malaiyaga kuruvi :மக்கள் செய்தியாளர் : பா.திருஞானம் நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பூண்டுலோயா நகரத்தில் ஏற்பட்ட தீயால் இரண்டு பொருட் களஞ்சியங்கள் முற்றாக தீக்கிரையாகி பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் பாதிப்புக்கு தீக்கிரையாக்கியுள்ளது. இன்று (21.07.2017) காலை 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற கணப்பொழுதில் பூண்டுலோயா அரச பஸ் டிப்போ ஊழியர்கள்¸ பொது மக்கள் ஆகியோர் பூண்டுலோயா பொலிஸாருடன் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்த அதே நேரம் தீ வேறு கடைகளுக்கு செல்லாமல் இருக்க டோசர் உதவியுடன் தீ பரவுவதை தடுத்துள்ளனர். இந்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸ் சிரேஷ்ட பரிசோதகர் நிசாந்த சுரவீர தலைமையிலான குழு மேற்க் கொண்டு வருகின்றார். பூண்டுலோயா நகரத்தில் இவ்வாறு அடிக்கடி தீ வீபத்து ஏற்பட்டு வருகின்றது. இந்த தீயை அணைக்க நுவரெலியாவில் இருந்து தீ அணைக்கும் வாகனம் வந்த பொழுதும் தீயை மக்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.
Friday, 21 July 2017
பூண்டுலோயாவில் தீ இரண்டு களஞ்சியங்கள் தீக்கிரை! -

Thursday, 20 July 2017
9 மாவட்டங்களில் வாழும் 14,680 குடும்பங்களுக்கு ஆபத்து
தினக்குரல் மஸ்கெலியா நிருபர்
நுவரெலியா மாவட்டத்தில் 3496 குடும்பங்கள் மிக அவதானமாக இருக்கவேண்டுமென தேசிய கட்டிட அமைப்பு சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அச்சபையினர் மேலும் கூறுகையில்;
தற்போது நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் 14,680 குடும்பங்கள் அபாய வலயங்களில் உள்ளன. இனங் காணப்பட்ட நுவரெலியா மாவட்டத்தில் 3496 குடும்பங்களும் கண்டி மாவட்டத்தில் 1292 குடும்பங்களும் மாத்தறை மாவட்டத்தில் 2010 குடும்பங்களும் பதுளை மாவட்டத்தில் 5418 குடும்பங்களும் கேகாலை மாவட்டத்தில் 824 குடும்பங்களும் களுத்துறை மாவட்டத்தில் 929 குடும்பங்களும் இரத்தினபுரி மாவட்டத்தில் 757 குடும்பங்களும் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 591 குடும்பங்களும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 343 குடும்பங்களும் மிகவும் அபாயகரமான இடங்களில் வசிக்கின்றன.
அதிகளவு மழை பெய்யும் காலத்தில் இவர்களின் குடியிருப்புகள் நீரில் மூழ்க வாய்ப்புண்டு. ஆகையால் இவர்களுக்கு பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புகள் உடனடியாக அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்றா
மலையகத்தில் 1800 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படும் அமைச்சர் பி;.திகாம்பரம் தெரிவிப்பு.
மலையகத்தில் 1800 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன். இந்த காணியுறுதிப்பத்திரங்கள் 7 பேர்ச்சர்ஸ் காணியுடன் வீட்டுரிமையும் கொண்டது. இதுவரை எந்தவொரு தலைவரும் இவ்வாறு அதிகாரமிக்க உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொடுக்கவில்லை என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அட்டன் அபோட்சிலி ஆனைத் தோட்ட மக்களுக்கு பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் 20 தனி வீடுளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் 20-07-2017 அன்று இடம்பெற்றது.
அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மொழிபெயர்ப்பு என்பது சொல்லுக்கான பொருளைத்தேடுவதல்ல , சொல்லவருபவரின் உணர்வுடன்கூடிய கருத்தை வெளிப்படுத்துவதே"!
