Sunday, 30 July 2017

அனுஷா சந்திரசேகர : சகமனிதனை மதிக்க தெரியாதவனை துச்சமாக புறக்கணியுங்கள்

Malayaga Kuruvi : மலையகத்தை பற்றி இழிவாக பேசி ஒற்றுமையை குழப்பிய நபரை கண்டிக்கிறார் அனுஷா சந்திரசேகரன். இது அவர் விடுத்துள்ள முக நூல் பதிவில் இன அழிப்பின் அடையாள மாதமான இந்த ஜூலை மாதம் 1983 ம் ஆண்டுகளில் தமிழர்களின் செங்குருதி தெளித்து கருப்பு ஜூலை என வரலாறுகளில் பொறிக்கப்பட்டது. 34 ஆண்டுகளின் பின்பும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. ஆயினும் கௌரவத்திற்குரிய கனம் நீதிபதி இளஞ்செழியன் அவர்களை பாதுகாக்க பெரும்பான்மை இனத்தை சேர்ந்த காவற்துறை அலுவலர் குண்டை அவர் உடம்பில் வாங்கியதும் , அதற்கு நன்றியாக நீதிபதி அலுவலரின் குடும்பத்தின் கால்களில் விழுந்தமையும் எம் இனங்களுக்கிடையேயான ஒற்றுமையை வலுவூட்டியது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் எங்கோ ஒரு நாட்டில் உள்ளவன் வீர ரத்தம் பாயும் உழைப்பாளர்களான எம் மலையகத்தவர்களை பற்றி இழிவாக பேசி ஒற்றுமையாய் சகோதர சகோதரிகளாய் தமிழர்களாய் வாழும் எம் ஐக்கியத்தை குலைக்க முற்படுவது கண்டிக்க வேண்டியதொன்றாகும்.

ஆனாலும் சக மனிதனை மதிக்க தெரியாதவனை மனிதனாக மதிக்காமல் அக்கருத்துக்களை துச்சமென மதித்து புறக்கணியுங்கள். வடக்கில் வாழும் தமிழர்களுக்காக குரல்கொடுத்தவர் என் தந்தை அதேபோன்று எம்மலையகத்தவர்களுக்காக பாசக்கரம் நீட்டுபவர்கள் வடகிழக்கு தமிழர்கள். இது போல ஒரு வீடியோ அல்ல ஆயிரமாயிரம் வீடியோக்கள் வந்தாலும, எம் தமிழர் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது. அதற்கு இளைஞர்கள் ஒத்துழைக்கவும் மாட்டோம். இதற்காக இன, மத, மொழி, கட்சி பேதமின்றி அனைத்து இளைஞர் யுவதிகளும் கைகோர்த்து நிற்போம். எம்மை மீறி எவ்வித புல்லுருவிகளாலும் எதுவும் செய்துவிட முடியாது என்பதை உலகிற்கு பறை சாற்றி கூறுவோம்

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...