Saturday, 29 July 2017
மக்களே அவதானம் ! மண்சரிவு ஏற்பட்டால் உடனடியாக வெளியேறவும்....!!
மக்களே அவதானம் ! மண்சரிவு ஏற்பட்டால் உடனடியாக வெளியேறவும்....!!
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டால் அப் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டின் கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டால் உடனடியாக அப்பகுதிகளில் இருக்கும் மக்களை உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அந்நிலையம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
நன்றி வீரகேசரி
பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!!
Malayaga Kuruvi
!!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!!
சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை ஏற்பார்களாக மலையக இலக்கியவாதிகள்..?
வடக்கதையான் என்று அண்மையில் மலையக மக்களை ஸ்ரீதரன் MP புகழ்ந்ததையும் பற்றி பேசவேண்டும்....
.
...அனைவரும் கையெழுத்துவிட்டு எதிர்ப்பை தெரிவித்து கண்டன அறிக்கையை வெளியிடவேண்டும்....என சமூக ஆர்வலர் ரட்ணசிங்கம் அனஷ்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Thinakaran Velautham Lunugala Sri விழுதுகள் சி.தினேஷ் வரதன்
புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தகவல் சான் சதீஷ்
Malayaga Kuruvi : புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான திசைமுகப்படுத்தல் பயிற்சி தலவாக்கலை த.ம.வி கேட்போர் கூடத்தில் நுவரெலியா வலய கல்வி பணிமனையின் உதவி கல்வி பணிப்பாளர் செல்வி பாமினி, கோட்ட கல்வி பணிப்பாளர் லோகநாதன் சேர், முன்னைனாள் கோட்ட கல்வி பணிப்பாளர் சோமசுந்தரம் சேர், தலவாக்கலை த.ம.வி அதிபர் கிருஸ்ணசாமி ஆகியோர் தலைமையில் இடம் பெற்றது.
இது மாகாண மேலதிக கல்வி பணிப்பாளரின் நேரடி கண்கானிப்பின் கீழ் நடைபெற்றதுடன் சுமார் 46 பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
பயிற்சி நிறைவின் போது சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும் மன நிறைவுடன் தன் ஆளுமையை விருத்தி செய்து கொண்டதுடன் எம் வளவாளர்களுக்கான நினைவு சின்னங்கள் ஆசிரியர்கள் சந்தோஷமாக வழங்கி அவர்களின் சேவை நலன் பாராட்டப்பட்டது.
உங்களின் சேவை நாளை மலையகத்தின் எழுச்சியாக இருக்கவேண்டும்.என மலையககுருவிவாழ்த்துகின்றது.
ஜனாதிபதியிடம் விருது பெற்ற சாமிமலை ஆனந்தகுமார் தகவல் நிசாந்தன் நிரு
Malayaga Kuruvi
ஜனாதிபதியிடம் விருது பெற்ற சாமிமலை ஆனந்தகுமார்
தகவல் நிசாந்தன் நிரு
தேசிய உணவு உற்பத்தி மேம்பாட்டுக்காக ஆற்றிய சிறந்த பணிகளை பாராட்டும் வகையில் 2016 ஆம் ஆண்டில் சிறந்து விளங்கியவர்களை கௌரவித்தல் மற்றும் ஜனாதிபதி விருது வழங்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிறந்த பால் பதனிடுபவர் தெரிவுசெய்யும் போட்டியில் முன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட
அப்கொட் டெய்ரி( Upcot dairy Milk) திரு தங்கவேல் ஆனந்தகுமார்
பாராட்டு விருது வழங்கப்பட்டது.
இவர் சாமிமலை கவரவில தோட்டத்தைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு மலையக குருவி குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துக்கள்.
ஜனாதிபதியிடம் விருது பெற்ற சாமிமலை ஆனந்தகுமார்
தகவல் நிசாந்தன் நிரு
தேசிய உணவு உற்பத்தி மேம்பாட்டுக்காக ஆற்றிய சிறந்த பணிகளை பாராட்டும் வகையில் 2016 ஆம் ஆண்டில் சிறந்து விளங்கியவர்களை கௌரவித்தல் மற்றும் ஜனாதிபதி விருது வழங்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிறந்த பால் பதனிடுபவர் தெரிவுசெய்யும் போட்டியில் முன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட
அப்கொட் டெய்ரி( Upcot dairy Milk) திரு தங்கவேல் ஆனந்தகுமார்
பாராட்டு விருது வழங்கப்பட்டது.
