இப்போது அந்த நினைவுகள் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் நினைவு படுத்தப்படுவதை சற்றுக் கற்பனை செய்யுங்கள். அந்த நிகழ்ச்சி முழுவதும் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு எல்லோரும் பார்க்க இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டால் என்ன ஆகும்? சிறிது காலத்துக்குப் பின் அந்த காணொளி திரும்பவும் பகிரப்பட்டால் என்ன நடக்கும்? நீங்கள் கடுமையான வேதனையுடனும், விரக்தி உணர்வுடனும் மற்றும் பெரும் வெறுப்புணர்வையும் எதிர்கொள்வீர்களானால், பின்னர் வித்தியா சிவலோகநாதனின் குடும்பத்தின் நிலமையை சற்று எண்ணிப்பாருங்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றின் முன்பாக முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்கள், மற்றும் புலன் விசாரணைகள் தொடாந்தன. மிகவும் சமீபத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் வித்தியா வழக்கை விசாரிப்பதற்காக மூன்று நிதியரசர்களைக் கொண்ட “ட்ரையல் அற் பார்” முறையிலான விசாரணை மன்றை அமைத்துள்ளார்.யாழ்ப்பாண உயர் நீதிமன்றத்தில் இப்படியான விசாரணை நடப்பது இதுவே முதல் முறையாகும். மூன்று நீதியரசர்களைக் கொண்ட மன்றம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சசி மகேந்திரன், எம். இளஞ்செழியன் மற்றும் ஏ.பிரேம்சங்கர் ஆகியோரைக் கொண்டதாகும்.
வழக்கு ஆரம்பித்த மூன்று மாதங்களின் பின், காவல்துறையினர் தொடர்ந்து பிரதிவாதிகளின் வாக்குமூலங்களைக் கேட்டபோது மேலதிக தகவல்கள் பல வெளியாயின. அரச சாட்சிகளில் ஒருவரான உதயசூரியன் சுரேஸ்கரன் நீதிமன்றில் சாட்சி வழங்கும்போது, பெரியதம்பி என்றழைக்கப்படும் சிவதேவன் குஷாந்தன், ரவி என்றழைக்கப்படும் பி.விஜயக்குமார் என்பவருக்கு இந்த சம்பவம் நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தப் பெண்ணைக் கடத்துவதற்காக ரூபா 23,000 கொடுத்தார் எனத் தெரிவித்தார்.
சுரேஸ்கரனின் கூற்றுப்படி, பெரியதம்பி அந்தப் பெண்ணை மூன்று மாதங்களாகப் பின்தொடர்ந்துள்ளார் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் வித்தியாமீது தனக்குள்ள காதலைத் தெரிவித்துள்ளார், அந்தக்கட்டத்தில் வித்தியா அவரைச் செருப்பால் அடித்துள்ளார். அதன்பின் பெரிதம்பிக்கு பதிலளிப்பதை வித்தியா முற்றாக நிறுத்திவிட்டார். அத்துடன் மேலதிக சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா தலைமையிலான சட்டமா அதிபர் திணைக்கள குழுவினர் நீதிமன்றில் வெளிப்படுத்தியது, கடத்தல், வன்புணர்வு, மற்றும் கொலை என்பன நடத்தப்படுவதற்கு முன்பே அது பற்றி திட்டம் தீட்டப்பட்டது என்று. சந்தேக நபர்களின் நோக்கம் வித்தியாவை பாலியல் ரிதியில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் மற்றும் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப் படுவதையும் காணொளியாகப் பதிவு செய்து அதை ஆபாசப்படமாக விற்பனை செய்வதே என்று டப்புல டி லிவேரா மேலும் தெரிவித்தார்.
