Friday, 14 July 2017

அமைச்சர் திகாம்பரத்தின் சேவைகளை விமர்சனம் செய்வது உள்நோக்கம் உடையதா?

Malayaga Kuruvi'ஆறுமுகன் ராமநாதன் அமைச்சராக 10 ஆண்டுகள் இருந்தார். அந்த 10 ஆண்டுகளில் 9 ஆண்டுகள் அவர் இலங்கையில் இருக்கவில்லை. உள்ளூரில் இருந்த காலத்தில் யாராவது பணம் செலவு செய்து கொழும்பில் கட்டிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டித் திறந்து வைப்பதிலும் விருந்துகளிலும் லிபர்டி சதுக்க இரவு விடுதிகளிலும் செலவாக்கினார். எவ்வாராயினும்  பேசிப் பயனில்லை.
தமிழ் முற்போக்கு கூட்டணியினர் சிற்சில வேலைகளை சிறப்பாக (நுவரெலிய-மஸ்கெலிய தேர்தல் தொகுதிக்கு) செய்து வருகின்றார்கள். மகிழ்ச்சி. கண்டி மாவட்டம் கௌரவ வேலு குமார் பாராளுமன்ற உறுப்பினர் வேலைகள் செய்வதாக செய்திகள் படித்து மக்கள் மகிழ்கிறார்கள்.மாத்தளைப் பிரதேசம் நிறைய தேயிலை மற்றும் றப்பர் தோட்டங்கள் நிறைந்த பகுதி. ஆனால் எங்களை யாருக்குமே இன்னும் தெரியவில்லை என்பது கவலையாகவும் கேவலமாகவும் இருக்கிறது.
அட்டன் நகர அபிவிருத்தியில் அமைச்சர் திகாம்பரத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர் : மாகாண உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்அங்கீகாரத்தையும் பலத்தையும் கொண்டு அட்டன் நகரை அபிவிருத்தி செய்யும் அமைச்சர் திகாம்பரத்தின் நடவடிக்கை குறித்து அட்டன் நகர மக்களும் அட்டன் நகருக்கு வந்து செல்கின்றவர்களும் வெளிப்படுத்தும் ஆர்வமானது மகிழ்ச்சிக்குரியதாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினரமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், மலையகத்தின் முக்கியமான கேந்திர நிலையங்களில் ஒன்றாகவும், உல்லாசப் பயணிகளுக்கு ஏற்ற இடமாகவும் அட்டன் நகரம் விளங்குகின்றது. ஏனினும், இந்த நகரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வந்ததே தவிர, எவரும் முன்வந்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பதை நகர மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளார்கள். குறிப்பாக அட்டன் புகையிரத நிலையைப் பகுதி நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த நிலையில், வெறுமனே தகர வேலியினால் சுற்றிலும் மூடி மறைக்கப்பட்டிருந்தது. அந்தத் தகரங்களில் பல்வேறு விதமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மிகவும் மோசமான முறையில் காட்சியளித்து வந்தது"

 எனினும், கடந்த பொதுத் தேர்தலின் போது எமது தலைவர் பி. திகாம்பரம் அட்டன் நகரை நவீன மயப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதற்கு அமைவாக தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சுப் பொறுப்பை ஏற்றவுடன், முதற் கட்டமாக புகையிரத நிலையத்தைச் சுற்றி அடிக்கப்பட்டிருந்த தகர வேலி அகற்றப்பட்டு பல்பொருள் அங்காடிக்கு முன்னால் உள்ள பிரதான பாதை அகலமாகப்பட்டுள்ளது. இப்போது அந்த இடத்தில் வாகனங்கள் தரித்து நிற்க விசாலமான இடம் கிடைத்துள்ளது. இதனால், வாகன நெரிசல் இல்லாதுள்ளது. பாதசாரிகள் நடந்து செல்லவும் வசதி கிடைத்துள்ளது. இதை சகல மக்களும் பாராட்டி வரவேற்றுள்ளார்கள்."