இவர் சாமிமலை கவரவில தோட்டத்தைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு மலையக குருவி குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துக்கள்.
நடேசய்யர் – மீனாட்சியம்மாள் : மலையகத்தின் விடிவெள்ளிகள் - என்.சரவணன்
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நாம் இலங்கையில் குறிப்பிட முடியும். அதுவேறு யாருமில்லை மீனாட்சி அம்மாள் நடேசய்யர்.
ஒரு ஆணின் வெற்றியின் பின் பெண் இருப்பார் என்று ஒரு பொதுப்புத்தி ஐதீகம் உண்டு. ஒரு பெண்ணின் வெற்றியின் பின்னால் ஆணின் வகிபாகம் உண்டு என்று பொதுவாகக் கூறும் வழக்கமும் இல்லை. ஆனால் நடேசய்யர் – மீனாட்சி அம்மாள் ஆகியோர் விடயத்தில் பரஸ்பர வெற்றிக்கு பரஸ்பர வகிபாகம் பெரிதளவு இருந்திருக்கிறது. நடேசய்யர் பற்றி பேசும் போது மீனாட்சி அம்மாளை தவிர்க்க முடியாது. அதுபோலவே மீனாட்சி அம்மாள் பற்றிய உரையாடல்களில் நடேசய்யரையும் தவிக்க முடியாது.
தனது முதல் மனைவி இறந்ததன் பின்னர் தனிமையில் வாழ்ந்த அய்யர் மீனாட்சி அம்மையை மனைவியாக ஏற்றுக்கொண்டிருந்தார். நடேசய்யர் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த பிராமணர். மீனாட்சி அம்மையார் நடேசய்யருக்கு உறவுக்காரர் என்று அறியப்படுகிறது.
இங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா
இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா எதிர்வரும் 10.06.2017 சனிக்கிழமை(10.00 AM) அன்று ஹட்டன் மாணிக்கப்பிளிளையார் கலாச்சார மண்டபத்தில் நடைபெறும்.அமரர் எஸ் திருச்செந்தூரன் நினைவு அரங்கு திரு லெனின் மதிவானம் தலைமையில் நடைபெறும்.இவ்விழாவில் வரவேற்புரையினை இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின். பொதுச்செயலாளர் திரு .ஆர் சங்கரமணிவண்ணன் நிகழ்த்துவார். பிரதம அதிதியாக யாழ்பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை கல்வியியல்பேராசிரியர் மா. சின்னத்தம்பி அவர்களும் கௌரவ அதிதிகளாக பேராதனைப் பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் அவர்களும் இலங்கையின் கல்வி நிர்வாக சேவை அலுவலர்களுக்கான பயிற்சி இணைப்பாளர் திரு பீ.ஆறுமுகம் அவர்களும் கலந்துகொள்வார்கள். மாலை கலைஞர்+ என் சாம்பசிவமூர்த்தி அரங்கில் நடைபெறவுள்ள இசைச்சங்கமம் ,மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் சம்மேளனத்தின் கலாச்சாரக்குழு தலைவர் திரு எஸ் சிறீஸ்கந்தராஜாவின் தலைமையில் நடைபெறும்.
மலையக மக்களை இழிவுபடுத்தி பேசிய கச்சாய் தீபன் என்பவர் மீது சட்ட நடவடிக்கை
மலையகத்தரை இழிவாக பேசிய நபருக்கெதிராக வழக்கு தொடர மலையக அமைப்பொன்று முன்வர வேண்டும்!
இலங்கையிலுள்ள (இந்திய வம்சாவளி) மலையகத் தமிழரை மிகக் கேவலாமாகவும், இழிவுவாகவும் பேசிய நபருக்கெதிராக வழக்குத் தொடர மலையக அமைப்பொன்றை எதிர்பார்க்கிறோம்.
