மலையாக குருவி : மனோ கணேசன்: சப்பிரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகிறது. இந்த சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென்ற 20ம் திருத்த யோசனையை கைவிட வேடும் என்றும், தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள முடிவுகளை நாம் வரவேற்கிறோம் என ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
இந்த ஒத்திவைப்பு அவசியமற்றது. ஒத்திவைக்க அரசியலமைப்பை திருத்த வேண்டும்.
இது நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதைவிட புதிய அரசியலமைப்பை கொண்டு வரலாம். அதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும். ஆகவே உரிய வேளையில் சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் தேர்தல்களை நடத்துவதே சாலச்சிறந்தது.
ஆனால், அதை அவசர அவசரமாக புது ஒரு தேர்தல் முறைமையை அறிமுகம் செய்து நடத்த முடியாது.
Saturday, 12 August 2017
அட்டனில் மாவா போதை பொருள் தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு!
அட்டனில் மாவா போதை பொருள் தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு!
மாவா மற்றும் என்.சி டின்கள் மீட்பு!!
- நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
மாவா போதை பொருள் மற்றும் என்.சி புகையிலை டின்கள் ஒருதொகை கைப்பற்றியதுடன் அதனோடு தொடர்புடைய 6 பேரை கைதுசெய்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் பேருந்து திரப்பிட பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சட்டவிரோதமாக மாவா போதை பொருள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே 12.08.2017 மதியம் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றிவளைப்பின் போது 75 என்.சி.புகையிலை டின்கள் உட்பட சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு 80 பக்கட்டுகளில் பொதிசெய்யப்பட்ட ஒருதொகை மாவா போதை பொருள் மற்றும் தயாரிப்பிற்கான பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் உட்பட போதை பொருளை பணம் கொடுத்து வாங்கிய 5 இளைஞர்களுமாக 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்து அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். malaiyakuruvi
Friday, 11 August 2017
இது தான் நல்லாட்சி அரசு! நாடாளுமன்றத்தில் பெருமைப்பட்ட ரணில்
ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகிக் கொண்டமையானது வரவேற்கத்தக்கது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் எடுத்த முடிவினை வரவேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர்,
அமைச்சுப் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க விலகியிருப்பது ஒரு எடுத்துக்காட்டாகும்.
கடந்த ஆட்சியில் எவரும் இவ்வாறு பதவி விலகவில்லை. எனக்கு எதிராக சோதனை முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைகளை இலகுபடுத்துவதற்காக அமைச்சர் ரவி பதவி விலகியிருப்பது நல்லாட்சியை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது மத்திய வங்கி பிணைமுறிகள் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, கூட்டு எதிர்க் கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர்.
எனினும் அமைச்சர் தான் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தார்.
முன்னதாக, அமைச்சர் மீதான இந்தக் குற்றச்சாட்டினால் அரசாங்கம் நெருக்கடியில் இருப்பதாகவும், எனவே அமைச்சரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. dinakaran
பொது இடங்களில் குப்பைக் கொட்டிய 160 பேர் கைது
தமிழ் மிரர் : கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்தப் பகுதிகளில், பொது இடங்களில் குப்பை கொட்டிய 160 பேரை கடந்த இரு தினங்களில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவத்தினருடன் இணைந்து பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போதே மேற்படி 160 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக, நுகேகொடயில் 40 பேரும் கொழும்பு மத்தி 34, கொழும்பு வடக்கில் 20 பேர்; கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கம்பஹா பகுதியில் 18 பேரும், களனி பிரதேசத்தில் 13 பேரும், கொழும்பு தெற்கில் 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர்களுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தெமொதரை கல்குவாரியில் விபத்து பிரான்ஸ் படுகாயம்
தினக்குரல் : கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் படுங்காயம்<
- க.கிஷாந்தன்
எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதரயிலுள்ள கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் படுகாயமடைந்த நிலையில் 10.08.2017 அன்று மாலை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ் வெடிப்பு சம்பவம் 10.08.2017 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும், சாலி ரொப்ரோ (வயது 24) என்பவரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.<
மேற்படி பிரான்ஸ் பிரஜையுடன் பயணஞ் செய்த பெண் ஒருவரும் அதர்ச்சியடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.<
மேற்படி கற்குவாரியில் வைக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததால், பாரிய கல்லொன்று சுமார் 300 மீற்றர் தொலைவில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், அக்கல்லானது, கற்குவாரிக்கு அருகில் மோட்டார் சைக்களில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி நபர் மீது பட்டதால், அவர் காயமடைந்துள்ளதாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.
கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், அருகிலிருந்து தேயிலை தொழிற்சாலை அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஐரோப்பாவில் தமிழ்”மாநாட்டு ஆய்வுகளில் மங்கோலிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு ..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxfiyo0CQC0cM-OrZKi-XtXTnI_5E8hDuF_OQzTax1KQdIKdGR2oFrbLtSVe8r9eMA6ncoS1cfbrOnynCiJfF1RI2Ao7RiynDNJH6evvbG-HcAXrVsgiwy5yE3HzAsEmAdjV3MmJMk-0A/s640/12079096_1689155744661149_4082554717626978534_n.jpg)
பேராசிரியர் முனைவர் வாச்சேக் அவர்கள் 1943ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி பிறந்தார். செக் நாட்டில் கல்வி கற்று பின்னர் தமிழகம் வந்து மதுரையில் தமிழ் கற்றார்.
அவருடைய பெயரை அவ்வப்போது நான் கேள்விப்பட்டிருப்பினும் முதன் முறையாக நான் அவரை நேரில் பார்த்து உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு 2015ம் ஆண்டு கிட்டியது. 2015ம் ஆண்டில் பாரீசில் நடைபெற்ற ”ஐரோப்பாவில் தமிழ்” என்ற அனைத்துலக தமிழ் மாநாட்டில் கட்டுரை சமர்ப்பிக்க வந்திருந்த பேராளர்களில் அவரும் ஒருவர். 70 வயதைக் கடந்திருந்தாலும் கூட மிகுந்த ஆர்வத்துடன் எல்லா நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக் கொண்டும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டும் சுறுசுறுப்புடன் அந்தக் கருத்தரங்க நிகழ்வில் அவர் இயங்கிக் கொண்டிருந்தார். என்னை அவருக்கு ஏற்பாட்டாளர்களில் ஒருவர் அறிமுகம் செய்து வைத்தபோது, புன்னகை பூத்த முகத்துடன் இனிய தமிழில் “வணக்கம், நலமாக இருக்கின்றீர்களா..?” என ஐரோப்பிய ஒலிகலந்த தமிழில் அவர் என்னை நோக்கிக் கேட்டது இன்றும் நினைவிலிருந்து அகலவில்லை.
