Saturday, 2 September 2017

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை நெறிக்கு .. மலையக ஆசிரியர்கள்!

Malayaga Kuruvi is with Shaan Sathees.  hrs கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலை பயிற்சி நெறிக்கு தெரிவுசெய்யப்பட்ட 254 பேரில் பெரும்பாலானோர் மலையக ஆசிரியர்கள்! - ஷான் சதீஸ் கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு இந்த வருடம் 254 ஆசிரியர்கள் எட்டு பாட நெறிக்களுக்கு தெரிவாகியுள்ளனர். அந்தவகையில் பின்வருமாறு ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 1.Primary -148
2.Hindusium- 27
3.Science -19
4.Maths-18
5.Music -18
6.Home science -13
7.Commerce-08
8Spl.Education-03
இவர்களுக்கான பதிவுகள் மற்றும் பயிற்சி பாடநெறி இம்மாதம் ஆறாம் திகதியிலிருந்து ஆரம்பமாகின்றது. இம்முறை கலாசாலைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 95% மலையக பாடசாலைகளில் நியமனம் பெற்ற ஆசிரிய உதவியாளர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அவர்களின் பெயர் பட்டியல் ஏற்கனவே மலையக குருவியில் பதிவிட்டிருந்தோம்.

Friday, 1 September 2017

குழந்தையை 40 முறை கன்னத்தில் அறைந்த ஆசிரியை ரித்திகா ... லக்னோ

லக்னோவில் உள்ள பள்ளி ஒன்றில் வருகை பதிவேடு பரிசோதனையின்போது எழுந்திருந்து உள்ளேன் அம்மா என சொல்லாத குழந்தையை ஆசிரியை 40 முறை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவில் உள்ள செயின்ட் ஜான் வைத்யன்யா பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ரித்தீஷ் புதன்கிழமை( ஆகஸ்ட் 31) வீட்டுக்குத் திரும்பியபோது, கன்னம் வீங்கிக் காணப்பட்டிருந்தது. இதையடுத்து, குழந்தையிடம் பெற்றோர் விசாரித்தபோது, ஆசிரியை தன்னை அடித்ததைக் கூறியுள்ளார். இதுகுறித்து பள்ளியில் மற்ற குழந்தைகளிடம் விசாரிக்கும்போது, வருகை பதிவேடு பரிசோதனையின்போது, ரித்தீஷ் ஓவியம் வரைந்து கொண்டிருந்தான். ஆசிரியை அவனது பெயரை அழைத்தபோது, எழுந்திருந்து பதிலளிக்காத காரணத்தால், அவனது கன்னத்தில் 40 முறை அடித்தார். பின்பு, ரித்தீஷ் மயக்கம்போட்டு தரையில் விழுந்தபோது, ஆசிரியை வகுப்பறை விட்டுச் சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தனர். பள்ளி நிர்வாகம் சிசிடிவி காட்சிகளைப் பரிசோதனை செய்தபோது, ஆசிரியை ரிதிகா வி ஜான் குழந்தையை அடித்தது உறுதி செய்யப்பட்டது. ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குழந்தையின் பெற்றோர் புகாரின்பெயரில் ஆசிரியை மீது போலீஸ் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. மின்னம்பலம்

மாணவி அனிதா தற்கொலை .... " நீட்" .. மத்திய மாநில அரசுகளின் பச்சை படுகொலை! பிளஸ் 2-வில் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றவர்



