Friday, 14 July 2017

BBC நெடுந்தீவு குதிரைகள் பற்றிய கள ஆய்வுக்குழு ..


யாழ்ப்பாணத்திற்கு வடக்கே அமைந்துள்ள தீவுகளில் ஒன்றாகிய நெடுந்தீவு திவில் குதிரைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குழுவொன்றை நியமித்துள்ளார். நெடுந்தீவில் நிலவுகின்ற மோசமான வறட்சி காரணமாக, அங்குள்ள குதிரைகள் உயிரிழக்க நேர்ந்துள்ளதையடுத்தே, வடமாகாண சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வரட்சியால் இதுவரை ஆறு குதிரைகள் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வண்டுள்ளன. குடிப்பதற்கு நீர் இல்லாமலும், மேய்ச்சலுக்கென போதிய புல் இல்லாமலும் ஆறு குதிரைகள் வரையில் மடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் வழமை போல இதிலும் காசு அடிக்க மாட்டார்கள் என்பது கேள்வி குறிதான். வரலாறு அப்படி 
 கள ஆய்வுக்குப் பின் குதிரைகளைப் பாதுகாப்பது குறித்து அறிக்கை தயாரிக்கப்படும். நெடுந்தீவுக்கு இன்று வியாழக்கிழமை பயணமாகியுள்ள இந்தக் குழு, அங்கு குதிரைகள் வாழுகின்ற பிரதேசங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டதுடன், நெடுந்தீவு பிரதேச செயலக அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோதுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. இந்தக்குழு குதிரைகளை அழிவில் இருந்து, பேணி பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அடையாளங்கண்டு, அறிக்கை தயாரிக்கவுள்ளது. இந்த ஆய்வு நடவடிக்கைகள் இரண்டு வார காலம் நடைபெறும் எனவும் ஆய்வின் முடிவில் அறிக்கையொன்று முதலமைச்சரிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...