Tuesday, 18 July 2017
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் வி. பாலகிருஷ்ணன் இலங்கை வருகை
சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கவுள்ள அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார்.
அத்துடன் அவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவையும் சந்திக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பான இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரையும் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளும், சிங்கபூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். தினகரன்
பிறப்பு சாட்சி பத்திரம் .. நாவலப்பிட்டி பிரதேச செயலகத்தின் தூக்கம்
Yasodaren Yasodaren ·
எனக்கு நடந்த கொடுமை...... பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு இலங்கை வங்கியில் பணத்தை செலுத்தி (600 /- )அதன் பிரதியையும்,சுய முகவரி எழுதப்பட்டு ,35/ - பதிவுத் தபால் முத்திரை ஒட்டப்பட்டு நாவளப்பிட்டி பிரதேச செயளகத்திற்கு அனுப்பி மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் இன்றுவரை கிடைக்கவில்லை.சென்று கேட்டால்..ஒன்ரை ஒன்று குறை கூறுகின்றனர் (பிரதேச செயளகம்,இரு தபால் நிலையங்கள் )...இதுதான் இலங்கை நிர்வாகம்.
Monday, 17 July 2017
அமைச்சர் வே.இராதாக்கிருஷ்ணன் : வீட்டு வேலைக்கு மலையக மக்கள் என்ற நிலைய மாற்றுவோம்!
மலையக குருவி;மலையக மக்கள் என்றதும் வீட்டு வேலைக்கு ஆட்கள் எடுக்கலாம் என்ற நிலையை மாற்றுவோம்
- கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்
செய்தியாளர் - பா.திருஞானம்
மலையக மக்கள் என்றதும் வீட்டு வேலைக்கு ஆட்கள் எடுக்கலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும் அதற்கு அனைவரும் கல்வி கற்க்க வேண்டும். அதனாலேயோ மயைக கல்வி அபிவிருத்திக்கு பல்வேறு செயற்திட்டங்கள முன்னெடுக்கபட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டு வரும் போது ஒரு வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டும் என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தவைவருமான வே.இராதாகிருஸ்ணன்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் இனைந்து பெருந்தோட்ட மக்களுக்கும் வீடமைப்புகளை மேற்க் கொள்ளும் பொருட்டு லிந்துல்ல பம்பரகல்ல தோட்டம் அப்பர்கிரன்லி பிரிவில் 30 வீடுகளை அமைப்பதற்க்கான அடிகல் நாட்டும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.இலங்கை தேயிலை 150 வது வருஷம் .. வாடும் மக்கள்.. கொழிக்கும் கம்பனிகளும் அரசியல்வாதிகளும் ...

Scotsman James Taylor is the acknowledged pioneer of Ceylon Tea.
Arriving in Ceylon in 1852 as a 17-year-old, he was sent to Loolecondera
Estate, a coffee plantation in the Kandy District. Taylor was made its
manager within five-years as Ceylon went on to become the world’s
largest coffee producer by 1860. Despite the successes of coffee, the
owners of Loolecondera suggested to Taylor that he experiment with tea.
Having initially planted seedlings along the roadside of Loolecondera in
1866, Taylor cleared and planted a 21-acre plot of tea the following
year – Field No 7. It was fortuitous timing as the coffee rust disease
first made an appearance two years later, and within the ensuing two
decades, coffee was all but wiped out. From an initial export of a mere
23 pounds in 1872, tea production expanded rapidly and by the turn of
the century, exports had risen to 151,000,000 pounds. So too, did the
glowing reputation of Ceylon Tea, as the industry continued to grow and
flourish moving into the 20th century.
பெருமாளம்மாள் 1896 ஆண்டிலேயே ஒரு தோட்டத்தை நிர்வகித்த தமிழ் பெண்
Suppaiah Rajasegaran சு.இராஜசேகரனின் Old is Gold:
இவ் அபூர்வ புகைப்படம் 1896ம் ஆண்டில் எடுக்கப்பட்
து. பெண்மையையே மதிக்காத ,பெண்ணடிமை நிலவிய காலப்பகுதியி ல் ஒருத் தோட்டத்தையே நிர்வகித்ததாக பெண்மனியை கேள்விப்பட் டுள் ளீர்களா.....?
தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 'நாகன்' என்பவர், இல ங்கையில் நாவலப்பெட்டியை ச்சார்ந்த 'குயின்ஸ் பெரி' தோட்டத்தின் பெரிய கங்காணியாக வேலைப்பார்த்தார். அவரது மறைவிற்கு பின் அவ்விடத்தை" யார் நிரப்புவார்கள் ?" எனத்தடுமாறிய போதுதான், தோட்டநிர்வாகமே அதனை ஈடு செய்யக்கூடியவரும் ஆளுமை, திறமை, நா..நயம், என்பவற்றை கருத்தில் கொண்டு அவரது துணை வியாரான 'பெருமாளம்மாள்' அவர்களே என முடிவு செய்து பெரிய கங்காணி பதவியை அந்த அம்மாளி டம் கொடுக்கப்பட்டது. 1896ம் ஆண்டு முதல் 1936ம் ஆண்டுவரையில் குயின்ஸ்பெரி தோட்டத்தின் கங் காணியாக இருந்துள்ளார்.
