Thursday, 22 June 2017

மலையகம் .. நமது மறதியின் வரலாறு

தேயிலை மற்றும் காபி உற்பத்தியிலிருந்து மட்டும் இலங்கைக்கு அரசுக்கு, வருடத்துக்கு 2,395 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் வருகிறது என்கிறது ஓர் ஆய்வு. 2012-ம் ஆண்டு கணக்கின்படி 2 லட்சம் பேர் தோட்டத் தொழிலாளர்களாக  உள்ளனர். 1980-ம் ஆண்டு இவர்களின் எண்ணிக்கை 5,30,000. இன்று மலையகத் தமிழர்களின் மக்கள்தொகை சுமார் 15 லட்சம். 1948-ம் ஆண்டு இலங்கை அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்தாலும், 1964-ம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியப் பிரதமர் சாஸ்திரி - இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டார நாயகா ஒப்பந்தத்தாலும் 10 லட்சம் மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களானார்கள். இந்தக் காலகட்டங்களில் இந்தியா திரும்பியவர்கள் இன்றளவும் ‘சிலோன் அகதிகள்’ என்றே அழைக்கப்படுகின்றனர்.

மண் மூடிய துயர வரலாறு

1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு இதுவும்
இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் சென்று, குத்திக் குதறப்பட்ட இந்தியத் தமிழர்களின் துயரக் கதை. இந்தியர்கள், இலங்கையர்கள் இரு தரப்பினராலும் பேச மறுக்கப்படும் கதை. தமிழக வரலாற்றில் கொடூரமான காலகட்டம் 1835-40. நிலப்பிரபுத்துவ முறை, சாதிக் கொடுமைகள், கோரப் பஞ்சம், துரத்தும் வறுமை... பல்லாயிரக் கணக்கானோர் பசியால் செத்த காலகட்டம். ஆங்கிலேயர்கள் சூழலைத் தனதாக்கிக்கொண்டார்கள். இந்தியாவையும் இலங்கையையும் ஆண்ட அவர்கள், இலங்கையில் தங்களுடைய ஆட்கள் நடத்திய காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்களுக்கு ஏழைத் தமிழர்களைக் குறிவைத்தனர்.

கங்காணிகள் மூலம் நடத்தப்பட்ட வேட்டை இது. ஒரு ஊரில் நுழைவது. நல்ல வேலை, நல்ல சாப்பாடு, நல்ல கூலி என்று ஆசை காட்டுவது. கொஞ்சம் பணத்தை முன்பணமாகக் கொடுத்து ஆட்களைக் கூட்டிச் செல்வது. தனுஷ்கோடி வரை கால்நடையாகவே நடத்திச் செல்லப்பட்ட இவர்கள் அங்கிருந்து தோணிகள் மூலம் கடல் கடந்து, மீண்டும் கால்நடையாகவே இலங்கையின் தோட்டங்களுக்கு நடத்திச் செல்லப்பட்டனர்.

Wednesday, 21 June 2017

மேதினம் கவிதைகள் (மலையகம்)

சி.வி. வேலுப்பிள்ளையின் அரசியல் தொழிற்சங்க பணிகள்:சு. விஜயகுமார்

(சி.வி.யின் 100வது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு மக்கள் பண்பாட்டுக் கழகம் கடந்த செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஹட்டனில் நடாத்திய சி.வி பற்றிய ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையின் விரிவுப்படுத்தப்பட்ட வடிவம்)
சி.வி. வேலுப்பிள்ளை இலக்கியமும் அரசியலும் மேற்கட்டுமானத்தை சார்ந்தவைகள் என்ற வகையில் கருத்தியல்களே. கருத்தியலானது ஒன்றில் அடிக்கட்டுமானத்தை நிலைமாற்றம் செய்வதனை நோக்காக கொண்டிருக்கும் அல்லது நிலைபெற்றுள்ள அடிக்கட்டுமானத்தை பேணி பாதுகாப்பதை நோக்காக கொண்டிருக்கும். கருத்தியலானது மக்களினால் பிரக்ஞைபூர்வமாக வரித்துக் கொள்ளும் போது நடைமுறைக்கு (practice) வழிவகுக்கும். உற்பத்தி முறைமையை உறவை அடிப்படையாகக் கொண்ட அடிக்கட்டுமானம் கொண்டுள்ள தவிர்க்க, சமரசம் காண முடியாத வர்க்க முரண்பாட்டின் உள்ளார்ந்த அம்சங்களை உணர்ந்து அம்முரண்பாட்டை களைவதற்கான தளத்தை இலக்கியம், அரசியல் கொண்டிருக்கும் போது அவற்றின் கருத்தியலானது சமூகத்தின் நிலைமாற்றத்திற்கு வழிவகுக்கின்றது. அம் முரண்பாட்டை மறுக்கும் தளத்தை இலக்கியம், அரசியல் கொண்டிருக்கும் போது அவற்றின் கருத்தியல்கள் சமூக அசைவியக்கத்திற்கு தடைபோடுகின்றன. வேறு வகையில் கூறுவதாயின்
அவை சமூகத்தின் அடிப்படையை மறுக்கும் பிரக்ஞையை (false conciseness) ஏற்படுத்துகின்றன.

