- பா.திருஞானம் : இந்தியா புதுடில்லி நடைபெற்ற “10ஆவது சர்வதேச கல்வி உச்சி மகா நாட்டில் இலங்கையை பிரதிதித்துவபடுத்தி கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கலந்துக்கொண்டார்.
இந்த மாநாட்டில் பல நாடுகளின் கல்வித் தலைவர்களும், கல்வி பிரதிநிதிகளும்
கலந்துக்கொண்டனர்.
இதன்போது உலக நாடுகளின் தலைவர்களினதும், பிரதிநிதிகளினதும் உரைகள் இடம்பெற்றன.
உலகில் கல்வியில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பிலும் கலந்துறையாடப்பட்டன.
இந்த மகா நாட்டில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், “உலக கல்வியில் புதுமைகளை புகுத்தல், இலங்கை கல்வியில் சமகால அபிவிருத்தி” எனும் தொனிப்பொருளில் உரையாற்றினார்.மலையாக குருவி
Thursday, 17 August 2017
Wednesday, 16 August 2017
மனோ கணேசன் : மாகாணசபை தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படக் கூடாது என்ற SLFPயின் முடிவை வரவேற்கிறோம்
சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகிறது. இந்த சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென்ற 20ம் திருத்த யோசனையை கைவிட வேண்டும் என்றும், தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள முடிவுகளை நாம் வரவேற்கிறோம் என ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும்இ தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது.
இந்த ஒத்திவைப்பு அவசியமற்றது. ஒத்திவைக்க அரசியலமைப்பை திருத்த வேண்டும். இது நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதைவிட புதிய அரசியலமைப்பை கொண்டு வரலாம். அதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும். ஆகவே உரிய வேளையில் சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் தேர்தல்களை நடத்துவதே சாலச்சிறந்தது.
நுவரெலியா ...சுற்றுலா பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததில் 21 பயணிகள் படுகாயமடைந்தனர்
பத்தனை நிருபர் : கதிர்காமத்திலிருந்து, நுவரெலியா வலப்பனை வழியாக மிஹிந்தலை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா மினி பஸ் ஒன்று வலப்பனை நுவரெலியா பிரதான வீதியில் மாஹாஊவாபத்தன பகுதியில் குடைசாய்ந்து பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
மிஹிந்தலை பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு கதிர்காமத்திற்கு சென்று மீண்டும் மிஹிந்தலைக்கு செல்லும் வழியிலேயே குறித்த பஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் பாதையைவிட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 21 பேர் படுகாயமடைந்தனர்.
சீரற்ற காலநிலை காரணமாகவும் பஸ் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவும் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரிய
வந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 21 பேரில் 15 பேர் நுவரெலியா ஆதார வைத்தியசாலையிலும் 6 பேர் வலப்பனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினக்குரல்
தேயிலை 150 வருட கொண்டாட்டங்கள் ஒரு தொழிலாளியும் அழைக்கப்பட்டிருக்கவில்லை.
இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு இலங்கை முழுவதிலும் தேயிலை சபையினாலும் இலங்கை அரசாங்கத்தினாலும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் கொண்டாட்டங்களில் ஒரு தொழிலாளியேனும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. 150 வருடகாலமாக அவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வுகள் காணப்படவில்லை, தீர்வு காணுவதற்கு யாரும் முன்வருகிறார்களில்லை. இதனை வௌிப்படுத்தும் முகமாக கார்டூனிஸ்ட் Pradeepkumar Rc வரைந்திருக்கும் கேலிச்சித்திரம் கீழே தரப்பட்டிருக்கிறது.
Monday, 14 August 2017
மகிந்த வெளியேறுகிறார்; பொதுஜன முன்னணியில் இணைகிறார்
தினக்குரல் : ன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்களும் இலங்கை பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளனர்.
22 சு.க. எம்.பி.க்கள் இலங்கை பொதுஜன முன்னணி உறுப்புரிமையை ஏற்றுக் கொள்ளவிருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் அவர்கள் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வார்கள் என அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் புதிய அரசியல் கட்சியின் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
22 சு.க. எம்.பி.க்கள் இலங்கை பொதுஜன முன்னணி உறுப்புரிமையை ஏற்றுக் கொள்ளவிருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் அவர்கள் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வார்கள் என அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் புதிய அரசியல் கட்சியின் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...