Thursday, 3 August 2017

50 ஆயிரம் வீடுகளுக்கு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.. சோ.ஸ்ரீதரன் மாகாண சபை உறுப்பினர்

50 ஆயிரம் வீடுகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
- மாகாண உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் கூறுகின்றார்.
எந்த ஒரு அபிவிருத்திப் பணியையும் மேற்கொள்ள ஓர் இலக்கு நிரனயிக்கப்பட வேண்டும். அப்போதுதான் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும். அந்த வகையில், பெருந்தோட்ட மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற இலக்கை அமைச்சர் திகாம்பரம் நிர்ணயித்து செயற்பட்டு வருகின்றார். அது வெற்றி பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரத்தின் ஏற்பாட்டின் பேரில் அட்டன் டிக்கோயா தோட்டத்தில் 32 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் செப்பனிடப்பட்டுள்ள “கொங்கிரீட்” பாதையை மக்கள் பாவனைக்கு கையளித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங். பொன்னையா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், நுவரெலியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஆர். இராசமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில்,
எமது தொழிலாளர் தேசிய சங்கத்துக்கும் டிக்கோயா தோட்டத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகின்றது. இங்குள்ள மக்கள் தொழிற்சங்க விசுவாசம் மிக்கவர்கள். அதற்கு எடுத்துக் காட்டாக எமது சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் அமரர் வீ. கே. வெள்ளையனின் பூதவுடல் இந்தத் தோட்டத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டு நினைவு ஸ்தூபியும் எழுப்பப்பட்டுள்ளது. எனவே, இங்குள்ள மக்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளைச் செய்து கொடுக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும்.

இங்குள்ள முக்கியமான பாதையைச் செப்பனிட மூன்று கட்டங்களாக 32 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதியையும், குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க 7 இலட்ச ரூபாவுமாக மொத்தம் 40 இலட்ச ரூபாவை அமைச்சர் திகாம்பரம் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். பாதையும், குடிநீரும் அனைவர்க்கும் பொதுவானவையாகும்.இதைப் பயன் படுத்துவதன் ஊடாக சமூக ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியும்.
மாணவர்கள் பரீட்சையில் 9 “ஏ” சித்திகளைப் பெற வேண்டும் என்று உயரிய இலக்கை வைத்துப் படிக்க வேண்டும். அப்போதுதான், 9 “சி’ சித்திகளை அல்லது உயர தரத்துக்குத் தேவையான சித்திகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இலக்கு இல்லாவிட்டால் நாம் குறிப்பிட்ட தூரம் வரை பயணிக்க முடியாது போய் விடும். மாணவர்களின் பெறுபேற்றுக்கே இலக்கு நிர்ணயிக்கப்படும் போது அரசியல் ரீதியில் மலையகத்தில் தனி வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஓர் இலக்கை அமைச்சர் திகாம்பரம் நிர்ணயித்து 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க திடசங்கற்பம் பூண்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளதோடு, இந்திய அரசாங்கத்தின் 4 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த ஆண்டு இறுதிக்குள் 7 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டு விடும். கடந்த காலங்களில் இவ்வாறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு அபிவிருத்தி பணிகள் முன்னேடுககப்ட்டிருந்தால் இன்று ஆயிரக் கணக்கான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கும்.
டிக்கோயா தோட்டத்தில் தனி வீட்டுத் திட்டத்துக்காக 2 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசியக் கட்டிட ஆய்வு மையம் அதற்கான இடத்தைத் தெரிவு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. விரைவில் வீடமைப்புப் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. மலையக அரசியல்வாதிகள் மக்களுக்கு பந்து, மட்டை, சுவாமி சிலைகள். ஒலி பெருக்கி உபகரணங்கள் என்று வழங்கி வரம் போது, அமைச்சர் திகாமப்ரம் மக்களின் அடிப்படைத் தேவையை உணர்ந்து வீடமைப்புத் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். எனவே, அதற்கு ஒத்துழைப்பு நல்கி சமூக முன்னேற்றத்துக்கு உதவ முன்வர வேண்டும் என்றார்

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...