தோட்டத்தொழிளாலரிலிருந்து, ஏனைய கங்கா ணிகளிடமும்.தோட்ட உத்தியோகத்தர்களிடமும் துரைமார்களிடமும் நன்மதிப்பை பெற்று ள்ளார்.அவர் எப்படி தமிழில் உரையாடுவாரோ அதேப்போல ஆங் கிலத்திலும் வெளுத்துக் கட்டியுள்ளார். கண்டிப்பாக இருந்தாலும் கருணை மிகுந்தவராகவும் இருந்துள் ளார். இவரது அரும் முயற்சியா ல்தான் மலையகத்தி ல் சிறப்பாக கூறப்படுகின்ற "நமநாத சித்தர் ஆலய ம்" அமைக்கப்பட்டு இன்றும் சிறப்பாக கூறப்படுகிற ஆலயமாக திகழ்கி றது.
மலையக வரலாற்றில் துணிச்சல் மிக்க இருந்த பெருமாளம்மாளின் பெயரும் பதியப்படவேண்டும் Thinakaran Velautham நவனாதச்சித்தரை கொல்லிமலையிலிருந்து இலங்கைக்கு அழைத்து வந்தவரே இவர் தான். இலங்கையின் நவனாதச்சித்தரின் அற்புதங்கள் இவருடனான உரையாடலிலிருந்தே தொடங்கு கின்றன. " ஆயா நினச்சது. அடிமை வந்தது "
து. பெண்மையையே மதிக்காத ,பெண்ணடிமை நிலவிய காலப்பகுதியி ல் ஒருத் தோட்டத்தையே நிர்வகித்ததாக பெண்மனியை கேள்விப்பட் டுள் ளீர்களா.....?
தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 'நாகன்' என்பவர், இல ங்கையில் நாவலப்பெட்டியை ச்சார்ந்த 'குயின்ஸ் பெரி' தோட்டத்தின் பெரிய கங்காணியாக வேலைப்பார்த்தார். அவரது மறைவிற்கு பின் அவ்விடத்தை" யார் நிரப்புவார்கள் ?" எனத்தடுமாறிய போதுதான், தோட்டநிர்வாகமே அதனை ஈடு செய்யக்கூடியவரும் ஆளுமை, திறமை, நா..நயம், என்பவற்றை கருத்தில் கொண்டு அவரது துணை வியாரான 'பெருமாளம்மாள்' அவர்களே என முடிவு செய்து பெரிய கங்காணி பதவியை அந்த அம்மாளி டம் கொடுக்கப்பட்டது. 1896ம் ஆண்டு முதல் 1936ம் ஆண்டுவரையில் குயின்ஸ்பெரி தோட்டத்தின் கங் காணியாக இருந்துள்ளார்.
தோட்டத்தொழிளாலரிலிருந்து, ஏனைய கங்கா ணிகளிடமும்.தோட்ட உத்தியோகத்தர்களிடமும் துரைமார்களிடமும் நன்மதிப்பை பெற்று ள்ளார்.அவர் எப்படி தமிழில் உரையாடுவாரோ அதேப்போல ஆங் கிலத்திலும் வெளுத்துக் கட்டியுள்ளார். கண்டிப்பாக இருந்தாலும் கருணை மிகுந்தவராகவும் இருந்துள் ளார். இவரது அரும் முயற்சியா ல்தான் மலையகத்தி ல் சிறப்பாக கூறப்படுகின்ற "நமநாத சித்தர் ஆலய ம்" அமைக்கப்பட்டு இன்றும் சிறப்பாக கூறப்படுகிற ஆலயமாக திகழ்கி றது.
மலையக வரலாற்றில் துணிச்சல் மிக்க இருந்த பெருமாளம்மாளின் பெயரும் பதியப்படவேண்டும் Thinakaran Velautham நவனாதச்சித்தரை கொல்லிமலையிலிருந்து இலங்கைக்கு அழைத்து வந்தவரே இவர் தான். இலங்கையின் நவனாதச்சித்தரின் அற்புதங்கள் இவருடனான உரையாடலிலிருந்தே தொடங்கு கின்றன. " ஆயா நினச்சது. அடிமை வந்தது "
Sunday, 16 July 2017
Mano Ganesan : மலையகத்தமிழரது நம்பிக்கையை வென்றெடுக்க ஈழத்தமிழ் இளையோர் முன்வர வேண்டும்
சற்றுமுன், "பிரதேசவாதம்" பற்றி:
...தளபதி பால்ராஜ் முதற்கொண்டு முள்ளிவாய்க்கால் வரை மலையக தமிழரின் பங்களிப்பு பற்றி பலமுறை பேசி, அகமகிழ்ந்து, மயிர்கூச்செறிந்து, புல்லரித்து, இன்று களைத்தே போய் விட்டோம். ஆனால் அந்த பொற்காலத்தை சுட்டிக்காட்டி, இன்றைய பிரதேசவாத அவலங்களை மூடவிடக்கூடாது. தமிழர் ஐக்கியத்தை கோரும் வடகிழக்கின் தமிழ் இளையோர் இயக்கம், முதலில் இந்த பிரதேசவாதத்திற்கு எதிராக காத்திரமாக எழுந்து நிற்க வேண்டும். அதன்மூலம் வன்னியில் குடியேறி வாழும், நாடு முழுக்க பரந்து வாழும், மலையகத்தமிழரது நம்பிக்கையை வென்றெடுக்க ஈழத்தமிழ் இளையோர் முன்வர வேண்டும். இதற்கு அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க நான் தயார். இதில்தான் இலங்கை வாழ் தமிழர் எதிர்காலம் தங்கியுள்ளது. நான் தெளிவாக சொல்வதை புரிந்துக்கொள்ள மறுக்கும் தமிழர், தமிழினத்தின் தூரதிஷ்ட்டங்கள்..