அரியலூர்: மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரைச் சேர்ந்த அனிதா பிளஸ் 2-வில் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றவர். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அனிதாவின் கட்ஆஃப் மதிப்பெண் 196.5 ஆகும். ஆனால் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தகுதி தேர்வில் அவர் 86 மதிப்பெண்களே பெற்றிருந்தார். இதனால் அவரது மருத்துவராகும் ஆசை நிராசையானது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக விரக்தியின் உச்சத்தில் இருந்த மாணவி அனிதா, திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா,
நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடைசி வரை போராடியும் நீட் தேர்வு முடிவின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது. தமிழக அரசின் பொறுப்பின்மையும், மத்திய அரசு முதலில் ஓராண்டு நீட்டிலிருந்து விலக்கு அளிக்க தயார் என கூறி பின் அந்தர் பல்டி அடித்து, தமிழகத்திற்கு மட்டும் நீட்டிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் கூறியதும் தமிழகத்தில் பல மாணவர்களின்
மருத்துவராகும் கனவை சிதைத்து விட்டது.
இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து சட்ட ரீதியாக போராடிய மாணவி அனிதா, மருத்துவராகும் கனவு நிறைவேறாது என தெரிந்து விட்டதால், அரியலூர் செந்துறை அருகே குழுமூரில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில் அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனிதாவின் உடல:


உடற்கூராய்வுக்காக மாணவி அனிதா உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரியலூர் அரசு மருத்தவமனையில் வைத்து மாணவி அனிதா உடல் பரிசோதனை நடக்க உள்ளது.

அனிதா மரணத்துக்கு யார் பொறுப்பேற்பார்கள் ?... ஒரு கோடி தரம் உரத்து கூவுவோம் டாக்டர் அனிதா !



அனிதாவின் மரணத்துக்கு யார் பொறுப்பேற்பார்கள் ? அனிதாவின் உடலை 
யார் கையில் கொடுப்பது. பதவிக்காகவும், பணத்துக்காகவும் பேரம் பேசி குனிந்தே கிடக்கும் தமிழக ஆட்சியாளர்கள் கையில் அனிதாவைக் கொடுக்கக்கூடாது. நீட் என்ற பயங்கரவாதத்தைச் செலுத்தி மறைமுகமாகக் கொன்றிருந்தாலும், கையில் இரத்தக் கரையுடன் ஃபோட்டோக்களில் சிரித்துக்கொண்டிருக்கும் அரசாங்கத்திடமும் கொடுக்கக்கூடாது. அன்று மெரினாவிலும், நெடுவாசலிலும் கூடியிருந்த மக்களின் கையிலிருக்கும் மொபைல் டார்ச் லைட்டுகளைப் பிடுங்கிவிட்டு அனிதாவை சேர்ப்பது ஒன்றே அனிதாவுக்குச் செலுத்தும் அஞ்சலி. நூறு முறை சொல்வோம் டாக்டர். அனிதா என்று. வங்கக் கடலின் அலைகளும், காற்றும் அனிதாவின் டாக்டர் பட்டத்தை உலகம் முழுக்க கொண்டுசேர்க்கட்டும்.
Thameem Tantra
நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய அனிதா நல்ல மதிப்பெண் வாங்கியும், நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கிடைக்காததால் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டாள்.
நிற்க ! அனிதா செத்ததிற்கு பிறகு இரங்கல் தெரிவிப்போம்..
இப்போ "இதற்கெல்லாமா தற்கொலை செய்து கொள்வார்கள்", "மருத்துவம் கிடைக்கவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கா நம் கல்வி தரம் இருக்கிறது" என்று சில நாய்கள் சைக்கோலஜி கிளாஸ் பதிவு போடும்.. அவனை முதலில் செருப்பால் அடி ... அனிதா இறந்ததிற்கு அந்த கொலைகாரர்கள் தான் காரணம்.

ஊழல் நிறைந்த ஆசிய நாடுகள்: இந்தியா முதலிடம்.. அடுத்த இடத்தில் வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர்

