Friday, 14 July 2017

நேசகுமார் விமல்ராஜ் கொலை வழக்கில் எதுவித முன்னேற்றமும் இல்லை ... காணி அபகரிப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்த..

malayaka kuruvi :மட்டக்களப்பில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் காணி
அபகரிப்புகளுக்கு எதிராக துணிந்து செயற்பட்ட மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் சகோதரர் நேசகுமார் விமல்ராஜ் அவர்கள் அவரது வீட்டில் வைத்து முஸ்லீம்களால் 22/02/2017 சுடப்பட்டு இன்றுடன் 6 மாதங்கள் கடந்த நிலையில் விசாரணையில் எவ்வித முன்னேற்றங்களும் இல்லாத நிலை காணப்படுகிறது. இது எதனை உணர்த்தி நிற்கிறது? முஸ்லீம்கள் தமிழர்களை அதிகார பலங்களினாலும் அடக்குமுறைகளாலும் தங்களுக்கு எதிரான தமிழ் அதிகாரிகளையும் கட்டுப்படுத்திவைக்க நினைக்கின்றனர். விசாரணைகளை இடையூறு செய்கின்றனர். குறிப்பாக ஏறாவூர் புண்ணைக்குடா வீதி, தளவாய், சவுக்கடி போன்ற பிதேசங்களில் இடம்பெற்ற அத்துமீறிய குடியேற்றங்கள் , பனைவளங்களின் அழிப்பு, அரசகாணிகளை அபகரித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக துணிந்து விரைவாக நடவடிக்கை எடுத்தனால் சுடப்பட்டார்.


 காலம் கடந்துவிட்ட நிலையிலும் இப்போது நம்மக்களும் மறந்துவிட்ட நிலையே காண்ப்படுகிறது. இதையே முஸ்லீம் இன அதிகாரி ஒருவர் சுடப்பட்டால் விசாரணைகளும் அரச அதிகாரங்களும் வெகுண்டெழுந்து இந்நேரம் சுட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு காணாமல் போயிருப்பர். ஆட்சியாளர்களும் தமிழரிடம் மீண்டும் ஆயுத கலாச்சாரம் தலைதூக்குகிறது என்று சட்டத்தையும் இறுக்கி இருப்பார்கள். ஆயுதங்கள் கொண்ட முஸ்லீம்களை கணக்கெடுக்காத நிலையே இங்கு காணப்படுகிறது. இன்றைய நாளில் பிறந்தநாளை (கொண்டாடும்???) விமல்ராஜ்
அரசியல்வாதிகள் அச்சத்தில் மௌனங்காத்த போதும் கூட பாதிக்கப்பட்ட மக்களோடு நியாயத்துக்காக கூடவே நின்றவர். நிச்சயமாக இவரைப் போன்ற நேர்மையான அதிகாரிகளைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். மக்கள் பிரதிநிதிகளும் மௌனம் காத்து வருகின்றனர். சட்டம் தமிழர்களுக்கு என்றால் பின்புறதை திருப்பி காட்டுவது அண்மைய பல நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன. சம்பந்தப்பட்டவரகள் ஒன்றை மட்டும் மறந்துவிட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

ஒவ்வொரு வீட்டிலும், உறவினர்கள் நடுவேயும் ஒரு மாவீரர் போட்டோ பிரேமாக நடுவீட்டில் இருக்கிறது. உணர்ச்சிகள் மரத்துபோய்விடவில்லை. மீண்டும் போராளியாவது பெரியவிடயம் இல்லை என்று உணர்ந்து கொள்ளுங்கள். காவல்துறை உற்ங்குகிறதா என்று கேட்டு எழுத்துப்பதிவு போடவில்லை. மக்கள் பிரதிநிதிகளையும் நான் ஒன்றும் சொல்லவில்லை. ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். மக்கள் விழித்தெழுந்தார்கள். நீங்கள் காணாமல்போய்விடுவீர்கள். தொடர்ந்தும் அவதானிப்பில்!!!

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...