ஜேர்மனியிலுள்ள சமூக சேவகர் Ratnasingham Annesley அவர்கள் இதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும், உறுதியான, இறுதிவரை போராடக் கூடிய அமைப்பொன்று இதற்கு முன்வர வேண்டுமெனக் கோரியுள்ளார். இதற்கான முழுமையான உதவிகளைச் செய்வதற்கு ஜேர்மனியிலுள்ள Ratnasingham Annesley அவர்கள் தயாராக இருக்கிறார்.
Ratnasingham Annesley அவர்களின் முகநூல் பதிவு கீழே
//எமது உறவினர்கள் ஆகிய இந்திய வம்சாவளித்தமிழர்களை இழிவு படுத்தும் இந்த நபர்?? கச்சாய் சிவம் என்று அழைக்கப்படுபவர். ஜெர்மனி பெர்லின் நகரில் வசிப்பவர். அதுமட்டும் அல்ல கிளிநொச்சி ஸ்ரீதரனின் நெருங்கிய உறவினரும் ஆவார். ஆகவே ஆச்சரியப்பட தேவை இல்லை
மலையகக்களின் பதிவு செய்யப்பட அமைப்புகள் இருந்தால் தொடர்புகொள்ளவும் வழக்கு தொடர. Germany இல் புதிய சட்டங்கள் அமுலுக்கு வந்திருக்கிறது.
இவர் ஜெர்மனியில் வசிப்பதால் நீங்கள் முகநூலுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யவேண்டும். 50 மில்லியன் யூரோ வரை நஷ்ட்டஈடு கேட்டு தாக்குதல் செய்யலாம். முகநூலுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யும் போது முகநூல் இவரை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும். //
எனவே மலையக மக்களின் உரிமைகளுக்காக பணியாற்றும் பதிவுசெய்யப்பட்ட அமைப்பொன்று இதற்கு முன்வர வேண்டும். இதுகுறித்த மேலதிக விபரங்களை ratnasinghamannesley@yahoo.de மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள். பதிவுசெய்யப்பட்ட அமைப்பிற்கு Viber 0049 15 77 31 26 253 என்ற இலக்கத்துடனும்தொடர்புகொள்ளலாம்.
இந்த விவகாரத்தில் அக்கறை எடுத்துக்கொண்டுள்ள Ratnasingham Annesley அவர்களுக்கு மலையக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோ" மலையக மாணவனின் சாதனை!
சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோ" மலையக மாணவனின் சாதனை!
சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய முச்சக்கரவண்டி ஒன்றை கண்டுப்பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துளார் .
வத்தேகம பாரதி
மகாவித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பு கற்கும் மாணவன். . கண்டி மாவட்டத்தை சேர்ந்த வத்தேகம பாரதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஷ்னு சுதர்ஷன் என்ற மாணவரே இந்த புதிய கண்டுபிடிப்பிற்கு சொந்தகாரராகும். தனது புதிய கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தும் வகையில் இன்று காலை வத்தேகமையில் வீதியில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 13 வயதே ஆன இவரின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். மலையக குருவி குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துக்கள் நன்றி கருடன்
மகாவித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பு கற்கும் மாணவன். . கண்டி மாவட்டத்தை சேர்ந்த வத்தேகம பாரதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஷ்னு சுதர்ஷன் என்ற மாணவரே இந்த புதிய கண்டுபிடிப்பிற்கு சொந்தகாரராகும். தனது புதிய கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தும் வகையில் இன்று காலை வத்தேகமையில் வீதியில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 13 வயதே ஆன இவரின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். மலையக குருவி குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துக்கள் நன்றி கருடன்
Friday, 28 July 2017
சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழும் வெளிநாடு சென்ற உழைப்பாளிகள்
ndpfront.com/ வெளிநாட்டு அடிமைத் தொழிலுக்குச் செல்லும் உழைப்பாளியின் உரிமைகள் மற்றும் அவனது பிரச்சினைகள் விடயத்தில் எந்த அதிகாரியும் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான் உண்மை. மொழி தெரியாத, குறைந்த கல்வியறிவுடன், தமது உரிமைகளுக்காகவும் அநீதிக்காகவும் குரல் கொடுக்கத் தெரியாத எப்போதும் அடிமைகளாக நடத்தப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலான இப்பிரச்சினை இன்னொரு அவலமாக மாறியுள்ளது. ஒரே தோட்டப் பகுதியில் வசித்த நான்கு பெண்கள் வெளிநாட்டு வேலைக்குச் சென்று மரணத்தைத் தழுவிய சம்பவங்கள் 6 மாதங்களுக்குள் நடந்துள்ளது. அது மட்டுமல்ல, மரணத்திலிருந்து தப்பி தற்செயலாக உயிர் பிழைத்தவர்களின் அனுபவங்களும் மரணத்தைப் போன்றே வேதனைமிக்கவையாகும். சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்களுக்கு பெண்கள் இரையாவதையும் தடுக்க முடியாத நிலைதான் காணப்படுகின்றது
ஐ தே க செனரத் கபுகொடுவ காலமானார் . : (மனோ கணேசன்ர்) திமிர் பிடித்த தமிழ் பையன்!