நவம்பர் கடைசி வாரத்தில் கலப்பு முறையில் தேர்தல்: சிறு கட்சிகளின் போராட்டம் வெற்றி
அமைச்சர் மனோ கணேசன் நாடு முழுக்க உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் இறுதி வாரத்தில் நடைபெறுவதற்கான சாத்தியம் இன்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.
நவம்பர் கடைசி வாரத்தில் கலப்பு முறையில் தேர்தல்: சிறு கட்சிகளின் போராட்டம் வெற்றி
அமைச்சர் மனோ கணேசன் நாடு முழுக்க உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் இறுதி வாரத்தில் நடைபெறுவதற்கான சாத்தியம் இன்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.
Saturday, 15 July 2017
கண்டி நுவரெலியா பாதையில் இருந்து -பெரட்டாசி செல்லும்பி 15 கி.மீ பாதை
பா.திருஞானம் - 0777375053
பெரட்டாசி பாதையை அமைக்க புற்களால் காபட் முறைமை
மக்கள் பெரும் அவதி அரச பஸ் சேவை 10 வருடங்களாக இடை நிறுத்தம்
நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட கண்டி நுவரெலியா பிரதான பாதையில் இருந்து பெரட்டாசி தோட்டத்திற்கு செல்லும் பிரதான 15 கி.மீ பாதை சுமார் 15 வருடங்களுக்கு மேல் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை இதனால் இந்த பிரதேசத்தில் வாழும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இப்பிரதேசத்தில் பெரட்டாசிஇ கரகஸ்தலாவஇ எல்பொட போன்ற கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த ரஸ்புருக் தோட்டம்¸ பெரட்டாசி தோட்டம்¸ பூச்சிகொட தோட்டம்¸ பெரட்டாசி தொழிற்சலை பிரிவு தோட்டம்¸ மேரியல் தோட்டம்¸ அயரி தோட்டம்¸இ எல்பொட வடக்கு தோட்டம்¸இ மேமொழி தோட்டம்¸ காச்சாமலை தோட்டம்¸ கட்டகித்துல தோட்டம்இ வெதமுள்ள கெமினிதன் தோட்டம்¸ கந்தலா தோட்டம் போன்ற
காணப்படுகின்றனர். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இந்த பாதையில் அரச போக்குவரத்து சேவை இருந்தது அதுவும் பாதை அவலம் காரணமாக இடை நிறுத்தபட்டுள்ளது. இப்பிரதேசத்தில் காணப்படும் 8 பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள்; பஸ் உரிய நேரத்திற்கு செல்லாததினால் காலை 9.00 மணிக்கே பாடசாலை செல்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி நிலையும் பாதித்து வருகின்றது.
இலங்கை தேயிலை 1857 முதல் 2017 வரை ... ஆவணப்படம்
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே
கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக
தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கு
பொருந்தும். அந்தளவுக்கு மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ள, அன்றாட
வாழ்க்கையில் பங்களிப்பு செலுத்தி வருகின்ற தேயிலை இலங்கையில் அறிமுகமாகி
2017ஆம் ஆண்டுடன் 150 வருடங்கள் பூர்தியடைந்துள்ளன.
கமிலியா சைனேசிஸ் Camillia Sinensis
Camillia Sinensis என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட தேயிலை 1867ஆம் ஆண்டு
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் தேயிலையை உலகில் பயன்படுத்த
ஆரம்பித்து பல ஆயிரம் வருடங்களாகின்றன. புத்தப் பெருமான் பிறப்பதற்கு 2700
ஆண்டுகளுக்கு முன்னர் தேயிலை கண்டறியப்பட்டதாக வரலாறுகளில்
குறிப்பிடப்பட்டுள்ளன.
கமிலியா சைனேசிஸ் Camillia Sinensis
Camillia Sinensis என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட தேயிலை 1867ஆம் ஆண்டு
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் தேயிலையை உலகில் பயன்படுத்த
ஆரம்பித்து பல ஆயிரம் வருடங்களாகின்றன. புத்தப் பெருமான் பிறப்பதற்கு 2700
ஆண்டுகளுக்கு முன்னர் தேயிலை கண்டறியப்பட்டதாக வரலாறுகளில்
குறிப்பிடப்பட்டுள்ளன.