Thursday, 10 August 2017
Shalin Maria Lawrence : ஒடுக்கப்பட்டவர்களை விடவும் ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள் .
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த நொடி வரை நான் இணைய ஆபாச தாக்குதல்களுக்கும் ,கொலை மிரட்டல்களுக்கு உள்ளாகி வருகிறேன் . ஜல்லிக்கட்டு பிரச்சனை ,ஜாதிவெறி அட்டுழியங்கள் ,ஆபாச மீம்கள் ,வரதட்சணை பிரச்சனை என்று நான் குரல் கொடுத்த ,தொலைக்காட்சிகளில் பேசிய ,இணையத்தில் எழுதிய கருத்துக்களுக்காக ஒரு சாரார் அல்ல ,பல தரப்பினர்களிடம் இருந்து இந்த அசிங்கங்கள் என்னை நோக்கி நடந்துகொண்டே தான் இருக்கிறது .இன்றுவரை .
நான் சிறுபான்மை இனத்தை சார்ந்தவள் ,தலித் பெண் ,லிப்ஸ்டிக் போடுபவள் ,ஸ்லீவ் லெஸ் அணிபவள் ,ஆங்கிலம் பேசுபவள் ,பெரியாரிஸ்ட் ,பெண்ணியவாதி என்கிற அத்தனை விஷயங்களுக்காகவும் என் மேல் பல்முனை தாக்குதல் ,கட்சி பாரபட்சமில்லாமல் ,மத பாரபட்சமில்லாமல் ,ஜாதி பாரபட்சமில்லாமல் ,பாலின பாரபட்சமில்லாமல் நடந்துகொண்டே இருக்கிறது .(இதை சொன்னால் victim card play செய்கிறேன் என்று சில உருப்படாமல் போன ,மூளை இல்லாத ஜென்மங்கள் சொல்லும் ,
ஆனால் "கீழ்ஜாதி தே......யா " என்று என்னை சொன்னவர்கள் என் ஜாதிக்காகதான் சொன்னார்கள் என்று சிறு குழந்தை கூட சொல்லும் என்னை பற்றி வந்த ஆபாச மீம்ஸுகள் இதுவரை முகநூலில் வேறு யாருக்கும் வந்ததில்லை .அவ்வளவு ஆயிரம் .கூகிளில் சென்று ஷாலின் என்று அடித்தால் அடுத்த வார்த்தை "மீம் " என்று வரும் . இது அத்தனையும் நடக்கும்போது எனது நெருங்கிய நண்பர்களே குரல் கொடுக்கவில்லை .< நம்புங்கள் .முதல் சில தடவை இது நடக்கும்போது எனக்கு யாரவது எனக்காக பேசுவார்களா என்று இருந்தது .அதை பற்றி விகடனில் பேட்டியும் கொடுத்தேன் .அதற்குப்பின்பு சிலபேர் எனக்கு ஆதரவாய் பேசினார்கள் . வழக்கு அப்பதிவு செய்ய உதவுவதற்கு அகிலா காமராஜ் ,அனைத்திந்திய மாதர் சங்க தமிழ்நாடு பொது செயலாளர் சுகந்தி ,கவிஞர் கவின்மலர் ,ஜோதிமணி மற்றும் எவிடென்ஸ் அமைப்பு முன்வந்தார்கள் ,ஆனால் சில காரணங்களுக்காக நான் வழக்கு போடவில்லை
நான் சிறுபான்மை இனத்தை சார்ந்தவள் ,தலித் பெண் ,லிப்ஸ்டிக் போடுபவள் ,ஸ்லீவ் லெஸ் அணிபவள் ,ஆங்கிலம் பேசுபவள் ,பெரியாரிஸ்ட் ,பெண்ணியவாதி என்கிற அத்தனை விஷயங்களுக்காகவும் என் மேல் பல்முனை தாக்குதல் ,கட்சி பாரபட்சமில்லாமல் ,மத பாரபட்சமில்லாமல் ,ஜாதி பாரபட்சமில்லாமல் ,பாலின பாரபட்சமில்லாமல் நடந்துகொண்டே இருக்கிறது .(இதை சொன்னால் victim card play செய்கிறேன் என்று சில உருப்படாமல் போன ,மூளை இல்லாத ஜென்மங்கள் சொல்லும் ,
ஆனால் "கீழ்ஜாதி தே......யா " என்று என்னை சொன்னவர்கள் என் ஜாதிக்காகதான் சொன்னார்கள் என்று சிறு குழந்தை கூட சொல்லும் என்னை பற்றி வந்த ஆபாச மீம்ஸுகள் இதுவரை முகநூலில் வேறு யாருக்கும் வந்ததில்லை .அவ்வளவு ஆயிரம் .கூகிளில் சென்று ஷாலின் என்று அடித்தால் அடுத்த வார்த்தை "மீம் " என்று வரும் . இது அத்தனையும் நடக்கும்போது எனது நெருங்கிய நண்பர்களே குரல் கொடுக்கவில்லை .< நம்புங்கள் .முதல் சில தடவை இது நடக்கும்போது எனக்கு யாரவது எனக்காக பேசுவார்களா என்று இருந்தது .அதை பற்றி விகடனில் பேட்டியும் கொடுத்தேன் .அதற்குப்பின்பு சிலபேர் எனக்கு ஆதரவாய் பேசினார்கள் . வழக்கு அப்பதிவு செய்ய உதவுவதற்கு அகிலா காமராஜ் ,அனைத்திந்திய மாதர் சங்க தமிழ்நாடு பொது செயலாளர் சுகந்தி ,கவிஞர் கவின்மலர் ,ஜோதிமணி மற்றும் எவிடென்ஸ் அமைப்பு முன்வந்தார்கள் ,ஆனால் சில காரணங்களுக்காக நான் வழக்கு போடவில்லை
முன்னாள் புலி உறுப்பினர்களே ஆவா குழுவின் பின்னணி? பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5qYrhkWmEK6xj6lTaQ-YXq1SWBRSjqqyhA7z5ETEnIwb6V48mzP_8-TP_5K3FSm12BrIzwc9KEdEeGVfMAH4C-wkDMObOzWd11bLxqRTtdcA2VudDl0JeorUXYfozCCX0AtG4vxkcD-o/s320/20638610_1260307060765176_8541595272511536242_n.jpg)
16 மாவட்ட தலைவர்களுக்கு நியமன கடிதம்! - மலையக மக்கள் முன்னணி..
