Monday, 31 July 2017

டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பிரிவு ஆரம்பம்,முதலாவது சத்திரசிகிச்சை வெற்றி..!

மலையக குருவி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பிரிவு ஆரம்பம்,முதலாவது சத்திரசிகிச்சை வெற்றி..!! நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தில் சத்திரசிக்கிசை பிரிவு 31.07.2017 ஆரம்பிக்கப்பட்டுள்ளது . மும்மத வழிபடுகளின் பின்னர் கர்ப்பிணி தாயொருவருக்கு மகப்பேற்று சத்திரசிக்கிச்சை மேற்கொள்ளப்பட்டது பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த பத்மாவதி என்ற கர்ப்பிணி தாயொருவருக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது சத்திரசிக்கிச்சையினால் பெண் குழந்தை பிரசவித்துள்ளதாகவும் சத்திரசிக்கிச்சையானது வெற்றியளித்துள்ளதாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி திலின விஜேதுங்க தெரிவித்தார் இந்திய அரசாங்கத்தின் 500 கோடி ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடமானது
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க. மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆகியோரினால் கடந்த மே மாதம் 12 ம் திகதி மக்கள் பாவணைக்கு திறந்து வைக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து புதிய கட்டிடத்தில் வெளிநோயாளர் பிரிவு மாத்திர இயங்கி வந்த நிலையில் சத்திர சிக்கிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது

மேலும் அவசர சிகிச்சை பிரிவு இல்லாமையினால் கர்பினிதாய்மார்களும் நோயாளர்களும் , சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கு நுவரெலியா. நாவலப்பிட்டி. கண்டி மாவட்ட வைத்தியசாலைகளுக்கே செல்கின்றனர்

இந் நிலையில் விரைவில் அவசர சிகிச்சை பிரிவை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் தாதியர் பற்றாக்குறையினால் அதனை ஆரம்பிக்கமுடியாதுள்ளதாகவும் தெரிவித்தார் இந் நிகழ்வில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் சிரேஸ்ட வைத்தியர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...