நான் சிறுபான்மை இனத்தை சார்ந்தவள் ,தலித் பெண் ,லிப்ஸ்டிக் போடுபவள் ,ஸ்லீவ் லெஸ் அணிபவள் ,ஆங்கிலம் பேசுபவள் ,பெரியாரிஸ்ட் ,பெண்ணியவாதி என்கிற அத்தனை விஷயங்களுக்காகவும் என் மேல் பல்முனை தாக்குதல் ,கட்சி பாரபட்சமில்லாமல் ,மத பாரபட்சமில்லாமல் ,ஜாதி பாரபட்சமில்லாமல் ,பாலின பாரபட்சமில்லாமல் நடந்துகொண்டே இருக்கிறது .(இதை சொன்னால் victim card play செய்கிறேன் என்று சில உருப்படாமல் போன ,மூளை இல்லாத ஜென்மங்கள் சொல்லும் ,
ஆனால் "கீழ்ஜாதி தே......யா " என்று என்னை சொன்னவர்கள் என் ஜாதிக்காகதான் சொன்னார்கள் என்று சிறு குழந்தை கூட சொல்லும் என்னை பற்றி வந்த ஆபாச மீம்ஸுகள் இதுவரை முகநூலில் வேறு யாருக்கும் வந்ததில்லை .அவ்வளவு ஆயிரம் .கூகிளில் சென்று ஷாலின் என்று அடித்தால் அடுத்த வார்த்தை "மீம் " என்று வரும் . இது அத்தனையும் நடக்கும்போது எனது நெருங்கிய நண்பர்களே குரல் கொடுக்கவில்லை .< நம்புங்கள் .முதல் சில தடவை இது நடக்கும்போது எனக்கு யாரவது எனக்காக பேசுவார்களா என்று இருந்தது .அதை பற்றி விகடனில் பேட்டியும் கொடுத்தேன் .அதற்குப்பின்பு சிலபேர் எனக்கு ஆதரவாய் பேசினார்கள் . வழக்கு அப்பதிவு செய்ய உதவுவதற்கு அகிலா காமராஜ் ,அனைத்திந்திய மாதர் சங்க தமிழ்நாடு பொது செயலாளர் சுகந்தி ,கவிஞர் கவின்மலர் ,ஜோதிமணி மற்றும் எவிடென்ஸ் அமைப்பு முன்வந்தார்கள் ,ஆனால் சில காரணங்களுக்காக நான் வழக்கு போடவில்லை
.
எத்தனை பேர் மேல் வழக்கு போடுவது ?
காவல்துறை எனக்கு முன் நடந்த சைபர் க்ரைம் வழக்குகளை எப்படி கையாண்டது?
என்பதையெல்லாம் யோசித்து வழக்கு போட வேண்டாம் என்று முடிவு செய்தேன் .
இந்த நிகழ்வுகளுக்கு பின்னால் எல்லாம் ஒன்றே ஒன்றுதான் பலமாய் மனதில் தோன்றியது . என் பிரச்சனைக்கு என் ஒருவர் குரல் கொடுக்க வேண்டும் ? என் பிரச்னையை எனக்கு கையாள துப்பு இல்லையா ? இல்லை இந்த ஆபாச பேச்சுக்கள் என்னை பாதிக்கும் அளவிலேயா நான் பலவீனமாக இருக்கிறேன் ?
இல்லை .
நான்கு ஆண்டுகளாக களத்தில் இருக்கிறேன் .ஒரு ஆண்டாகதான் முகநூலில் இயங்கி வருகிறேன் .ஆனால் நான் களத்தில் கண்ட பிரச்சனைகளில் 30 சதவிகிதம்தான் இந்த முகநூலில் நான் சந்திப்பது .இது எனக்கு பிசாத்து .
அதுவும் இல்லாமல் சமூக உளவியல் தெரிந்திருப்பதால் ,இந்த ஆபாச வசவுகள் ,கொலை மிரட்டல்கள் போன்றவற்றை பயன்படுத்துவோரை நான் மனநோயாளிகளாக தான் பார்க்கிறேன் .அதே நேரம் இந்த மனநோயாளிகளால் மற்ற பெண்கள் பாதிக்கப்பட கூடாது என்று தீவிரமாக செயல்படுகிறேன் .இணைய ஆபாச தாக்குதல்களுக்கு ( (online abusive trolls ) எதிராக நான் ஒரு போரை துவங்கியுள்ளேன் .அதற்க்கு ஒரு முடிவு கட்டும்வரை நான் ஓயப்போவதில்லை .