மலையக மக்கள் முன்னணியின் ;16 மாவட்ட தலைவர்களுக்கு நியமன கடிதம்!
- பா.திருஞானம்
மலையகத்தில் காணப்படும் முக்கிய தொழிற்சங்சங்களில் ஒன்றான மலையக மக்கள் முன்னனியின் மலையக தொழிலாளர் முன்னனி பிரதேசங்கள் தோறும் தனது மாவட்ட தலைவர்ளைத் தேர்ந்தெடுத்து தொழிற்சங்கத்தைப் பலப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு கட்டடாக 16 மாவட்ட தலைவர்கள் தேர்தலின் மூலம் தெரிவு செய்யபட்டு அவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் இந்த நியமனக் கடிதங்களை வழங்கினார்.
இதன்போது முன்னனியின் உயர்மட்ட அதிகாரிகள்¸ அங்கத்தினர். உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். malaiyaka kuruvi
Mano Ganesan :கொழும்பு அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களின் வீடமைப்புக்கு மாற்றுக்காணி
Malayaga Kuruvi Lகொழும்பு அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களின் வீடமைப்புக்கு மாற்றுக்காணி. - அமைச்சர் மனோவின் அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம் . கொழும்பு மாவட்ட அவிசாவளை தொகுதியின் பென்ரித் தோட்டத்தில், குளோரின் வாயுவால் நீர் சுத்திகரிப்பு செய்யப்படும் நிலையத்தையொட்டி அமைந்துள்ள குடியிருப்புகளில் வாழ்கின்ற மக்களுக்கு, அதே தோட்டப்பகுதியில் மாற்றுக்காணி வழங்கி தனி வீடுகளை அமைத்துக்கொள்வதற்கான அனுமதியை கோரி, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், கொழும்பு மாவட எம்பியுமான மனோ கணேசன் சமர்பித்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி - தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளதாவது,
அவிசாவளை பென்ரித் தோட்டத்தின் ஒரு பிரிவில் வாழும் மக்கள், அங்கு அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பாவிக்கப்படும் குளோரின் வாயுவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையத்திலிருந்து ஒருமுறை பெருமளவு குளோரின் வாயுக்கசிவு ஏற்பட்டு பெருந்தொகையான மக்கள் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டது. அவ்வேளையில் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தை பெற்ற ஒரு செய்தியாக இச்சம்பவம் இருந்தது.
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி - தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளதாவது,
அவிசாவளை பென்ரித் தோட்டத்தின் ஒரு பிரிவில் வாழும் மக்கள், அங்கு அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பாவிக்கப்படும் குளோரின் வாயுவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையத்திலிருந்து ஒருமுறை பெருமளவு குளோரின் வாயுக்கசிவு ஏற்பட்டு பெருந்தொகையான மக்கள் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டது. அவ்வேளையில் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தை பெற்ற ஒரு செய்தியாக இச்சம்பவம் இருந்தது.
மதுவரி திணைக்கள அதிகாரிகள் சென்ற வாகனம் முற்றுகை! இளைஞர்களை தாக்கியதன் எதிரொலி
- நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
அட்டன் எபோசிலி பகுதியில் இளைஞர்கள் மூவரை மதுவரி திணைக்கள அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்சிலி கமுகவத்தை தோட்டத்திலே 09.08.2017 மாலை 4 மணியவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதுபாணம் விற்பனை செய்யும் இடத்தை காட்டுமாறு அதிகாரிகள் கேட்ட நிலையில், தனக்கு தெரியது என குறித்த இளைஞன் தெரிவித்த போதே மதுவரி திணைக்கள அதிகாரிகள் தாக்கியதாக தெரியவருகின்றது.
சம்பவத்தினால் பிரதேச பொது மக்கள், அதிகாரிகள் சென்ற வாகனத்தை முற்றுகையிட்டதனால் எபோட்சிலி அட்டன் - மார்க்க போக்குவரத்தும் மூன்று மணி நேரம் வரை பாதிப்படைந்தது.
சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக மதுவரி திணைக்கள அதிகாரிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதியில் சோதனையில் ஈடுபட்ட நிலையில் மூன்று இளைஞர்களை தாக்கியதாக தெரியருகின்றது.
