100%;தனது ஆரம்பக்கல்வியை போற்றி மற்றும் நோர்வூட் பாடசாலைகளிலும் பின் பண்டாரவளை புனித மரியாள் கல்லூரியிலும் பின் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வியை கற்றார்.(மலையக கூத்துக்களை மீளுருவாக்கம் செய்யும் முயற்சியில் வெற்றி கண்ட திரு.திருச்செந்தூரன் அவர்கள் அப்போது பண்டாரவளை புனித மரியாள் கல்லூரியில் அதிபராக இருந்த காரணத்தினால் அவரிடம் கற்க வேண்டும் என்ற நோக்கில் தனது குடும்ப வறுமையின் மத்தியிலும் அங்கு சென்று கல்வி கற்றதை பெறுமையுடன் நினைவு கூறுகின்றார்
இவர் கல்வி கற்ற அனைத்து பாடசாலைகளிலும் கலைத்துறையில் தன்னை பூரணமாக அர்ப்பணித்துக்கொண்ட இவர் தனது ஆற்றலால் பல வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற்றார். பாடல், கவிதை, நாடகம், வில்லுப்பாட்டு, நடனம், கூத்து என்று பல்வேறுப்பட்ட கலை வடிவங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
1989ம் ஆண்டு ஆசிரியர் சேவையில் சேர்;ந்த இவர் தனது சேவைக்கால பயிற்சி காலத்தில் மலையக கூத்தாம் காமன் கூத்தினை புதிய பல நாடக யுத்திகளுடன் மீளுருவாக்கம் செய்து மேடையேற்றியதோடு அந்த கூத்தில் கூத்து வாத்தியாராக பாத்திரமேற்று நடித்தார்.
தான் முதல் நியமனம் பெற்ற பாடசாலையில் இவர் மேற்கொண்ட கலை சேவை அளப்பரியது. இதில் கல்வி அமைச்சினால் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ் மொழித்தினம் குறிப்பிடத்தக்கது. இந்திய வம்சாவளி மக்களின் வருகையையும் வாழ்வியலையும் அன்றும் இன்றும் என்ற பெயரி; வில்லுபாட்டாக அமைத்து மாணவர்களை பயிற்றுவித்து தேசிய மட்டப் போட்டியில் தங்கம் வென்றார். இதுமாத்திரமன்றி கிராமிய நடனமாகிய 'கரகம்" என்ற நடனத்தினையும் சிறப்பாக பயிற்றுவித்து தேசிய மட்டத்தில் தங்கம் வென்றார். தேசிய மட்டப்போட்டிகளில் நாடகம், கூத்து என்பவற்றையும் சிறப்பாக பயிற்றுவித்து பதக்கங்கள் பல வென்றதையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.
இந்திய வம்சாவளி மக்களால் பல தசாப்தங்களாக தோட்டங்களில் ஆடப்பட்டு வரும் பல கூத்துக்கள் காலவோட்டத்தில் அருகி வரும் நிலை காணப்பட்டது. அந்நிலைமைக்கு மக்களின் வாழ்வியல், பொருளாதாரம், உலகமயமாதல் என்பன காரணமாகிற்று. இந்நிலையில் இக் கூத்து கலைகளை அடுத்த பரம்பரையினருக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்நிலையில் 1970களில் அதன் முதல் முயற்சியை திரு.திருந்செந்தூரன் அவர்கள் மேற்கொண்டார். அதன் பின் தொடர்ந்து அப்பணியை திரு.ஹெலன் அவர்கள் மேற்கொண்டு வருவது சிறப்பிற்குரியது.
சிறந்த நாடக ஆசிரியரும் நடிகருமான இவர் சிறந்த ஒப்பனை கலைஞராவர். இசைக்கருவிகளை இசைக்;கும் ஆற்றல் கொண்ட திரு.பிரான்சிஸ் ஹெலன் அவர்கள் பாடல்கள் இயற்றுதல், அவற்றிற்கு மெட்டமைத்தல் போன்றவற்றில் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளதோடு சிறந்த பல பாடல்களை இயற்றி இசையமைத்து அரங்கேற்றியுள்ளார். இவர் இயற்றிய சிறுவர் தின பாடல்கள் இலங்கை ரூபவாஹினி ஊடாக ஒளிபரப்பபட்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியில் மாத்திரமன்றி சிங்களம், ஆங்கில மொழிகளில் நாடகம் தயாரித்து கொழும்பில் நடைபெற்ற உலக சமாதான மகா நாட்டில் அரங்கேற்றினார்.