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள்
பொதுச் செயலாளர் செனரத் கப்புகொட்டுவ, நேற்றிரவு காலமாகியுள்ளார் என, அக்கட்சித் தகவல்கள் தெரிவித்தன.
2001ஆம் ஆண்டு முதல், 2004ஆம் ஆண்டுவரை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய கப்புகொட்டுவ, கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.
28/07/17 திமிர் பிடித்த தமிழ் பையன்!
இந்த நொடியில் என் மனதில்… 2001ம் வருஷம். நான் ஒரு புது இளம் எம்பி. கட்சி ஆரம்பித்த புதிது. கொழும்பு மாநகரசபை தேர்தலில் எங்கள் கட்சி தனியாக போட்டியிட முடிவு செய்தது. அப்போது ஆட்சியில் இருந்த UNP கட்சியின் செயலாளர் என்னை அழைத்து, தனியாக போட்டி இடாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.
நாம் போட்டியிட்டால், கொழும்பில் ஐதேக தமிழ் வாக்கு சிதறுமாம். "சரி, ஐதேக பட்டியலில், எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு இரண்டு இடம் தாருங்கள்" என்றேன். "அதில் இடமில்லை. எல்லாம் நிரம்பிவிட்டன. எங்கள் கட்சி தமிழ் வேட்பாளர்கள் இருக்கின்றார்ளே.", என்றார். "என்ன செய்வது? எங்கள் கட்சி அரசியல் குழு முடிவு செய்து விட்டது. போட்டியிலிருந்து வாபஸ் வாங்குவது கஷ்டம். எங்கள் வேட்பாளர் பட்டியல்கூட தயார்", என்றேன்.
பொதுச் செயலாளர் செனரத் கப்புகொட்டுவ, நேற்றிரவு காலமாகியுள்ளார் என, அக்கட்சித் தகவல்கள் தெரிவித்தன.
2001ஆம் ஆண்டு முதல், 2004ஆம் ஆண்டுவரை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய கப்புகொட்டுவ, கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.
28/07/17 திமிர் பிடித்த தமிழ் பையன்!
இந்த நொடியில் என் மனதில்… 2001ம் வருஷம். நான் ஒரு புது இளம் எம்பி. கட்சி ஆரம்பித்த புதிது. கொழும்பு மாநகரசபை தேர்தலில் எங்கள் கட்சி தனியாக போட்டியிட முடிவு செய்தது. அப்போது ஆட்சியில் இருந்த UNP கட்சியின் செயலாளர் என்னை அழைத்து, தனியாக போட்டி இடாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.
நாம் போட்டியிட்டால், கொழும்பில் ஐதேக தமிழ் வாக்கு சிதறுமாம். "சரி, ஐதேக பட்டியலில், எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு இரண்டு இடம் தாருங்கள்" என்றேன். "அதில் இடமில்லை. எல்லாம் நிரம்பிவிட்டன. எங்கள் கட்சி தமிழ் வேட்பாளர்கள் இருக்கின்றார்ளே.", என்றார். "என்ன செய்வது? எங்கள் கட்சி அரசியல் குழு முடிவு செய்து விட்டது. போட்டியிலிருந்து வாபஸ் வாங்குவது கஷ்டம். எங்கள் வேட்பாளர் பட்டியல்கூட தயார்", என்றேன்.
