Sunday, 16 July 2017

Mano Ganesan : மலையகத்தமிழரது நம்பிக்கையை வென்றெடுக்க ஈழத்தமிழ் இளையோர் முன்வர வேண்டும்

சற்றுமுன், "பிரதேசவாதம்" பற்றி: ...தளபதி பால்ராஜ் முதற்கொண்டு முள்ளிவாய்க்கால் வரை மலையக தமிழரின் பங்களிப்பு பற்றி பலமுறை பேசி, அகமகிழ்ந்து, மயிர்கூச்செறிந்து, புல்லரித்து, இன்று களைத்தே போய் விட்டோம். ஆனால் அந்த பொற்காலத்தை சுட்டிக்காட்டி, இன்றைய பிரதேசவாத அவலங்களை மூடவிடக்கூடாது. தமிழர் ஐக்கியத்தை கோரும் வடகிழக்கின் தமிழ் இளையோர் இயக்கம், முதலில் இந்த பிரதேசவாதத்திற்கு எதிராக காத்திரமாக எழுந்து நிற்க வேண்டும். அதன்மூலம் வன்னியில் குடியேறி வாழும், நாடு முழுக்க பரந்து வாழும், மலையகத்தமிழரது நம்பிக்கையை வென்றெடுக்க ஈழத்தமிழ் இளையோர் முன்வர வேண்டும். இதற்கு அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க நான் தயார். இதில்தான் இலங்கை வாழ் தமிழர் எதிர்காலம் தங்கியுள்ளது. நான் தெளிவாக சொல்வதை புரிந்துக்கொள்ள மறுக்கும் தமிழர், தமிழினத்தின் தூரதிஷ்ட்டங்கள்..
நவம்பர் கடைசி வாரத்தில் கலப்பு முறையில் தேர்தல்: சிறு கட்சிகளின் போராட்டம் வெற்றி
அமைச்சர் மனோ கணேசன் நாடு முழுக்க உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் இறுதி வாரத்தில் நடைபெறுவதற்கான சாத்தியம் இன்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளான அமைச்சர்கள் நிமல் சிறிபால சில்வா, ரவுப் ஹகீம், மனோ கணேசன், ரிசாத் பதுதின், கபீர் ஹசிம், பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ன, அஜித் பெரேரா, அனுரகுமார திசாநாயக்க, எம். ஏ. சுமந்திரன் மற்றும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துக்கொண்ட கூட்டத்தில், உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலத்திற்கான உத்தேச திருத்த விதிகள் தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளதாவது,
கடந்த தேர்தல்கள் நடைபெற்ற ஒட்டுமொத்த விகிதாசார முறைமை கைவிடப்பட்டு தேர்தல்கள் புதிய வட்டார, விகிதாரா கலப்பு முறையில் நடைபெறும். இது தொடர்பில் கடந்த மகிந்த ஆட்சியில் 2012ம் வருடம் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தில் வட்டார, விகிதாசார தெரிவுகள் தொடர்பாக இருந்த 70:30 என்ற கணக்கு, எமது புதிய திருத்த சட்டத்தில் 60:40 ஆக மாற்றப்படும். அதேபோல் இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில், ஒரே கட்சியில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என்றும், இரண்டாம் அங்கத்தவராக வெற்றி பெறுகின்றவர், தோல்வியடைந்த கட்சிகளில் அதிக வாக்குகளை பெற்றவராக இருத்தல் வேண்டும் என்ற மோசடித்தனமான பழைய விதி மாற்றப்பட்டு, ஒரே கட்சியே இரண்டு வேட்பாளர்களை போட்டியிட செய்ய முடியும் என்ற திருத்தம், புதிய திருத்த சட்டத்தில் வரும். அத்துடன் இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில் ஒவ்வொரு வாக்காளரும், இரண்டு வாக்குகளை அளிக்க முடியும். இவை சிறுபான்மை கட்சிகள் சார்பாக நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்த போராட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றிகளாகும்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...