மேலதிக சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா தொடர்ந்து தெரிவித்தது, தெற்காசியாவின் நிஜ வாழ்க்கையில் நடத்தப்படும் பாலியல் வன்புணர்வுகளை பதிவு செய்து ஆபாசப் படங்களாக விறபனை செய்யும் ஒரு சர்வதேச மோசடிக் குழு இதில் ஈடுபட்டுள்ளது, மற்றும் அத்தகைய ஒரு காணொளி மிகப் பெருந்தொகையான பணத்தையும் பெற்றுத்தரும் என்று. எனினும் அந்த காணொளியை ஒரு ஆபாசப் படமாக விறபனை செய்வதற்கான நோக்கம் இருந்தது என்பதற்கான சான்று உள்ளபோதிலும், கேள்விக்கு உள்ளாகியுள்ள அந்த காணொளியை கண்டுபிடிக்க முடியவில்லை.u>ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பொறுப்பு
அந்த காணொளி அழிக்கப்பட்டு விட்டதோ இல்லையோ அல்லது இறுதியில் அது கண்டு பிடிக்கப்பட்டு ஒரு சாட்சியாக வழங்கப்பட்டாலோ எதுவாயிருந்தாலும் மிகவும் அச்சம் தரும் விஷயம் என்னவென்றால் இந்த வன்புணர்வு ஆபாசப்படத்துக்கு உள்ள கிராக்கிதான். தெற்காசியாவில் இந்த பாலியல் வன்புணர்வு ஆபாசப்படங்கள் தொழிற்சாலைகளின் வளர்ந்து வரும் ஒரு போக்கு காணப்படுகிறது, இந்தியாவில் அதற்குப் பெரும் கிராக்கி உள்ளதாகத் தோன்றுகிறது. இந்த விடயம் பற்றி மேற்கொண்ட ஆய்வு வெளிப்படுத்தியிருப்பது உண்மையான இந்திய ஆபாசப்பட இணையத்தளங்கள் விசேடமாக இந்த வகையான ஆபாசப்படங்களையே பார்வையாளர்களுக்கு விருந்தாக வைக்கிறது. இன்னமும் இதுபற்றிய சரியான எண்ணிக்கையை கணிக்க முடியாவிட்டாலும், இணையத்தில் உள்ள இத்தகைய வலைத்தளங்களின் இருப்பு மிகவும் குழப்பமானதாக உள்ளன. ஸ்ரீலங்காவில் அத்தகைய வலைத் தளங்களைத் தடுக்க எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் கவலை தருவதாக உள்ளது.
ஸ்ரீலங்கா தொலைத் தொடர்பு சட்டம் 1996 பிரிவு இல.27 ஊடாகத் திருத்தி அமைக்கப்பட்டு ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு (ரி.ஆர்.சி.எஸ்.எல்) அமைக்கபட்டது, அந்த திருத்தத்தின் மூலம் இப்படியான நிலமைகளைக் கையாள இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் நோக்கங்கள் அந்த சட்டத்தின் 4வது பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது: நுகர்வோர்கள், கொள்வனவாளர்கள் மற்றும் ஏனைய பாவனையாளர்கள்; நலன்களை பாதுகாக்கவும் மற்றும் முன்னேற்றவும் கட்டணங்களைப் பொறுத்து பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தரமானதும் மற்றும் பல்வேறு வகையானதுமான தொலைத்தொடர்பு சேவை வழங்கப்படும் அத்தடன் தொலைத் தொடர்பு உபகரணங்களும் வழங்கப்படும்.
ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் மேற்குறித்த விதியின்படி வழங்கப்படும் தகவல்களைக் கண்காணிக்கவும் மற்றும் பொதுமக்களின் ஒழுக்கம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு என்பனவற்றை மேம்படுத்துவதற்காக இத்தகைய வன்;பணர்வு தொடர்பான ஆபாசப்படங்களின் பாதைகளைக் கட்டுப்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கும் அது கடப்பாடுடையது. அரசாங்கத்தால் நடத்தப்படும் அத்தகைய ஒரு அங்கம் அத்தகைய வலைத் தளங்களைக் கட்டுப்படுத்தாவிட்டால், அத்தகைய இணைய சேவைகளின் அதிகரிப்பு இத்தகைய கற்பழிப்பு ஆபாசப்படங்களின் கிராக்கியை சர்வதேச அரங்கில் அதிகரிக்க வைக்கும். பின்னர் அத்தகைய விடயங்களின் பெறுமதியும் அதிகரிக்கும், அதன் கருத்து உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கையில் ஒரு பாரிய அதிகரிப்பு ஏற்படும்.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான தாக்கங்கள்
பாலியல் வன்புணர்வு குற்றங்கள் மற்றும் மனிதக் கடத்தல்கள் என்பன அதிர்ச்சி தரும் விதமாக உலகம் முழுவதும் பொதுவான ஒன்றாகவே உள்ளது. அதேவேளை சிலவற்றில் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்களும் இலக்கு வைக்கப்படுகிறார்கள். பாலியல் வன்புணர்வு குற்றங்கள் மிகவும் அருவருப்பான குற்றங்களாகும் மற்றும் சந்தேக நபர் தண்டிக்கப்பட்டால் அது ஆயுள் தண்டனையில் முடிவடையும். அது தீவிரமாக வெறுக்கத்தக்கது ஏனென்றால் அது அளவற்ற உளவியல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு, ஒவ்வொரு குற்றத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரியத்துக்கு உரியவர்கள் ஆகிய அனைவரிடத்திலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி அவமானத்துக்கு ஆளாகி மனிதாபிமானமற்ற நிலைக்கு தளளப்பட்டு மற்றும் பகிரங்கமாக வெட்கத்துக்கு ஆளாகும் பாதிக்கப்பட்டவரின் நிலையை கற்பனை செய்து பாருங்கள். காணொளிகளும் மற்றும் படங்களும் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டால் அவை காலவரையின்றி இணையத்திலேயே இருப்பதால், பாதிக்கப் பட்டவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் தொடர்ச்சியாக அந்த அந்த அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நினைவு படுத்தப்படும். இது குணமாக்கும் சிகிச்சை செயல்முறையை தடை செய்கிறது.
இதில் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டியது, நாடு கடந்து ஏற்படுத்தும் குற்றம் மற்றும் மனிதர்களை கடத்தும்போது குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் தடுத்து வைத்தல், அடக்குதல் மற்றும் தண்டித்தல் போன்ற குற்றங்களுக்கான பலேர்மோ நெறிமுறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டு விதிகளுக்கு ஸ்ரீலங்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மாநாட்டு உடன்படிக்கையில் 13 டிசம்பர் 2010 முதல் ஸ்ரீலங்கா ஒப்பமிட்டு; உள்ளதால் இந்த மாநாட்டின் பல விதிகளை அது திறம்பட நடைமுறைப்படுத்த வேண்டி உள்ளது. ஸ்ரீலங்கா அரசியலமைப்பின் 27 (13) பிரிவு குழந்தைகளைப் பாதுகாக்க அரசாங்கத்தை கட்டாயப்படுத்துகிறது, மற்றும் பிரிவு 12 (4) பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோருகிறது.
இத்தகைய நடவடிக்கைகள் இருந்தபோதிலும் சட்டத்தை அமலாக்கும் பொறிமுறை குறைவாக உள்ளது என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. முறையான நடவடிக்கைக்கு நேரம் தேவைப்பட்டாலும் கூட, அடிக்கடி பாதிக்கப் பட்டவர்கள் குற்றவாளிகளினால் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாகுகிறார்கள். குற்றவாளிகளுக்கு எதிரான வழங்குகளை திரும்பப் பெறும் வரை பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் இதன் காரணமாக பாதிப்புக்குள்ளான அநேகர் முறைப்படியான ஒரு புகாரைத் தெரிவிக்க மறுத்துவிடுகிறார்கள். இந்த நிலை அசாதாரணமான ஒன்றாக இருந்தாலும் முறையான ஒரு புகாரை வழங்கி நிலமையை இன்னும் மோசமாக்குவதைவிட வேதனையுடன் வாழ்வதையே அவர்கள் தெரிவு செய்கிறார்கள். பாலியல் வன்முறை குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரது நிலை இப்படியென்றால், பாலியல் ஆபாசப்படங்களால் பாதிக்கப்பட்டவர்களது நிலை எப்படியிருக்கும், அந்த நிகழ்வு வீடியோ கமராவால் படம் பிடிக்கப்பட்டு முழு உலகமும் பார்ப்பதற்காக இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது அல்லவா?