தற்போது தான் கற்பிக்கும் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் பாடப்படும் விளையாட்டுப் போட்டி பாடலை (song of the meet) இயற்றி இசையமைத்துவரும் இவராவார். இவரின் பல நாடக படைப்புகள் எழுத்துருவில் காணப்படுகின்றது. அவற்றிற்கு மேடை வடிவம் கொடுத்து அவற்றை மேடையேற்றும் பணியை தற்போது மேற்கொண்டு வருகின்றார் அவற்றில் 'புயல்", 'மகுடி" ஆகிய நாடகங்கள்வெகு விரைவில் மேடையேற்றப்படவுள்ளது.
காமன் கூத்தானது தோட்டப்புறங்களில் ஒவ்வொரு வருடமும் ஆடப்பட்டு வருகிறது. மாசி மாதத்தில் காமன்கூத்து ஆரம்பித்து 16 நாட்கள் தொடர்ந்து ஆடப்பட்டு வரும் இக்கூத்தானதுமாசி மாதம் வரும் அமாவாசை கழித்து அடுத்து வரும் 03ம் நாளில் காமன் நடப்படும். அதனைத் தொடர்ந்து தோட்டம் தோட்டமாக சென்று ரதி மதன் ஆடி வருவார்கள். அது காமன் விழா நடைபெறும் நாள் பற்றி ஏனைய மக்களுக்கு பறை சாற்றும் ஓர் நிகழ்வாக காணப்படும். அதனைத் தொடர்ந்து 16ம் நாள் காமன் கூத்து நிகழ்வு இடம்பெறும் மதன் ரதி கல்யாணம், மதன் சிவன் தபசை அழித்தல், சிவன் கோபம் அடைந்து மதனை எரித்து சாம்பளாக்குதல், பின் மறுநாள் மதனை உயிர் எழுப்புதல் என்ற ஒழுங்கு முறையில் இக்கூத்து ஆடப்படுகிறது.
பக்தி பரவசத்துடன் ஆடப்படும் இக்கூத்தில் மக்களின் வாழ்வியல் பற்றி கூறும் பாத்திரங்களும் காணப்படுகிறது. அவற்றில் கோமாளி, குறவன், குறத்தி பாத்திரங்களை குறிப்பிடலாம். இவை நகைச்சுவையாகவும் மக்களின் நடைமுறை பிரச்சினைகளை கூறும் பாத்திரங்களாகவும் காணப்படும். நவீன கூத்தில் இப்பாத்திரங்களை இதனை மீளுருவாக்கம் செய்த திரு.ஹெலன் அவர்கள் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். பல நாட்கள் ஆடப்படும் மேற்படி கூத்தினை சுறுக்கி 1 தொடக்கம் 1 1/2 மணித்தியாலங்களில் முழுக் கதையையும் சிறப்பாக புரியம் விதத்தில் மேடையில் ஆடப்படும் வகையில் அதனை குறுக்கி மிக சிறப்பான முறையில் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளமை சிறப்பானது. இக் கூத்தினை மேலும் குறுகிய வடிவமாக செம்மொழி மகா நாட்டில் இடம்பெறச்செய்வது குறிப்பிடத்தக்கது. செம்மொழி மகாநாட்டு நிகழ்வில் அரங்கேறவுள்ள காமன் கூத்தில் திரு.பிரான்சிஸ் ஹெலன்
அவர்கள் கூத்து வாத்தியாராக பாத்திரமேற்று நடிக்கவுள்ளதோடு கூத்தின் தயாரிப்பு
மற்றும் நெறியாள்கையினை திரு.ஹெலன் அவர்கள் மேற்கொள்கின்றார் .
No comments:
Post a Comment