தாக்குதலுக்கு இலக்காகிய மூன்று இளைஞர்களும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா கந்தபளையில் கைகுண்டு மீட்பு
நுவரெலியா கந்தபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபளை நகர பிரதான குப்பை மேடு அமைந்திருக்கும் கந்தபளை இராகலை பிரதான வீதிக்கு அருகில் இன்று வியாழக்கிழமை மாலை கைகுண்டு ஒன்று கந்தபளை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த பிரதான வீதியில் சென்ற பாதசாரி ஒருவர் கந்தபளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த கந்தபளை பொலிஸார் கைகுண்டை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து நுவரெலியா பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் தெரிவித்த கந்தபளை பொலிஸார் இக்கைகுண்டினை மீட்பதற்கு இராணுவத்தின் குண்டு செயழிலக்கும் பிரிவின் உதவியை நாடியுள்ளனர் என கந்தபளை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை மாலை 7.45 மணியளவில் கந்தபளை பகுதிக்கு விரைந்த குண்டு செயழிலக்கும் பிரிவு இக்கைகுண்டினை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இராணுவ பிரிவினரும் கந்தபளை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. தினக்குரல்
ரவியின் இராஜினாமா சிறந்த எடுத்துக்காட்டு – பிரதமர்
வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க விலகியிருப்பது ஒரு எடுத்துக்காட்டாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இராஜினாமாவை தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஆற்றிய பிரதமர் உரையின் போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் எவரும் இவ்வாறு இராஜினாமா செய்யவில்லை என்றும், தனக்கு எதிராக சோதனை முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைகளை இலகுபடுத்துவதற்காக அமைச்சர் ரவி இராஜினாமா செய்திருப்பது நல்லாட்சியை தெளிவுபடுத்தியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் ஊடக சுதந்திரம் தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (அ|நு) dailynews
ஷோபாசக்தி : கத்னா : கேட்டிருப்பாய் காற்றே!
ஸர்மிளா ஸெய்யித்தின் ‘பெண் கத்னா’ குறித்த உரை, மலையக இலக்கியச் சந்திப்பில் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து பெண் கத்னா குறித்த விவாதம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. கூடவே இலக்கியச் சந்திப்புத் தொடரின் சனநாயகத்தன்மையும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
இன்று உலகம் முழுவதும் கத்னாவால் இருபது கோடிப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்குறியில் அமைந்திருக்கும் பாலியல் இன்ப நுண்ணுணர்வுக் குவியமான கிளிட்டோரிஸை (Clitoris) முழுமையாகவோ அல்லது பகுதியளவோ சிதைத்துவிடும் இந்தக் கொடுமையான சடங்கு பெண்களது பாலியல் வாழ்வையும் தனிநபர் ஆளுமையையும் சிதைத்துப்போடுவதுடன், அவர்களது வாழ்வு முழுவதும் உளவியல்ரீதியாக அவர்களை அலைக்கழிக்கிறது. வாரிஸ் டைரியின் தன்வரலாற்று நூலான பாலைவனப் பூ இக்கொடுமை குறித்த விரிவான ஆவணம்.
இலங்கையில் இந்தக் கத்னா கொடுமை முஸ்லீம் சமூகத்தில் மிக இரகசியமான முறையில் நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தமிழ் எழுத்துப் பரப்பில் முகமட் ஃபர்ஹான், ஸர்மிளா ஸெய்யித் போன்றவர்கள் தங்களது உரையாடல்களிலும் எழுத்துகளிலும் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமான இந்தக் கத்னா எதிர்ப்புக் குரல்களிற்கு மாறாக, பெண் கத்னா இஸ்லாம் மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட கடமை என இஸ்லாமிய மத நிறுவனங்களின் குரல்கள் இலங்கையில் வலிமையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
மஹிந்த எந்த ஒரு அமைச்சரும் எவ்வித தவறும் செய்யவே இல்லை ?
Sinnapalaniandy Sachidanandam : பத்து ஆண்டுகள் இலங்கையின் அதி உயர் பதவியை அலங்கரித்த மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் எந்த ஒரு அமைச்சரும் எவ்வித தவறும் செய்யவே இல்லை என்பதால் ராஜினாமா என்ற சொல் பாவனையில் இல்லாமலே இருந்தது. நல்லாட்சி காலத்தில் ராஜினாமா என்ற சொல் மீண்டும் பாவனைக்கு வந்துள்ளது. தவறு செய்பவர் பதவி விலக வேண்டும் என்ற நியதி அன்று அமுலில் இருந்திருப்பின் இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் அமைச்சனாகி இருந்திருக்கலாம். ஒவ்வொரு நிமிடமும் புதிய அமைச்சர் நியமனம் பெற்றிருப்பார். நுழையவும் வெளியேறவும் என இரண்டு வாசல்கள் நிரந்தரமாக திறந்தே இருந்திருக்கும்.
Subashini Thf: கல்வெட்டு பயில்வோம் - தமிழ் மரபு அறக்கட்டளை வழங்கும் பயிற்சி
த.ம.அ வலைப்பக்கத்தில் உள்ள பாடத்தொகுப்பில் பல்லவர் கால கல்வெட்டு எழுத்துக்களைப் பயிலலாம். இன்று வல்லம் கல்வெட்டு பற்றி பார்ப்போம்.
இது முதலாம் மகேந்திரனின் கல்வெட்டு.
வல்லம் கல்வெட்டின் எழுத்துகளை ஊன்றிப்பார்க்கும்போது, சிம்மவர்மனின் செப்பேட்டில் உள்ள எழுத்துகள் சற்றுப் பிற்காலத்தவை என்பது புலப்படும். ஏனெனில், நாம் அடிப்படை எழுத்தாகப் பயின்ற தஞ்சைப்பெரிய கோயில் எழுத்துகளை செப்பேட்டெழுத்துகள் பெரிதும் ஒத்திருப்பதைக் காணலாம். வல்லம் கல்வெட்டு எழுத்துகள் தமிழ் வரிவடிவத்தின் பழைய வடிவம் என்பது அவை தமிழ் பிராமி எழுத்தின் வடிவமைப்பை உள்ளடக்கி இருப்பதால் அறியலாம்.
முழுதாக விளக்கப்படங்களுடன் வாசிக்க .. http://www.heritagewiki.org/index.php…
Wednesday, 9 August 2017
அது அழகானது ,அதில் இருந்து தான் நீ வருகிறாய் .. ஷாலின் !
Shalin Maria Lawrence :
ரசிகன்
..
சிவாஜி ரசிகர்கள் இருந்தார்கள், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இருந்தார்கள்.
இன்னும் சொல்ல போனால் அவர்களின் பக்தர்களாக இருந்தார்கள். வாய்ப்பு
கிடைக்கும் போதெல்லாம் விவாதத்தில் மோதுவார்கள். வாய் வழி மோதல் தான்.
ஆனால் கருத்தியல் ரீதியாக மட்டும் இருக்கும். ஒருவரை ஒருவர் இழிவுபடுத்த
மாட்டார்கள் .
