உண்மையில் நுவரேலியா மாவட்டத்தில் பன்னிரெண்டுக்கு மேற்பட்ட பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும். ஹட்டன்-டிக்கோயா தலவாக்கலை-லிந்துல்ல நகரசபைகள் மாநகரசபைகளாக தரமுயர்த்தப்பட வேண்டும்.
அதேவேளை பொகவந்தலாவை, மஸ்கெலிய, அக்கரபத்தனை, பூண்டுலோயா ஆகியவை நகரசபைகளாக தரமுயர்த்தப்பட வேண்டும்.
எனினும் முதற்கட்டமாக பத்து பிரதேச சபைகளை பெற்றுக்கொண்டு இரண்டாம் கட்டமாக பிரதேச சபைகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தவும் புதிய மாநகரசபைகளையும், நகரசபைகளையும் பெற்றுக்கொள்ளவும் தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது. இந்த புதிய உள்ளூராட்சி சபைகளுடன் சேர்த்து சமாந்திரமாக புதிய பிரதேச செயலகங்களும் உருவாக்கப்படும்.
இந்த புதிய பிரதேச செயலகங்களின் உருவாக்கமும் அதற்கிணங்க உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கை அதிகரிப்பும் மாநகர நகரசபை தரமுயர்த்தல்களும் மலையகத்தை நோக்கிய அரசியல் மற்றும் நிர்வாக அதிகார பகிர்வுகளுக்கு நிச்சயமாக வழிகாட்டும் என்பதில் மாற்றுக்கருத்து இடமில்லை.
மலைநாட்டின் புதிய இளந்தலைமுறையை சார்ந்த இளைஞர்கள் பெருவாரியாக இந்த புதிய சபைகளில் அங்கத்துவம் பெற்று அதன்மூலம் அதிகரித்த நமது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தேசிய அபிவிருத்தியை நோக்கி மலையக மக்களை அழைத்து செல்ல முடியும் என நாம் நம்புகிறோம் என்று தெரிவித்தார்
No comments:
Post a Comment