Mohan Paran : புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழிபெயர்பபாளர்களும் அதனால் அவதியறும் தமிழ்அகதிவிண்ணப்பதாரிகளின் அவலநிலையும்
குறிப்பாக ஆங்கிலமொழி தவிர்ந்த ஏனையமொழிகளை நிர்வாக மொழிகளாக கொண்ட அகதிஅந்தஸ்து வழங்கும் நாடுகளில் உள்ள தமிழ்மொழிபெயர்ப்பாளர்கள் போதிய மொழியறிவு அற்றவர்களாகவே காணப்படுகின்றனர் . இதனால் பாதிப்புறுவது அப்பாவித்தமிழ்இளைஞர்களே! ஒருமொழிபெயர்ப்பாளனுக்கு தாய்மொழியில் போதிய ஆளுமை இருக்கவேண்டும் . அத்தோடு வாழ்விட மொழியில் புலமை இருக்கவேண்டும் ., ஆங்கில மொழியில் சிறப்புத்தேர்த்சி இருக்கவேண்டும் . அவ்வாறனவரே தரமான மொழிபெயர்ப்பாளர் . ஆனால் சுவிச்சர்லாந்து போன்ற நாடுகளில் இவ்வாறன மொழிபெயர்ப்பாளர்கள் வெறும் ஒருவர் இருவரே உள்ளனர் . ஏனையவர்களின் அரைகுறை மொழிபெயர்ப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவித்தமிழ்இளைஞர்களின் அகதிஅந்தஸ்து நிராகரிக்கப்படுகிறது. ஒன்றுமே பாதிக்காத பல சகோதர மொழிபேசும் இளைஞர் களின் அகதிஅந்தஸ்து வழங்கப்படுகிறது .
Wednesday, 19 July 2017
உலகம் முழுவதும் வாழும் ஒவ்வொரு மலையகத்தமிழரும் உறுதியோடு முன்வரவேண்டும்
namathumalayagam.com
இன்றைய நிலையில் இலங்கை இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறித்த சர்வதேச பரப்புரை இன்றியமையாதது. மலையக மக்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் மலையக மக்கள் குறித்த கலந்தரையாடல்கள் எழுத்துக்கள் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவேண்டும். குறைந்த பட்சம் சமூக வலைத்தளங்களையாவது (முகநூல் போன்ற) இந்த பரப்புரைகளுக்கு பயன்படுத்தும் அர்ப்பணிப்பு ஒவ்வொரு மலையகத்தமிழர்களிடத்திலும் ஊற்றெடுக்க வேண்டும். இன்று உலகம் ஒரு கிராமமாக மாறியிருக்கிறது. ஆனால் மலையகத் தோட்டங்கள் எனும் கிராமங்களே உலகம் எனும் வாழும் மக்களே மலையக மக்களின் அரசியல் இருப்பைத் தக்கவைக்கின்றனர் என்பது உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டும். அவர்கள் போராடி காத்துவரும் அந்த இருப்பை உறுதி செய்ய உலகம் முழுவதும் வாழும் ஒவ்வொரு மலையகத்தமிழரும் உறுதி கொண்டு எழ வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமது சமூக நிலைமாற்றத்தளத்தை மீளாய்வு செய்து தம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான கலந்துரையாடல்களை இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் ஆரம்பித்தல் வேண்டும். இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் பலத்த போராட்டங்கள் விட்டுக்கொடுப்புகள் இழப்புகளுக்கு மத்தியில் தம்மை ‘மலையக மக்கள்’ எனும் பொது அங்கீகாரத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இலங்கைத்தமிழர்கள் தமது பேராட்ட வியாபகத்தின் ஊடாக சர்தேச ரீதியாக தம்மை இலங்கைத் தமிழர்களாக உறுதிபட வெளிக்கொணர்ந்திருக்கும் நிலையில் இந்த மலையகத் தமிழர் என்கிற கருத்துருவாக்கம் தனித்துவமானதும் குறிப்பிடத்தக்கதுமான முன்னேற்றம் ஆகும். இதற்காக இந்த கருத்துருவாக்கத்தை ஆரம்பித்துவைத்த இலங்கை திராவிட முன்னேற்ற கழக செயற்பாட்டாளர் தோழர் அமரர் இளஞ்செழியன் அவர்களும் அதனை மக்களிடத்தில் பரவலாக கொண்டு சென்ற அரசியல் சமூக செயற்பாட்டாளரும் கல்வியாளருமான இரா. சிவலிங்கம் அவர்களும் நினைவு கூரத்தக்கவர்கள். அதே நேரம் இலங்கைத்தமிழர்களின் தனிநாட்டு கோரிக்கையும் சர்வதேச வியாபகமும் மலையக மக்களுக்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் என்கிற குறியீட்டினையும் அவசியமாக்கியுள்ளது. ஏனெனில் இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட மலையக மக்களது பிரச்சினைகளை சர்வதேச தளத்துக்கு கொண்டு செல்வதற்கு இந்தியாவின் பங்களிப்பு மலையக மக்களுக்கு அவசியமாகவுள்ளது. இலங்கை தமிழர்களுக்கே இந்தியாவின் பங்களிப்பு அவசியமானதும் முக்கியத்துவமானதுமானதாக உள்ள நிலையில் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கான இந்தியாவின் பங்களிப்பு சற்று அதிகமாகவே வேண்டப்படுகின்றது. எனவே இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் என்கிற இன்றைய அடையாளமும் பரிமாணமும் மிகவும் அவசியமானதாக அமையும்.< இந்திய வம்சாவளி மலையக தமிழர் சமூகம் தொழிலாளர் சமூகமாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தாலும் இன்று சமூக நிலைமாற்றத்துக்கு உள்ளாகி நான்கு வகுதிகளாக உள்ளனர்.

