Thursday, 7 September 2017

மண்சரிவு, வெள்ளம் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மண்சரிவு மற்றும் வெள்ள நிலைமைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரியுள்ளது. குறிப்பாக, தேசிய கட்டட ஆய்வு மையம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ள பகுதிகளிலுள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட, அயகம, கிரிஉல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், காலி மாவட்டத்தின் நாகொடை பிரதேச செயலாளர் பிரிவிலும் களுத்துறை மாவட்டத்தின் பாலின்தனுவர, வலல்லாவிட மற்றும் அகலவத்தை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. dhinakural

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...