அரசின் செயற்பாடு
இணையத் தளத்தில் உள்ள ஆபாசப்படங்களைக் கையாள்வதற்கு குறிப்பிட்ட விதி முறைகள் எதுவுமில்லை. பொதுவாக ஆபாசப்படங்கள் சம்பந்தமான குற்றங்கள் ஸ்ரீலங்காவின் குற்றவியல் சட்டம் மற்றும் 1927ம் ஆண்டின் ஆபாச வெளியீடுகள் கட்டளைச் சட்டங்களின் கீழ் கையாளப்படுகிறது. எந்த ஒரு ஆபாசமான புகைப்படம் அல்லது சினிமாப்படத்தினை தயாரிப்பது, வெளியிடுவது, விற்பது அல்லது காட்சிப்படுத்துவது என்பன இந்த ஆபாச வெளியீடுகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகப் பார்க்கப்படும். இருந்தும் இதற்கான தண்டனை ஆறு மாதத்திற்கு மேற்படாத சிறைத் தண்டனை மற்றும் ரூபா 5,000 க்கு மேற்படாத அபராதம் என்பனவே.
கடத்தல் கற்பழித்தல் மற்றும் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் குற்றவியல் சட்ட நடைமுறையின் கீழ் மிகத் தீவிரமான குற்றங்களாகக் கருதப்படும், ஆனால் இந்தச் சட்டம் மேலதிக பிரச்சினையான காணொளிக் காட்சியை கவனத்தில் எடுக்காது. ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் ஏராளமான உதவிகளைச் செய்ய முடியும் ஆனால் அதற்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆணையே வழங்கப் பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் ஆபாசப்பட இணையத்தளங்களுக்கான அணுகலை மட்டுப்படுத்த கடுமையான அமலாக்க பொறிமுறைகள் பின்பற்றப்பட்டன.
எனினும் எச்சரிக்கை செய்யும் அளவுக்கு புதுப்புது ஆபாசப்பட இணையத்தளங்கள் உதயமாகிக்கொண்டே இருக்கின்றன, இந்த ஒவ்வொரு புதிய வலைத்தளத்தையும் கண்டுபிடித்து அவற்றின் அணுகலை கட்டுப்படுத்துவது ஓரளவு சவாலான விடயமே. தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த மார்ச் மாதம், சிறுவர்கள் சுரண்டலுக்கு உட்படுவதை தடுக்கவும் மற்றும் ஆபாசப்படங்களை சிறுவர்களுக்கு வெளிப்படுத்துவதை தடுத்து அவர்களைப் பாதுகாக்கவும் புதிய சட்டம் அறிமுகப் படுத்தப்படும் என்று அறிவித்தது. ஆபாச வெளியீடுகள் சட்டத்தில் உள்ள சட்ட விதிகளின் குறைபாடு மற்றும் அதன் தொன்மைத் தன்மை பற்றியும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன, எனினும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இதவரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை.>முடிவுரை<;">
கற்பழிப்பு ஆபாசத் தொழிற்சாலை சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினை ஆண்கள், பெண்கள், மற்றும் சிறுவர்களுக்கு ஒரு அச்சுறுத்தல் ஆகும். அது அனுமதியுடனான ஆபாசப் படங்களில் இருந்து வேறுபடுத்தப்பட வேண்டும். ஆபாசப் படம் தொடர்பான ஒப்புதலற்ற வெளியீடுகளும் இருக்கக்கூடாது, இது கையாளப்பட வேண்டிய மற்றொரு பகுதியாகும்.fy;">
