Monday, 4 September 2017

மூன்றில் இரண்டு பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காது – ரணில்!

20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் உத்தேச தேர்தல் முறை திருத்தத்தில் எந்த கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று ஆட்சிக்கு வருவது தடுக்கப்படும். இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருணாகல் மகுருஓய பிரதேசத்தில் புதிய பாடசாலை ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது- ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று தனக்கு தேவையான வகையில் செயற்படுவதை தடுப்பதே இதன் நோக்கம். தொகுதி மற்றும் விகிதாசாரம் ஆகிய இரண்டும் கொண்ட கலப்பு தேர்தல் முறையே நமக்கு தேவை. அப்படியான விகிதாசாரம் இருந்தால், எந்த கட்சியாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியாது.< இந்த புதிய தேர்தல் முறையை மாகாண சபைகளுக்கு கொண்டு வரும் தேவை உள்ளது.< புதிய திருத்தச்சட்டம் மூலம் ஒரே தினத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்- என்றார்.  உதயன்

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...