Wednesday, 12 July 2017

BBC :மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஓதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம்

இலங்கையில் மாகாண சபை தேர்தல்களில் பெண்களுக்கு 30 சதவீத இட
ஓதுக்கீடு வழங்கும் வகையில் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.1988ம் ஆண்டு மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள இந்த சட்டத் திருத்தத்தை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா முன்வைத்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி (ஹெசட்) அறிவித்தலும் வெளியாகியுள்ளது.
வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறும் மொத்த வேட்பாளர்களில் குறைந்தது 30 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இல்லையேல் வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும் என அந்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள மொத்த வாக்காளர்களில் 51 -52 சதவீதம் பெண்களாக இருக்கின்ற போதிலும் அரசியலில் ஈடுபாடு மற்றும் தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக அவர்களில் பலரும் ஆர்வம் கொள்வதில்லை.

அரசியலில் ஈடுபடவும் மற்றும் தேர்தலில் போட்டியிடவும் பெண்களுக்கு ஆர்வம் இருந்தாலும் அதற்கான வாய்ப்புகளை அரசியல் கட்சிகள் வழங்க முன்வருவதில்லை. ஆண்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
இதன் பின்புலத்திலே நாடாளுமன்றத்தில் தற்போது பெண்களுக்கான பிரதிநிதித்துவம் 5 சதவீதமாகவும் 9 மாகாண சபைகளிலும் 4 சதவீதமாகவும் காணப்படுகின்றது.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...