Monday, 17 July 2017

பெருமாளம்மாள் 1896 ஆண்டிலேயே ஒரு தோட்டத்தை நிர்வகித்த தமிழ் பெண்

Suppaiah Rajasegaran சு.இராஜசேகரனின் Old is Gold: இவ் அபூர்வ புகைப்படம் 1896ம் ஆண்டில் எடுக்கப்பட்
து. பெண்மையையே மதிக்காத ,பெண்ணடிமை நிலவிய காலப்பகுதியி ல் ஒருத் தோட்டத்தையே நிர்வகித்ததாக பெண்மனியை கேள்விப்பட் டுள் ளீர்களா.....?
தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 'நாகன்' என்பவர், இல ங்கையில் நாவலப்பெட்டியை ச்சார்ந்த 'குயின்ஸ் பெரி' தோட்டத்தின் பெரிய கங்காணியாக வேலைப்பார்த்தார். அவரது மறைவிற்கு பின் அவ்விடத்தை" யார் நிரப்புவார்கள் ?" எனத்தடுமாறிய போதுதான், தோட்டநிர்வாகமே அதனை ஈடு செய்யக்கூடியவரும் ஆளுமை, திறமை, நா..நயம், என்பவற்றை கருத்தில் கொண்டு அவரது துணை வியாரான 'பெருமாளம்மாள்' அவர்களே என முடிவு செய்து பெரிய கங்காணி பதவியை அந்த அம்மாளி டம் கொடுக்கப்பட்டது. 1896ம் ஆண்டு முதல் 1936ம் ஆண்டுவரையில் குயின்ஸ்பெரி தோட்டத்தின் கங் காணியாக இருந்துள்ளார்.
தோட்டத்தொழிளாலரிலிருந்து, ஏனைய கங்கா ணிகளிடமும்.தோட்ட உத்தியோகத்தர்களிடமும் துரைமார்களிடமும் நன்மதிப்பை பெற்று ள்ளார்.அவர் எப்படி தமிழில் உரையாடுவாரோ அதேப்போல ஆங் கிலத்திலும் வெளுத்துக் கட்டியுள்ளார். கண்டிப்பாக இருந்தாலும் கருணை மிகுந்தவராகவும் இருந்துள் ளார். இவரது அரும் முயற்சியா ல்தான் மலையகத்தி ல் சிறப்பாக கூறப்படுகின்ற "நமநாத சித்தர் ஆலய ம்" அமைக்கப்பட்டு இன்றும் சிறப்பாக கூறப்படுகிற ஆலயமாக திகழ்கி றது.
மலையக வரலாற்றில் துணிச்சல் மிக்க இருந்த பெருமாளம்மாளின் பெயரும் பதியப்படவேண்டும்
Thinakaran Velautham நவனாதச்சித்தரை கொல்லிமலையிலிருந்து இலங்கைக்கு அழைத்து வந்தவரே இவர் தான். இலங்கையின் நவனாதச்சித்தரின் அற்புதங்கள் இவருடனான உரையாடலிலிருந்தே தொடங்கு கின்றன. " ஆயா நினச்சது. அடிமை வந்தது "

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...