வரலாற்றுக் குறிப்புக்களின் படி
தேயிலையை சீன பேரரசனான சென்நுன் முதன்முதலில் கண்டுபிடித்துள்ளான்.
சீனாவில் திக்விஜயம் மேற்கொண்டிருந்த சென்நுன், களைப்பின் காரணமாக ஒரு
மரத்தின் கீழ் அமர்ந்து வெந்நீர் பருகிக்கொண்டிருந்த வே
ளையில் மரமொன்றில் இருந்த காற்றில்
அசைந்தாடி பறந்து வந்த மலரொன்று அவ்வெந்நீர் கோப்பையில் விழுந்ததாகவும்
அதன் பின்னர் வெந்நீரில் ஏற்பட்ட சுவை மாற்றத்திற்கு பேரசன் அடிமையாகி அதனை
சீனாவில் பிரபலமடையச் செய்தான் என்றும் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வடகிழக்கு வாழ் மலையக மக்கள் கிளிநொச்சி ஸ்ரீதரனுக்கு எதிராக சம்பந்தனிடம் மனு!
thenee.com : பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரனின்&பிரதேசவாத கொடூர சொற் பிரயோகங்களை வன்மையாக கண்டிக்கின்றோம் எதிர்கட்சி தலைவரிடம் வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் மகஜர்</
பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரனின் கொடூர பிரதேசவாத சொற் பிரயோகங்களை வன்மையாக கண்டிப்பதோடு அவா் நாட்டில் வாழுகின்ற மலையக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனா்.இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த சம்மந்தனிடம் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் வைத்து இம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்இ வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் அமைப்பின் இணைப்பாளருமான எம்பி. நடராஜ் கையொப்பம் இட்டு இந்த மகஜர் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் மலையக வம்சாவழி மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனா். கடந்த தேர்தல்களில் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன் இந்த மக்களின் அதிகளவாக வாக்குகளையும் பெற்றவா். எனவே இந்த நிலையில் அவா் மலையக சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சொற் பிரயோகங்களை மேற்கொண்டிருப்பது நாடு முழுவது வாழும் மலையக மற்றும் இந்திய வம்சாவழி மக்களின் மனங்களை சிதறடித்துள்ளது.
ஆபாச பாலியல் வன்முறை தொடர்பான படங்களை வெளியிடும் தொழிற்சாலை புங்குடுதீவு....
கொழும்பு - பதுளை ரயில்சேவை தடையின்றி முன்னெடுப்பு
thinakaran.lk: ஹற்றன் - கொட்டகலைக்கு இடைப்பட்ட,60 அடி பாலத்தில் திருத்த வேலைகள் இடம்பெற்று வருவதால், மாற்று ஏற்பாடுகள் மூலம் கொழும்பு - பதுளை ரயில் சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே செயற்பாட்டு அதிகாரி விஜய சமரசிங்க தினகரனுக்குத் தெரிவித்தார்.
இதற்கமைய கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையான அனைத்து ரயில் சேவைகளும் வழமைப்போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் சேதமடைந்திருக்கும் 60 அடி பாலம் மக்கள் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்றது என்பதனால் அக்குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் விசேட இலவச பஸ் இணைப்புச் சேவை ஏற்பாடு செயப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதன்படி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகள் ரயில் ஹற்றன் ரயில் நிலையத்தை அடைந்ததும் அங்கு பயணிகள் இறக்கிவிடப்படுவர்.
மனோ கணேசன் : நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை 10 உயர்த்தப்பட வேண்டும்
வீரகேசரி Vijithaa : நாடு முழுக்க உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும். இந்த தேர்தல் நடைபெறும் முன்னர் நுவரெலியா மாவட்டத்தில் இன்று இருக்கின்ற ஐந்து பிரதேச சபைகளின் எண்ணிக்கை பத்தாக உயர்த்தப்பட வேண்டும் என்ற எமது உறுதியான நிலைப்பாட்டை எமது அரசு தலைமைக்கு தெரிவித்து விட்டோம் என ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள குடிபெயர்வுகளின் அடிப்படையில் பல்வேறு மாகாணங்களில் இருந்து புதிய பல பிரதேச சபைகளை அமைத்திட கோரிக்கைகள் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளன. அவை அனைத்தையும் உடனடியாக செய்திட நடைமுறை சிக்கல்கள் தடையாக உள்ளன.
எனினும் நாட்டின் சில இடங்களில் பத்தாயிரம் பேருக்கு ஒரு பிரதேசபை மற்றும் செயலகம் அமைந்திருக்கும்போது நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள் இலட்சக்கணக்காண சனத்தொகை கொண்டவையாக ஆண்டாண்டு காலமாக அமைந்திருக்கின்றன.
ஆகவே இம்மாவட்டம் முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்தப்பட வேண்டியதாகும் என்ற எமது சுட்டிகாட்டலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்.
