மலையக பெண்களையும் வாழ்க்கையையும் அவர் மிக கேவலமாக கதைத்தார் இன்று இந்தியாவில் பார்த்தீர்கள் என்றால் ஒரு காதலர்களை நிர்வாணமாக அழைத்து சென்றார்கள் காரணம் அவர்களின் சாதி வெறி அதே வெறியை இந்த ஈழத்தமிழர் காட்டியுள்ளார். அவர் வெள்ளாளராம் விவசாயியாம் நாங்க பரையன் பறச்சியாம் இந்த சாதி வெறியின் உச்சமே . மலையக மக்களின் துன்பமே அவர்களுக்கான அடிப்படைவசதிதான்< இன்றுவரை அவர்களின் துன்பம் குறையவேயில்லை. நாங்கள் என்றாவாது நீ யாழ்ப்பாணம் நீ மட்டக்களப்பான் என்று பிரித்ததேயில்லை சிங்களவர்கள்தான் இனவாதத்தால் கொல்கிறார்கள் என்றால் நீங்க எங்களை தீண்டத்தகாதவர்களாவே பார்க்கிறீர்கள். மலையக மக்களின உழைப்பால்தான் இந்த இலங்கை தள்ளாடாமல் நிற்கிறது. இன்று இப்படி சாதிவெறி பிடித்தவன் என்றால் முன்னர் எங்களை எவ்வாறு நசுக்கி இருப்பீர்கள் இந்தளவுக்கு எங்களை கேவலமாக புறக்கணிக்க நாங்கள் செய்த துரோகம்தான் என்ன தமிழா? தமிழர் என்பதாலா??
கருத்தியல் ரீதியில் தோட்டக்காட்டான் வடக்கத்தீயான் என்ற வார்த்தை இன்றும் நடைமுறையில் இருக்க இப்படிப்பட்டவர்களேக் காரணம்
1983 ம் ஆண்டு கறுப்பு ஜீலையில் கழுத்தில் டயர் மாலை போட்டு எரீக்கப்பட்ட எந்தவொரு மலையக தமிழனுக்கு தெரியாது யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பிரச்சினை அவர்கள் வயிற்றுக்காக வேலை தேடி வந்தவர்கள் எரித்தவர்கள் பார்க்கவில்லை இவன் மலையகம் ஈழத்தவன் என்று தமிழன் என்பதற்காகத்தானே கொன்றார்கள்!!
'உள்ளவன் இல்லாவிட்டால் ஒருமுழம் கட்டை 'என்பார்கள் மலையகத்தில்
ஆக சரியான தலைமைத்துவமும் வளர்ச்சி இருந்தால் இப்படி யான அமிலம் அருந்தும் மனிதர் கூட்டம் எம்மை கை நீட்டாது!!
ஆக சரியான தலைமைத்துவமும் வளர்ச்சி இருந்தால் இப்படி யான அமிலம் அருந்தும் மனிதர் கூட்டம் எம்மை கை நீட்டாது!!
ஈழத்தமிழர்கள் எல்லோரூம் இவன் போலல்ல யுத்தம் பலரை திருத்தி உணர்வுள்ளவர்களாக்கீயுள்ளது
இவனைப் போல நாமும் அப்படி அல்ல நாங்கள் எப்போதும் உங்களை தமிழ் பேசும் மக்கள் என்றே கருதுகிறோம்!!
இவனைப் போல நாமும் அப்படி அல்ல நாங்கள் எப்போதும் உங்களை தமிழ் பேசும் மக்கள் என்றே கருதுகிறோம்!!
No comments:
Post a Comment