இலங்கை மலையக மக்கள் சிக்கல்கள் - வினாவும் விடையும்

keetru.com : எழுத்தாளர்: மு.சி.கந்தையா
கேள்வி : இலங்கை மலையக மக்கள் என்று யாரை குறிப்பிடுகின்றீர்கள் ?
பதில் : இந்தியாவும் இலங்கையும் பிரிட்டிசாரின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபொழுது இலங்கை மலைப் பகுதியில் காப்பி, தேயிலை, இரப்பர் போன்ற பணப்பயிர்கள் உற்பத்தி செய்வதற்காக, அய்ரோப்பிய முதலாளிகளால், தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட, இம்மக்களின் வழித்தோன்றல்களான இந்திய வம்சாவழித் தமிழர்களைத்தான் மலையகத் தமிழர்கள் என அடையாளப்படுத்துகின்றோம்.
தமிழகத்திலிருந்து இம்மக்கள் அழைத்துச் செல்லப்படக் காரணமாக இருந்த அன்றைய தமிழகச் சூழல் எது ?
கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து பருவ மழை பெய்யவில்லை, இதனால் விவசாயத்துக்கான நீர் ஆதாரம் இல்லாமல் போனது. உணவு உற்பத்தியில் தேக்க நிலை தொடர்ந்ததால், பஞ்சத்தின் பிடியில் இருந்து விடுபட மாற்று வழியின்றித் தவித்த நிலை. இத்தோடு பிரிட்டிஸ் ஆட்சியாளர்களின் நிலவரி, பாசனவரி போன்ற வரி விதிப்புகளைக் கட்ட இயலாமல் தங்கள் நிலங்களை இழக்க நேரிடும் நிலை; அய்ரோப்பிய ஆட்சியாளர்கள் இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பிரிட்டிஸ் காலனிய நாடுகளுக்குக் குறைந்த கூலிக்குப் பணியாற்ற இக்காலப்பகுதியில் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்பது வரலாறாகும்.

Tuesday, 20 June 2017

இலவசமாக* உங்கள் உயர் கல்வியை தொடர்வதற்கான விண்ணப்பம்

இலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இயங்கி வரும் SRILANKAN INSTITUTE OF ADVANCED TECHNOLOGICAL EDUCATION (SLIATE) இல் *இலவசமாக* உங்கள் உயர் கல்வியை தொடர்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
- தகவல் மேகநாத்
*அடிப்படை தகைமைகள்*
1.2016 இல் அல்லது அதற்கு முன் க.பொ.த உயர் தர பரீட்சை எழுதி இருத்தல்
2.குறைந்த்து 3S சித்தியுடன் பொது அறிவு பாடத்தில் சித்தி அடைந்திருத்தல்
3.பாடநெறிகள் ஆங்கில மொழியிலேயே கற்பிக்கப்படும்
(மேலதிக தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பார்க்க)
*பாடநெறிகள்*
For Any stream Students(13 Courses Available)
1.HIGHER NATIONAL DIPLOMA IN ACCOUNTANCY(HNDA)= B.Com(Special) - 4 Years(Full time & Part-time)
விசேடமாக இந்த பாடநெறிக்கு மட்டும் B.Com தரம் கொடுக்கப்பட்டுள்ளது
2.Higher National Diploma in Business Finance(HNDBF) - 2.5 Years
3.Higher National Diploma in Business Administration(HNDBA) - 2.5Years

பெருந்தோட்ட மக்களின் கூட்டு ஒப்பந்தம் முதல் தடவையாக சர்வதேச ஒப்பந்தம் ஆகியுள்ளது

187 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட சர்வதேச தொழில் ஸ்தாபனத்தில் இருந்து 313 அரசாங்க, 129 தொழிலாளர் மற்றும் 126 முதலாளிமார் ஆக மொத்தமாக 568 பிரதிநிதிகளும் மற்றும் 2025 அரசாங்க, முதலாளிமார் மற்றும் தொழிலாளர் ஆலோசர்களும் இம்முறை நடந்த 106ஆவது சர்வதேச தொழில் ஸ்தாபன சம்மேளனத்தில் பங்கு பற்றியது விசேட அம்சமாகும்
பெருந்தோட்ட மக்களின் கூட்டு ஒப்பந்த விவகாரம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிற் சட்ட ஒப்பந்தங்களுக்கு முரணாக நடக்கும் முதலாளித்துவ பெருந்தோட்டக் கம்பனிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் 106வது வருடாந்த மகாநாட்டில் சட்டத்தரணி கா.மாரிமுத்து!
இலங்கையில் பெருந்தோட்ட மக்களுக்கான கூட்டு ஒப்பந்த சரத்துக்களை அமுல்படுத்துவதில் சில தோட்டக் கம்பனிகள் அலட்சியமாக நடந்து கொள்வதால், மக்கள் பெரிதும் ஏமாற்றப்படுகின்றனர். சர்வதேச தொழிற் சட்டங்கள் இதனால் மீறப்படும் நிலை உருவாகியுள்ளது. தான்தோன்றித் தனமான செயற்பாடுகளை சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் கண்டிக்க வேண்டும் என இ.தொ.கா நிர்வாக உப தலைவரும், சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து ஜெனிவாவில் தெரிவித்துள்ளார்.