1. தோட்டத் தொழிலாளர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்
2. தோட்ட சேவையாளர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்.
3. மலையகப்
பெருந்தோட்டங்களை அண்டிய நகரங்களையும் கண்டி கொழும்பு உள்ளிட்ட நகரங்களை
சார்ந்த வர்த்தக சமூகமும் அவற்றை அண்டிய புறநகர்வாழ் மக்களும்
4. ஆசிரியர் அரசாங்க உத்தியோத்தர் தொழில் துறையினர் மற்றும் தனியார்துறை தொழிலாளர்கள்
எனப்படுவோரே இந்த வகுதிகளாவர்.
தற்போது தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து
வருகின்றபோதும் அவர்களை சார்ந்து கட்டியெழுப்பப்பட்டுள்ள தொழிற்சங்க
கட்டமைப்பே ஒட்டுமொத்த மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்தவத்தை
பாராளுமன்றத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தற்போது உள்ள
மலையகத்தமிழர்களான பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் தொழிற்சங்க
பின்புலத்தோடு தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பது உன்னிப்பாக
கவனிக்கத்தக்கது.
அமைச்சர் மனோ கணேசன் : கலப்பு முறையில் தேர்தல்: சிறு கட்சிகளின் போராட்டம் வெற்றி
நவம்பர் கடைசி வாரத்தில் கலப்பு முறையில் தேர்தல்: சிறு கட்சிகளின் போராட்டம் வெற்றி
- அமைச்சர் மனோ கணேசன்
- அமைச்சர் மனோ கணேசன்
நாடு முழுக்க உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் இறுதி வாரத்தில் நடைபெறுவதற்கான சாத்தியம் இன்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளான அமைச்சர்கள் நிமல் சிறிபால சில்வா, ரவுப் ஹகீம், மனோ கணேசன், ரிசாத் பதுதின், கபீர் ஹசிம், பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ன, அஜித் பெரேரா, அனுரகுமார திசாநாயக்க, எம். ஏ. சுமந்திரன் மற்றும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துக்கொண்ட கூட்டத்தில், உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலத்திற்கான உத்தேச திருத்த விதிகள் தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளதாவது,
கடந்த தேர்தல்கள் நடைபெற்ற ஒட்டுமொத்த விகிதாசார முறைமை கைவிடப்பட்டு தேர்தல்கள் புதிய வட்டார, விகிதாரா கலப்பு முறையில் நடைபெறும்.
இது தொடர்பில் கடந்த மகிந்த ஆட்சியில் 2012ம் வருடம் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தில் வட்டார, விகிதாசார தெரிவுகள் தொடர்பாக இருந்த 70:30 என்ற கணக்கு, எமது புதிய திருத்த சட்டத்தில் 60:40 ஆக மாற்றப்படும்.
அதேபோல் இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில், ஒரே கட்சியில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என்றும், இரண்டாம் அங்கத்தவராக வெற்றி பெறுகின்றவர், தோல்வியடைந்த கட்சிகளில் அதிக வாக்குகளை பெற்றவராக இருத்தல் வேண்டும் என்ற மோசடித்தனமான பழைய விதி மாற்றப்பட்டு, ஒரே கட்சியே இரண்டு வேட்பாளர்களை போட்டியிட செய்ய முடியும் என்ற திருத்தம், புதிய திருத்த சட்டத்தில் வரும்.
அத்துடன் இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில் ஒவ்வொரு வாக்காளரும், இரண்டு வாக்குகளை அளிக்க முடியும். இவை சிறுபான்மை கட்சிகள் சார்பாக நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்த போராட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றிகளாகும்.
இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் மலையத்தில் பெண்களுக்கு முன்னுரிமை!,, அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்
நீங்கள் வாக்கு போட்டால் தான் நாங்கள் மந்திரி இல்லாவிட்டால் எந்திரி!
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்
இன்று உலகில் உள்ள நாடுகளில் பெண்களின் அரசியல் பிரவேசத்தில் இலங்கை 179 ஆம் இடத்தில் இருகின்றது. உகண்டா முன்னிலை வகிக்கின்றன. தற்போது உலக நாடுகளில் பெண் தலைவர்கள் அதிகமாக இருகின்றார்கள். காரணம் பெண்களின் அரசியல் பிரவேசம். இலங்கையிலும் இந் நிலை உருவாக வேண்டும். இலங்கையை பொருத்த வரையில் ஆசிரியர் தொழிலில் 75 வீதமான பெண்கள் காணப்படுகின்றனர்.
அதேபோல் அரச சேவையில் 75 வீதமான பெண்கள் சேவை புரிகின்றனர். மலைய தோட்ட தொழிலாளர்களில் பெண்களே அதிகம்¸ இலங்கைக்கு அதிக அளவிலான வெளிநாட்டு வருமானத்தை பெற்று தருபவர்களும் பெண்கள். சதந்திர வர்த்த வலையத்தில் தொழி;ல் புரிபவர்களில் அதமானோர் பெண்கள். இந் நிலையில் இலங்கையில் பெண்களின் அரசியல் பிரவேசம் குறைவாக இருக்கின்றது இதனை அதிகரிக்க வேண்டியது கட்டாயமானதான ஒன்றாதும். இலங்கையில் பெண்களுக்கு அரசியல் அந்தஸத்து கொடுப்பது குறைவாகவே இருக்கின்றது. அதனால் தான் நவம்பர் மாதம் வர இருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பெண்பளுக்கு அதிக சந்தர்ப்பம் அளிக்கும் அதே நேரத்தில் மலையத்தில் பெண்களுக்கும் வாய்ப்புகளை வழங்க இருக்கின்றோம். இதற்கு பெண்கள் முன் வர வேண்டும் என கூறுகின்றார் கல்வி இரஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தவைவருமான வே.இராதாகிருஸ்ணன்.
கொட்டகல .. வேன் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து
வேன் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து கடும்காயங்களுக்குள்ளான நபர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி – சாரதி கைது
- க.கிஷாந்தன்
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பகுதியில் 19.07.2017 அன்று காலை 8.10 மணியளவில் வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதி கொட்டகலை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் - நுவரெலியா ஏ -7 பிரதான வீதியில் கொட்டகலை பகுதியிலிருந்து பத்தனை நோக்கிச் சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் ஒன்றும் பத்தனையிலிருந்து கொட்டகலை கொமர்ஷல் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்களும் கொட்டகலை ரொசிட்டா நகர் பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்ற சாரதியே கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், வேன் சாரதி லொறி ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்துடன் தொடர்புடைய வேன், லொறி, மோட்டார் சைக்கிள் ஆகியன பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலையக குருவி
யாழ்ப்பாணத்தில் "கண்டிச்சீமையிலே" நூல் அறிமுக விழா
கவிஞரும் சமூக ஆய்வாளரும் மொழி பெயர்ப்பாளருமான சட்டத்தரணி இரா. சடகோபனின் கைவண்ணத்தில் உருவான கோப்பிக்கால வரலாற்று ஆவண நூலான கண்டிச் சீமையிலே நூல் அறிமுக விழா 05.06.2016 ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இல. 62, கே.கே.எஸ்.வீதி, கொக்குவில் சந்தி, கொக்குவில் என்ற முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கிய பேரவை, கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் காலை 10 மணிக்கு தே.க.இ.பே. யாழ் பேரவை செயலாளர் மு.இராசநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெறும்.
பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான கௌரவ எம். திலகராஜ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கும் இந்நிகழ்வில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தலைவர் சாஹித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் விமர்சன உரையையும், வரவேற்பு மற்றும் அறிமுக உரையை சோ.தேவராஜா (தே.க.இ.பே), நன்றி உரையை இரா.யோகமலர் (தே.க.இ.பே) ஆகியோர் நிகழ்த்துவர். நூலாசிரியர் இரா. சடகோபன் ஏற்புரையை நிகழ்த்துவார்.1820களில் தமிழ் நாட்டின் பல கிராமங்களில் இருந்தும் பஞ்சம் பிழைப்பதற்காக லட்சக்கணக்காக கூலிகள் இலங்கைக்கு வந்து சுமார் 130 மைல் தூரம் கால் நடையாக கண்டியை சென்றடைந்த போது சென்ற வழியிலும் கண்டிச்சீமையிலும் சொல்லொண்ணாத்துயரங்களை அனுபவித்து லட்சக்கணக்கில் செத்து மடிந்து இந்நாட்டின் மலைச்சாரல்களில் மண்ணோடு மண்ணாகி கோப்பிச்செடிகளுக்கடியில் புதைந்து போன கண்ணீர்க்கதையைக்கூறும் நூல்தான் இது.Tuesday, 18 July 2017
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் வி. பாலகிருஷ்ணன் இலங்கை வருகை
சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கவுள்ள அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார்.
அத்துடன் அவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவையும் சந்திக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பான இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரையும் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளும், சிங்கபூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். தினகரன்
பிறப்பு சாட்சி பத்திரம் .. நாவலப்பிட்டி பிரதேச செயலகத்தின் தூக்கம்
Yasodaren Yasodaren ·
எனக்கு நடந்த கொடுமை...... பிறப்புச் சான்றிதழ்
பெறுவதற்கு இலங்கை வங்கியில் பணத்தை செலுத்தி (600 /- )அதன் பிரதியையும்,சுய முகவரி எழுதப்பட்டு ,35/ - பதிவுத் தபால் முத்திரை ஒட்டப்பட்டு நாவளப்பிட்டி பிரதேச செயளகத்திற்கு அனுப்பி மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் இன்றுவரை கிடைக்கவில்லை.சென்று கேட்டால்..ஒன்ரை ஒன்று குறை கூறுகின்றனர் (பிரதேச செயளகம்,இரு தபால் நிலையங்கள் )...இதுதான் இலங்கை நிர்வாகம்.

Monday, 17 July 2017
அமைச்சர் வே.இராதாக்கிருஷ்ணன் : வீட்டு வேலைக்கு மலையக மக்கள் என்ற நிலைய மாற்றுவோம்!
இலங்கை தேயிலை 150 வது வருஷம் .. வாடும் மக்கள்.. கொழிக்கும் கம்பனிகளும் அரசியல்வாதிகளும் ...
Ceylon Tea, that most famous brand and well-known ‘cuppa’, celebrates its 150th
anniversary this year. It has been a rich and rewarding history and its
importance and relevance to Sri Lanka remains very much so to this day.
It has of course been a colossal journey with many peaks and troughs
along the way, not dissimilar to the landscape of the tea fields of Sri
Lanka.
Scotsman James Taylor is the acknowledged pioneer of Ceylon Tea.
Arriving in Ceylon in 1852 as a 17-year-old, he was sent to Loolecondera
Estate, a coffee plantation in the Kandy District. Taylor was made its
manager within five-years as Ceylon went on to become the world’s
largest coffee producer by 1860. Despite the successes of coffee, the
owners of Loolecondera suggested to Taylor that he experiment with tea.
Having initially planted seedlings along the roadside of Loolecondera in
1866, Taylor cleared and planted a 21-acre plot of tea the following
year – Field No 7. It was fortuitous timing as the coffee rust disease
first made an appearance two years later, and within the ensuing two
decades, coffee was all but wiped out. From an initial export of a mere
23 pounds in 1872, tea production expanded rapidly and by the turn of
the century, exports had risen to 151,000,000 pounds. So too, did the
glowing reputation of Ceylon Tea, as the industry continued to grow and
flourish moving into the 20th century.
பெருமாளம்மாள் 1896 ஆண்டிலேயே ஒரு தோட்டத்தை நிர்வகித்த தமிழ் பெண்
Suppaiah Rajasegaran சு.இராஜசேகரனின் Old is Gold:
இவ் அபூர்வ புகைப்படம் 1896ம் ஆண்டில் எடுக்கப்பட்
து. பெண்மையையே மதிக்காத ,பெண்ணடிமை நிலவிய காலப்பகுதியி ல் ஒருத் தோட்டத்தையே நிர்வகித்ததாக பெண்மனியை கேள்விப்பட் டுள் ளீர்களா.....?
தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 'நாகன்' என்பவர், இல ங்கையில் நாவலப்பெட்டியை ச்சார்ந்த 'குயின்ஸ் பெரி' தோட்டத்தின் பெரிய கங்காணியாக வேலைப்பார்த்தார். அவரது மறைவிற்கு பின் அவ்விடத்தை" யார் நிரப்புவார்கள் ?" எனத்தடுமாறிய போதுதான், தோட்டநிர்வாகமே அதனை ஈடு செய்யக்கூடியவரும் ஆளுமை, திறமை, நா..நயம், என்பவற்றை கருத்தில் கொண்டு அவரது துணை வியாரான 'பெருமாளம்மாள்' அவர்களே என முடிவு செய்து பெரிய கங்காணி பதவியை அந்த அம்மாளி டம் கொடுக்கப்பட்டது. 1896ம் ஆண்டு முதல் 1936ம் ஆண்டுவரையில் குயின்ஸ்பெரி தோட்டத்தின் கங் காணியாக இருந்துள்ளார்.
தோட்டத்தொழிளாலரிலிருந்து, ஏனைய கங்கா ணிகளிடமும்.தோட்ட உத்தியோகத்தர்களிடமும் துரைமார்களிடமும் நன்மதிப்பை பெற்று ள்ளார்.அவர் எப்படி தமிழில் உரையாடுவாரோ அதேப்போல ஆங் கிலத்திலும் வெளுத்துக் கட்டியுள்ளார். கண்டிப்பாக இருந்தாலும் கருணை மிகுந்தவராகவும் இருந்துள் ளார். இவரது அரும் முயற்சியா ல்தான் மலையகத்தி ல் சிறப்பாக கூறப்படுகின்ற "நமநாத சித்தர் ஆலய ம்" அமைக்கப்பட்டு இன்றும் சிறப்பாக கூறப்படுகிற ஆலயமாக திகழ்கி றது.
மலையக வரலாற்றில் துணிச்சல் மிக்க இருந்த பெருமாளம்மாளின் பெயரும் பதியப்படவேண்டும் Thinakaran Velautham நவனாதச்சித்தரை கொல்லிமலையிலிருந்து இலங்கைக்கு அழைத்து வந்தவரே இவர் தான். இலங்கையின் நவனாதச்சித்தரின் அற்புதங்கள் இவருடனான உரையாடலிலிருந்தே தொடங்கு கின்றன. " ஆயா நினச்சது. அடிமை வந்தது "

Sunday, 16 July 2017
Mano Ganesan : மலையகத்தமிழரது நம்பிக்கையை வென்றெடுக்க ஈழத்தமிழ் இளையோர் முன்வர வேண்டும்
சற்றுமுன், "பிரதேசவாதம்" பற்றி:
...தளபதி பால்ராஜ் முதற்கொண்டு முள்ளிவாய்க்கால் வரை மலையக தமிழரின் பங்களிப்பு பற்றி பலமுறை பேசி, அகமகிழ்ந்து, மயிர்கூச்செறிந்து, புல்லரித்து, இன்று களைத்தே போய் விட்டோம். ஆனால் அந்த பொற்காலத்தை சுட்டிக்காட்டி, இன்றைய பிரதேசவாத அவலங்களை மூடவிடக்கூடாது. தமிழர் ஐக்கியத்தை கோரும் வடகிழக்கின் தமிழ் இளையோர் இயக்கம், முதலில் இந்த பிரதேசவாதத்திற்கு எதிராக காத்திரமாக எழுந்து நிற்க வேண்டும். அதன்மூலம் வன்னியில் குடியேறி வாழும், நாடு முழுக்க பரந்து வாழும், மலையகத்தமிழரது நம்பிக்கையை வென்றெடுக்க ஈழத்தமிழ் இளையோர் முன்வர வேண்டும். இதற்கு அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க நான் தயார். இதில்தான் இலங்கை வாழ் தமிழர் எதிர்காலம் தங்கியுள்ளது. நான் தெளிவாக சொல்வதை புரிந்துக்கொள்ள மறுக்கும் தமிழர், தமிழினத்தின் தூரதிஷ்ட்டங்கள்..
நவம்பர் கடைசி வாரத்தில் கலப்பு முறையில் தேர்தல்: சிறு கட்சிகளின் போராட்டம் வெற்றி
அமைச்சர் மனோ கணேசன் நாடு முழுக்க உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் இறுதி வாரத்தில் நடைபெறுவதற்கான சாத்தியம் இன்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.

Subscribe to:
Posts (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...