Saturday, 9 September 2017

"உடைத்து எறிய சொன்னேன்" அதிரடி பணியில் அமைச்சர் மனோ கணேசன்!


கொழும்பு - அளுத்மாவத வீதி 854ஆம் தோட்டத்திலுள்ள மக்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாண அமைச்சர் மனோ கணேசன் அதிரடியாக களமிறங்கி எடுத்த நடவடிக்கையினால் அந்தப் பிரதேச மக்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ''கொழும்பு - அளுத்மாவத வீதி 854ஆம் தோட்டத்தை அடுத்த காணியில் தொழிற்சாலை அமைத்துள்ள தொழில் அதிபர், சட்ட விரோதமாக கழிவு நீர் கால்வாயை அடைத்து விட, அப்பாவி குழந்தைகள் உட்பட ஏழை பாமர மக்கள் பல நாட்களாக அழுக்கு நீரில் மூழ்கியுள்ள வீடுகளில் பரிதவிப்பதை அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்தேன். பணக்கார செல்வாக்கு விளையாடியுள்ள விபரங்களை அறிந்தேன். மாநகர முதன்மை பொறியியலாளர், பிரதேச பொறியியலாளர், முகத்துவார பொலிஸ் பொறுப்பதிகாரி, வலய கிராமசேவகர் ஆகியோரை ஸ்தலத்துக்கு அழைத்தேன். சட்டவிரோத கட்டுமானத்தை உடைத்தெறிய பணிப்புரை வழங்கினேன். ஏழை பிள்ளைகள் வாழ்த்தினார்கள். இன்னும் பகலுணவு சாப்பிடவில்லை. ஆனாலும் மனது நிறைந்தது.'' முதல்ல சாப்பிடுங்க அமைச்சரே! அப்போ தான் அடுத்த வேட்டைக்கு தெம்பா தயாராகலாம்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...