தமிழ்-முஸ்லிம் உறவு மேம்படுத்தப்பட்ட வேண்டும்.. அரசியல்வாதிகளின் பொறிகளில் மக்கள் சிக்கிவிடக்கூடாது
Arun Hemachandra: தமிழ் இனம் வாழ வேண்டுமென்றால், தமிழ் மொழி வாழ வேண்டும். தமிழ் மொழியினை இன்று இரு தரப்பினர் இலங்கையில் வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் தமிழர்களும், முஸ்லிம்களும். குறிப்பாக கம்பஹா, களுத்துறை, கண்டி, குருணாகல் ஆகிய மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை தமிழரை விட அதிகமானது. அங்கு தமிழ் மொழி மூலமான கல்வி மிகுந்த கஷ்டத்தின் மத்தியிலும் ஊக்குவிக்கப் படுகிறது. ஒரே கல்வித் திட்டமும் செயலில் உள்ளது. ஆகவே தமிழ் மொழியின் அழிவையும், அழிப்பையும் தவிர்த்து அதனை வளர்க்க வேண்டுமெனில், தமிழ்-முஸ்லிம் உறவு மேம்படுத்தப்பட்ட வேண்டும். ஒரு சில அரசியல்வாதிகள் விடும் பிழைகளை நாம் ஓட்டு மொத்த இனங்களின் மேலும் போட்டுவிட முடியாது. முற்போக்கு, இனவாதத்திற்கெதிரான நடுநிலை சக்திகள் அனைத்து இனங்களினுள்ளும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதுவே தீர்விற்கு வித்திடும். மாறாக ஒரு இனவாதம் இன்னொரு இனவாத்தைத் தோற்கடிக்காது. இது காட்டுத் தீ போன்றது. ஒரு காட்டுத் தீ, இன்னுமொரு காட்டுத் தீயினை நிறுத்தாது...
Friday, 14 July 2017
மலையகத் தலித்துகள், சில புரிதல்கள் - என்.சரவணன்
Saravanan Komathi Nadarasa :இந்தக் கட்டுரை 2000 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த "தமிழினி 2000" மாநாட்டில் நான் ஆற்றிய உரை.
ஸ்ரீதரன் எம்.பி வடக்கத்தையான் என மலையக மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய பேச்சைப் போலவே சில வருடங்களுக்கு முன்னர் தந்தை செல்வா நினைவு தினத்தின் போது ராஜதுரையை "சக்கிலியன்" என்று திட்டியதும் நிகழ்ந்தது. இவற்றுக்கு போதிய அளவு மக்கள் எதிர்வினையாற்ற வேண்டும்.
இந்த நேரத்தில் எனது முன்னைய கட்டுரையை பகிரத் தோன்றிற்று....
ஸ்ரீதரன் எம்.பி வடக்கத்தையான் என மலையக மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய பேச்சைப் போலவே சில வருடங்களுக்கு முன்னர் தந்தை செல்வா நினைவு தினத்தின் போது ராஜதுரையை "சக்கிலியன்" என்று திட்டியதும் நிகழ்ந்தது. இவற்றுக்கு போதிய அளவு மக்கள் எதிர்வினையாற்ற வேண்டும்.
இந்த நேரத்தில் எனது முன்னைய கட்டுரையை பகிரத் தோன்றிற்று....
namathumalayagam.com இன்றைய முதலாளித்துவ சமூக உருவாக்கத்தின் நவவடிவங்கள் (உலகக் கிராமங்கள்
அல்லது Information Highway போன்ற சொற்றடர்களைப் பயன்படுத்தலாம்)
எத்தனைதான் அரசியல், பொருளியல், பண்பாட்டு ரீதியான மாற்றங்களைக்
ஏற்படுத்திக் கொண்டுவருகின்ற போதும் உலகின் இனக்குழுமங்களுக்கு இடையிலான
உறவுகள், நெருக்கங்கள் (அல்லது நலன்கள்) என்பன மேலும்
துருவமயமாகிக்கொண்டுபோகும் நிலைமையும், அதிகாரத்துவம், அசமத்துவம் என்பன
மேலும் இறுகும் நிலைமையும் அதிகரித்து வரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
இன்று தமிழினி 2000 குறித்து கூடியிருக்கின்றோம். இலங்கை மலையகத்
தமிழர்களின் உள்ளடக்காத ஒரு ஒரு தமிழ் இனியை நாம் கற்பனை செய்ய முடியாது
என்பதை நாம் ஒப்புக்கொள்வோம்.. அந்தளவுக்கு நாம் இந்த நிகழ்வுப் போக்கில்
தாக்கம் செலுத்தும் வீரியமிக்க சக்தியாக வளர்ந்து விட்டோம். மலையகத்
தமிழர்களில் அடக்கப்படும் சாதிய சமூகத்தின் எண்ணிக்கை ரீதியாக அதிகளவில்
கொண்டிருக்கின்ற அதேநேரம் அவர் தம்மை ஒரு தேசமாக, மலையகத் தமிழ்த் தேசமாக
தம்மை உருவாக்கிக் கொண்டுமுள்ளார்கள்.
