Sunday, 6 August 2017
ரணில் விக்கிரமசிங்க .. ஹட்டன் மட்டக்களப்பு பஸ் சேவை ..40 வது ஆண்டு அரசியல் நுழைவு விழா!
40 ஆண்டு பாராளுமன்ற அரசியல் பிரவேசம் நிறைவையொட்டி வரவேற்பு நிகழ்வு ஒன்றுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று அட்டன் நகருக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 40 ஆண்டு பாராளுமன்ற அரசியல் பிரவேசம் நிறைவையொட்டி ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் எற்பாட்டில் இந்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக அட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலும், நீக்ரோதாரராம பௌத்த விகாரையிலும், அட்டன் ஜும்மா பள்ளிவாசலிலும் இடம்பெற்ற விசேட பூஜைகளில் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அத்தோடு அட்டன் டிப்போவினால் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள அட்டனிலிருந்து மட்டகளப்பிற்கான பஸ் சேவையையும் ஆரம்பித்து வைத்தார். அதன்பின் மக்களை சந்திக்கும் முகமாக டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
இந் நிகழ்விற்கு நாட்டின் பிரதமர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.பியதாஸ, வடிவேல் சுரேஷ், லக்கி ஜெயவர்த்தன ஆகியோருடன் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். தினக்குரல்
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment