![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglZwvwsplT29X06zY2bBNeaYiz3Q5K1MByoCVuYCvx0NIW1KGGkCmiRRuOjm2V0jm0B8Lu40yQDl9XOuUs4xHQ7yCeodwTOScnBQcgh4zcfFRsLAxsqfAOf5b7joTJk1mDoaWb_M62PI0/s400/19756793_1230701787038984_1204502438529739055_n.jpg)
வேண்டும். தமிழ் மொழியினை இன்று இரு தரப்பினர் இலங்கையில் வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் தமிழர்களும், முஸ்லிம்களும். குறிப்பாக கம்பஹா, களுத்துறை, கண்டி, குருணாகல் ஆகிய மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை தமிழரை விட அதிகமானது. அங்கு தமிழ் மொழி மூலமான கல்வி மிகுந்த கஷ்டத்தின் மத்தியிலும் ஊக்குவிக்கப் படுகிறது. ஒரே கல்வித் திட்டமும் செயலில் உள்ளது. ஆகவே தமிழ் மொழியின் அழிவையும், அழிப்பையும் தவிர்த்து அதனை வளர்க்க வேண்டுமெனில், தமிழ்-முஸ்லிம் உறவு மேம்படுத்தப்பட்ட வேண்டும். ஒரு சில அரசியல்வாதிகள் விடும் பிழைகளை நாம் ஓட்டு மொத்த இனங்களின் மேலும் போட்டுவிட முடியாது. முற்போக்கு, இனவாதத்திற்கெதிரான நடுநிலை சக்திகள் அனைத்து இனங்களினுள்ளும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதுவே தீர்விற்கு வித்திடும். மாறாக ஒரு இனவாதம் இன்னொரு இனவாத்தைத் தோற்கடிக்காது. இது காட்டுத் தீ போன்றது. ஒரு காட்டுத் தீ, இன்னுமொரு காட்டுத் தீயினை நிறுத்தாது...
No comments:
Post a Comment