Wednesday, 9 August 2017

ஆவா குழு அடக்கப்பட்டது ... 50 பேர்கை து ... யார் பின்னணியில் என்ற கோணத்திலும் ...



தினக்குரல் :  யாழ்ப்பாணத்தில்  இயங்கி வந்த " ஆவா' குழுவின் செயற்பாடுகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தக் குழுவின் தலைவர் உள்ளிட்ட 12 முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ஆவா குழுவுடன் தொடர்புடைய முக்கிய உறுப்பினர்கள் இருவர் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் அடங்குவதாகவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் கொழும்பில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஆவா குழுத் தலைவர் என்று கூறப்படும், விக்டர் நிசா எனப்படும் நிசாந்தன் மற்றும் அவரது இரண்டு சகாக்களும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புறக்கோட்டை மற்றும் மட்டக்குளி பகுதிகளில் வைத்து ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் நான்கு பேரை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர். இவர்களில் ஆவா குழுத் தலைவர் என்று கூறப்படும், விக்டர் நிசா எனப்படும் சத்தியவேல் நாதன் நிசாந்தன் மற்றும் அவரது இரண்டு சகாக்கள் விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர் விசாரணைகளின் ஆரம்பத்தில் கடந்த வாரங்களில் யாழ்ப்பாணத்தில் தமது குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான விபரங்களை வெளியிடாமல் இருப்பதற்கு முயற்சி செய்ததாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, ஜூலை இரண்டாம் வாரம் தொடக்கம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட தேடுதல்களில் 50 பேர் வரை கைது செய்யப்பட்டனர், அவர்களில் 27 பேர் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கில் செயற்படும் ஆவா குழுவினருக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து ஆவா குழுவுக்கு நிதியளிக்கும் அல்லது அவர்களை இயக்கும் நபர்கள் , குழுக்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகளுடன் சந்தேக நபர்கள் கடந்த காலங்களில் தொடர்பு வைத்திருந்தார்களா என்றும் புலனாய்வு அமைப்புகள் ஆராயவுள்ளன. இந்தச் சம்பவங்கள் தொடர்பான பயங்கரவாத புலனாய்வு பிரிவும் தனியான விசாரணைகளை நடத்தி வருகிறது. இதுபோன்ற குழுக்கள் நாட்டில் செயற்படுவதற்கு பொலிஸார் இடமளிக்காது. பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் இந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட கைதுகளை அடுத்து, மூன்று வாள்கள், ஒரு கத்தி, ஒரு உந்துருளி, மற்றும் ஒரு வெளிநாட்டுத் தயாரிப்பு கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...