Friday, 11 August 2017
தெமொதரை கல்குவாரியில் விபத்து பிரான்ஸ் படுகாயம்
தினக்குரல் : கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் படுங்காயம்<
- க.கிஷாந்தன்
எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதரயிலுள்ள கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் படுகாயமடைந்த நிலையில் 10.08.2017 அன்று மாலை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ் வெடிப்பு சம்பவம் 10.08.2017 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும், சாலி ரொப்ரோ (வயது 24) என்பவரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.<
மேற்படி பிரான்ஸ் பிரஜையுடன் பயணஞ் செய்த பெண் ஒருவரும் அதர்ச்சியடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.<
மேற்படி கற்குவாரியில் வைக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததால், பாரிய கல்லொன்று சுமார் 300 மீற்றர் தொலைவில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், அக்கல்லானது, கற்குவாரிக்கு அருகில் மோட்டார் சைக்களில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி நபர் மீது பட்டதால், அவர் காயமடைந்துள்ளதாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.
கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், அருகிலிருந்து தேயிலை தொழிற்சாலை அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment