செய்தி : டி. சந்ரு
தேயிலை தோட்டங்களை முறையாக பராமரிக்காவிட்டால் தனியார்மயபடுத்திவிடுவார்கள். நான் இருக்கும் வரையில் அவ்வாறான நிலை வருவதற்கு இடம் கொடுக்கமாட்டேன். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் தேயிலை செடிகளை நம்பி வாழும் தொழிலாளர்களின் நிலை என்னவாகும்? எனக் கூறுகிறார் களனிவெலி பெருந்தோட்ட முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான் இராஜதுரை.
04.09.2017 அன்று ஹட்டன் பிரின்சஸ் விடுதியில் இடம்பெற்ற 2016ஃ2017 ம் ஆண்டுக்கான சிறந்த கொழுந்து பறித்தவர்கள், சிறந்த தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சமூகமளித்தவர், சிறந்த முறையில் சம்பளங்கள் பெற்றுக்கொண்டவர்.
களனிவெலி பெருந்தோட்டத்திற்கு சொந்தமான 16 தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள் 314 தொழிலாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டதோடு பல பரிசில்களும் வழங்கப்பட்டன.
இதன்போது மேலும் உரையாடிய ரொஷான் இராஜதுரை தேயிலை உற்பத்திக்கு முன்பதாக கோப்பி உற்பத்தி தான் மலையகத்தில் அதிகமாக காணப்பட்டது.
ஆனால், இப்பொழுது தேயிலை தோட்டங்களும் இறப்பர் தோட்டங்களும் அதிகமாக காணக்கூடியதாக இருக்கின்றது. கோப்பி உற்பத்தி செய்தவர்களுக்கு இத்தருணத்தில் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
2017ஆம் ஆண்டு மிகவும் விஷேடமான ஆண்டாகும். காரணம் தேயிலை உற்பத்தி 150 வருடத்தை 2017ஆம் ஆண்டுதான் பூர்த்தி செய்யப்பட்டது.
அத்தோடு, தேயிலை தோட்டங்களில் அரசாங்கத்தில் இருந்து களனிவெலி பெருந்தோட்டத்திற்கு பொறுப்பேற்று 25 வருடங்கள் பூர்த்தியானதும் 2017 ல் தான். தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வூம் முதன்முதலாக 2017ஆம் ஆண்டில் தான் இந்நிறுவனத்தின் மூலம் ஆரம்பபடுத்தியதும் 2017இல் தான் என அவர் உரையாடும் போதும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது 16 தோட்ட முகாமையாளர்கள், தோட்ட வைத்தியர்கள், பொலிசார், தேயிலை தோட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டார்கள்
No comments:
Post a Comment