புதுடில்லி: ஆசியாவில் ஊழல் நிறைந்த நாடுகள் குறித்து போர்ப்ஸ் நாளிதழ் நடத்திய ஆய்வில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.ஆசிய பசிபிக் நாடுகளில் ஊழல் குறித்து வெளிப்படை தன்மைக்கான சர்வதேச அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தியது. 16 நாடுகளில் இருந்து 20 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை தற்போது போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. 
அதில், ஊழல் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகள் உள்ளன.இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் பள்ளி, மருத்துவமனை, அடையாள அட்டை ஆவணங்கள் பெற, போலீஸ் மற்றும் சேவை பணிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அரசு பள்ளிகளில் லஞ்சம் கொடுப்பதாக 58 சதவீதம் பேரும், சுகாதார திட்டத்திற்கு 59 சதவீதம் பேரும் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர். அதேநேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருவதாக 53 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 41 சதவீதம் பேர் ஊழல் அதிகரித்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். தினமலர்

Thursday, 31 August 2017

கோயிலை வைத்து பிழைக்கும் எந்த பார்ப்பான் ஆவது முள்குத்தி கொண்டு உலா வருகிறானா?


பாசறை செல்வராஜ் : கடந்த 10/15 வருடங்களா நேர்த்திக்கடன் செய்கிறோம் என்ற பெயரில் முதுகில் துடையில் கம்பியை குத்தி கயிற்றில் தொங்குகிறார்கள் இந்த செயல்கள் நீக்கமற எல்லா கிராமங்களிலும் அதுவும் குறிப்பா வன்னியர் ஆதிதிராவிடர் இளைஞர்கள் இது கடவுள் பிராத்தனை என்ற அளவில் செய்கிறார்கள் இதன் வலி என்னவென்று பத்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் அதன் வலி தெரியும் நன்பர்களே
இதில் எனக்கு சில கேள்விகள் உண்டு முகநூலில் இது போன்ற பிராத்தனை நன்பர்கள் பதில் சொல்லலாம்
கோயிலையே மூலதனமா வைத்து பிழைப்பு நடத்துகிற பாப்பான் எங்கேயாவது இப்படி முள்குத்திக்கொண்டு தொங்குகிறானா?
பாப்பான் வீட்டு சாமி மட்டும் வடை பாயாசம் கேக்குது!
எந்த பாப்பானாவது அம்மனை ஜோடித்து வீதிதோறும் தூக்கிச் செல்கிறானா?
பாப்பான் வீட்டு சாமி கள் சாராயம் குடிக்க மறுக்குது !
இதையெல்லாம் இந்த காலத்து இளைஞர்கள் மாணவர்கள் கொஞ்சம் சிந்தித்து பாருங்க தம்பிகளா!

திலகராஜ் எம் பி : தலைமைத்துவம் இல்லாத சமுகம் தடுமாற நேரிடும்

MalayagaKuruvi தலைமைத்துவம் இல்லாத சமூகமோ அமைப்போ தடுமாற்றமான சூழ்நிலைக்கே தள்ளப்படும்! திலகர் எம்,பி</ - நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்< தலைமைத்துவம் இல்லாத எந்த ஒரு சமூகமோ அமைப்போ தடுமாற்றமான சூழ்நிலைக்கே தள்ளப்படும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகணம் திலகராஜ் தெரிவித்தார். வட்டவலை கரோலினா தோட்ட தியகல பிரிவு மக்களுடன் நேற்று 30.08.2017 நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஹட்டன் - கொழும்பு பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள தியகல தோட்டமானது பாரிய பின்னடைவை சந்தித்துள்ளமையானது தனக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகவும் பிரதான சாலைக்கு அருகில் அமையப்பெற்றுள்ள இத்தோட்டத்தில் சரியான தலைமைத்துவ முன்னெடுப்பு இல்லாமையே இதற்கான காரணம் என்பதைக் கண்டறிந்து கொண்டதாக இதன் போது தெரிவித்தார்.< எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், கிராம சேவகர்கள் என அரசு மட்டத்திலான அதிகாரிகள் இருந்தும் இங்கு பாரிய குறையாடுகளை கண்டு மனம் வருந்துவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், தகுதியுடைய இளைய சமூகம் இத்தோட்டத்திற்கான தலைமையை ஏற்க முன் வரவேண்டும் என கூறியதோடு எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் அதற்கான அத்திவாரத்தை இடமுயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

வன்னியில் மலையக பெண் கிராமசேவகரை மிரட்டும் வடக்கு ஊடக ரவுடி!