கமல் ரசிகர்கள் இருந்தார்கள். ரஜினி ரசிகர்கள் இருந்தார்கள். இன்னும் சொல்ல போனால் அவர்களின் வெறியர்களாக இருந்தார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாய் மோதலில் துவங்கி அடிதடி வெட்டுக்குத்தில் முடியும் .
விஜய் அஜித் ரசிகர்கள் இருக்கிறார்கள் .
"ஏன் இருக்கிறார்கள்?" என்று கேள்வி கேட்க்கும்படி இருக்கிறார்கள்.
யாராவது ஒருவர் விஜய் பற்றியோ இல்லை அஜித் பற்றியோ ஏதாவது எழுதி விட்டாலோ அல்லது சொல்லி விட்டாலோ, மெசப்பொட்டேமியா காலத்திலிருந்து இந்த காலம் வரையிலுள்ள பெண்களை மட்டும் கொச்சை படுத்தும் வார்த்தைகளை வைத்து அவ்வளவு கீழ்த்தரமான பேச்சுக்கள் செய்கைகள்.
கமல் ரசிகர்கள் இருந்தார்கள். ரஜினி ரசிகர்கள் இருந்தார்கள். இன்னும் சொல்ல போனால் அவர்களின் வெறியர்களாக இருந்தார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாய் மோதலில் துவங்கி அடிதடி வெட்டுக்குத்தில் முடியும் .
விஜய் அஜித் ரசிகர்கள் இருக்கிறார்கள் .
"ஏன் இருக்கிறார்கள்?" என்று கேள்வி கேட்க்கும்படி இருக்கிறார்கள்.
யாராவது ஒருவர் விஜய் பற்றியோ இல்லை அஜித் பற்றியோ ஏதாவது எழுதி விட்டாலோ அல்லது சொல்லி விட்டாலோ, மெசப்பொட்டேமியா காலத்திலிருந்து இந்த காலம் வரையிலுள்ள பெண்களை மட்டும் கொச்சை படுத்தும் வார்த்தைகளை வைத்து அவ்வளவு கீழ்த்தரமான பேச்சுக்கள் செய்கைகள்.
கார்பெக்ஸ் வித்தியாலய பாதை விரைவில் செப்பனிடப்படும் என ஸ்ரீதரன் உறுதி
மலையக குருவி : ஆயிரம் பாடசாலையில் உள்வாங்கப்பட்ட கார்பெக்ஸ் வித்தியாலய பாதை செப்பனிட்டுத்தறுமாறு கோரிக்கை! விரைவில் செப்பனிடப்படும் என ஸ்ரீதரன் உறுதி
- நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
''ஆயிரம் பாடசாலைகள்'' வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலத்திற்கு செல்லும் பிரதான பாதை செப்பனிட்டுத்தறுமாறு பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அட்டன் - நோட்டன் பிரதான வீதியின் காசல்ரீ சந்தியிலிருந்து குடா மஸ்கெலியா சந்திவரை செல்லும் குறுக்குப்பாதையே இவ்வாறு குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
ஆவா குழு அடக்கப்பட்டது ... 50 பேர்கை து ... யார் பின்னணியில் என்ற கோணத்திலும் ...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1PWESHyidd6vwcNBkL1ri_l8gHVY1B4pdUp_KYqjYGlA4CZg1dtz8EBM3_hIa1YApW-5yHphuFaMJ8K0aKmEGzodSeV7dSxP1FSUNPg2rKQDnxw297ksqwFOLH-2jX9BnkCXcYIfxI_o/s1600/images%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258D.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgH23vAblqBaMNet98tmX5cdo89e9I_T7779bE7uwBPdzCv64aXbVw1zmLlRxZK5-05hqk5fSmWygbtTbSFjRcxffcl0v8tjHMZ3LAOUfrgQfRDSDTRtGrOV893tOu5S2j4pI_XVwX-O3w/s320/625.147.560.350.160.300.053.800.264.160.90.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHPg7E6ZBmLOijwlItWYHAar8E0joJPU-yIbnkMmnNDvrJLH_NZhUQ9jKCVRDZ1a6wT1DoWwqFfFCEgBU8bMuS683gHQpiFKAkssF-Iu5x8KI7IBTZGuhORIToex1C4DdWoDdS5CGH7Ds/s1600/images%25E0%25AE%25AA%25E0%25AE%25AA%25E0%25AE%25AA%25E0%25AF%258D.jpg)
தலைநகர் கொழும்பில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஆவா குழுத் தலைவர் என்று கூறப்படும், விக்டர் நிசா எனப்படும் நிசாந்தன் மற்றும் அவரது இரண்டு சகாக்களும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புறக்கோட்டை மற்றும் மட்டக்குளி பகுதிகளில் வைத்து ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் நான்கு பேரை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர். இவர்களில் ஆவா குழுத் தலைவர் என்று கூறப்படும், விக்டர் நிசா எனப்படும் சத்தியவேல் நாதன் நிசாந்தன் மற்றும் அவரது இரண்டு சகாக்கள் விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் கிரிகெட் வீரருக்கு இலங்கை அணியில் வாய்ப்பு!
வீரகேசரி :Vijithaa on 2017-08-09 13:03:19
கிளிநொச்சியைச் சேர்ந்த விளையாட்டு வீரருக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, பளையை சேர்ந்த 23 வயதுடைய வேகப்பந்து வீச்சாளரான செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜின் திறமைகளை தொலைக்காட்சி ஒன்றின் மூலமாக அறிந்து கொண்ட வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், விஜயராஜை இன்று தனது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் மேலும் அவரது திறமைகளை வளர்த்துக்கொள்ளத் தேவையான வசதிகளையும் பயிற்சிகளையும் வழங்க முன்வந்துள்ளார்.
80 நாடுகளுக்கு இலவச விசா ; கட்டார் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு
வீரகேசரி : இலங்கை தவிர 80 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவுகளை கட்டார் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.:
குறிப்பிட்ட பட்டியலில் இலங்கை,சவுதி,குவைட்,அமீரகம்,யெமென் போன்ற பல நாடுகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.>இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளது.
