thenee.com : பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரனின்&பிரதேசவாத கொடூர சொற் பிரயோகங்களை வன்மையாக கண்டிக்கின்றோம் எதிர்கட்சி தலைவரிடம் வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் மகஜர்</
பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரனின் கொடூர பிரதேசவாத சொற் பிரயோகங்களை வன்மையாக கண்டிப்பதோடு அவா் நாட்டில் வாழுகின்ற மலையக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனா்.இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த சம்மந்தனிடம் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் வைத்து இம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்இ வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் அமைப்பின் இணைப்பாளருமான எம்பி. நடராஜ் கையொப்பம் இட்டு இந்த மகஜர் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் மலையக வம்சாவழி மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனா். கடந்த தேர்தல்களில் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன் இந்த மக்களின் அதிகளவாக வாக்குகளையும் பெற்றவா். எனவே இந்த நிலையில் அவா் மலையக சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சொற் பிரயோகங்களை மேற்கொண்டிருப்பது நாடு முழுவது வாழும் மலையக மற்றும் இந்திய வம்சாவழி மக்களின் மனங்களை சிதறடித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினா் நேசிப்பதாக கூறும் அதே தமிழ்த்தேசியத்தை நாங்களும் நேசிக்கின்றோம்இ அதற்காக எண்ணற்ற உயிர்த்தியாகங்களை செய்திருக்கின்றோம்இ அரை நூற்றாணடுகளுக்கு மேலாக வடக்கில் கிழக்கில் மலையக மக்கள் பரந்து வாழ்ந்து வருகின்றனா். ஆனால் இவா்கள் இன்றும் மாற்றான் தாய் மனப்பாங்குடன்தான் நடத்தப்படுகின்றமை மிகுந்த மனவேதனையளிக்கிறது
எனவே மலையக மக்கள காயப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் மோசமான சொற் பிரயோகங்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுகின்றோம் எனவும் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment