Friday, 14 July 2017

கேகாலை மாவட்டத்தில் டெங்கு பரவும் இடங்கள் .... ஹிங்குலோயா ,கிருங்கதென்யா,மகாவத்தை ,மாவான ,ரன்கோத்தல்ல

MAWNEWS · JULY 14, 2017 கேகாலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் பிரதேசமாக மாவனல்லை அடையாலாபடுத்தப்பட்டுள்ளது. இதிலும் விசேடமாக மாவனல்லை நகரமும் சில புறநகர்பகுதிகளும் டெங்கு அவதான இடங்களாக இணங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க மாவனல்லை நகரம் உட்பட ஹிங்குலோயா, கிருங்கதெனிய, மஹவத்த, மாவான, ரங்கோத்திவல ஆகிய 5 கிராம சேவகர் பிரிவுகளில் அதிகம் டெங்கு காய்ச்சல் பரவும் இடங்களாகும். இந்நிலையில் அரசாங்கமும் அரச அதிகாரிகளும் சுகாதார உத்தியோகத்தர்களும் தீவிரமாக செயற்பட்டாலும் இவ்விடங்களில் பொதுமக்களின் ஒத்துழைப்பு பூரணமாக அனைவராலும் கிடைப்பதில்லை என பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை மீறி பொதுமக்களின் நலன்களை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வோர் மீது நடவடிக்கை மேற்கொள்வதுடன் தவறான முறையில் நகரிலும் சுற்றுப் புறப்பகுதிகளிலும் குப்பைகளையும் கழிவுப்பொருட்களையும் கொட்டுவோரை அவதானிப்பதற்காக CCTV கெமராக்களை பயன்படுத்துவதாகவும் இதற்கு மாவனல்லை நகர வர்த்தக சமூகம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் கேகாலை மாவட்ட செயலாளர் சந்திரசிரி பண்டார தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...