Malayaga Kuruvi : வன்னியில் கடமைப்பபுரியும் மலையகத்தை சேர்ந்த பெண் கிராம சேவகரை மிரட்டும் ஊடகவியலாளர்....!!! tnn எனும் இணையத்தளத்தின் வன்னி பிராந்திய செய்தியாளர் என கூறும் வடக்கை சேர்ந்த ஊடகவியலாளர் வன்னியில் கடமையாற்றும் மலையகத்தை சேர்ந்த பெண் கிராம சேவகரை மிரட்டி இருக்கிறார். தமிழ் இளைஞர்களுக்கிடைய ஏற்பட்ட மோதலை தடுத்து சமரசம் செய்யுமாறு மலையகத்தை சேர்ந்த பெண் கிராம சேவகரின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர். இதையடுத்து துரித நடவடிக்கை எடுத்த கிராம சேவகர் மீது கோபம் கொண்ட சண்டையில் ஈடுப்பட்ட கோஷ்டியின் நண்பனான ஊடகவியலாளர் பொலிசாருக்கு கிராம சேவகர் சார்பாக இருப்பதாக கூறியுள்ளார். அது மாத்திரமன்றி" பொலிசாருக்கும் உனக்கும் தொடர்பு இருப்பதாக செய்தி போடுவேன் , மலையகத்தை சேர்ந்த உனக்கு இங்கு என்ன வேலை " என மிரட்டியுள்ளார். இதனையடுத்து பெண் கிராம சேவகர் தனது உயர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஊடக தர்மத்தை மீறும் இவர்கள் ஊடகவியலாளர்களா...?

Tuesday, 29 August 2017

மது அருந்திய மயக்கம்!! : மாணவர்கள் 6 பேரும் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியது

யாழ்ப்பாணம் – மண்டைத்தீவு – சிறுத்தீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி உயிரிழந்த ஆறு மாணவர்களின் மரணத்திற்கான காரணம் யாழ்.பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணைகளில் இருந்து வெளியாகியுள்ளன. பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாவது, நடைபெற்றுவரும் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 7 மாணவர்கள், அதில் ஒரு மாணவனின் பிறந்த நாளை கொண்டாடும் முகமாக குறித்த கடற்கரைப்பகுதியில் ஒன்று கூடியுள்ளனர். குறித்த சமயம் அம் மாணவர்கள் மது அருந்தியிருந்ததால் அதிக மதுமயக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், மாணவர்கள் 7 பேரும் கடற்கரைப் பகுதியில் இருந்த படகொன்றையெடுத்து கடலுக்கள் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு பழுதடைந்த நிலையில் காணப்பட்டதுடன் அது பயணத்திற்கு ஏற்ற தரத்தைக் கொண்டிராத வள்ளத்திலேயே மாணவர்கள் ஏறி கடலுக்குள் சென்றுள்ளனர். இந்நிலையில் மணவர்கள் 6 பேரின் மரணத்திற்கு, அவர்கள் பயணித்த படகு உரிய தரத்துடன் இல்லாமையும், குறித்த மாணவர்கள் மதுபோதையில் இருந்தமையுமே காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இலங்கை கிரிக்கட் அணித் தெரிவுக் குழு பதவித்துறப்பு

இலங்கை கிரிக்கட் அணித் தெரிவுக் குழு பதவி துறப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான கடிதம் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் அணியின் அண்மைக்கால விளையாட்டு தொடர்பில் இரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டு வந்துள்ளனர். இந்தநிலையிலேயே குழுவின் உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.

சுமந்திரன் : 20ஆவது அரசியலமைப்பு திருத்த நோக்கம் தெளிவாக விளக்கவேண்டியது அவசியம்

பா.கிருபாகரன், டிட்டோகுகன்   :  20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற குறைந்தபட்சம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியம் தேவை, என்ற வகையில், எதிரணியில் இருந்து அதற்கான ஆதரவை பெற்றுக்கொள்வதென்றால் அந்த அரசியலமைப்பு திருத்தத்தின் நோக்கம் தொடர்பில் அரசாங்கம் தெளிவான பகிரங்க அறிவிப்பொன்று விடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான எம்.ஏ. சுமந்திரன் நேற்று வியாழக்கிழமை சபையில் தெரிவித்தார். 

அத்துடன், 20 ஆவது அரசியலமைப்பின் நோக்கம் என்னவென்பது நாட்டுக்கு தெளிவுப்படுத்தப்படாத பட்சத்தில், மாகாண சபைத் தேர்தல்களை காலம் தாழ்த்துவதற்கான முயற்சியொன்றாகவே அது பார்க்கப்படும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சுமந்திரன் இந்த விடயங்களை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் பேசுகையில்: 

"இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை இந்த வருட இறுதிக்குள்ளோ அல்லது அடுத்த வருட ஆரம்பத்திலோ நடத்த முடியும். உள்ளூராட்சி மன்றங்கள் தான் கிராம மற்றும் நகர மட்டங்களில் மக்களுடன் நெருங்கி பணியாற்றும் ஆட்சி நிறுவனங்களாக இருக்கின்றன.

தமிழ் சினிமா: "அடிடா அவள ,வெட்றா அவள " வடசென்னை பெண் வேடத்திற்கும் பாம்பாயில்ருந்து

Shalinmarialawrence : தமிழ் சினிமாவை விமர்சிக்கும் தகுதி
உலகமே போற்றும் தமிழ் சினிமாவை விமர்சிக்கும் தகுதி இருக்கிறதா நமக்கு ? வாருங்கள் ஆராய்வோம் .
வடசென்னைக்காரனெல்லாம் கருப்பன் ,ரவுடி ,கொலைகாரன் ,கூலிப்படை-இப்படிக்கு தமிழ் சினிமா
ஆன்டனி ,டேவிட் என்று கிறிஸ்தவ பெயர் வைத்தவனெல்லாம் கடத்தல்காரன் ,வில்லனுக்கு அடியாள் -இப்படிக்கு தமிழ் சினிமா .
நாங்கள் சண்டை போட்டால் பாகிஸ்தான் தீவிரவாதிகளோடுதான் சண்டை போடுவோம் ,இங்கே தென் தமிழ்நாட்டில் சாதி வெறியோடு சுற்றி திரியும் மிருகங்களை பற்றி கவலை பட மாட்டோம்-இப்படிக்கு தமிழ் சினிமா
கேரள பெண்கள் எல்லோருமே வெறும் ரவிக்கை பாவாடையோடு ஆண்களை தேய்த்து கொண்டு வளம் வருவார்கள் -இப்படிக்கு தமிழ் சினிமா .
வன்புணர்வு செய்த வில்லனை ஹீரோயின் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் ,அவன் மேல் கேஸ் கொடுக்க கூடாது -இப்படிக்கு தமிழ் சினிமா
இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் தீவிரவாதிகள் -இப்படிக்கு தமிழ் சினிமா .
படித்த பெண்கள் எல்லாம் திமிர் பிடித்தவர்கள் ,ஹீரோ அவர்களை அடிப்பார் சினிமாவில் குடும்ப வன்முறை நியாயப்படுத்தப்படும் -இப்படிக்கு தமிழ் சினிமா .
"அடிடா அவள ,வெட்றா அவள " "இந்த பொம்பளையே இப்படிதான் தெரிஞ்சு போச்சுடா " -இப்படிக்கு பெண்களை பற்றி Phd படித்த தமிழ் சினிமா .

