Subashini Thf உத்தமம் பார்வைக்காக
**************************************
உத்தமத்தின் தலைமைப்பொறுப்பு செல்வமுரளி Selva Murali, தவரூபன் Thangarajah Thavaruban என்ற இரண்டு இளைஞர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தியை வாசித்தேன். உத்தமம் என்பது இருபது ஆண்டுகால தமிழ்க்கணினி தொடர்பான ஒரு சர்வ தேவ அமைப்பு என்பதாலும் அதன் ஆரம்பகாலம் தொட்டு 2009 வரை அதன் செயலவைக்குழுவிலும், கருத்தரங்க ஏற்பாட்டுக்கு குழுவிலும் என் பங்கினையும் ஆற்றியிருப்பதாலும், நான் இந்த அமைப்பிலிருந்து வெளிவந்து விட்டாலும், உத்தமத்தின் செயல்பாடுகளை அவ்வப்போது கவனித்து வருகின்றேன்.
உலகளாவிய அளவில் உள்ள தமிழ்க்கணினி தொடர்பான தரப்படுத்துதல் மற்றும் பிற அதர துறைகளில், தொடங்கப்பட்ட காலத்தை விட இன்று உத்தமம் ஆற்ற வேண்டிய பணிக்கான தேவை அதிகரித்துள்ளது என்றே கருதுகிறேன். இது வர்த்தகம், தொழில் நுட்பம், பதிப்புத்துறை, மென்பொருளுருவாக்கம் போன்ற துறைகளின் விரிவாக்கத்தின் அடிப்படையில் எழும் தேவை.
இன்றைய நிலையில் கணினி பயன்பாடு தமிழ் மக்களிடையே பெருவாரியாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமானால் தமிழ் மொழியில் பல்வேறு துறைகளுக்கானக் கணினி சார்ந்த வரையறைகள் உருவாக்கப்படுதல் என்பது கட்டாயத் தேவை.
ஏனைய உலக மொழிகள் கணினித்துறையில் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கும் போது பேஸ்புக் பயன்பாட்டில் தமிழ் அதிகம், எனச் சொல்லி பெருமை பட்டுக் கொண்டிருத்தல் மட்டும் போதாது, உதவாது.
பதிப்புத்துறை
வர்த்தகம்
வர்த்தக மேளாண்மை
விவசாயம்
கணினி வழி தமிழ்க்கல்வி
மின்னாக்கம்
தகவல் களஞ்சியம் பாதுகாப்பு
தமிழ் மொழி ஆய்வுகள்
புதிய மென்பொருளாக்கம் என்பதோடு இக்கால கணினி உலகத் தேவையாக வளர்ந்து வரும் பிக் டேட்டா, IoT, Industry 4.0 போன்ற துறைகளில் தமிழ் மொழியில் வரையறைகளும் ஆய்வுகளும் சீரிய முறையில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
உத்தமம் என்பது 4 பேர் கூடி கதைபேசிச்செல்ல உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு அல்ல. இது ஒரு அறிவியல் துறை சார்ந்த ஒரு அமைப்பு. இதன் தலைப்பொறுப்பையும் செயலவைப்பொறுப்பையும் ஏற்பவர்கள் கணினி தொழில்நுட்பத்துறையைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டியது இதன் செயல்பாடு ஒழுங்கே அமைய மிக அவசியம்.
உத்தமம் என்ற அமைப்பின் நோக்கம் அறியாதோர் சிலர் பதவிக்காக செய்த, செய்கின்ற சில செயல்கள் வருந்தத் தக்க வகையில் அமைந்தன. இந்த நிலை இந்த தலைமை மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதன் வழி களையப்படும் என நம்புவோரில் நானும் ஒருவர்.
வெறும் இளைஞர்கள் என்பது மட்டும் உத்தமத்தின் செயல்பாட்டிற்கு முக்கியமல்ல.
சிலர் தாம் இளைஞர்களாக இருப்பதாலேயே நமக்கு தகுதி இருக்கின்றது என எண்ணி விடுவதும் பொருந்தாது. கணினி தொழில்நுட்ப துறை சார்ந்த, பொது நலச் சிந்தனைக் கொண்ட, சிறந்த உழைப்பை நல்கக் கூடிய இளம் தலைமுறையினர் தான் இத்தகைய அமைப்புக்களின் செயல்பாட்டிற்கு வலு சேர்க்க முடியும். தலைமை பொறுப்பேற்றிருக்கும் செல்வமுரளி, தவரூபன் இருவரும் இத்தகைய பண்புகளோடு இயங்குகின்றனர். இது நம்பிக்கையளிக்கின்றது.
இளைஞர்கள் தணித்து இயங்குவது என்பதை விட கணினி தொழில்நுட்ப துறை சார் வல்லுனர்களையும் , பேராசிரியர்களையும், அனைத்துலக ஐடி நிறுவனங்களில் அனுபவம் பெற்ற அனுபவசாலிகளையும் ஆலோசகர்களாகக் கொண்டு உத்தமத்தை வழி நடத்த வேண்டும்.
புதிய தலைமை வந்தது. மீண்டும் இடையில் சிலர் பிரச்சனையை எழுப்பினர் என்றில்லாது புது ஊக்கத்துடனும் புத்துணர்ச்சியுடனும் உத்தமம் செயல்பட வேண்டும்.
உத்தமம் புத்துணர்ச்சியுடன் செயல்பட என் நல்வாழ்த்துகள்!!
சுபா<
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment