Thursday, 3 August 2017

இ.தொ.கா.வின் 78 ஆண்டு பூர்த்தி விழா! - இ.தொ.கா. ஊடகப் பிரிவு


இலங்கை தொழிலாளர் காங்கிரசின் 78வது ஆண்டு நிறைவூ விழா நேற்று (25.07.2017) சௌமிய பவனில் நடைபெற்றது. இதன்போது, 78ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இ.தொ.கா தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், மத்திய மாகாண கல்வி அமைச்சரும், இ.தொ.கா உப தலைவருமான மருதபாண்டி இராமேஸ்வரன், நிர்வாக உபதலைவர் சட்டத்தரணி கா.மாரிமுத்து, உப தலைவர் பொ.சிவராஜா ஆகியோரையும் இதன்போது கலந்துகொண்டனர். கப்பியாவத்தை செல்வ விநாயக ஆலய குருக்கள் சண்முகரட்ணசர்மா ஜெயராம் தலைமையில் சௌமிய பவனில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...