மலையக வீடமைப்பு திட்டம் மந்தகதியிலேயே நகர்கின்றது : இ.தொ.கா.
Priyatharshan
அரசாங்கத்தினால் மலையகத்தில் நிரமாணிக்கப்படும் வீடமைப்பு திட்டங்களை துரிதகதியில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.
அரசாங்கம் உறுதியளித்தவாறு ஐம்பதாயிரம் வீடுகளை அமைப்பதாயின் நாளொன்றுக்கு எழுபது வீடுகள் அமைக்கப்பட வேண்டும்.
அவ்வாறானதொரு அபிவிருத்தி மலையகத்தில் இடம்பெறவில்லை. மலையக வீடமைப்பு திட்டம் மந்தகதியிலேயே நகர்கின்றது எனவும் முன்னாள் மத்திய மாகாண கல்வி அமைச்சர் எஸ். அருள்சாமி குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைக்காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வீரகேசரி
Thursday, 27 July 2017
தெஹிவளை களுபோவிலையில் "உங்களுக்காக அரச சேவை... 29/07/2017 - 8.30 முதல் 3.30 வரை
கொழும்பு தெஹிவளை களுபோவிலையில் "உங்களுக்காக அரச சேவை"> சனிக்கிழமை 29/07/2017 - 8.30 முதல் 3.30 வரை
'உங்களுக்காக அரச சேவை”என்ற தொனிப்பொருளில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில் அமைச்சினால் நடத்தப்படும் மாபெரும் நடமாடும் சேவையின் 11 ம் நிகழ்வு தெகிவளை களுபோவில புத்தகோஷ மகா வித்தியாலய வளாகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை 29ம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 3.30மணி வரை நடைபெறும்.
இந்த நடமாடும் சேவையின் மூலம் பின்வரும் அரச சேவைகளை பொதுமக்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்: பிறப்புச் சான்றிதழினை சட்டரீதியாக மொழி பெயர்த்துக் கொடுத்தல் (ஆங்கிலம்/சிங்களம்/தமிழ்) /பிறப்புச் சான்றிதழில் உள்ள பிழைகளை (பெயர்/தந்தையின் பெயர்/தாயின் பெயர்/பிறந்த இடம்) அடையாளம் கண்டு அவற்றைத் திருத்திக் கொடுத்தல்/ பிறப்பு சான்றிதழின் புதிய பிரதியை வழங்குதல் /பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அனுமான சான்றிதழ் வழங்குதல் /
இந்த நடமாடும் சேவையின் மூலம் பின்வரும் அரச சேவைகளை பொதுமக்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்: பிறப்புச் சான்றிதழினை சட்டரீதியாக மொழி பெயர்த்துக் கொடுத்தல் (ஆங்கிலம்/சிங்களம்/தமிழ்) /பிறப்புச் சான்றிதழில் உள்ள பிழைகளை (பெயர்/தந்தையின் பெயர்/தாயின் பெயர்/பிறந்த இடம்) அடையாளம் கண்டு அவற்றைத் திருத்திக் கொடுத்தல்/ பிறப்பு சான்றிதழின் புதிய பிரதியை வழங்குதல் /பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அனுமான சான்றிதழ் வழங்குதல் /
முல்லையில் மாயமான நாய் கதிர்காமத்திற்கு வந்ததெப்படி? பாதயாத்திரீகர்கள் அதிர்ச்சி!
அதிசயம் ஆனால் உண்மை :
காரைதீவு சகா<
யாழ்.சந்நதியிலிருந்து வேல்சாமி தலைமையிலான">பாதயாத்திரைக்குழுவினருடன் பத்துநாட்கள் பயணித்து முல்லைத்தீவு வற்றாப்பளையில் மாயமான நாய் மீண்டும் அவர்கள் கதிர்காம கந்தனாலயத்தை வந்தடைந்ததும் ஆலய முன்றலில் நின்றது.</
இச்சம்பவம் 52நாட்கள் நடந்து கானகத்தினூடாக கதிர்காமத்தை அடைந்த வேல்சாமி குழுவினருக்கு பெரும் அதிர்hச்சியாகவிருந்தது.
