Esther Nathaniel (வி.எஸ்தர்) : மலையகம் என்றதும் பெரும்பாலானவர்களுக்கு குறிப்பாக ஏனைய பிரதேசங்களில் வாழ்பவர்கள் மலைநரட்டை நல்லnhரு சுற்றுலா தளமாகத்தான் பார்க்கிறார்கள் .சிலுசிலுவென்று குளிரும் புதிதாக திருமணத்தில் இணைந்தவர்கள் தெரிந்திருக்கும் தேனிலவு பிரதேசமாகவும் பாடசாலை மாணவர்களளுக்கான சுற்றுலா தளமாகவுமே மலைநாடு இன்றுப்பர்க்கப்படுகின்றது.
மலையகத்தில் தேயிலையும் இறப்பரும் பயிரிடப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. மேலும் பிரித்தானியர்களால் 1815 ஆண்டு கண்டி கைப்பற்றப்டடப்ப்pன்னர் மலைநாட்டை அவர்கள் ஒரு பெருநN;தாட்டத்தை மாற்ற முனைந்து அதில் வெற்றிப் பெற்றனர். இவ்வெற்றிக்கும் பொருளாதார செழிப்புக்கும் பிண்ணனியில் மிகப்பெரிய மனிதத்துன்பியல் வரலாறு கடந்த 200 வருடங்களாக தொடர்கின்றது என்றால் அது மறுப்பதற்க்கு இல்லை.
மேலே நான் குறிப்பிட்ட தலைப்பை அணுகுவதற்கு முன் மலையகத்தின் சில வரலாறுகளை உங்கள் கண்முன் ஒரு வரலாற்று வரைபடத்தை விரித்துக்காட்ட விரும்புகின்றேன். தென்னிந்தியாவின் பண்ணைமுறை அடிமை வாழ்க்கையும் தென்னிந்தியா இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி உட்பட்ட பல்வேறு இடங்களையும் மிகவும் தாக்கிய பஞ்சம் நிலைப்பாடானது மனிதவளத்தை வெளிநோக்கித்தள்ளியது. மக்கள் வயிற்றுப்பிழைப்புக்காகவும் எங்கெயாவது தொழில் வேண்டிப் புறப்படலாம், என்ற மன நிலையை இவ் சந்தர்ப்பத்தை மிகவும் லாவகமாக ஏற்கனவெ தென்னிந்தியாவை முற்றுகையிட்டிருந்த ஜரோப்பியருக்கு கையில் அல்வா கிடைத்தது போலிருந்தது. கரும்புத் தின்ன கைக் கூலி வேண்டுமா? என்ன!!
அவர்கள் மலேசியா, பிஜித்தீவுகள், தென்னாபிரிக்கா ,இலங்கை நாடுகளுக்கு தொழிலாளர்களை மிகமிக மலிவான கூலிக்காகக் தழிழ் தரகர்கள் மூலமாக பசப்பு வார்த்iகைளை அம்மக்களிடம் கூறி அவர்களை கொண்டு வந்தனர். இங்கே வந்தப் பின்னர்தான் வந்த பாருடா வழுக்கை பாதை என்ற நிலையை அவர்கள் கண்டனர்.
பிரித்தானியர் அவர்களை கொண்டு காடுகளை வெட்டி தேயிலையை பயிரிட்டனர் இது ஒரு நீண்ட வரலாறு. பின்னர் வரும் நாட்களில் இந்த வரலாற்றை நான் புள்ளிவிபர அடிப்படையில் அவர்கள் பட்ட துன்ப வரலாற்றையும் எப்படி இலங்கை அரசினால் அவர்கள் அவர்கள் பழிவாங்கப்பட்டு பிரஜா உரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக மாற்றினர்கள் என்பதையும் இனிவரும் நாட்களில் எழுதுவேன்.
இப்போது அங்கிருந்த வந்த எமது 04 தலைமுறை மக்கள் இன்றும் மலையகப் பெருந்தேட்டங்களில் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள் ஜீவனோபாயக் தொழிலாக இந்த தேயிலை செடிகளின துளிர்களேக் காணப்படகின்றது.
மலையகப் பெண் தொழிலாள்கள்
பெருந்தாட்டங்களில் அதிகமாக வேலை செய்வது பெண் தொழிலாளர்களே. .அவர்களுக்கு நாட்கூலி அடிப்படையில்தான் சம்பளம் வழங்கப்படுகின்றது. எவ்விதமான மாதச்சம்பளம் அடிப்படையின்றி அவர்கள் பறிக்கும் கொழுந்தின் நிறையை கணித்தே அவர்களின் நாடகூலி நிர்ணயிக்கப்படுகின்றது. குறைந்தக் கூலியல் நிறைய வருமானத்தை ஈட்டும் நடவடிக்கையில் பெருந்தோட்டப் பெண்கள் ஈடுபடுத்தி உள்ளார்கள்.
