Wednesday, 12 July 2017

கடலில் மூழ்கிய யானையை காப்பற்றிய கடல் படை .. கொக்கிளாய் முல்லைத்தீவு


முல்லைத்தீவு கடலில் சிக்கித் தவித்த யானை! காப்பாற்றிய  கடற்படையினர்- (வீடியோ)
இலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்டு உயிருக்காக போராடி கொண்டிருந்த காட்டு யானையொன்று கடற்படையினரால் பார்க்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் கடல் பிரதேசத்தில் 8 கடல் மைல் தொலைவில் குறித்த கடலில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.2 முல்லைத்தீவு கடலில் சிக்கித் தவித்த யானை! காப்பாற்றிய கடற்படையினர்- கிழக்கு கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இந்த யானை பார்க்கப்பட்டு கடற்படையின் சுழியோடிகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. யானையை மீட்கும் பணியில் வனத்துறை அதிகாரிகளும் இணைந்து கொண்டதாக கடற்படை கூறுகின்றது. சுழியோடிகள் மற்றும் கடற்படை படகுகளின் உதவியுடன் கடலிலிருந்து கரைக்கு திசை திருப்பப்பட்ட யானை வன ஜீவராசிகள் இலாகாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...