Thursday, 3 August 2017

அமைச்சர் திகாம்பரத்தை சண்டைக்கு இழுக்கும் சக்தி tv நியூஸ்- நகுலேஷ் கணபதி

மலையகத்தை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்லும் அமைச்சர் திகாம்பரம் அவர்களை சக்தி தொலைக்காட்சியின் நியூஸ் பெஸ்ட் தொடர்ந்து தாக்கி வருகிறது இதற்கு நாம் அஞ்சவில்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவர் நகுலேஷ் கணபதி கூறுகிறார். கடந்த இரண்டு தினங்கள் மட்டுமல்ல பல நாட்களாக சக்தி தொலைக்காட்சியின் நியூஸ் பெஸ்ட் எமது அமைச்சரை தாக்கியே ஒரு தலைபட்சமாகவும் நடு நிலை மறந்தும் செய்தி வெளியிடுகின்றது. ஹட்டனில் நடைப்பெற்ற விழாவில் மைக்கை எடுத்தது மன உளைச்சல் காரணமே ஏனெனில் சக்தி செய்தியானது நாம் செய்யும் நற்பணிகளை மறைத்து செய்திகளை திரிபுபடுத்தி எதிராக சொல்கின்றது. தனிமனிதனை குறிவைத்து தாக்குவதன் காரணம் என்ன..? மலையக மக்களின் அபிவிருத்தியை சக்தி செய்தி விரும்பவில்லையா..? என நகுலேஷ் கணபதி கூறுகிறார்.


அத்துடன் ஊடக சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் நாங்கள் இல்லை, மலையகத்தில் ஏனைய ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சுதந்திரமாக செய்திகளை வெளியிடுகின்றனர். இவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பலரை கடந்த காலங்களில் தாக்கினார்கள் அனைவரும் தேர்தலில் வெற்றி பெற்றனர். தேர்தலில் வெற்றி பெறுவதை தீர்மானிப்பது மக்கள் என்பதை சக்தி தொலைக்காட்சி மறக்க கூடாது , மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எமது அமைச்சர் நேர்மையானவர், இதனால் நாம் யாருக்கும் அஞ்சமாட்டோம் என மேலும் சொன்னார். சக்தி செய்தியில் பணிப்புரிபவர்கள் மீது கோபம் இல்லை உள்ளே எமக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள் , இதன் உண்மை சூத்திரதாரியை விரைவில் வெளிப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார். மலையகத்தை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்லும் அமைச்சர் திகாம்பரம் அவர்களை சக்தி தொலைக்காட்சியின் நியூஸ் பெஸ்ட் தொடர்ந்து தாக்கி வருகிறது இதற்கு நாம் அஞ்சவில்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவர் நகுலேஷ் கணபதி கூறுகிறார்.</

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...