வல்லாதிக்க சக்திகள் இந்த யுகத்தை தகவல் தொழில்நுட்ப யுகமாக
பிரகடனப்படுத்துகின்றன. இதன் அடிப்படை நோக்கமே உலகை தனது நலனுக்காக, ஆதிக்க
சித்தாந்தமயப்படுத்துவதுதான். புதிய உலக ஒழுங்குக்கு ஏனைய குறைவிருத்தி
தேசங்களையும் தகவமைக்குமாறு நிர்ப்பந்திக்கின்றன. ஆதிக்க சித்தாந்த
கருத்தேற்றம் செய்து உலகை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கின்றன.
இதற்காக, அவை திட்டமிட்டே பல்வேறு திட்டங்களை நிகழ்ச்சிநிரல்களையும் பன்முக
தளங்களில் மிகவும் நுட்பத்துடன் செயற்பட்டு வருவதை, அதன் விளைவுகளை நாம்
உணர்ந்துள்ளோம் என்றால் அது மிகையில்லை.
அமைச்சர் திகாம்பரத்தின் சேவைகளை விமர்சனம் செய்வது உள்நோக்கம் உடையதா?
Malayaga Kuruvi'ஆறுமுகன் ராமநாதன் அமைச்சராக 10 ஆண்டுகள் இருந்தார். அந்த 10 ஆண்டுகளில் 9 ஆண்டுகள் அவர் இலங்கையில் இருக்கவில்லை. உள்ளூரில் இருந்த காலத்தில் யாராவது பணம் செலவு செய்து கொழும்பில் கட்டிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டித் திறந்து வைப்பதிலும் விருந்துகளிலும் லிபர்டி சதுக்க இரவு விடுதிகளிலும் செலவாக்கினார். எவ்வாராயினும் பேசிப் பயனில்லை.
தமிழ் முற்போக்கு கூட்டணியினர் சிற்சில வேலைகளை சிறப்பாக (நுவரெலிய-மஸ்கெலிய தேர்தல் தொகுதிக்கு) செய்து வருகின்றார்கள். மகிழ்ச்சி. கண்டி மாவட்டம் கௌரவ வேலு குமார் பாராளுமன்ற உறுப்பினர் வேலைகள் செய்வதாக செய்திகள் படித்து மக்கள் மகிழ்கிறார்கள்.மாத்தளைப் பிரதேசம் நிறைய தேயிலை மற்றும் றப்பர் தோட்டங்கள் நிறைந்த பகுதி. ஆனால் எங்களை யாருக்குமே இன்னும் தெரியவில்லை என்பது கவலையாகவும் கேவலமாகவும் இருக்கிறது.
அட்டன் நகர அபிவிருத்தியில் அமைச்சர் திகாம்பரத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர் : மாகாண உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்அங்கீகாரத்தையும் பலத்தையும் கொண்டு அட்டன் நகரை அபிவிருத்தி செய்யும் அமைச்சர் திகாம்பரத்தின் நடவடிக்கை குறித்து அட்டன் நகர மக்களும் அட்டன் நகருக்கு வந்து செல்கின்றவர்களும் வெளிப்படுத்தும் ஆர்வமானது மகிழ்ச்சிக்குரியதாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினரமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியினர் சிற்சில வேலைகளை சிறப்பாக (நுவரெலிய-மஸ்கெலிய தேர்தல் தொகுதிக்கு) செய்து வருகின்றார்கள். மகிழ்ச்சி. கண்டி மாவட்டம் கௌரவ வேலு குமார் பாராளுமன்ற உறுப்பினர் வேலைகள் செய்வதாக செய்திகள் படித்து மக்கள் மகிழ்கிறார்கள்.மாத்தளைப் பிரதேசம் நிறைய தேயிலை மற்றும் றப்பர் தோட்டங்கள் நிறைந்த பகுதி. ஆனால் எங்களை யாருக்குமே இன்னும் தெரியவில்லை என்பது கவலையாகவும் கேவலமாகவும் இருக்கிறது.
அட்டன் நகர அபிவிருத்தியில் அமைச்சர் திகாம்பரத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர் : மாகாண உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்
நேசகுமார் விமல்ராஜ் கொலை வழக்கில் எதுவித முன்னேற்றமும் இல்லை ... காணி அபகரிப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்த..
malayaka kuruvi :மட்டக்களப்பில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புகளுக்கு எதிராக துணிந்து செயற்பட்ட மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் சகோதரர் நேசகுமார் விமல்ராஜ் அவர்கள் அவரது வீட்டில் வைத்து முஸ்லீம்களால் 22/02/2017 சுடப்பட்டு இன்றுடன் 6 மாதங்கள் கடந்த நிலையில் விசாரணையில் எவ்வித முன்னேற்றங்களும் இல்லாத நிலை காணப்படுகிறது. இது எதனை உணர்த்தி நிற்கிறது? முஸ்லீம்கள் தமிழர்களை அதிகார பலங்களினாலும் அடக்குமுறைகளாலும் தங்களுக்கு எதிரான தமிழ் அதிகாரிகளையும் கட்டுப்படுத்திவைக்க நினைக்கின்றனர். விசாரணைகளை இடையூறு செய்கின்றனர். குறிப்பாக ஏறாவூர் புண்ணைக்குடா வீதி, தளவாய், சவுக்கடி போன்ற பிதேசங்களில் இடம்பெற்ற அத்துமீறிய குடியேற்றங்கள் , பனைவளங்களின் அழிப்பு, அரசகாணிகளை அபகரித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக துணிந்து விரைவாக நடவடிக்கை எடுத்தனால் சுடப்பட்டார்.
