தேசிய உணவு நுகர்வின் ஊடாக அரோக்கியமான சமூகத்தினை உருவாக்குவதன் பொருட்டு" மத்திய மாகாண விவசாய அமைச்சின் 35 லட்சம் ரூபா நிதி ஒதிக்கீட்டின் கீழ் "மத்திய மாகாண விவசாய திணைக்களத்தின் சீகிரிய தேசிய உணவு விற்பனை நிலையம்" நிர்மாணிக்கப்பட்டு மத்திய மாகாண விவசாய,சிறிய நீர்பாசன , விலங்கு உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, கமநல அபிவிருத்தி,நன்னீர் மீன் பிடி, தமிழ் கல்வி, இந்து கலாசாரம், மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அழைப்பின் பேரில் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார அவர்களின் பங்குபற்றுதளுடன் மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயஙக்க அவர்களினால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் முதலைச்சின் செயலாளர், விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர்கள், திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் , அமைச்சின் உத்தியோகத்தர்கள் , என பலர் கலந்து கொண்டனர்.................. Marudhaphandy Rameshwaran

No comments:
Post a Comment