Sunday, 3 September 2017

மலையக உள்ளுராட்சி மன்றங்களை மலையக இளைஞர்கள் கைப்பற்றவேண்டும்!

மலையக குருவி: மலையக உள்ளுராட்சி மன்றங்களை மலையக இளைஞர்கள் கைப்பற்றவேண்டும்! மலையக இளைஞனின் வேண்டுகோள்! எமது நாட்டின் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய தேர்தலான உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் வெகு விரைவில் இடம்பெற உள்ள நிலையில் மலையகத்தின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் பெரும்பாலும் இளைஞர்கள் தலைமையேற்க முன்வர வேண்டும். புதிய தேர்தல் முறைக்கமைய தொகுதிவாரியானதும்,விகிதாசார ரீதியில் இடம்பெற உள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கடந்த காலத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களை விட அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டு அதிகளவான உறுப்பினர்கள் தெரிவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. எனவே இச்சந்தர்பபத்தினை பயன்படுத்திக்கொள்ள மலையக இளைஞர்,யுவதிகள் முன்வந்து செயற்பட்டு எதிர்கால மலையகத்தின் தலைமைகளாக உருவாக வேண்டும். கடந்த காலங்களிள் தம் சுயதேவைகளை பூர்த்திசெய்துக்கொள்ளவும்,தமது தொழில்களை பாதுகாத்துகொள்ளவும்,அரசியல் ஊடாக இலபம் தேடிக்கொள்ளவும் பலர் அரசியலில் கால்பதித்தனர்.அவ்வாறானவர்கள் உள்ளுராட்சி மன்றங்கள்,மாகாணசபை,பாராளுமன்றம் என சென்று மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளார்களா என்று நடதேடிபார்த்தால் பூச்சியம் தான்.


மக்கள் தங்களின் வாக்கு பலத்தால் அண்மைகாலமாக தெரிவு செய்த பிரதிநிகள் பலரின் மீது அதிருப்தியிலும் வெறுப்பில் உள்ளனர்.காரணம் தமது தேவைகள் பூர்த்தியாக்கபடும்,அபிவிருத்திகள்,சலுகைகள்,சேவைகள் என தமக்கு கிடைக்கும் என்ற நோக்கத்திலும் ஏனைய சமூகத்திற்கு நிகரான வளமான சமூகமாக நமது சமூகமும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தமது பிரதிநிகளை தெரிவு செய்தனர்.ஆனால் இன்று மக்களின் நோக்கம்,எதிர்பார்ப்புகள் பூர்த்தியடைய வில்லை. எனவே மலையக மக்கள் இன்றைய பிரதிநிகள் மீது அதிருப்தி அடைந்துள்ள நிலையில் புதியமுக பிரதிநிதிகளை தெரிவுசெய்ய வேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளது.

மலையகத்தில் பல திறமைகளை உடைய படித்த இளைஞர்,யுவதிகள்,தலைமைத்துவ திறமை கொண்ட இளைஞர்கள் யுவதிகள் மக்களிற்கு சேவை செய்யகூடிய,தன் சமூகத்தின் மீது பற்றுக்கொண்ட இளைஞர்கள் பலர் காணப்படுகின்ற நிலையில் சமூகத்திற்கு சேவை செய்யகூடிய வகையில் அதிகாரத்தை கைப்பற்றவும் இளைஞர்கள் முன்வர வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் கடந்த முறை இளைஞர் பாராளுமன்ற தேர்தலின் போது பலர் போட்டியிட முன்வந்து போட்டியிட்டனர்.எமது சமுகத்தில் கனிசமான அளவு இளைஞர் கழகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதிகளவான இளைஞர்கள் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கினர்.இவ்வாறான ஆர்வமிக்க இளைஞர்கள் இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் களமிறங்க வரவேற்கின்றோம்.

அரசியல், கட்சி,இன,மத பேதமின்றி எம் சமூக இளைஞர்கள் என்ற ரீதியில் அவர்களை ஆதரித்து எம் இளைஞர்கள் எம் சமூகத்தை வழிநடத்த நாமும் இளைஞர்கள் என்ற ரீதியில் கைகோர்ப்போம். இன்று மலையக சமூகத்தினதும் தோட்ட தொழிலாளர்களினது உரிமைகளும் சலுகைகளும் மறுக்கப்பட்டு ஆரம்ப கால அடிமைகளை போல மீண்டும் எம் சமுகத்தை அடிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்படும் தொழில்தருனர்கள் நன்கு உணர்ந்துவிட்டனர் இன்று மலையக சமுகத்தை ஆதரிக்கவும் எவருமில்லைஅதிகாரத்தில் உள்ளவர்கள் கரிசணைகாட்டவும் மாட்டார்கள்,மக்கள் தெரிவு செய்த புதியபுதிய நல்லாட்சியாளர்கள் மக்களின் உரிமை,சலுகைக்காக போராட போவதில்லை,முன்வர போவதும் இல்லை. எம் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் எம் சமுகத்தை காத்து வழிநடத்த முன்வருபர்களை எம்மவர்கள் எற்றுக்கொள்ள மறுகின்றனர். மலையகத்தின் பெரும் தலைவர்களான அமரர்.சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா,அமரர்.பெ.சந்திரசேகரன் ஐாய போன்ற தலைவர்களை தெரிவு செய்து அவர்களுடாக மலையகதின் வளர்ச்சியை அபிவிருத்தியை கண்ட மக்கள் இன்று அத்தலைவர்களுக்கு நிகரான தலைவர்களை தெரிவு செய்வதில் தவறிழைக்கின்றர்.

வெறுமனே தேர்தல் கால வாக்குறுதிகளுக்கும் யாரோ ஒருவரை தெரிவுசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சிலரை தெரிவு செய்கின்றனர்.உண்மயில் மலையகதிற்கு யார் தலைவன்? யாரால் மலையகத்திற்கும் தன் சமுகத்திற்கும் தலைமைவகிக்க முடியும்? எவரால் அதிகாரத்தை பயன்படுத்த முடியும் என்று சிந்தித்து எம் சமுகத்திற்கான தலைமைகளை தெரிவு செய்யவேண்டும். இன்று எதோ சில அபிவிருத்திகளை மலையக காணலாம். ஆனால் மலையக மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றது,கடந்த காலங்களிள் தொழிலாளிக்கு மதிபளித்த நிர்வாகம் இன்று தொழிலாளர்களை அடிமைப்படுத்த முயற்சிகின்றன. காரணம் தோட்ட நிர்வாகத்தினையும்,பெருந்தோட்ட கம்பனிகளையும் கட்டுபடுத்தவும் அதிகாரம் செய்ய கூடிய தலைவர்கள் இன்று அதிகாரத்தில் இல்லை. எனவே எதிர்கால மலையகத்தை சிந்தித்து அனைவரும் செயற்பட வேண்டும். - Leeban Ajey

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...