Monday, 4 September 2017

வடஇந்திய மாநிலங்களில் பரீட்சைகள் நேர்மையாக நடப்பதில்லை ...?

பொதுவாக வடஇந்திய மாநிலங்களில் பள்ளி இறுதித்தேர்வுகள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடப்பதில்லை.. காப்பியடிக்க உதவுவது ஒரு மாபியா போல.. பெற்றோர் ஆசிரியர் அரசியல்வாதிகள் அலுவலர்கள் அனைவரையும் உள்ளடக்கிய வலைப்பின்னல்.. எனவே இவர்களின் மதிப்பெண்கள் நம்பகமானவை அல்ல.. கடந்த ஆண்டு பீகாரில் மாநிலத்தின் முதல் மாணவர் காப்பியடித்து வெற்றி பெற்றது கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.. எனவே இவர்களில் திறன்வாய்ந்தவர்களை வடிகட்ட மத்திய அரசின் பொது நுழைவுத்தேர்வு ஒன்றை கொண்டுவருவது பற்றி இந்திய மருத்துவகவுன்சில் முடிவெடுக்கிறது.. காப்பியடிக்கும் மாபியாக்களை கட்டுப்படுத்த இயலாமல் இப்படியாவது நடக்கட்டும் என பல மாநிலங்கள் ஒப்புக்கொண்டன. காங்கிரஸ் அரசு அதில் தலையிட்டு விரும்பாத மாநிலங்கள் தங்கள் வழக்கமான சேர்க்கை முறைகளை பின்பற்றிக்கொள்ளலாம் என்கிற வாய்ப்பை உருவாக்கி சேர்த்தது.. அதனால்தான் காங்கிரஸ் ஆட்சி முடியும்வரை இதில் பிரச்சனையேயில்லை.. இவர்கள் எல்லா மாநிலங்கள் மீதும் திணிப்பதே பிரச்சனை..
- Muruganantham Ramasamy

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...