கட்டாருக்கு வரவிரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்த பிரஜைகள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் கட்டவோ தேவையில்லை. கட்டாருக்கு விஜயம் செய்ய இந்த சலுகையைபெற வரையறை கிடையாது, பல முறை பயணம் மேற்கொள்ளவும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையக பெண்களும் சவால்மிக்கப் சுகாதாரப் பிரச்சனைகளும்
Esther Nathaniel (வி.எஸ்தர்) : மலையகம் என்றதும் பெரும்பாலானவர்களுக்கு குறிப்பாக ஏனைய பிரதேசங்களில் வாழ்பவர்கள் மலைநரட்டை நல்லnhரு சுற்றுலா தளமாகத்தான் பார்க்கிறார்கள் .சிலுசிலுவென்று குளிரும் புதிதாக திருமணத்தில் இணைந்தவர்கள் தெரிந்திருக்கும் தேனிலவு பிரதேசமாகவும் பாடசாலை மாணவர்களளுக்கான சுற்றுலா தளமாகவுமே மலைநாடு இன்றுப்பர்க்கப்படுகின்றது.
மலையகத்தில் தேயிலையும் இறப்பரும் பயிரிடப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. மேலும் பிரித்தானியர்களால் 1815 ஆண்டு கண்டி கைப்பற்றப்டடப்ப்pன்னர் மலைநாட்டை அவர்கள் ஒரு பெருநN;தாட்டத்தை மாற்ற முனைந்து அதில் வெற்றிப் பெற்றனர். இவ்வெற்றிக்கும் பொருளாதார செழிப்புக்கும் பிண்ணனியில் மிகப்பெரிய மனிதத்துன்பியல் வரலாறு கடந்த 200 வருடங்களாக தொடர்கின்றது என்றால் அது மறுப்பதற்க்கு இல்லை.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMqu_BbHKfkEDKg3luYujy8qvISUqD3KPr-Fdf3yVbSDs-9hN_nFLfKN3F69uexWgkz4dT3-N4rOpl7AVA9FUf_01MMjCInHE5x55b_gSNSUcO0pxewAV9Fxy_J7cmIiYAsEazq_etDqo/s400/malayakam.jpg)
அவர்கள் மலேசியா, பிஜித்தீவுகள், தென்னாபிரிக்கா ,இலங்கை நாடுகளுக்கு தொழிலாளர்களை மிகமிக மலிவான கூலிக்காகக் தழிழ் தரகர்கள் மூலமாக பசப்பு வார்த்iகைளை அம்மக்களிடம் கூறி அவர்களை கொண்டு வந்தனர். இங்கே வந்தப் பின்னர்தான் வந்த பாருடா வழுக்கை பாதை என்ற நிலையை அவர்கள் கண்டனர்.
Tuesday, 8 August 2017
வடக்கு ... ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காத புத்தூர் கிராமம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuLan1yB9IK78pprBnQZOr2nPxnA1IeAyFXTgdZ_FL5RgLmcLYjCtEc8WC6sj7n_wLbj6edqxXZlQNgrV6O5w6CkmeXXz7u0-r60C5P2KXZZt3AZUdDdBo57JkcWg1p4QQSwgriczVQfs/s400/20621990_1390248851058082_3340034523184230081_n.jpg)
மலையக வீரரான பிரின்ஸ் அந்தனி ஆசிய கராத்தே சம்மேளன நடுவராக தெரிவு
மலையக வீரரான பிரின்ஸ் அந்தனி ஆசிய கராத்தே சம்மேளன நடுவராக தெரிவு....!!!!!!
கேகாலையைச் சேர்ந்தவரும் தற்போது கொழும்பில் பிரபல தனியார் அச்சக நிறுவனத்தின் உரிமையாளருமான கராத்தே மாஸ்டரான பிரின்ஸ் அந்தனி அவர்கள் அண்மையில் ஆசிய கராத்தே சம்மேளன நடுவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவரான இவர் சிறு வயது முதல் கராத்தே கலையை முறையாக கற்று இதுவரை 4 ஆவது கறுப்பு பட்டியைப் பெற்றுள்ளார்.
மலையக இளைஞர்களுக்கு தம்மால் முடிந்தவகையில் காரத்தே கலையைக் கற்று கொடுப்பதே தமது எண்ணம் என்றும் அவர் சொன்னார்.
விரைவில் மலையகத்தில் கராத்தே கலை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வுகளை மேற்கொள்ள எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவருக்கு மலையக குருவியின் வாழ்த்துக்கள்...!!
மனோ கணேசன் : நெருப்போடு விளையாடவேண்டாம் ... வடகிழக்கு அநியாயங்களை தட்டி கேட்டவன் நான்!
மலையக குருவி :நெருப்புடன் விளையாட வேண்டாம்...! Don't Play with Fire...!
நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனின் முகநூலிலிருந்து...
நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனின் முகநூலிலிருந்து...
வெளிநாட்டில் இருந்து அசிங்கமாக பிரதேசவாதம் பேசிய ஒருநபரின் முகநூல் கணக்கு உணர்வாளர்களின் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது. உண்மையில் முட்டாள்தனமாக உளறிய நபர் இங்கே பேசப்பட வேண்டியவர் அல்ல.
ஆனால், சமீப காலமாக மலையக தமிழர் தொடர்பில் வேறு பல்வேறு தரப்புகளில் இருந்து பாதகமான சமிக்ஞைகள் வருவது தமிழின ஒற்றுமைக்கு நல்லதல்ல. தமிழீழ விடுதலை புலிகளின் நிர்வாகத்தில் காணப்படாத பிரதேசவாதம் இப்போது எங்கே இருந்து தலை தூக்குகிறது?
பாரம்பரிய பிரதேசங்களை அடிப்படையாக கொண்ட மண்வாசனை வரலாறு என்பது பிழையானது அல்ல. தமிழினத்துக்குள் வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற வெவ்வேறு பாரம்பரிய மண்வாசனை வரலாறுகள் இந்நாட்டு தமிழரிடையே இருக்கின்றன.