கடந்த காலங்களில் நகரத்தை அபிவிருத்தி செய்யப் போவதாகக் கூறி சில அமைச்சர்கள் அழைத்து வரப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டதேயொழிய உருப்படியான வேலைத் திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சர், நகர அபிவிருத்தி அமைச்சர் முதலானோரின் அனுசரணையோடு நகரம் அபிவிருத்தி அடையத் தொடங்கியுள்ளது.

புகையிரத நிலையத்தின் பழைய நுழைவாயில் மாற்றப்பட்டு, புதிய நுழைவாயில் ஊடாக பயணிகள் வசதியாகச் செல்வதற்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது. இது தவிர, வாகனத் தரிப்பிடத்துடன் கூடிய புதிய சந்தைக் கட்டிடம் ஒன்றும் அமையவுள்ளது. உல்லாசப் பயணத் துறையை விஸ்தரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அட்டன்-டிக்கோயா நகர சபையின் ஊடாக செய்ய முடியாததை அமைச்சர் திகாம்பரம் செய்து காட்டிவருகின்றார்.. இது மலையக அரசியல் வரலாற்றிலும், அட்டன் நகர வரலாற்றிலும் ஏற்பட்டுள்ள திருப்பு முனையாகும்.

மேலும், அட்டன்-டிக்கோயா நகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதி, அதை அண்டியுள்ள நகரங்கள் மற்றும் தோட்டங்களில் அன்று இருந்ததை விட இன்று சனத்தொகை அதிகரித்துள்ளது. அன்றாடம் நகருக்கு வருகின்ற மக்களின் தேவைகளும் அதிகரித்துள்ளன. இதை உணர்ந்து தான், அட்டன் புகையிரத நிலைய வளாகத்தில் வர்த்தகக் கட்டிடத் தொகுதி ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நகரத்தை அண்மித்துள்ள இளைஞர்கள் தமது வர்த்தகத்தைப் விரிவாக்கிக் கொள்ளவும் வழி பிறந்துள்ளது. இது பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் கிடையாது என்பதும் குறிப்பிடத் தக்கது;

எனவே, அரசியல் ரீதியில் காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ள சிலர், அட்டன் நகரில் தற்போது போதுமான வியாபாரம் இல்லாதுள்ளதாகவும், புதிய வர்த்தகத் தொகுதி அமைக்கப்படுவதால், வியாபாரம் பாதிக்கப்படப் போவதாகவும் நீலிக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக இருக்கின்றது. ஏனெனில், அட்டன் நகரில் உண்மையிலேயே வியாபாரம் இல்லாதிருக்குமாயின் நாளுக்கு நாள் புதிய வர்த்தக நிலையக் கட்டிடங்கள் எதற்காக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இலட்சக் கணக்கில் கோடிக் கணக்கில் ஏன் முதலீடு இடம்பெற்று வருகின்றது? நகரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்றால், அவற்றைத் தடுத்து நிறுத்தாமல் அட்டன்-டிக்கோயா நகர சபை நிர்வாகம் ஏன் அனுமதி வழங்கி வருகின்றது என்பதை சிந்துப் பார்க்க வேண்டும். 

புதிய வர்த்தகக் கட்டிடங்களால் பாதிப்பு ஏற்படுமாயின் அதை உணர்கின்ற அரசியல்வாதிகள் நகர சபை நிர்வாகத்துக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றார்கள்? 
அரசியல் ரீதியில் தமக்குக் கிடைத்துள்ள பலத்தையும் அங்கீகாரத்தையும் கொண்டு அட்டன் நகரை அபிவிருத்தி செய்யும் அமைச்சர் திகாம்பரத்தின் சேவைகளை வெறுமனே விமர்சனம் செய்வதும், அவருக்கு எதிராக மக்களைத் திசை திருப்ப முயல்வதும் சிலரின் வாடிக்கையாக இருந்து வருகின்றது. இத்தகைய நடவடிக்கைகளால் நகரத்தின் அபிவிருத்தி தடைப்பட்டாலும் பரவாயில்லை தமது அரசியல் தந்திரம் வெற்றி பெற வேண்டும் என்பதே அவர்களின் குறியாக இருந்து வருகின்றது. இதற்கு பொது மக்கள் ஒருபோதும் இடம் கொடுத்து விடாமல் சுயநலம் மிக்கவர்களை இனங்கண்டு ஒதுக்கி விட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...