Wednesday, 9 August 2017

தமிழ் கிரிகெட் வீரருக்கு இலங்கை அணியில் வாய்ப்பு!

வீரகேசரி :Vijithaa on 2017-08-09 13:03:19 கிளிநொச்சியைச் சேர்ந்த விளையாட்டு வீரருக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, பளையை சேர்ந்த 23 வயதுடைய வேகப்பந்து வீச்சாளரான செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜின் திறமைகளை தொலைக்காட்சி ஒன்றின் மூலமாக அறிந்து கொண்ட வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், விஜயராஜை இன்று தனது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் மேலும் அவரது திறமைகளை வளர்த்துக்கொள்ளத் தேவையான வசதிகளையும் பயிற்சிகளையும் வழங்க முன்வந்துள்ளார்.
கிரிக்கெட் வீரனின் பயற்சிகளுக்குத் தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதாகவும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொள்வதற்கு வசதிகளையும் தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கும் தான் தயாராக உள்ளதாகவும் மேலும் விஜயராஜ் விரும்பும் பட்சத்தில் அவரை பொலிஸ் கிரிக்கெட் அணியில் உள்வாங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தயாராக இருப்பதாகவும் அவரிடத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...