Thursday, 10 August 2017

மதுவரி திணைக்கள அதிகாரிகள் சென்ற வாகனம் முற்றுகை! இளைஞர்களை தாக்கியதன் எதிரொலி


malaiyaka kuruv:  எபோட்சிலி - அட்டன் மார்க்க போக்குவரத்தும் மூன்று மணி நேரம் பாதிப்பு
- நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
அட்டன் எபோசிலி பகுதியில் இளைஞர்கள் மூவரை மதுவரி திணைக்கள அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்சிலி கமுகவத்தை தோட்டத்திலே 09.08.2017 மாலை 4 மணியவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதுபாணம் விற்பனை செய்யும் இடத்தை காட்டுமாறு அதிகாரிகள் கேட்ட நிலையில், தனக்கு தெரியது என குறித்த இளைஞன் தெரிவித்த போதே மதுவரி திணைக்கள அதிகாரிகள் தாக்கியதாக தெரியவருகின்றது.
சம்பவத்தினால் பிரதேச பொது மக்கள், அதிகாரிகள் சென்ற வாகனத்தை முற்றுகையிட்டதனால் எபோட்சிலி அட்டன் - மார்க்க போக்குவரத்தும் மூன்று மணி நேரம் வரை பாதிப்படைந்தது.
சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக மதுவரி திணைக்கள அதிகாரிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதியில் சோதனையில் ஈடுபட்ட நிலையில் மூன்று இளைஞர்களை தாக்கியதாக தெரியருகின்றது.
தாக்குதலுக்கு இலக்காகிய மூன்று இளைஞர்களும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிரதேச மக்களால் 119 அவர பொலிஸ் சேவைக்கு முறைபாடு தெரிவித்ததையடுத்து அட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்றதுடன், சுமார் மூன்று மணி நேரத்தின் பின்னர் பின்னர் அதிகாரிகள் மன்னிப்புக் கோரியதை அடுத்து முற்றுகையிட்ட அதிகாரிகளின் வாகனத்தை செல்ல பிரதேசவாசிகள் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை அட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அட்டன் மதுவரிதிணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கையில்,
குறித்த தோட்டபகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை இடம்பெறுவதாக தகவல் கிடைத்த நிலையில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டதாகவும் இளைஞர்கள் யாரையும் தாக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...