இந்நிகழ்விற்கு மத்திய மாகான சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம்¸ தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள்¸ தோட்ட முகாமையாளர்¸ மலையக தொழிலாளர் முன்னனியின் நிதி செயலாளர் எஸ்.விஸ்வநாதன்¸ மலையக மக்கள் முன்னனியின் நிர்வாக இயக்குனர் எஸ் அஜித்குமார்¸ பனிப்பளர். எம்.கணகராஜ்¸ தொழி உறவு அதிகாரிகள் உட்பட தோட்ட தலைவர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தொடர்ந்து உரையாற்றுகையில், பெருந்தோட்ட மக்களின் வருமைக்கு காரணம் மக்களிடையே கல்வி அறிவு இன்மையே. இன்று கொழும்பு மற்றும் தன வந்தகர்களின் வீடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் என்றதும் மலையகத்தையே நாடுகின்றனர். காரணம் இவர்கள் படிக்கவில்லை வீட்டு வேலைக்கு வருவார்கள் என்று. நாங்கள் நன்கு படித்து இருந்திருந்தால் இந் நிலை ஏற்பட்டு இருக்குமா.?
அதனால் உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி நல்லா படிக்க வையுங்கள். அதற்கான வசதிகள் அனைத்தும் மேற்க் கொள்ளபட்டு வருகின்றோம். தற்போது 13 வருடம் கல்வி கட்டாய கல்வியாக மாற்றபட்டள்ளது. சாதாரண தரம் சித்தியெய்தாவிட்டாலும் உயர்தரத்தில் தொழில் வாய்ப்புக்கான கல்வியை தொடர முடியம். என்று கூறினார்.
No comments:
Post a Comment