Monday, 28 August 2017

வரட்சி நிவாரணத் திட்டத்தில் மலையக தோட்டப் பகுதி மக்களும் உள்வாங்கப்பட வேண்டும்! வேலுகுமார் எம்.பி

வரட்சி நிவாரணத் திட்டத்தில் மலையக தோட்டப் பகுதி மக்களும் உள்வாங்கப்பட வேண்டும்! வேலுகுமார் எம்.பி
வறட்சி நிவாரண திட்டத்தில் மலையக தோட்ட பகுதி மக்களும் உள்வாங்கப்பட வேண்டும். தோட்ட பகுதி மக்களுக்கும் திட்டமிட்ட குடிநீர் விநியோக திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என த.மு.கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய வேலுகுமார் எம்.பியின் உரையில் தெரிவித்ததாவது,
'இன்று எமது நாட்டின் ஏறக்குறைய 19 மாவட்டங்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பிரதானமாக விவசாய பயிர்ச்செய்கை பாதிப்படைந்து இருக்கின்றது. அதனால் இப்பிரதேச மக்கள் வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். அதுமட்டுமன்றி இதன் மறுபக்கமாக குடிநீர் பிரச்சினை பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

‘மகனை தூக்கிலிடுங்கள்’ மாணவியை வன்புணர்வு கொலை .. தாய் கடிதம் !

கல்கமுவ, கிரிபாவ, சாலிய - அசோகபுர பிரதேசத்தில் 17 வயதான பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, அம்மாணவியை கொலைசெய்த தன்னுடைய மகனைத் தூக்கிலிடுமாறும் அதனால், தனக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லையென்றும், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவரின் தாய், கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 36 வயதான ஹர்சன சமன் குமார என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருடைய தாயாரான குசுமாவதியே மேற்கண்டவாறு , கடிதம் எழுதியுள்ளார். கல்கமுவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு அனுப்பிவைத்துள்ள அந்த கடிதம், மாணவியின் சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இத்தகைதொரு குற்றவாளியின் தாயாக இருப்பதால் ஏற்பட்டுள்ள மனவேதனையைத் தாங்கிகொள்ள முடியவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் வீட்டுக்கு அருகில் உள்ள வீடொன்றிலேயே, சந்தேகநபரும் வசித்து வந்துள்ளார். வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் மாணவி மயங்கியதையடுத்து அச்சமடைந்த அந்த நபர், அம்மாணவியைப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்த தப்பியோடியுள்ளார்.

யாழ் படகு கவிழ்ந்து உயிரிழந்த மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகின ( காணொளி, படங்கள் இணைப்பு )

veerakesari : Priyatharshan யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உயிரிழந்த 6 மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளங்காணப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலையகத்தில் தற்போது வழங்கப்படும் காணி அனுமதி பத்திரத்தின் சட்டநிலை என்ன?


மலையகத்தில் தற்போது வழங்கப்படும் காணி அனுமதி பத்திரத்தின் சட்டநிலை என்ன? மலையக மக்களுக்கு வழங்கப்படும் காணி உறுதிகள் குறித்து பழ. நாகேந்திரன் அவர்களின் கேள்விகளும், சந்தேகங்களும்! (முகநூலில் இருந்து) இலங்கை பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களும், அதன் வழிமுறைகளுமே சட்டப்படி செல்லுபடியாகும். மலையக பெருந்தோட்டங்களை பொருத்தவரை அவை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் வருகின்றன. பெருந்தோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரச காணிகள் நீண்ட கால குத்தகைக்கே வழங்கப்பட்டுள்ளன. சில தோட்டங்கள் தனியார் காணிகள் ஆகும். தற்போதைய சூழலில் மலையக மக்களுக்கு வழங்கப்படும் காணியுடன் கூடிய வீடு என்பது இந்த பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் செயற்படும் தோட்டங்களின் காணியில் தான் என்றும் அந்த காணிகளுக்கு பெருந்தோட்ட நிர்வாகத்தினரே காணி அனுமதி பத்திரம் வழங்குகின்றனர் என்றும் தெரியவருகிறது.

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...