இப்படியாக சதா உழைக்கும் வர்க்கமான இப் பெருந்தோட்டப் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களையும் அவர்களை இவ் தோட்டங்களில் அன்றிலிருந்த இன்றுவரை கொழுந்தெடுக்கும் மனித இயந்திரங்களாக வைத்துள்ளார்கள். கொழுந்துப் பறிக்க எவ்விதமான கல்வித் தகைமைகளும் அவசியமில்லையென்பதாலேயே அவர்கள் கற்றலுக்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனது தாயார் தரம் 02 ம் ஆண்டு கல்விக் கற்கும் போது வெறும் 10 சதத்தக்கு தேயிலைக்காடுகளில் படரும் புல்லுகளை வெட்டுவதற்க்காக போனவர் .அப்பொது குழந்தை தொழிலாளர்களையும் களை எடுக்க கொழுந்த பைகளை சுமந்து வர உள் வாங்கப்பட்டவர்களில் எனது தாயாரும் ஆவார்.
நான் மலையகத்தில் பிறந்த வளர்ந்த அந்த சமூகத்தைப் பற்றி நன்கறிந்தவர் என்ற அடிப்படையில் மலையகப் பெண் தொழிலாளர்களுக்க அதிகமான பிரச்சனைகள் சுகாதாரப ரீதியில் காணப்படுகின்றது .அவர்கள் பலவிதமான அசௌரியங்களுடன் பெருந்தோட்டங்களில் வேலை செய்கிறார்கள் ஆனால் இந்த விடயத்தை யாரும் யாருமே சிந்திப்பதில்லை .மலையகத்தை மூடு பனி சுழ்ந்திருக்கும் ; அழகைத்தான் மாறி மாறி புகைப்படமெடுத்தும் ரசித்தவிட்டு மக்கள் கடந்து போகிறார்கள்.ஆனால் மூடுப்பனிக்குள் எத்தனை துன்பங்கள் உறைந்து கிடப்பதை யாரும் அறிவதில்லை அந்த துயர்களை உங்கள் முன் கொண்டு வரவேக் இகட்டுரையினை ஆக்கினேன்.
மலையகத்தில் தொழில் செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பல்வேறு அசெகரியங்கள் ஏற்படுகின்றது. முறையான சுகாதார நப்கின்களை (றுளைரிநச) அவர்கள் பாவிப்பதில்லை. வெறும் துண்டுதுணிகளை பாவிக்கிறார்கள ;இதனால் அவர்கள் நீண்ட நேரம் தேயிலை மலைகளில் கொழுந்தெடுக்கும் போது அவற்றை அடிக்கடி மாற்ற இயலாமல் காணப்படுகின்றது. அங்கே அதற்கான மலசலக் கூட நீர் வசதிகள் முறையாக இல்லை. அதிகாலை 7.30 மணிக்க கொழுந்தெடுக்க சென்றால் மத்தியானம் 12.30 மணிக்கு வந்து பின்னர் மாலை 05 .30 மணிக்கு வீட்டுக்கு வருகிறார்கள்..
இந்நிலையலி;ல் அவர்கள் துணித்துண்டங்களைப் பாவிப்பதால் அவர்களுக்க மிகுந்த அளெகரியம் உருவாகின்றது.இதனை நான் பலப் பேரிடப் அல்ல நேரடியாக அறிந்துளளேன்.துண்டு துணிகள் பாவிப்பதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் இருப்பதாக 2007 ம் ஆண்டு டீடீஉ உலகசேவை இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிவித்தது.
இவ்வாய்வில்:
துண்டு துணிகள் பாவிப்பதால் அதிகமான இரத்தப் போக்கை அடையாளம் காணமுடிவதில்லை.
துண்டு துணிகள் ஆரோக்கியமற்றவை
ஆரோக்கியமற்ற துண்டு துணிகளால் வெகு சீக்கிரமாக கர்ப்பவாசல் புற்றுநோய் உருவாகின்றது.
அவை நீண்ட நேரம் பாவிப்பதால் எரிச்சலும் தெடர்ச்சியான உராய்வினால் ஏணைய புண்களும் தொடை சதைகளில் பகுதியில் புண்கள் உருவாகின்றது.
இந்த ஆய்வு உண்மையில் மிகவும் மிகவம் வரவேற்கத்தக்கதாகும். அனேக வயது வந்தவர்களும் இளம் பெண்களும் துண்டு துணிகளால் அவதிப்படுகின்றார்களஇதனை சுட்டிக்காட்டிய டீடீஉ அவர்களுக்க இலவசமாக நப்கீன்களையும் சுகாதார துவாய்களையும் வழங்க வேண்டும் என மாநகராட்சிகளுக்கு வேண்டுகோள் ஒன்றை விட்டது.
ஆரோக்கிய துவாய்களின் விலையானது 100 ருபாய் தொடங்கி 500 ருபாவரை விற்பனை செய்யப்டுகின்றது. தரமான பெரிய றாiளிநச நப்கீனின் விலையானது 440 ஆகும். மலையக பெண் தொழிலாளர்களின் நாட்கூலியே 650 ருபாவாகும். அவர்கள் எப்படி ஒவ்வொரு மாதமும்100 ருபாய் தொடங்கி 440 வரை மாதவிடாய்க்கான நப்கீன்களை வாங்க முடியும்.? இது மலையகத்தில் தொழில் புரியும் பெண்கள் எதிர் நோக்கியுள்ளனர்.