கேகாலை மாவட்டத்தில் டெங்கு பரவும் இடங்கள் .... ஹிங்குலோயா ,கிருங்கதென்யா,மகாவத்தை ,மாவான ,ரன்கோத்தல்ல
MAWNEWS · JULY 14, 2017
கேகாலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் பிரதேசமாக மாவனல்லை அடையாலாபடுத்தப்பட்டுள்ளது.
இதிலும் விசேடமாக மாவனல்லை நகரமும் சில புறநகர்பகுதிகளும் டெங்கு அவதான இடங்களாக இணங்காணப்பட்டுள்ளது.
இதற்கிணங்க மாவனல்லை நகரம் உட்பட ஹிங்குலோயா, கிருங்கதெனிய, மஹவத்த, மாவான, ரங்கோத்திவல ஆகிய 5 கிராம சேவகர் பிரிவுகளில் அதிகம் டெங்கு காய்ச்சல் பரவும் இடங்களாகும்.
இந்நிலையில் அரசாங்கமும் அரச அதிகாரிகளும் சுகாதார உத்தியோகத்தர்களும் தீவிரமாக செயற்பட்டாலும் இவ்விடங்களில் பொதுமக்களின் ஒத்துழைப்பு பூரணமாக அனைவராலும் கிடைப்பதில்லை என பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை மீறி பொதுமக்களின் நலன்களை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வோர் மீது நடவடிக்கை மேற்கொள்வதுடன் தவறான முறையில் நகரிலும் சுற்றுப் புறப்பகுதிகளிலும் குப்பைகளையும் கழிவுப்பொருட்களையும் கொட்டுவோரை அவதானிப்பதற்காக CCTV கெமராக்களை பயன்படுத்துவதாகவும் இதற்கு மாவனல்லை நகர வர்த்தக சமூகம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் கேகாலை மாவட்ட செயலாளர் சந்திரசிரி பண்டார தெரிவித்தார்.
BBC நெடுந்தீவு குதிரைகள் பற்றிய கள ஆய்வுக்குழு ..

யாழ்ப்பாணத்திற்கு வடக்கே அமைந்துள்ள தீவுகளில் ஒன்றாகிய நெடுந்தீவு திவில் குதிரைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குழுவொன்றை நியமித்துள்ளார்.
நெடுந்தீவில் நிலவுகின்ற மோசமான வறட்சி காரணமாக, அங்குள்ள குதிரைகள் உயிரிழக்க நேர்ந்துள்ளதையடுத்தே, வடமாகாண சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வரட்சியால் இதுவரை ஆறு குதிரைகள் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வண்டுள்ளன. குடிப்பதற்கு நீர் இல்லாமலும், மேய்ச்சலுக்கென போதிய புல் இல்லாமலும் ஆறு குதிரைகள் வரையில் மடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் வழமை போல இதிலும் காசு அடிக்க மாட்டார்கள் என்பது கேள்வி குறிதான். வரலாறு அப்படி பொருத்து வீடுகளுக்கு எதிராக சுமந்திரன் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல்
தினக்குரல் வடகிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொருத்து வீடுகள் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்று கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று வியாழக்கிழமை உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.<
>போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தை வடக்கு, கிழக்கில் உருவாக்குமாறு அரசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் தமிழ்த் தலைவர்களும் கோரிவரும் நிலையில், அந்தப் பகுதிகளில் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார்.<
இந்தப் பொருத்து வீடுகள் வட, கிழக்கு மாகாணங்களின் காலநிலைக்கு பொருத்தமற்றவையென தமிழ்த் தரப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டி வருகின்றபோதும் பொருத்துவீடுகளை அமைப்பதில் மீள் குடியேற்ற அமைச்சர் விடாப்பிடியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Thursday, 13 July 2017
பிள்ளையாருக்கு முள்வேலி ... தாழ்த்தப்பட்ட சாதியினர் வெளியே ... முள்ளிவாய்க்கால் அல்ல இது தச்சன் தோப்பு பிள்ளயார் கோவில்

Skathka : kathiravan.com தங்கமில்லாமல் நாமில்லை என்று தமிழர்கள் இலங்கையிலும், புலம்பெயர்நாடுகளிலும் வரிசையாக நகைக்கடைகளை திறக்கிறார்கள். புத்தகக்கடைகள், பதிப்பகங்கள் எத்தனை இருக்கின்றது என்று மண்டை கழண்ட கேள்விகள் கேட்கக் கூடாது. இமயமலையின் பனிச்சிறுத்தைகள் போல மிக அரிதாகவே புத்தகங்கள் தமிழ்ச்சூழலில் காணப்படும். சந்தனம் மிஞ்சினால் எங்கேயோ தடவுவது போல் பணம் மிஞ்சிப் போனதால் வடமராட்சியில் ஒரு, பிள்ளையாருக்கு தங்கமுலாம் பூசி ஒரு தேர் செய்திருக்கிறார்கள். இயற்கையான மரத்திற்கு தங்கமுலாம் பூசி அலங்கோலப்படுத்தியதைப் போல இந்தக் கோவில் நிர்வாகசபையினரின் மனங்களில் சாதிவெறி இறுகப் பூசி மனிதத்தை கேவலப்படுத்துகிறது. அறுபதாம் ஆண்டுகளில் கம்யுனிஸ்ட்டுக் கட்சியினரும், சிறுபான்மை தமிழர் மகாசபையினரும் சாதிக் கொடுமைகளிற்கு எதிராகப் போராடினார்கள். தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களை கோவில்களில் சமமாக நடத்து என்ற முழக்கம் விண்ணதிர எழுந்தது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கோவில்கள் போராட்டத்தின் விளைவாக தங்களது சாதிவெறியை மறைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களிற்கு வாசல் திறந்தன.
