Friday, 14 July 2017

பொருத்து வீடுகளுக்கு எதிராக சுமந்திரன் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல்

தினக்குரல் வடகிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொருத்து வீடுகள் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்று கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று வியாழக்கிழமை உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.< >போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தை வடக்கு, கிழக்கில் உருவாக்குமாறு அரசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் தமிழ்த் தலைவர்களும் கோரிவரும் நிலையில், அந்தப் பகுதிகளில் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார்.< இந்தப் பொருத்து வீடுகள் வட, கிழக்கு மாகாணங்களின் காலநிலைக்கு பொருத்தமற்றவையென தமிழ்த் தரப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டி வருகின்றபோதும் பொருத்துவீடுகளை அமைப்பதில் மீள் குடியேற்ற அமைச்சர் விடாப்பிடியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ள அவர், இப்பகுதிகளில் பொருத்துவீடுகளை பெற விரும்பும் மக்களிடமிருந்து ஏற்கனவே விண்ணப்பங்களையும் கோரியுள்ளதுடன் அதற்காக பெருமளவானோர் விண்ணப்பித்துமுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மட்டுமல்லாது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இந்தப் பொருத்துவீட்டுத் திட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளதுடன், அமைச்சரின் இந்த முடிவை மாற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில், பொருத்துவீடுகளை அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில் அதற்கு தடையுத்தரவு கோரும் மனுவை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
பொருத்துவீடுகள் அமைப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட வேண்டுமென சுமந்திரன் தமது மனுவில் கோரியுள்ளார் . தினக்குரல்

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...