இவை மண்வாதங்கள். மலைநாட்டில் வசீகர மலைக்குளிர் தென்றல் முகத்தில் வீசும். மட்டக்களப்பில் மீன் பாடும். வன்னியில் யானை பிளிரும். யாழ் குடா, தமிழ் கலாச்சார தொட்டிலாகும். இவை வேறு. பிரதேசவாதம் என்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள கூடாது.
டிக்கோயாவில்கே ரள கஞ்சா .. நால்வர் கைது அட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் ..
இருவேறு பகுதிகளில் 75000 ஆயிரம் மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது
- நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
இருவேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா வைத்திருந்த நால்வரை அட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
07.08.2017 மாலை டியோயா நகரப்பகுதியில் விற்பனை செய்யவிருந்த நிலையில் ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தவிர திம்புள்ள பிரதேசத்தில் வெயாகொட பகுதியிலிருந்து நுவரெலியா சென்ற வேன் ஒன்றிலிருந்து ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்ப்பட்டுள்னர்.
சுற்றிவளைப்பின் போது 75000 ஆயிரம் மில்லி கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட நால்வரையும் 08.08.2017. அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிகை எடுத்துள்ளதாகவும் அட்டன் மதுவரிதிணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். மலையாக குருவி
வானொலி மேடை அறிவிப்பாளர் atm fazly காலமானார்.
பிரபல வானொலி அறிவிப்பாளரும் மேடை அறிவிப்பாளருமான atm fazly காலமானார்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு மலையக குருவி சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்...!
தமிழ் ஊடகங்கள் மலையகத்தை புறக்கணிக்கிறது? வடகிழக்குக்கு கொடுக்கும் முக்கியத்துவம்?
Arun Wengadesh முகநூலில் இருந்து<
மதிப்புமிக்க தமிழ் ஊடகங்களே…ஊடகவியலாளர்களே.. இலங்கையின் தமிழ் ஊடக வரலாறு என்பது மிக ஆரோக்கியமான பாதையின் வழி வந்த நகர்வாகும்.மலையகத்தின் ஆரம்ப கால அடிமை வாழ்க்கை மாற்றத்திற்கும்,மலையக மக்களின் விழிப்புணர்விற்கும் பத்திரிகைகள்,வானொலிகள்,தொலைக்காட்சிகள் பாரிய அளவில் பங்களிப்பு வழங்கி இன்றை சுதந்திர தமிழ் ஊடக தளத்திற்கு வழி செய்தது என்றால் மிகையாகாது.<
ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பாராட்டி புகழ்வதற்கு பல்வேறு கால கட்ட நிகழ்வகளின் பதிவுகள் உண்டென்றாலும் அது யாவரும் அறிந்ததே…
ஆனால் இன்றைய கால கட்டத்தில் மலையகத்திற்கான ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறானது என்பதை நாம் தெளிவுபடுத்திக் கொள்ளுதல் அவசியமாகிறது.
பிரத்தியேகமாக மலையகத்திற்கான அச்சு ஊடகங்கள் சிறப்பான முறையில் இயங்கி வந்தாலும் தேசிய ரீதியில் மலையகத்தை அடையாளப்படுத்தும் ஊடகங்கள் மலையகத்திற்கான பங்களிப்பை சரிவர செய்கிறதா? என்பது கேள்விக்குறிதான்.
நானும் ஊடக துறை சார்ந்தவன் என்ற நினைப்போடும் இலங்கையின் மூத்த பத்திரிகையான வீரகேசரி பத்திரிகையில் குறுகிய காலத்தில் பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்ட மாணவன் என்கிற வகையிலும் எனது கருத்தை நேரடியாக கூற முடியும் என நினைக்கிறேன்.
என்னை பொருத்தவரை வீரகேசரி பணியில்தான் நான் அதிகமான விடயங்களை கற்றுக் கொண்டேன்.அங்கு தான் என ஊடக ஆசிரியர்கள் இருக்கிறார்கள்,அதே போன்று
Sunday, 6 August 2017
தேர்தலில் கஞ்சாக்காரர்களுக்கும் மாணிக்ககல் வியாபாரிகளுக்கும் இடமில்லை - பியதாச எம்.பி தகவல்
மலையக குருவி :(க.கிஷாந்தன்)
இந்த நாட்டில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.காவில் போட்டியிட விண்ணப்பிப்போர் குற்ற செயல்களில் ஈடுப்படாதவர்களாக இருக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்த பொலிஸ் சான்றிதழ்கள் பெறப்பட வேண்டும் .இவ்வாறாக குற்றமற்றவர் என சான்றிதழ் இருக்குமாயின் அவர்கள் மாத்திரமே ஐ.தே.கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடமுடியும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பகமுவ பிரதேச ஐ.தே.கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.கே.பியதாஸ தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருடகால தொடர்ச்சியான அரசியல் செயற்பாட்டை கௌரவிக்கும் நிகழ்வு அட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் 06.08.2017 அன்று இடம்பெற்றது .
இந்த நிகழ்வை தலைமை தாங்கி உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க 1972ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி தனது அரசியல் வாழ்கைக்கு காலடி எடுத்து வைத்தார். அவர் இன்றுவரை நாற்பது ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் அமைச்சராக எதிர்கட்சி தலைவராக மற்றும் பிரதமராக சேவை செய்து வருகிறார். இவர் ஆசியாவில் சிறந்த தலைவர் மற்றுமின்றி நமக்கும் நல்ல தலைவர் ஆவார்.
இவரின் தலைமையிலான ஐ.தே.கட்சி காலப்பகுதியில் மலையக பிரதேச கிராமங்கள், தோட்டப்பகுதிகள், நகரங்கள் என பாரிய அபிவிருத்திகள் முன்னேற்றம் அடைந்துள்ளது. அந்த வகையில் தோட்டப்பகுதி கல்வி முன்னேற்றம் பாடசாலை அபிவிருத்தி மலையக கல்வி கலாச்சாலைகள் என முன்னேற்றம் கண்டுள்ளது.