பாலியல் வன்புணர்வு மட்டுமே ஒரு மிகப்பெரிய குற்றமாகும், அந்தக் குற்றத்தை காணொளியாகப் பதிவு செய்து முழு உலகத்துக்குமே பார்க்கும்படி செய்வது அப்படியான ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டு உயிர்வாழும் எந்த ஒருவருக்கும் இழைக்கப்படும் மோசமான சித்திரவதையாகும். வித்தியா சிவலோகநாதனின் விடயத்தில் நடந்ததைப்போல பாதிக்கப் பட்டவர் கொல்லப் பட்டிருந்தால், மரணமானவரின் குடும்பத்தினர் தாங்கள் உயிர்வாழும் நாட்கள் முழுவதும் அதிர்ச்சியிலும் துன்பத்திலும் அலைய வேண்டியதுதான். இந்த குறிப்பிட்ட விடயத்தை தீர்;ப்பதற்கு உடனடியாக நாட்டுக்கு ஒரு சட்டம் தேவைப்படுகிறது. மனிதக்கடத்தல் ஏற்கனவே நாடுகடந்த ஒழங்கமைக்கப்பட்ட ஒரு குற்றமாகக் கருதப்பட்ட போதிலும் இந்தக் கற்பழிப்பு ஆபாசப்பட விவகாரம் சூட ஒரு நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாகக் கருதப்பட வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று. விஷயங்கள் கை நழுவிப் போவதற்கு முன்பாக நாடுகள் இந்த விஷயத்தை முளையிலேயே ிள்ளி எறிய வேண்டும். தெற்காசிய நாடுகள் இந்த விடயத்திற்கு விரைவாகத் தீர்வு காண வேண்டும்.
2002ல் விபச்சாரத்திற்காக பெண்கள் மற்றும் சிறுவர்களைக் கடத்துவதற்கு எதிராகப் போராடி அதைத் தடை செய்வது தொடர்பாக சார்க் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது, ஸ்ரீலங்காவும் சார்க் அமைப்பில் ஒரு அங்கத்துவ நாடாகும். இந்த மாநாட்டின் நோக்கம் மற்றைய விடயங்களிடையே, பெண்கள் மற்றும் சிறுவர்கள் கடத்தப்படுவதை தடுப்பது, இடை நிறுத்துவது மற்றும் ஒடுக்குவது போன்ற பல்வேறு அம்சங்களைத் திறமையாகக் கையாள்வதற்காக அங்கத்துவ நாடுகள் இடையே ஒத்துழைப்பைக் கோருவதாகும். சார்க் நாடுகள் ஒன்றிணைந்து இந்த பாலியல் வன்முறை ஆபாசப் பட விடயத்துக்கான தங்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டியது அவற்றின் கடமை காலப்போக்கில் இது மனிதக் கடத்தல்கள் மேற்கொள்ளப் படுவதற்கும் வழி ஏற்படுத்தும். ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்த விடயத்தில் செயல்பட்டு வன்புணர்வு ஆபாசப்படங்களை எதிர்த்து போராடும் ஒரு மாதிரியாக முன்னேற வேண்டும், விசேடமாக இணையத் தளத்தில், மற்றும் இந்த முழு உலகுக்குமே இந்த பிரச்சினையில் ஒரு முன்மாதிரியாகத் திகழும் என நேர்மையுடன்எதிர்பார்க்கப் படுகிறது.<
(இந்தக் கட்டுரை முதலில் கொழும்பிலிருந்து வெளியாகும் “சிலோன் ருடே”யில் காணப்பட்டது. இந்த எழுத்தாளர் ஒரு சட்டத்;துறை போதனாசிரியராகவும் மற்றும் ஒரு சுயாதீன சட்ட ஆராய்ச்சியாளராகவும் உள்ளார். இவர் ஐக்கிய இராச்சிய நோர்த்தும்பிரியா பல்கலைகலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப் பட்டத்தையும் கொழும்பு பல்கலைக் கழகத்தில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தன்மை பற்றிய துறையில் ஒரு முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்)
தேனீ மொழிபெயர்ப்பு; எஸ்.குமார்
No comments:
Post a Comment