தமிழக செம்மொழி மாநாட்டில் அரங்கேறிய காமன் கூத்து .

பிரான்சிஸ் :  ஹெலன்போற்றி தோட்டத்தில் ஓர் கலைக் குடும்பத்தில் பிறந்த பிரான்சிஸ் ஹெலன் அவர்களின் தந்தை சிறந்த நாடக ஆசிரியரும், கலைஞருமாவார். தனது தந்தையாரின் நாடகங்களில் அதிகம் ஈடுபாடு கொண்ட இவர் 1977 ம் ஆண்டு தனது தந்தை தயாரித்த 'வேண்டாம் அடிமை வாழ்வு" என்ற நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக மிக சிறு வயதில் நடித்ததன் ஊடாக இவரின் கலை வாழ்க்கை தொடங்கிற்று. 1970,1980 களில் கத்தோலிக்க வாலிபர் இயக்கம், மறுமலர்ச்சி மன்றம் போன்றவற்றில் தனது தந்தை மேற்கொண்ட கலைப்படைப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்.
100%;தனது ஆரம்பக்கல்வியை போற்றி மற்றும் நோர்வூட் பாடசாலைகளிலும் பின் பண்டாரவளை புனித மரியாள் கல்லூரியிலும் பின் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வியை கற்றார்.(மலையக கூத்துக்களை மீளுருவாக்கம் செய்யும் முயற்சியில் வெற்றி கண்ட திரு.திருச்செந்தூரன் அவர்கள் அப்போது பண்டாரவளை புனித மரியாள் கல்லூரியில் அதிபராக இருந்த காரணத்தினால் அவரிடம் கற்க வேண்டும் என்ற நோக்கில் தனது குடும்ப வறுமையின் மத்தியிலும் அங்கு சென்று கல்வி கற்றதை பெறுமையுடன் நினைவு கூறுகின்றார்

200 வருடகாலம் பழமைவாய்ந்த லயன் அறைகளில் இன்றுவரை அவதியுறும் மலையக மக்கள்

இலங்கை இந்திய வம்சாவளி மலையக மக்கள் : ஒரு மீளாய்வு -

மல்லியப்பு சந்தி திலகர்: தோட்டத் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து
இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமது சமூக நிலைமாற்றத்தளத்தை மீளாய்வு செய்து தம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான கலந்துரையாடல்களை இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் ஆரம்பித்தல் வேண்டும். இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் பலத்த போராட்டங்கள் விட்டுக்கொடுப்புகள் இழப்புகளுக்கு மத்தியில் தம்மை ‘மலையக மக்கள்’ எனும் பொது அங்கீகாரத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இலங்கைத்தமிழர்கள் தமது பேராட்ட வியாபகத்தின் ஊடாக சர்தேச ரீதியாக தம்மை இலங்கைத் தமிழர்களாக உறுதிபட வெளிக்கொணர்ந்திருக்கும் நிலையில் இந்த மலையகத் தமிழர் என்கிற கருத்துருவாக்கம் தனித்துவமானதும் குறிப்பிடத்தக்கதுமான முன்னேற்றம் ஆகும். இதற்காக இந்த கருத்துருவாக்கத்தை ஆரம்பித்துவைத்த இலங்கை திராவிட முன்னேற்ற கழக செயற்பாட்டாளர் தோழர் அமரர் இளஞ்செழியன் அவர்களும் அதனை மக்களிடத்தில் பரவலாக கொண்டு சென்ற அரசியல்  சமூக செயற்பாட்டாளரும் கல்வியாளருமான   இரா. சிவலிங்கம் அவர்களும் நினைவு கூரத்தக்கவர்கள்.
 அதே நேரம் இலங்கைத்தமிழர்களின் தனிநாட்டு கோரிக்கையும் சர்வதேச வியாபகமும் மலையக மக்களுக்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் என்கிற குறியீட்டினையும் அவசியமாக்கியுள்ளது. ஏனெனில் இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட மலையக மக்களது பிரச்சினைகளை சர்வதேச தளத்துக்கு கொண்டு செல்வதற்கு இந்தியாவின் பங்களிப்பு மலையக மக்களுக்கு அவசியமாகவுள்ளது.

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...