ஐ தே க ..ஒரு திருடர்கள் கட்சியல்ல ’’திருடர்கள் நீக்கப்படுவார்கள்’’ அட்டனில் ரணில் அறிவிப்பு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmCaz6qT9B5_Gm3J6sNOJoIIOdwJ1ZRnwyLgQutgOyocxwH5lWcEes4ku0y8Ac8pyigrIQuwSCek09scs9G2KL-otXgOnKw7ff8J966VhxyxSqzEEtnsczJxLkg8IaWq81MrCdoONrjOE/s320/20626420_10207275644848560_5300118346175882108_o.jpg)
எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன், ஆர்.ரமேஷ்) ஐக்கிய தேசிய கட்சி திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை நிறைவையொட்டி வரவேற்பு நிகழ்வு ஹட்டனில் இன்று (06) இடம்பெற்றது. அதன் பின்னர் ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ஊழல் புரிவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை நாம் இனங்கண்டுள்ளோம். இன்று அமைச்சர் ஒருவரை அழைத்து நீதிபதி ஒருவர் கேள்வி கேட்கும் வகையில் காலம் மாறியிருக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் அவ்வாறு நடந்ததா? நான் இச்சந்தர்ப்பத்தில் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். எமது அரசாங்கம் திருடர்களை பாதுகாக்காது. ஏதாவது தகவல் வெளிப்படுமாயின் அந்த அறிக்கையின் அடிப்படையில் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும். இது திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் என்றார். தமிழ் மிரர்
கருணா : கிழக்கு தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துரோகம் செய்துள்ளது
கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் அரசியல் தலைமைகளின் ஏகாபத்திய போக்கை முறியடித்து கிழக்கு மாகாண சபையை தமிழ் மக்கள் கைப்பற்றவேண்டும். இதற்கு கிழக்கு அனைத்து தமிழ் மக்களும் அணிதிரளவேண்டுமென தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னனி கட்சி தலைவர் விநாயகமூர்தி முரளீதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னனி கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சி தலைமையத்தில் இடம்பெற்றது இதன் போது ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கையிலே கருணா அம்மான் இவ்வாறு தெரிவித்துள்ளார். தினக்குரல்
ரணில் விக்கிரமசிங்க .. ஹட்டன் மட்டக்களப்பு பஸ் சேவை ..40 வது ஆண்டு அரசியல் நுழைவு விழா!
40 ஆண்டு பாராளுமன்ற அரசியல் பிரவேசம் நிறைவையொட்டி வரவேற்பு நிகழ்வு ஒன்றுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று அட்டன் நகருக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 40 ஆண்டு பாராளுமன்ற அரசியல் பிரவேசம் நிறைவையொட்டி ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் எற்பாட்டில் இந்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக அட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலும், நீக்ரோதாரராம பௌத்த விகாரையிலும், அட்டன் ஜும்மா பள்ளிவாசலிலும் இடம்பெற்ற விசேட பூஜைகளில் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அத்தோடு அட்டன் டிப்போவினால் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள அட்டனிலிருந்து மட்டகளப்பிற்கான பஸ் சேவையையும் ஆரம்பித்து வைத்தார். அதன்பின் மக்களை சந்திக்கும் முகமாக டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
இந் நிகழ்விற்கு நாட்டின் பிரதமர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.பியதாஸ, வடிவேல் சுரேஷ், லக்கி ஜெயவர்த்தன ஆகியோருடன் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். தினக்குரல்
நிலாவரை கிணறின் மர்மங்கள் தெளிவாகியுள்ளது ... அடியில் மாட்டு வண்டிகள் 2
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPez4uFYz8fQlaLAj54UHoM5L3Uo1b3uxkrIWL3wxAYBDRiZ56kAtCpTEaLA7Qtreb7rWHKLPSAAiLcpDu6ntlDIFiO-37zGlx6SLlTHbJcUmQ5lsw3-V6aEtSSZ4-xY2-YnqRn_-IvmY/s320/20622000_1991084527791558_3171229582804267408_n.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCV3vHa6qRnLZM1lGYuqt8r90ucczRgZ7DfdHgyV6QKlYoSE9H9jyBsDxNxRFm8eQMrmzW6faIKRL0j3MUY1ZnOxM8aFM0Ur_7wziitOWaVm6eVi0_LvkDOI0NvtJGeVVO96rZDzIh0lc/s320/image_8e89f55073.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDVJPb-Nz9_bfqtg5OMGRvDY9Gql-d7s-m7uv1Yh7JRqBC0l1Yt3zvE0d7q789FRY_9eo7CL9MPsHId2iz0N-beOKsiiGMxozmiy6g0Dvuf6afNVX-S-ux3_kgO9zOjaLkpxm-z_n7Xa8/s320/20525668_1991084501124894_8252630097657872849_n.jpg)
நிலாவரைக் கிணற்றுக்குள் எலுமிச்சம்பழத்தைப் போட்டால், அதை சில மணிநேரத்தின் பின்னர், கீரிமலைத் தீர்த்தக் கேணியில் எடுக்கலாம் என சிறுவயதில் கேள்விப்பட்டதுண்டு. அதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதை ரோபோக்களின் ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன. ஏனெனில், கிணற்றில் இருந்து, பல திசை நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதைகளின் ஊடான நீரோட்டங்கள் காணப்படுகின்றன. கீரிமலைக் கேணியின் தென்கீழ் மூலையில், ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்கு குகை ஒன்று காணப்படுவதை இப்பொழுதும் பார்க்கமுடியும். அதனூடாகவே கேணிக்கு நல்ல தண்ணீர் வருகின்றது. இந்தக் குகைக்கும் நிலாவரைக் கிணற்றில் ரோபோக்கள் உறுதிப்படுத்திய குகைக்கும் இடையிலான நீரோட்டத்தொடர்பு இருப்பதை உய்ந்தறிய முடிகிறது.
Subscribe to:
Posts (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh16mQmGMYoCNdgclGL9fxzkTldY3yunvO63tVTiihwD8uAs7TDh7fkNdwRTL5kx_PquFHOnGkAWgF9bjof7HeBYUgYbEg3xfjq-5N7G5asJ30Vz64j19DCR-wM87rtNoVLRnXkPsChJyc/s200/22814136_10213081177337897_8821898365315111410_n.jpg)
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...