மலையக குருவி :(க.கிஷாந்தன்)
இந்த நாட்டில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.காவில் போட்டியிட விண்ணப்பிப்போர் குற்ற செயல்களில் ஈடுப்படாதவர்களாக இருக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்த பொலிஸ் சான்றிதழ்கள் பெறப்பட வேண்டும் .இவ்வாறாக குற்றமற்றவர் என சான்றிதழ் இருக்குமாயின் அவர்கள் மாத்திரமே ஐ.தே.கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடமுடியும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பகமுவ பிரதேச ஐ.தே.கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.கே.பியதாஸ தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருடகால தொடர்ச்சியான அரசியல் செயற்பாட்டை கௌரவிக்கும் நிகழ்வு அட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் 06.08.2017 அன்று இடம்பெற்றது .
இந்த நிகழ்வை தலைமை தாங்கி உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க 1972ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி தனது அரசியல் வாழ்கைக்கு காலடி எடுத்து வைத்தார். அவர் இன்றுவரை நாற்பது ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் அமைச்சராக எதிர்கட்சி தலைவராக மற்றும் பிரதமராக சேவை செய்து வருகிறார். இவர் ஆசியாவில் சிறந்த தலைவர் மற்றுமின்றி நமக்கும் நல்ல தலைவர் ஆவார்.
இவரின் தலைமையிலான ஐ.தே.கட்சி காலப்பகுதியில் மலையக பிரதேச கிராமங்கள், தோட்டப்பகுதிகள், நகரங்கள் என பாரிய அபிவிருத்திகள் முன்னேற்றம் அடைந்துள்ளது. அந்த வகையில் தோட்டப்பகுதி கல்வி முன்னேற்றம் பாடசாலை அபிவிருத்தி மலையக கல்வி கலாச்சாலைகள் என முன்னேற்றம் கண்டுள்ளது.
இது போன்று இன்னும் பணிகள் மலையக பகுதிகளுக்கு கோடி கணக்கில் செலவு செய்து வருகின்ற போதிலும் ஒன்றும் செய்யவில்லை என்றுதான் கூறப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் அம்பகமுவ பிரதேசம் அபிவிருத்தியில் அழகுப்படுத்தப்படும்.
இதற்கு எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் அட்டன் நகரசபை மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளை ஐ.தே.கட்சி வெற்றி கொண்டு திட்டங்களை நிறைவேற்றும். எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.கயில் போட்டியிட கஞ்சாகாரர்கள், திருடர்கள், மாணிக்ககல் வியாபாரிகள், சமூக விரோதிகளுக்கு இடம் கிடையாது.
நல்லவர்களுக்கு மாத்திரமே இடம் உண்டு. இதற்கு குற்றமற்றவர்கள் என்பதை நிருபிக்க பொலிஸ் சான்றிதழ் பெற வேண்டும் .
இதேபோல் அம்பகமுவ பிரதேச உள்ளூராட்சி சபைகளில் தேர்தலில் போட்டியிட நூற்றுக்கு 25 சதவீதம் பெண்களுக்கும் வாய்பளிக்கப்படும் என்றார்
No comments:
Post a Comment