இச்சம்பவம் 23)
ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணியளவில் இடம்பெற்றுள்ளது.< 23ஆம் திகதி காலையில் செல்லக்கதிர்காமத்தை அடைந்த குழுவினர் அன்று பிற்பகல் பறப்பட்டு கதிர்காமத்தை வந்தடைந்தபோது ஆலய முகப்பில் இந்த நாய் நின்றதைக்கண்டதும் அனைவரும் தமைமறந்து அரோகரா போட்டார்கள். அனைவரும் ஒருகணம் அதிர்ச்சியுற்றவர்களாகவிருந்தார்கள்.யாழ்ப்பாணம் செல்வச்சநந்நதி ஆலயத்திலிருந்து இவர்கள் பின்னால் தொடர்ந்து 10நாட்கள் பயணித்த இந்த நாய் முல்லைத்தீவு வற்றாப்பபளை கண்ணகை அம்மனாலய குளிர்த்திச்சடங்கின்போது காணாமல்போயிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணியளவில் இடம்பெற்றுள்ளது.< 23ஆம் திகதி காலையில் செல்லக்கதிர்காமத்தை அடைந்த குழுவினர் அன்று பிற்பகல் பறப்பட்டு கதிர்காமத்தை வந்தடைந்தபோது ஆலய முகப்பில் இந்த நாய் நின்றதைக்கண்டதும் அனைவரும் தமைமறந்து அரோகரா போட்டார்கள். அனைவரும் ஒருகணம் அதிர்ச்சியுற்றவர்களாகவிருந்தார்கள்.யாழ்ப்பாணம் செல்வச்சநந்நதி ஆலயத்திலிருந்து இவர்கள் பின்னால் தொடர்ந்து 10நாட்கள் பயணித்த இந்த நாய் முல்லைத்தீவு வற்றாப்பபளை கண்ணகை அம்மனாலய குளிர்த்திச்சடங்கின்போது காணாமல்போயிருந்தது.
மாபெரும் கிரிக்கெட் போட்டி
தகவல் Marudhaveeran Thavapputhalvan
ஹாலி எல ரொக்கத்தன்னை LIONS CRICKET CLUB நடாத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜீலை மாதம் 29ம் மற்றும் 30 திகதிகளில் ரொக்கத்தன்னை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
பிரதேச அணிகளையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
விளையாட்டுப்போட்டி தொடர்புகளுக்கு பின்வரும் இலக்கங்களுடன் தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் 0770505757,0779183329
தகவல் ஹாலிஎலை நிருபர் ம.தவப்புதல்வன்
ஹட்டன் மாவட்ட சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பு
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
ஹட்டன் மாவட்ட நீதிமன்ற சட்டத்தரனிகள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் கவணயீர்ப்பு ஆர்பாட்டமொன்றிலும் இன்று ஈடுபட்டனர்
ஹட்டன் சட்டத்தரனிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலியானமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே 27.07.2017 காலை 10. மணியளவில் நீதிமன்ற வளாகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
யாழ் நீதிமன்ற நீதவான் இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டு தாக்குதல் சம்பவமானது நாட்டின் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தனர்
நீதித்துறை சுதந்திரமாக செயற்பட்ட. அனுமதிக்க வேண்டும் என கோரி ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்பாட்டமானது அமைதியான முறையில் இம்பெற்றது
மேலும் ஹட்டன் மாவட்ட நீதிமன்ற செயற்பாடுகள் முற்றாக செயழிழந்தமை குறிப்பிடத்தக்கது
Nortan Raam
விடுமுறை எடுத்த தொழிலாழியை தாக்கிய தோட்டநிர்வாகி .. இரத்தினபுரியில் அடாவடி
Malaiagath Thamizhan
·
உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விருமுறை எடுத்த நமது தொழிலாளத் தோழரைத் (எஸ்தா.ராமகிருஷ்ணன) தாக்கிய நிர்வாக உத்தியோகத்தர்கள் நமது தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தாக்கியிருக்க வேண்டும். நம்மிடையே ஒற்றுமை இன்மையால் அந்த நல்ல நிகழ்வு நடக்கவில்லை போல் தெரிகிறது.
மனிதாபிமானம் அற்ற முறையில் நடந்து கொண்ட தோட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்தால் அடுத்து வேலை செய்யப் போகும் தோட்டத்திலும் இதைப் போன்ற அநாகரீக கேவலச் செயலைத் தான் செய்வார்கள். எனவே இவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது எனது பரிந்துரை.
தாக்குப் பட்ட தொழிலாளர் எந்த தொழிற் சங்கத்துக்கு மாதச் சந்தா கொடுத்து வந்தார் என்பதைப் பதிவு செயுங்கள். தொழிற் சங்கத்துடன் நான் பேச விரும்புகிறேன்.
Wednesday, 26 July 2017
புலிகளுக்கு ஆள்சேர்த்து கொடுத்த விரிவுரையாளருக்கு கண்ணதாசனுக்கு ஆயுள்தண்டனை!!
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆட்சேர்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியும், தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுபவருமான க.கண்ணதாஸிற்கு ஆயுள் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.அதேவேளை, கடத்திச் செல்லப்பட்ட குறித்த பெண் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளின் போது உயிரிழந்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காலப்பகுதியில் கிளிநொச்சியில் வைத்து விஜயபாலன் மஞ்சுளா என்ற பெண்ணை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆட்சேர்த்தாக 50 வயதுடைய கணெய்சுந்தரம் கண்ணதாஸ் என்ற முன்னாள் போராளிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணின் தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டது.இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
Tuesday, 25 July 2017
வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் மகஜர்
பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரனின் கொடூர பிரதேசவாத சொற் பிரயோகங்களை வன்மையாக கண்டிப்பதோடு அவா் நாட்டில் வாழுகின்ற மலையக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனா்.
இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த சம்மந்தனிடம் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் வைத்து இம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்இ வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் அமைப்பின் இணைப்பாளருமான எம்பி. நடராஜ் கையொப்பம் இட்டு இந்த மகஜர் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுகிளிநொச்சி மாவட்டத்தில் மலையக வம்சாவழி மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனா். கடந்த தேர்தல்களில் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன் இந்த மக்களின் அதிகளவாக வாக்குகளையும் பெற்றவா். எனவே இந்த நிலையில் அவா் மலையக சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சொற் பிரயோகங்களை மேற்கொண்டிருப்பது நாடு முழுவது வாழும் மலையக மற்றும் இந்திய வம்சாவழி மக்களின் மனங்களை சிதறடித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினா் நேசிப்பதாக கூறும் அதே தமிழ்த்தேசியத்தை நாங்களும் நேசிக்கின்றோம். அதற்காக எண்ணற்ற உயிர்த்தியாகங்களை செய்திருக்கின்றோம் அரை நூற்றாணடுகளுக்கு மேலாக வடக்கில் கிழக்கில் மலையக மக்கள் பரந்து வாழ்ந்து வருகின்றனா். ஆனால் இவா்கள் இன்றும் மாற்றான் தாய் மனப்பாங்குடன்தான் நடத்தப்படுகின்றமை மிகுந்த மனவேதனையளிக்கிறது
எனவே மலையக மக்கள காயப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் மோசமான சொற் பிரயோகங்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுகின்றோம் எனவும் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://kumurummalaikal.blogspot.com
மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் அதிரடி சுற்றிவளைப்பு
வீரகேசரி : Gnanaprabu
மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நடவடிக்கை அந்த நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமினின் உத்தரவிற்கமைய எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாலை தீவு சபாநாயகர் அப்துல்லா மஸிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என அந்நாட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை, மாலைதீவில் ஜனாதிபதி ஆட்சி இடம்பெறுகின்ற நிலையில், சபாநாயகருக்கொதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையே குறித்த முற்றுகைக்கு காரணம் என தொிவிக்கப்படுகின்றது.
மனோ கணேசன்: குடவிளக்காக இருக்கும் மலையக மக்களை அகல் விளக்காக சுடர் விட்டு ஒளிரச் செய்வது எமது நோக்கம்
குடவிளக்காக குடத்திற்குள் ஏற்றிய விளக்காக இருக்கும் மலையக மக்களை அகல் விளக்காக சுடர் விட்டு ஒளிரச் செய்யும் பாரிய முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றோம். கடந்த காலங்களில் அப்படி இருக்கவில்லை முற்று முமுதாக தள்ளி வைக்கபட்டவர்களாவே இருந்தோம். தற்போது மலைய தமிழர்கள் என்று அடையாளபடுத்தபட்டு கொண்டு இருக்கின்றோம் என்று கூறுகின்றார் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள்.
25 வருடங்களை கடந்த வரலாற்றையும்¸ போராட்டங்களையும்¸ சவால்களையும் கடந்து பொது மக்களுக்கு பொது நலம் கலந்த சேவைகளையும் அதன் ஊடாக பல சாதணைகளைப் படைத்து வரும் கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் வெள்ளி விழா கண்டி பேராதெனிய ரோயல் கார்டன் ஹோட்டலில் இதன் தலைவர் பி.பி. சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு அதிதியாக அமைச்சர் மனோ கணேசன் கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் பொழுதே இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் தினப் போட்டியில் டயகம மாணவன் வினுஷகாந் விகாசன் அகில இலங்கை சாதனை!
மலையக குருவி : - அக்கரப்பத்தனை நிருபர்
அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட தமிழ் தினப் போட்டியில் முதல் முறையாக நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்று நு/டயகம மேற்கு 02 தமிழ் வித்தியாலயத்தில் தரம் 05இல் கல்வி பயிலும் வினுஷகாந் விகாசன் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட ஆக்கத்திறன் போட்டியில் முதலாம் பிரிவில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அண்மைக் காலமாக இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி அனைவரையும் போற்றத்தக்க அளவு முன்னேற்றம் கண்டுள்ளது.
இதுதொடர்பாக பாடசாலை அதிபர் வேலுசாமி கோபால்ராஜ் தெரிவிக்கையில், இந்தப் பாடசாலையில் அதிகமான குறைபாடுகள் காணப்படுகின்ற போதிலும் இங்கு கடமையாற்றும் ஆசிரியர்கள் நேரகாலம் பாராமல் உணர்வுபூர்வமாக செயல்படுவதால் மாணவர்களின் கல்வி மட்டம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் முயற்சிகளின் மூலம் தரம் 05 புலமைபரிசில் பரீட்சை, தமிழ் தினப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்து வருகின்றனர்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வளங்கள் மிகவும் முக்கியம். எங்களுடைய பாடசாலைக்குத் தேவையான வசதிகள் கிடைத்தால் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு மேலும் வாய்ப்பாக அமையும். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது மாணர்வகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்று தெரிவித்தார்.
சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் அரசியல் வருகைக்கு வாழ்த்துக்கள்
நான் அரசியலில் பிரவேசித்த நாள் முதல் என் தந்தையின் அன்பு சொந்தங்களுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருந்தேன்,
என் சொந்தங்களை அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று காண்பதனாலும் அவர்களின் அன்பினாலும் திளைத்து இருந்தேன் என்பதே நிதர்சனம். இதனாலேயே நான் அமைதியாக இருப்பது போல் தெரிந்திருக்கலாம் அதிலும் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. அன்பின் முன் எதுவும் பெரிதல்ல.
எங்கோ ஒரு மலைதோட்டத்தில் உள்ள அம்மா கண்ணீர் மல்க " எங்க அண்ணன்ட மகளா " என தழுவுவதில் கிடைத்த வெற்றி தேர்தலில் கிடைக்குமா..!
மேலும் என் உறவுகளின் பிரச்சினைகளை சரிவர புரிந்து கொண்டதன் விளைவாகவே "#சந்திரசேகரன்_அறக்கட்டளை " ஆரம்பிக்கப்பட்டது..
வெளியில் இருந்து பார்க்கும் போது நம்மவர்க்கு சம்பளபிரச்சினை, தனிவீடு இன்னும் ஊடகங்களில் கூறப்படும் சில மட்டுமே பாரிய பிரச்சினையாக தெரியும் ஆனால் நம்மவர்களுடன் கலந்துரையாடும் போது தான் இன்னும் பலதரப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என விளங்கியது.
நிச்சயமாக உங்களுக்கான தேவைகளை நான் இயன்ற வரை பூர்த்தி செய்வேன்.
Subscribe to:
Posts (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...