Saturday, 12 August 2017

அட்டனில் மாவா போதை பொருள் தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு!

அட்டனில் மாவா போதை பொருள் தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு! மாவா மற்றும் என்.சி டின்கள் மீட்பு!! - நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் மாவா போதை பொருள் மற்றும் என்.சி புகையிலை டின்கள் ஒருதொகை கைப்பற்றியதுடன் அதனோடு தொடர்புடைய 6 பேரை கைதுசெய்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் பேருந்து திரப்பிட பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சட்டவிரோதமாக மாவா போதை பொருள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே 12.08.2017 மதியம் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். சுற்றிவளைப்பின் போது 75 என்.சி.புகையிலை டின்கள் உட்பட சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு 80 பக்கட்டுகளில் பொதிசெய்யப்பட்ட ஒருதொகை மாவா போதை பொருள் மற்றும் தயாரிப்பிற்கான பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் உட்பட போதை பொருளை பணம் கொடுத்து வாங்கிய 5 இளைஞர்களுமாக 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்து அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். malaiyakuruvi

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...