Thursday, 3 August 2017

வடக்கு – கிழக்கு புலம்பெயர் தமிழர்களுக்கு மலையக தமிழனிடமிருந்து ஒரு பகிரங்க மடல்!

மலையக குருவி :புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் வடக்கு - கிழக்கு சகோதர தமிழினமே! கடந்த இரண்டு நாட்களாக ஜெர்மனியில் இருந்து ''சிவா'' என்ற ஒருவன் மலையக தமிழ் மக்கள் தொடர்பாக மிக இழிவான, கீழ்த்தரமான கருத்துக்களை வெளியிட்டு வருவதை முகநூல் ஊடாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது மலையகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, மலையக இளைஞர்கள் மத்தியில் பெருத்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மன நோய்பிடித்த பித்தனின் கூற்று என்று உலக தமிழினம் இதை ஒதுக்கி, உதாசீனப்படுத்திவிட முடியாது. இவனின் கூற்று, சக்திமிக்க சமூக வலைத்தளங்களில் உலவுகின்றன. இந்த 'சிவா' என்றவனுக்கு ஆயிரக் கணக்கான மலையக இளைஞர்கள் தகுந்த பதிலடி கொடுத்துவருகிறார்கள். ஆனால் இவனுக்கு சரியான பதிலடி எந்த சமூகத்திலிருந்து வரவேண்டுமோ அங்கிருந்து வரவில்லை என்பதுதான் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையக மாணவருக்கு கிடைக்கும் பல்கலைக்கழக கோட்டாவை பங்குபோட்டு அதில் அதியுயர் பதவிகளை அடைந்தவர்கள் இவனுக்கு பதிலளிக்கவில்லையே?
வடக்கு கிழக்கு தமிழர்கள் ஏன் வாய்திறக்க கூடாது? வடக்கு வாழ் மலையக உறவுக்காராகளே ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்? வடக்கில் ஆமிக்காரர் அடித்து விரட்டியபோது தமிழ் உயர்வோடு அடைக்கலம் கொடுத்தவர்கள் மலையக தமிழர்கள். அந்த குழந்தைகளை எந்தவித ஆவணமும் இல்லாமல் பள்ளிகளில் சேர்த்துக்கொண்டவர்கள் மலையக அதிபர்கள். அடைக்கலம் கொடுத்தவன் ஆண்டவனுக்கு சமன் என்பது இந்த ''சிவா'' என்பவனுக்கு தெரியவில்லை. பயன்பெற்றவர்கள் அவனுக்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் இவனை அடக்கியிருக்க வேண்டாமா?

தஞ்சமென வந்தவர்களுக்கு தங்க இடம் கொடுத்தற்காக எத்தனை எம்மவர்கள் (மலையக தமிழர்கள் ஆயுள் தண்டனை கைதிகளாக இலங்கை சிறைகளிலே வாடுகிறார்கள் தெரியுமா?
வடக்கு யுத்தத்தால் வாழ்கையைத் தொலைத்த, உயிரை இழந்த, மலையக தமிழர்களின் எண்ணிக்கை தெரியுமா இவனுக்கு?
வடக்கின் சமூக தலைமைகளே, புலம்பெயர் தமிழர் அமைப்புக்களே, மலையக தமிழினத்தின் உணர்வகளுக்கு நீங்கள் மதிப்பளிப்பதாக இருந்தால், ''ஒரு குடம் பாலுக்கு ஒருதுளி விசம்'' போன்ற இந்த தமிழின துரோகியை தயவு தாட்சனையின்றி வெளியே இழுத்து வாருங்கள். இவனது கூற்றை எந்தவெரு தன்மானமுள்ள தமிழனும் சகித்துக்கொள்ள மாட்டான் என்பதால் உலகத்தில் இவன் இருந்தாலும் தேடிப்பிடித்து, தக்க தண்டனை வழங்க வேண்டியது தன்மானமுள்ள ஒவ்வெரு தமிழனதும் கடமை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
தமிழருக்கு தமிழராய் ஒன்றுபடுவோம்!
அறம் காக்கும் தமிழராய் வாழ்ந்திடுவோம்!

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...