அதுவும் இல்லாமல் சமூக உளவியல் தெரிந்திருப்பதால் ,இந்த ஆபாச வசவுகள் ,கொலை மிரட்டல்கள் போன்றவற்றை பயன்படுத்துவோரை நான் மனநோயாளிகளாக தான் பார்க்கிறேன் .அதே நேரம் இந்த மனநோயாளிகளால் மற்ற பெண்கள் பாதிக்கப்பட கூடாது என்று தீவிரமாக செயல்படுகிறேன் .இணைய ஆபாச தாக்குதல்களுக்கு ( (online abusive trolls ) எதிராக நான் ஒரு போரை துவங்கியுள்ளேன் .அதற்க்கு ஒரு முடிவு கட்டும்வரை நான் ஓயப்போவதில்லை .
அதேபோல் நானோ ,எனக்கு முன்பு தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்ட கவின் மலர், ஜோதிமணி ,எனக்கு பின்பு தாக்கப்பட்டு வரும் திவ்யபாரதியோ ,தன்யாவோ யாருடைய ஆதரவுக்காகவோ ,பச்சாதாபத்திற்காகவோ எங்கள் மேல் நடக்கும் தாக்குதல்களை சமூகத்தளங்களில் வெளியிடுவதில்லை .மாறாக எங்களை தாக்கும் மிருகங்களின் முகத்திரையை பொது வெளியில் கிழிக்கிறோம் .
இந்த தாக்குதல்களால் நாங்கள் சோர்ந்து போய்விடவில்லை ,எங்கள் கள அனுபவங்களுக்கு முன்னாள் இது ஒன்றுமே இல்லை .களத்தில் பலமாக இருக்கும் தெரிந்த எங்களுக்கு இந்த ஆன்லைன் புல்லுருவிகளை சரிக்கட்டுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல .
இவ்வளவு பெரிய நீண்ட பதிவை எழுதியதின் நோக்கம் .
நேற்று தன்யாவிற்கு ஆதரவாய் பேசியதிலிருந்து ,நீங்கள் ஏன் திவ்யாவிற்கு பேசவில்லை ,நீங்கள் என் கவினுக்கு பேசவில்லை என்று கேள்வி கேட்க்கும் சான்றோர்களே .
பெண்கள் என்றால் ஆதரவு கொடுத்தே தீர வேண்டுமா, எங்களுக்கு எங்கள் பிரச்சனைகளை கையாள சக்தி இல்லையா ? பெண்கள் பிரச்சனைக்கு பெண்கள்தான் ஆதரவு கொடுக்க வேண்டுமா ? என் என்னை கேள்வி கேட்க்கும் ஆண்கள் ஏன் பேசவில்லை ? பெண் பிரச்சனைக்கு ஆண்கள் பேச கூடாதா ?
தன்யா பிரச்சனையில் அவரின் பலவருடமுன்பு வந்த டீவீட்டுகளை காரணம் காட்டி அவரை அசிங்கம் செய்தபவர்கள் அதில் இருந்து தப்பிக்க பார்த்தனர் .அதற்காக நான் பேச செய்தேன் .
என்னை பொறுத்தவரை நான் முதலில் ஒரு பெண்ணியவாதி .அதற்க்கு பின்புதான் மற்ற சமூக நீதி பிரச்சனை எல்லாம் .ஏனென்றால் ஒடுக்கப்பட்டவர்களை விடவும் ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள் .
ஒரு பெண் கள போராளியாக இருக்கலாம் ,சினிமா நடிகையாக இருக்கலாம் ,பாலியல் தொழிலாளியாக இருக்கலாம் ,பத்திரிகையாளராக இருக்கலாம் ,வீட்டில் உட்கார்ந்து முகநூலை நோண்டிக்கொண்டிருப்பவராக இருக்கலாம் . என்னை பொறுத்தவரை இவர்கள் யார் மேல் ஆபாச தாக்குதல் நடந்தாலும் குற்றம்தான் .
ஆகவே வெள்ளை பெண்ணுக்கு ஆதரவாய் பேசுகிறீர்கள் ,கருப்பு பெண்ணுக்கு இல்லை என்கிற உங்கள் வேர்க்கடலையை எல்லாம் வேறு இடத்தில விற்கவும் . ஒருவருக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்று என்னிடம் கேட்க்கும் இந்த கேள்வியை அவர்களை பார்த்து ஷாலினுக்காக என் பேசவில்லை என்று கேட்கலாமே ?
எங்கள் பிரச்னையை எங்களுக்கு கையாள தெரியும் . ஒரு பெண்ணிடம் ஆதரவாய் பேசிவிட்டு ,இன்னொரு பெண்ணை அசிங்கமாய் பேசுவதை நீங்கள் நிறுத்தினாலே போதும் பூமி புண்ணியமடையும் .
ஷாலின்
No comments:
Post a Comment