ஆனால் தச்சன்தோப்பு பிள்ளையாரின் சாதிவெறிக் கதவுகள் தாழ் திறக்கவில்லை. தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களை உள்ளே விடவில்லை என்று தானே போராட்டம் நடத்துகிறீர்கள், நாங்கள் ஒருவரையுமே உள்ளே விடப்போவதில்லை என்று கோவிலை மூடினார்கள். முள்வேலி போட்டார்கள். பிள்ளையாரை முள்வேலிக்குள் சிறை வைத்தார்கள். நிர்வாகசபைக்காரர்கள் மட்டும் கோவிலிற்கு உள்ளே சென்று பிள்ளையாரை வெளியே கொண்டு வருவார்கள். நிர்வாகசபைக்காரர்கள் இரு மரபும் துய்ய வந்தவர்கள் என்பதை எழுதித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. பிள்ளையாரின் புனிதத்தையும், சைவ வேளாளர்களின் மானத்தையும் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களிடம் இருந்து காப்பாற்றி விட்டார்களாம்.
இரண்டு விதமாக நடாத்தப்படும் ஒரே நிர்வாகத்தின் பாடசாலைகள் .. மாகாணசபை உறுப்பினர் ராஜாராம்!
ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்ற பாடசாலை எப்படி இரண்டு விதமாக மாகாண உறுப்பினர் ராஜா ராமின் சந்தேகம்!
- பா.திருஞானம்
தற்பொழுது இலங்கையின் நல்லாட்சியில் அனைத்து தரப்பினரும் சமனாக மதிக்கப்படுகின்றார்கள் என்று அரசாங்கமும் அமைச்சர்களும் கூறினாலும் அதற்கு எதிர்மாறாக மத்திய மாகாண முதலமைச்சரும் மத்திய மாகாண கல்வி அமைச்சும் செயல்படுகின்றதோ என்ற சந்தேகம் எனக்கு எழுகின்றது என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஹட்டன் கெப்ரியல் பெண்கள் பாடசாலையின் தமிழ் பிரிவிற்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்ட பின்பே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த பாடசாலையின் பெரும்பான்மையினர் கல்வி கற்கின்ற பகுதி மிகவும் அழகாகவும் அனைத்து வசதிகளுடனும் இயங்குகின்றது. ஆனால் இதன் தமிழ் பகுதி மிகவும் மோசமாகவும் மாட்டுக் குடிலை போலவும் இருக்கின்றது. இங்கிருக்கின்ற வகுப்பறைகளில் இருந்து கல்வி கற்கின்ற மாணவிகளுக்கு நிச்சயமாக பாராட்டு தெரிவிக்க வேண்டும். வகுப்பறைகளில் துர்நாற்றம் வீசுகின்றது.
ஏலி, பாம்பு, நாய் எச்சங்கள் வகுப்பறைகளில் இருக்கின்றது. தற்பொழுது நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகின்றது. இங்கிருக்கின்ற மாணவிகளுக்கு மிக விரைவில் பரவுகின்ற அபாயமான ஒரு நிலை இருக்கின்றது. இங்கு கல்வி பயில்கின்ற மாணவிகள் தமிழர்கள் என்பதால் இவ்வாறு பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்களோ என்று என்னத் தோன்றுகிறது.
Subscribe to:
Posts (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
பிரான்சிஸ் : ஹெலன்போற்றி தோட்டத்தில் ஓர் கலைக் குடும்பத்தில் பிறந்த பிரான்சிஸ் ஹெலன் அவர்களின் தந்தை சிறந்த நாடக ஆசிரியரும், கலைஞருமாவார...
-
மல்லியப்பு சந்தி திலகர் : தோட்டத் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமது சமூக நிலைம...