மேலும் 40-45 வயதை ஒத்த பெண்கள் தொடர்ச்சியாக இரத்தப்போக்கை கொண்டுள்ளனர். இவர்கள் இதற்காக கை வைத்தியங்களையும் மருத்தவ செலவுகளையும் செய்து பயனற்றவேளையில் அரசாங்க வைத்தியசாலைகளில் இருந்த கர்ப்பபையை எடுத்து விடுகிறார்கள்.
காரணம் அவர்கள் அதிகமாக சுமை சுமப்பதால் குறைந்தது 20 கிலோ தெடங்கி 50 கிலோ வரை கொழந்தை தலையில் சுமக்கிறார்கள். மேலும் கொழுந்து மட்டுமல்ல கொழுந்தப் பறித்த பின்னர் விடுகளுக்க திரும்பும்போது விறகையும் சுமந்து வருகிறார்கள.; இன்றுவரை அவர்கள் எரிபொருளாக விறகை;ப் பாவிக்கிநார்கள். இதனால் தானாகவே இவர்களுக்கு கர்ப்பபை இறங்கி விடுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் மலையகப் பெருந்தோட்டங்களில் வாழும் பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் பயன்படுத்தும் நப்கீன்களை இப்போது ஓரளவு அறிந்து வைத்துள்ளார்கள். எனது தாயின் காலத்தில் தலைமுறை தலைமுறை இந்த நப்கீன்களைப் பற்றி அறிந்திராவிட்டாலும் இப்Nhது "கோட்டஸ்" என்றப்பெயரில் இதனை அழைக்கிறார்கள். ஆனால் இதனைப் பயன்படுத்தவதில் நடைமுறை சிக்கல்களை கொண்டுள்ளார்கள். காரணம் மூடநம்பிக்கைகளும் அவற்றின் இடையில் வந்து பாயைப் போட்டு படுத்துக் கொள்கின்றன. என்னவெனில் நீங்கள் கோட்டஸ் பாவித்தால் பேய்பிடிக்கும். காரணம் பேயிக்கு இரத்தம் பிடிக்கும். பின்னர் கோட்டஸ் பாவித்தால் பேய் பிடிக்குதோ என்னவோ அதனை சுகாதாரமான முறையில் அகற்றவேண்டும். நம் எல்லோருக்கும் தெரியும். பல்கழைக்கழகத்தில் பெண்மாணவிகளின் கழிப்பறையில் ஆங்காங்கேக் காணப்படும் இரத்தம் தோய்ந்த நப்கீன்களை பார்க்கும் போதும் அல்லது பெரு நகரங்களில் காணப்படும் கழிப்பறைகளில் சுகாதர முறையில் அகற்றப்படாத நப்கீன்களைக் காணும் போது எம்மை அறியாமலே நாம் பெண்களை திட்டிக் கொண்டு செல்வதுண்டு.
உண்மையில ; அதனை யாரும் விரும்புவதில்லை. இப்படியான பல சிக்கல்களைக் கொண்ட நப்கீன்களை மலையகப் பெண்கள் பயன் படுத்தவதிலும் சிக்கல்களைக் கொண்டுள்ளார்கள். மிகவும் குறுகிய இடவசதிகள் கொண்டது;ம் லயத்திலும் பொதுக் கழிப்பறைகளைப் பாவிக்கும் மலையகத்திலும் ஏன் கழிப்பறைகளே இல்லாத நான் வாழ்ந்தத் தோட்டத்திலும் இந்த நப்கீன்களை பயன்படுத்துவதை விட ஊசிக்காதில் ஒட்டகத்தை அனுப்பிடலாம். மேலும் மலையகத்தில் கழிவகற்றல் என்பதே இன்னுமொருப் பிரச்சகையாகும் ;.ஆகவே இந்தக் காரணங்களினால் இரத்தத்தோடு இரத்தத்தை தண்ணியோடு தண்ணியில் கழுவி விடுவது அவர்களுக்கு மிகவும் இலகுவானக்காரியமாக உள்ளது.
ஆகவே துண்டு துணிகளும் அவர்களுக்குப் பழக்கப்பட்ட ஒரு விடயமாக மாறிவிட்டமையும் குறிப்பிடப்படவேண்டும்.
இங்கே நான் குறிப்பிட்ட விடயத்தை தவிர அவர்களுக்கு குடும்பக்; கட்டுபாடுகள் தொடர்பான விழிப்புணர்வும் அவசியமாகின்றது .
அதனை இன்னுமொரு சந்தர்ப்பத்தில்ச எழுதுகிறேன் சுகாதாரமான முறையில் நப்கீன்களை பயன்படுத்தவதற்கு அம்மக்களுக்கு நேர்த்தியான விழிப்புணர்வும் அதில் உள்ள நன்மைகளையும் இலகுத்தன்மைப் பற்றியும் தக்க ஆலோசனைகள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றது.
இவற்றை முன் கொண்ட செல்லும் பங்கு விழிப்படைந்திருக்கும் உமது கடமையுமாகும்.;
No comments:
Post a Comment