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஜீலை 4ந் தேதியில், தருமபுரியில் நிகழ்ந்த இளவரசனின் அகால மரணம் தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கியதை மறந்து விட முடியாது.இளவரசன்-திவ்யா காதல் கதை சாதீய வெறியர்களால் முடித்து வைக்கப்பட்ட வரலாறும் நினைவுகளில் இருந்து அழியாதவையாகும்.

கடலில் மூழ்கிய யானையை காப்பற்றிய கடல் படை .. கொக்கிளாய் முல்லைத்தீவு


முல்லைத்தீவு கடலில் சிக்கித் தவித்த யானை! காப்பாற்றிய  கடற்படையினர்- (வீடியோ)
இலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்டு உயிருக்காக போராடி கொண்டிருந்த காட்டு யானையொன்று கடற்படையினரால் பார்க்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் கடல் பிரதேசத்தில் 8 கடல் மைல் தொலைவில் குறித்த கடலில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.2 முல்லைத்தீவு கடலில் சிக்கித் தவித்த யானை! காப்பாற்றிய கடற்படையினர்- கிழக்கு கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இந்த யானை பார்க்கப்பட்டு கடற்படையின் சுழியோடிகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. யானையை மீட்கும் பணியில் வனத்துறை அதிகாரிகளும் இணைந்து கொண்டதாக கடற்படை கூறுகின்றது. சுழியோடிகள் மற்றும் கடற்படை படகுகளின் உதவியுடன் கடலிலிருந்து கரைக்கு திசை திருப்பப்பட்ட யானை வன ஜீவராசிகள் இலாகாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

களப்பிரர் - தமிழகத்தின் முதல் குடியாட்சி

Krishnavel T.S :களப்பிரர் காலம்,
தமிழரின் இருண்ட காலம் அல்ல,
பார்ப்பனரின் இருண்ட காலம்.
உண்மையில்
தமிழரின் பொற்காலம்,
களப்பிரர் காலம் தமிழ் வரலாறில் இருண்ட காலமாக கருதப்படுகிறது. அந்த காலம் சுமார் கி.பி 2 - 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலம்.
தொல்காபியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை உட்பட ஐம்பெரும் காப்பியங்கள், மற்றும் பல சிறப்பான ஈடு இணையற்ற இலக்கியங்கள் எல்லாம் தமிழில் உருவாக்கப் பட்ட காலம் கி.மு. 1 - முதல் கி.பி.5 - ஆம் நுற்றாண்டு வரையே.
ஆனால், நாம் படிக்கும் எல்லா வரலாற்று புத்தகங்களும், அந்த காலத்தை, மட்டும் தமிழரின் இருண்ட காலம், களப்பிரர் என்ற வேறு ஒரு இனம் தமிழரை அடிமை படுத்திய காலம் என்று ஏன் கூறுகிறது.
களப்பிரர் வேறு இனம் என்றால் அவர்கள் ஏன், தமிழில் இப்படி பட்ட இலக்கியங்களை படைக்க வேண்டும் அல்லது படைக்க உதவ வேண்டும்.
உண்மையில் நடந்தது என்ன வென்று பார்ப்போம். கி.பி.1ஆம் நூற்றாண்டு மூவேந்தர்களின் ஆட்சி கிட்டத்தட்ட முடிவை நெருங்கிய காலம். அந்த கால கட்டத்தில் பெரும் பான்மையான மக்கள் கொண்டிருந்த வழக்கம், முன்னோர் வழிபாட்டு முறையான நடுகல் வழிபாடு(போரில் இறந்த முன்னோருக்கு கல்நட்டு வழிபடுதல்) மற்றும் சாத்தன் வழிபாடு(போரில் இறந்த முன்னோரில் குதிரை ஏறி புரிந்தவர், குதிரை வைத்திருந்த வீரன் சிறு வசதியான குடும்பமாக இருப்பர், அவர்கள் சிறு கோயில் கட்டி வழிபட்டனர்), இன்றும் நெல்லை குமரி மாவட்டங்களில் பல சாதிகளை சேர்ந்தவர்கள் பங்குனி மாதம் உத்திரம் நாளில் தங்கள் குடும்ப சாத்தான் கோயிலுக்கு சென்று வழிபடுவர்.

பத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களை இடைநிறுத்த நடவடிக்கை

Balakrishnan Thirugnanam பத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற
பகிடிவதை தொடர்பாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக உரிய தண்டனையை வழங்குமாறு கல்லூரியின் பீடாதிபதிக்கு பணிப்புரை விடுத்திருக்கின்றேன். இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டங்களை அண்மித்த தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர்கள் 113 பேருக்கான நியமனங்கள் நேற்று கல்வி அமைச்சில் (12.07.2017) வழங்கி வைக்கப்பட்டது.கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்¸கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் இணைந்து இதனை வழங்கி வைத்தனர்.

Monday, 10 July 2017

18 கிலோ தேயிலை கொழுந்தினை கொய்ய முடியாத நிலையில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்!


மலையக குருவி: - க.கிஷாந்தன் :  தோ ட்ட நிர்வாகம் வலியுறுத்திய 18 கிலோ தேயிலை கொழுந்தினை கொய்ய முடியாத நிலையில் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு அரைநாள் சம்பளத்தை வழங்க போவதை எதிர்த்து அக்கரபத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தின் பிரோமோர் பிரிவு தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் 10.07.2017 அன்று ஈடுப்பட்டனர்.< இந்த போராட்டத்தில் சுமார் 150ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர். மாதாந்த நாள் சம்பளம் வழங்கப்படும் இக்கால பகுதியில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள சிட்டையில் தோட்ட நிர்வாகம் அரைநாள் கொடுப்பனவு உள்ளிட்டுள்ளமையை அறிந்ததன் பின்பே தொழிலாளர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர். 18 கிலோ தேயிலை கொழுந்துக்கு குறைவாக கொய்தவர்களுக்கு அரைநாள் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு.. போராட்டங்களால் பற்றி எரிகிறது ஹம்பர்க் நகரம்!

ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு.. போராட்டங்களால் பற்றி எரிகிறது ஹம்பர்க் நகரம்! ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது வருகிறது. இதில் பயங்கரவாதம், வர்த்தகம், பருவநிலை மாற்றம் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைத்தார். பலத்த பாதுகாப்பு உலக தலைவர்கள் ஒன்று கூடுவதால் ஹம்பர்க் நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனிடையே, மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் லட்சக்கணக்கானோர் கருப்பு உடையணிந்து மாநாட்டுக்கு முதல் நாள் ஹம்பர்க் நகரில் ஒன்று கூடினர். சலசலப்பு

இலங்கை அகதிகள் முகாம்மீது இந்து முன்னணியினர் பெட்ரோல் குண்டுவீச்சு.. அதிரடிப்படையினர் குவிப்பு

 கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த பூளுவப்பட்டியில்
அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாம் மீது இந்து முன்னணியினர் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இது குறித்து போலீசார் தரப்பில், ” பூளுவப்பட்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று மாலை கைப்பந்து விளையாடிய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த வழியாகச் சென்ற காளப்பாளையத்தை சேர்ந்த சிவா என்பவர் இளைஞர்களின் தகராறை விலக்கி, அவர்களைக் கண்டித்துள்ளார். Untitled இலங்கை அகதிகள் முகாம்மீது இந்து முன்னணியினர் பெட்ரோல் குண்டுவீச்சு.. அதிரடிப்படையினர் குவிப்பு Untitledஇதில் சிவாவிற்கும் அவர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சிவாவுக்கு ஆதி விழுந்துள்ளது.

மணல்காட்டில் லாரிமீது துப்பாக்கி சூடு .. ஒருவர் மரணம்

Rizwan Segu Mohideen: தினகரன்யா :ழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிசார் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாரின் உத்தரவை மீறி மணல் ஏற்றிச் சென்ற கன்டர் வாகனம் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் யோகராசா தினேஸ் எனும் 25 வயது நபர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வங்கியிலிட்ட ரூபா 20 இலட்சம் உரிமையாளருக்கு தெரியாமல் மாயம்

தினகரன் :  பணம் தனக்கு தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று (06) முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் தனியார் வங்கி ஒன்றில், நபர் ஒருவர் 22 இலட்சத்து 250 ரூபாவை (ரூபா 2,200,250) வைப்பிலிட்டுள்ளார். சி. ஜெகராசா என்பவர் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும்பொருட்டு, தனது வங்கி வைப்பை காண்பிக்கும் பொருட்டு, புதிய வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பித்து, அதில் இவ்வாறு பணத்தை வைப்பிலிட்டுள்ளார். அதன் பின்னர், வெளிநாட்டு சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் முகவர் ஒருவரிடம் தனது வங்கி புத்தகம், கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை கையளித்து, பயண ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து, முகவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியபோதிலும் அவரை தொடர்பு கொள்ள முடியாது போயுள்ளது.

Sunday, 9 July 2017

இராவணனின் மாளிகையை பார்க்க நிலத்திற்கு கீழ் 3000 அடி வரை சென்ற தேரர் ; பேஸ்புக் பதிவில் வெளியிட்ட தகவல்

veerakesari.lk :இராமாயண வரலாற்றில் புகழ் பெற்ற இலங்கையின் மூத்த மன்னனும் மூத்த தமிழ்க் குடியின் தலைவனுமான இராவணனின் மாளிகை ஒன்று கற்குகை ஒன்றினுள் அமைந்திருப்பதாகச்  சொல்லப்படும் நிலையில், முதல் முறையாக பௌத்த தேரர் ஒருவர் அங்கே சென்று திரும்பி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அந்த தேரர் தனது பேஸ்புக் கணக்கில் பதிவென்றை பதிவேற்றம் செய்துள்ளார். 
இந்த சுரங்கப் பாதையானது பாரிய அடர்ந்த காட்டுக்கு மத்தியில் உள்ளதனால் அந்தப் பிரதேச மக்களின் உதவி இல்லாமல் அங்கே செல்ல முடியாது. 
இருள் படர்ந்த அதைப் பார்த்தவுடன் மிகுந்த பயம் ஏற்படும்.நில்திய பொக்குன என்று சொல்லப்படும் இராவணின் மாளிகை நிலத்திற்கு கீழேயே அமைந்துள்ளது.
எல்ல வெல்லவாய பாதையில்  கரதகொல்ல பாடசாலைக்கு பக்கத்தில் செல்லும் வீதியிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றர் தூரம் உள்ளே செல்லும் போது இந்த சுரங்கப் பாதைக்கு செல்ல முடியும்.
முதலில் கயிற்றின் உதவியுடனேயே இங்கு செல்ல முடியும். கயிற்றைப் பிடித்து சுமார் 40 அடி தூரம் இறங்க வேண்டும். பின்னர் சிறிய அறை ஒன்று அங்கே காணப்படும். பின்னர் அங்கிருந்து மேலும் 30 அடி கயிற்றின் உதவியுடன் கீழே இறங்க வேண்டும். அதன்பின்னர் 500 மீற்றர் தூரம் வரையான சாய்வுப் பகுதியில் நடந்து சென்றால் நல்ல விசாலமான மண்டபம் ஒன்றினைக் காண முடியும்.

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...